பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 மே, 2011

ஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..

இந்த பாடலுக்கான குரல் தேர்வுதான் இந்த பாடலின் வெற்றி என எனக்கு தோன்றுகிறது. அழகான இசையில் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: காற்றினிலே வரும் கீதம் (1978)

பாடும் குரல்கள் ஜெயசந்திரன், S ஜானகி
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
நடிப்பு: முத்துராமன், கவிதா
பாடல்: கண்ணதாசன்





http://www.divshare.com/download/14949724-3fa



ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்...
என் உயிரிலே நீ கலந்தாய்..

ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..

ஒரு வானவில்..

வளர் கூந்தலின் மனம் சுகம்..
இதமாக தூங்க வா..
வனராணியின் இதழ்களில்..
புதுராகம் பாட வா..

மடி கொண்ட தேனை மனம் கொள்ள..
வருகின்ற முல்லை இங்கே..
கலை மானின் உள்ளம் கலையாமல்..
களிக்கின்ற கலைஞன் எங்கே..

கலைகள் நீ கலைஞன் நான்..
கவிதைகள் பாட வா..
ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..
ஒரு வானவில்..

உனக்காகவே கனிந்தது..
மலைத்தோட்ட மாதுளை..
உனக்காகவே மலர்ந்தது..
கலைக்கோயில் மல்லிகை..

இனிக்கின்ற காலம் தொடராதோ..
இனி எந்தன் உள்ளம் உனது..
அணைக்கின்ற சொந்தம் வளராதோ..
இனி எந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே.. வளர்கவே..
இது ஒரு காவியம்..
ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..

ஒரு வானவில் போலே..
என் வாழ்விலே வந்தாய்..
உன் பார்வையால் எனை வென்றாய்..
என் உயிரிலே நீ கலந்தாய்..
ஒரு வானவில்..

ஞாயிறு, 29 மே, 2011

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு..

புதுமை பெண்ணின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாடல். பாடலின் வேகமும் குரலும் அதற்க்கு ஈடு. அவரின் அந்த நாள் எண்ணங்கள் இன்னாளில் இப்போது நிறைவேறினவோ. வாழ்த்துக்கள்


திரைப் படம்: சவாலே சமாளி
குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு : சிவாஜி, ஜெயலலிதா



http://www.divshare.com/download/14955429-8b6



சம் சம் சம் சம்சம் சம்
 சம் சம் சம்சம்
சம் சம் சம் சம்சம்
லல்லல்லா
சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு.. ஹோ ஹோ

மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்
டடர டட்ட டா டடடர ரட்டட..
மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்

மண்ணில் நடக்கும் நதியே
உன்னை படைத்தவரா இந்த பாதை சொன்னார்

உங்கள் வழியே உங்கள் உலகு
இந்த வழிதான் எந்தன் கனவு
ர ர ர ர ர ர ர ர ரீ
ர ர ர ர ர ர ர ர ர..

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
கட்டுப்பாடு.. ஹோ ஹோ

வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததை போல் நான் நிமிர்ந்து நிற்பேன்
டடர டட்ட டா டடடர ரட்டட..

வணங்கி வளையும் நானல்
நீ வளைவதை போல் தலை குனிவதில்லை
பார்க்கும் கண்கள் பனிய வேண்டும்
பாவை உலகம் மதிக்க வேண்டும்
ர ர ர ர ர ர ர ர ரீ
ர ர ர ர ர ர ர ர ர..

சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு

ஆ ஆ ஆ ர ர ர ஹா ல ல ல ல ல

சனி, 28 மே, 2011

மாலை சூடும் மண நாள்..

அற்புதமான இசையும் இனிமையான குரலும் கலந்தால் கிடைக்கும் சுகம் இதுதான்.


திரைப் படம்: நிச்சயத் தாம்பூலம் (1962)

