நல்ல தமிழிலில் இனிமை குரல்களில் அருமையான பாடல்.
திரைப் படம்: பாமா ருக்மணி (1980)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: பாக்கியராஜ், பிரவிணா
இயக்கம்: R பாஸ்கரன்
குரல்கள்:S P B, S ஜானகி
http://www.divshare.com/download/16056956-7e0
http://www.divshare.com/download/16056891-3d5
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாகினான் ஒரு கவிஞன்
உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல
உன் எழில் முன்னாலே
கவிதைகள் எல்லாம் உன்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்
இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்
நீராட துடிக்கும் நிலை காண்பாய்
கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்
நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்
அலை கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே
அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதை அறியாயோ
நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்