குரல்கள்: P சுசீலா, M S விஸ்வனாதன்

இயக்கம்: B S ரெங்கா

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

நடிப்பு: சிவாஜி, ஜமுனா












மாலை சூடும் மண நாள்..
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்..
சுகம் மேவிடும் காதலின் எல்லை..
வேறோரு திரு நாள் இனி இல்லை..
மாலை சூடும் மண நாள்..
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்..
சுகம் மேவிடும் காதலின் எல்லை..
வேறோரு திரு நாள் இனி இல்லை..
மாலை சூடும் மண நாள்..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
காதல் கார்த்திகை திரு நாள்..
மனம் கலந்தால் மார்கழி திரு நாள்..
காதல் கார்த்திகை திரு நாள்..
மனம் கலந்தால் மார்கழி திரு நாள்..
சேர்வது பங்குனி திரு நாள்..
நாம் சிரிக்கும் நாளே திரு நாள்..
மாலை சூடும் மண நாள்..
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்..
சுகம் மேவிடும் காதலின் எல்லை..
வேறோரு திரு நாள் இனி இல்லை..
மாலை சூடும் மண நாள்..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
மங்கல குங்குமம் போதும்..
திரு மலரும் மனமும் போதும்..
மங்கல குங்குமம் போதும்..
திரு மலரும் மனமும் போதும்..
பொங்கிடும் புன்னகை போதும்..
மனம் புது மண திரு நாள் காணும்..
மாலை சூடும் மண நாள்..
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்..
சுகம் மேவிடும் காதலின் எல்லை..
வேறோரு திரு நாள் இனி இல்லை..
மாலை சூடும் மண நாள்..

மாலை சூடும் மண நாள்..
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்..
சுகம் மேவிடும் காதலின் எல்லை..
வேறோரு திரு நாள் இனி இல்லை..
மாலை சூடும் மண நாள்..


வெள்ளி, 27 மே, 2011

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

அன்பு அன்பர்களுக்கு, கொஞ்ச நாள் உடல் நலமற்று போனதால் ஏற்பட்ட இடைவெளிக்கு வருந்துகிறேன். உடல் நலம் தேறி வருவதால் இனி மெல்ல பாடல்கள் தரமேற்றப் படும். நன்றி.


இதோ ஒரு பாடல். நாகேஷுக்காக குரல் கொடுத்து இருக்கிறார் TMS. நல்ல கவிதைத்துவமான பாடல். ஆடம்பரம் இல்லாத இசை. எல்லாமே நன்று.


திரைப் படம்: ஹலோ பாட்னர் (1972)
நடிப்பு: நாகேஷ், விஜயலலிதா
இசை: தாராபுரம் சுந்தரராஜன்
இயக்கம்: K கிருஷ்ணமூர்த்தி



http://www.divshare.com/download/14948658-44c
வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ .ஓ ..ஓ



மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ...

மன்னன் எந்தன் தோளில் உன் கை போடத் தானோ...

மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ...

மன்னன் எந்தன் தோளில் உன் கை போடத் தானோ...

அல்லித் தண்டுக் கையில் நீ வளை போட்டதேனோ...

அல்லித் தண்டுக் கையில் நீ வளை போட்டதேனோ...

வரும் போது உன் ஜாடை வளையோசை தானோ...

வரும் போது உன் ஜாடை வளையோசை தானோ...

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ ஓ ..ஓ



பச்சை பசுந்தரையே பாயானால்...

பார்வையில் இருப்பவள் நீயானால்

பச்சை பசுந்தரையே பாயானால்...

பார்வையில் இருப்பவள் நீயானால்

ஆசைகள் ஆயிரம் மலராதோ...

ஆசைகள் ஆயிரம் மலராதோ...

அரவணைத்தால் இன்பம் வளரதோ...

அரவணைத்தால் இன்பம் வளரதோ...

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ ஓ ..ஓ

வியாழன், 19 மே, 2011

மேகம் ரெண்டு சேரும் போது...

எழுத்தாளர் சுஜாதாவின் காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள் என்ற பெயரில் படமானது.
சங்கர் கணேஷ் இசையில் SPBயின் மனதை பிழியும் ஒரு அபூர்வ பாடல்.


படம்: பொய் முகங்கள் (1986)
நடிப்பு: ரவிசந்திரன் (கன்னட நடிகர்) சுலக்ஷனா
இயக்கம்: C V ராஜேந்திரன்
பாடல்: வைரமுத்து




http://www.divshare.com/download/14867364-24a



ம் ம் ம் ...
அ அ அ அ அ அ..
ம் ம் ம் ம் ம் அ அ அ..
ல ல ல ல ஹே ஹே ஹே..

மேகம் ரெண்டு சேரும் போது...
மின்னல் பூ பூக்கும்...
உன்னை எண்ணி வாசல் வந்தால்...
ஜன்னல் பூ பூக்கும்...

மேகம் ரெண்டு சேரும் போது..
மின்னல் பூ பூக்கும்..
உன்னை எண்ணி வாசல் வந்தால்..
ஜன்னல் பூ பூக்கும்..

நான் உந்தன் கைதி..
நீ எந்தன் கைதி..
வழி ஏது கிடையாது..
இது கொஞ்சம் துண்பம்..
என்றாலும் இன்பம்..
வெளியேற முடியாது..

நான் உந்தன் கைதி..
நீ எந்தன் கைதி..
வழி ஏது கிடையாது..
இது கொஞ்சம் துண்பம் ..
என்றாலும் இன்பம்..
வெளியேற முடியாது..

காதல் மதமானது..
யார்க்கும் பொதுவானது..
ஆஹா இதமானது..
ஆனால் நிஜமானது..

மேகம் ரெண்டு சேரும் போது..
மின்னல் பூ பூக்கும்..
உன்னை எண்ணி வாசல் வந்தால்..
ஜன்னல் பூ பூக்கும்..

நிலவோடு வாழ..
கனவொன்று கண்டேன்..
அது இன்று நிறைவேறும்..
நிழலாக இங்கே..
நீ வந்த நேரம்..
என் வாழ்கை நிறம் மாறும்..

ஆ ஆ ஆ ஆ..
நிலவோடு வாழ..
கனவொன்று கண்டேன்..
அது இன்று நிறைவேறும்..
நிழலாக இங்கே..
நீ வந்த நேரம்..
என் வாழ்கை நிறம் மாறும்..

உந்தன் இதழோரமே..
ஈரம் இளைப்பாறுமே..
அன்பின் அவதாரமே..
நீயே இவன் தாரமே..

மேகம் ரெண்டு சேரும் போது..
மின்னல் பூ பூக்கும்..
உன்னை எண்ணி வாசல் வந்தால்..
ஜன்னல் பூ பூக்கும்..

ம் ம் ம் ம் ம் ம்....
ஆ ஆ ஆ ஆ ஆ..

புதன், 18 மே, 2011

ஒரு தேவதை வந்தது..

அழகானப் பாடல். பெண்குரலில் ஆஷா போன்ஸ்லேக்கு பதிலாக வேறு யாராவது நன்றாக தமிழ் தெரிந்தவர் பாடி இருந்தால் பாடல் இன்னும் அழகாக இருந்திருக்கலாம். இசையின் ஆதிக்கம் அதிகமில்லாமல் மென்மையாக பாடப் பட்ட ஒரு பாடல். இந்த படம் தெலுங்கு டப்பிங்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.


திரைப் படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
இசை: இளையராஜா
நடிப்பு: சரண் ராஜ், ரேகா
குரல்கள்: SPB, ஆஷா போன்ஸ்லே



http://www.divshare.com/download/14855879-80a











ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
அழகிய தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
என் மனதில் சோகங்கள் தீர..
அதில் இனிமை என்றென்றும் சேர..

பல புதிய ராகங்கள் பாட..
அதில் இனிய நாதங்கள் கூட..
அழகிய தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..

காட்டினில் பூவாசம் காற்றோடு போகும்..
ஏட்டினில் எழுதாது கவி போலே..
கடலினில் மழை நீரும் வீணாதல் போலே..
உலகினில் வீணாக இருந்தேனே..
வந்திடும் காலங்கள் மூடிய அறைதன்னில்..
பொன் விளக்கும் ஏற்ற இருள் அங்கு விலகாதோ..

நான் செய்த பாவங்கள் தீராத ஒன்று..
நீ வந்து தீர்த்தாயே என் தேவி இன்று..
அன்பே என் நன்றி என் சொல்வேன்..

ஒரு தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
அழகிய தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..

சந்திர ஊர்கோலம் கண்டேன் மண்மீது..
பெண் உந்தன் முக நிலவு விண் மேலே..
பெண் என்னை நிலவாக பார்க்கின்ற நெஞ்சம்..
உண்மையை உணராது மண் மேலே..
காதலில் உளராத காளையும் இங்கேது..
கன்னியைச் சேராத வாழ்வினில் நிறைவேது..
நீ சொல்லும் வேதங்கள் புதிதல்ல அன்பே..
என்றாலும் புதிதாக கண்டேனே இங்கே..
மாறாது மாறாது என் அன்பே..

ஒரு தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
பல புதிய ராகங்கள் பாட..
அதில் இனிய நாதங்கள் கூட..
என் மனதில் சோகங்கள் தீர..
அதில் இனிமை என்றென்றும் சேர..
ஒரு தேவதை வந்தது..
ஆ ஆ ஆ ..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
ஆ ஆ ஆ ..
தேவதை வந்தது..
ஆ ஆ ..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
ஆ ஆ ஆ ஆ..

திங்கள், 16 மே, 2011

பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்..

தைரியமிக்க ஒரு காதலி, காதலனை அழைத்து பாடும் பாடல். திருமதி P. சுசீலா அவர்களும்  T M Sஅவர்களும் இனிய காதலை மென்மையாக பாடியிருக்கிறார்கள்.


திரைப் படம்: செந்தாமரை (1962)
இயக்கம்: A பீம் சிங்கு

இசை: M S விஸ்வனாதன் T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, பத்மினி




http://www.divshare.com/download/14835224-cdd


ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்..
காவேரி பாய்வது போல் கவிதை வராதோ..
கவிதை வராதோ.. காதல் கதைகள் சொல்லாதோ..
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்..
காவேரி பாய்வது போல் கவிதை வராதோ..

பூவிருக்கும் தோட்டத்துக்கு பொன்னாலே வேலியுந்தான் போட்டிருக்கு..
கேட்டையும்தான் பூட்டியிருக்குது..
அதனால் பயமா..
ஹா..
இது தகுமா..
ம் ம்
சும்மா வருமா..
ம்ம்
மனம் இருந்தாலே மார்க்கம் பிறக்கும் தன்னாலே..
மனம் இருந்தும் குணம் இருந்தும் பணம் இல்லையேல்
காதல் வாழாது மா நிலம் வாழ விடாது..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
கொண்டாடும் அன்பினால் உண்டாகும் காதலை...
துண்டாடும் வல்லமை உண்டோ சொல்லும்..
உலகில் உண்டோ சொல்லும்...
வண்டாடும் கருங்குழலிலே தேன் குளிக்கும் இதழிலே...
கண்டேன் மன உறுதியே...
சிங்காரக் கிளியே எந்தன் சிங்காரக் கிளியே...
சந்தேகம் தீர்ந்ததா சந்தோஷம் சேர்ந்ததா...
செந்தாமரை மனம் தெரிந்ததா...
தெரிந்தது...

சந்தேகம் தீர்ந்தது சந்தோஷம் சேர்ந்தது...
என் தாமரை மனம் தெரிந்தது..
ஹா ஹா ஹா..
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டேன் நானே..
காவேரி பாய்வது போல் கவிதை பாடுவேன்..
கவிதை பாடுவேன் சிலோன் நடனம் ஆடுவேன்..
பூவிருக்கு வண்டிருக்கு பொங்கி வரும் காதல் நீரோடும்..
ஆற்றினிலே நீந்தி ஆடுவோம்...

சனி, 14 மே, 2011

நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..

நல்ல பண்புள்ள காதல் கடிதம். எத்தனை அழகான கவிதை வரிகள்! வரம்பு மீறாத கடிதம்.

திரைப் படம்: பேசும் தெய்வம் (1967)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
குரல்: T M S



http://www.divshare.com/download/14335065-23e


நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..

நான் அனுப்புவது கடிதம் அல்ல..

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
நான் அனுப்புவது கடிதம் அல்ல..

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

நான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல..எண்ணம்..
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள..
நான் அனுப்புவது கடிதம் அல்ல...

திங்கள், 9 மே, 2011

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

இசையமைப்பாளர் R ராமானுஜம் மிகச் சிறப்பாக இசையமைத்து மிக அருமையாக இளமையை கிளரும் வகையில் S P B யும், P சுசீலா அம்மாவும் கலக்கி இருக்கிறார்கள்.


திரைப் படம்: ஆனந்த பைரவி (1978)
இசை: R ராமானுஜம்
நடிப்பு: ரவிசந்திரன், K R விஜயா
இயக்கம்: மோகன் காந்திராம்



Music File Hosting - Listen Audio -





சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்...
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்...
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்...
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

உங்களின் அன்பு நினைவினிலே...
என் மனம் வாழும் உலகினிலே...
கண்களின் ஜீவ ஒளியினிலே...
சொர்கம் தோன்றுமோ...

தேவியின் பால் மணம் தேவனின் கோபுரம்...
தேவியின் பால் மணம் தேவனின் கோபுரம்...
அழகின் மடியில் வசந்தம் மலரும்...
அழகின் மடியில் வசந்தம் மலரும்...

அத்தான்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

குங்கும கோலம் முகத்தினிலே...
மங்கள தாலி கழுத்தினிலே...
சந்தன பேழை அழகினிலே...
தெய்வம் மயங்குமோ...

காலமே ஓடி வா...
காவியம் பாடி வா...
காலமே ஓடி வா...
காவியம் பாடி வா..

உயிரில்...
ம் ம் ம் ம்...
உணர்வில்...
ஓ ஓ ஓ ஓ...
கலந்தே...
ஆ ஆ ஆ...
மகிழ்வோம்...

உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்...

அன்பே...

சிரித்தால் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்...
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்...

கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...


ஞாயிறு, 8 மே, 2011

முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

மற்றுமோரு அருமையான அமைதியான பாடல் SPB, P சுசீலா குரல்களில்


திரைப் படம்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)
இசை: விஜய பாஸ்கர்
இயக்கம்: S P முத்துராமன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஜெயசித்ரா



http://www.divshare.com/download/14783590-ddc



முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

என்னடி தேவி பெண்மையின் அழகை..
என்னடி தேவி பெண்மையின் அழகை..
மீட்டவா..
தாகமா..
அணைக்கவா..
ஆசையா..
சுவைக்க கூடாதா...சுவைக்க கூடாதா...ஆ ஆ ஆ ஆ ஆ
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..

மேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து..
மேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து..
ஆடவா..
பாடவா..
கூட வா..
கூடவா..
என்னைக் கேட்காதே..என்னைக் கேட்காதே..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

பிறர் அறியாமல் ரகசியம் பேசும்..
பிறர் அறியாமல் ரகசியம் பேசும்..
கண்களா..
கைகளா..
கால்களா..
மேனியா..
சொல்லித் தெரியாதே..சொல்லித் தெரியாதே..ஆ ஆ ஆ ஆ
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..


சனி, 7 மே, 2011

தங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஷங்கர் கணேஷ் இசையில் மீண்டும் ஒரு மென்மையான பாடல்.


திரைப் படம்: ரகுபதி ராகவ ராஜாராம்
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல்: வாலி
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
நடிப்பு: ரஜினி, விஜய குமார், சுமித்திரா



http://www.divshare.com/download/14776484-ac4


தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

பால்வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களமாகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களமாகினாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாகினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடல் ஆவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடல் ஆவி பொருளாகினாள்

தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
இந்த ராஜாவும் தவமிருந்தான்

வெள்ளி, 6 மே, 2011

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..

என்னைப் போன்ற ஒரு பாமரனுக்கு இந்த பாடல் ஒரு சிரமமான பாடலாகத்தான் தெரிகிறது. T M S, S ஜானகியும் நிச்சயமாக கொஞ்ச நேரம் சிரமப் பட்டுதான் பாடி இந்த அளவுக்கு ஒரு சிறப்பான பாடல் உருவாக்க உதவி இருக்கனும்.


திரைப் படம்: சிரித்து வாழ வேண்டும் (1974)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: S S பாலன்
நடிப்பு:  M G R, லதா



http://www.divshare.com/download/14365969-eed

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..
அந்த பார்வை எந்தன் மீதோ..
அந்த பார்வை எந்தன் மீதோ..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன..
அந்த பார்வை எந்தன் மீதோ..
அந்த பார்வை எந்தன் மீதோ..
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக..
தந்திட வந்தேன் காணிக்கையாக..

காணிக்கை ஏது நான் தரும் போது...
காணிக்கை ஏது நான் தரும் போது...
கதாலின் சுவை ஏது நான் வழங்காது..
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக..
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக..
இருப்பவள் இள மேனி என் நாளும் உனக்காக..
இருப்பவள் இள மேனி என் நாளும் உனக்காக..

ஆடவன் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்..
ஆடவன் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்..
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்..
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே...
நானொரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே..
மறப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி..
மறப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி..
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி..
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி..

கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்...
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்...
கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

ஞாயிறு, 1 மே, 2011

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

P. சுசீலா மற்றும் ஜெயசந்திரன் குரல்களில் ஒரு இனிமையான பாடல்


திரைப் படம்: நானே ராஜா நானே மந்திரி (1985)
இசை: இளையராஜா
இயக்கம்: பாலு ஆனந்த்
நடிப்பு: விஜயகாந்த், ஜீவிதா



http://www.divshare.com/download/14719888-f7b


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம் - கொதித்திருக்கும்
கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
என்னாளும் தனிமையே எனது நிலைமையோ
தென்றல் கவிதையோ கதையோ
இரு கண்ணும் .. என் நெஞ்சும்..
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ...ஓ...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ - மணவரையில்
நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு...
அந்த நாளை.. எண்ணி நானும்..
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..