பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 31 மார்ச், 2013

இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும் மகிழ்வுறவே

இரவின் மடியில் வருகின்ற இந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அமைதியான குரல்கள், அமைதியான இசை, பாடல் வரிகள்.
ஆண்  பாடும் அதே பாடல் வரிக்கு சில மாற்றங்களுடன் பெண் பாடும் பாடல் வரி. இனிமை.
மதுர கீதம் என்றால் இதுதான்.

திரைப் படம்: மனிதன் மாறவில்லை (1962)
பாடியவர்கள்: பி  சுசீலா, ஏ.எல்.ராகவன்
இசை: கண்டசாலா
இயக்கம்: எம் ஜி சக்கரபாணி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl85OTYyNDYyX3lxY2g3XzFiMTI/inbamana%20iravithuve.mp3






ம் ம்  ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா விந்தை
மருந்தைத் தூவுதே

சிந்தை மயக்கும் வெண்ணிலா பன்னீர்
துளியைத் தூவுதே
இன்பமான இரவிதுவே
ஆஆஆஆஆஆ
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே

ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
கணை வீசுதே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒருவர் பார்வை ஒருவர் மீது நறு மலர்
மணம் வீசுதே
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
ஆ 
மலர்கள் வீசும் மணத்தினாலே விரக
தாபம் தணியுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்குயிலின் மதுர கீதம் மனதில்
உணர்ச்சி தூண்டுதே
மாங்குயிலின் மதுர கீதம்
மனதையே தாலாட்டுதே
இனிமையான நினைவு அலையில்
இதயம் விரைந்து செல்லுதே

இனிமையான நினைவு அலையில்
இதயம் மிதந்து செல்லுதே
இன்பமான இரவிதுவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே

வெள்ளி, 29 மார்ச், 2013

மார்கழி பூக்களே இளம் தென்றலே


அழகான பாடல். தந்தையார் திருச்சி லோகநாதன் போல குரலை உடைத்து பாடும் வகை இல்லை
T L மகராஜன். அந்த வகையில் இந்த பாடலுக்கு அவர் குரல் ஒத்து போகிறது. ஆனால் அதுவே தமிழ் திரை உலகில் அவர் மேலும் பிரபலம் அடையமுடியாமல் போனதற்கான ஒரு காரணம்.
வாணி அவர்களை பற்றி அதிகமாக சொல்ல ஒன்றும் இல்லை. அவர் தனக்கு தந்த பகுதியை மிகக் கச்சிதமாக செய்து முடிப்பவர்.

திரைப் படம்: அவன் அவள் அது
நடிப்பு: சிவகுமார், லக்ஷ்மி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: T L மகராஜன் , வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDA3MjIyMl9NQnV1bF85NGI5/Margazhi%20Pookkale%20ilam.mp3





மார்கழி பூக்களே

இளம் தென்றலே

கார்மேகமே
இடம் தேடினேன்

காண்கிறேன்

மார்கழி பூக்களே
இளம் தென்றலே
கார்மேகமே
இடம் தேடினேன்
காண்கிறேன்

ஆடும் பொன்னூஞ்சல்
தேடாமல் வந்தாள்
ஆசை பல கோடி
சுகமோ சுகம்
ஆடும் பொன்னூஞ்சல்
தேடாமல் வந்தாள்
ஆசை பல கோடி
சுகமோ சுகம்

கூடும் காவேரி நதி
வந்த நேரம்
கோடி எண்ணங்கள்
மனமோ மனம்
கூடும் காவேரி நதி
வந்த நேரம்
கோடி எண்ணங்கள்
மனமோ மனம்

மங்கள கைவளை
பொங்கி எழுந்திட
கிண்கிணி தண்டைகள்
கவிபாட
மங்கள கைவளை
பொங்கி எழுந்திட
கிண்கிணி தண்டைகள்
கவிபாட

செங்கனி மந்திர மங்கை
நடந்தன 
கண்ணனிடம்
சுக உறவாட
செங்கனி மந்திர மங்கை
நடந்தன
கண்ணனிடம்
சுக உறவாட

சுகமோ சுகம்
மனமோ மனம்

மார்கழி பூக்களே
இளம் தென்றலே
கார்மேகமே
இடம் தேடினேன்
காண்கிறேன்

பிள்ளை வடிவாக
ஒரு தூதன் வந்தான்
இன்று புது வாழ்வு
சுகமோ சுகம்
பிள்ளை வடிவாக
ஒரு தூதன் வந்தான்
இன்று புது வாழ்வு
சுகமோ சுகம்

மன்னன் நினைவோடு
மகராணி வாழ்ந்தாள்
என்றும் நிலையான
மனமோ மனம்
மன்னன் நினைவோடு
மகராணி வாழ்ந்தாள்
என்றும் நிலையான
மனமோ மனம்

மாவிலை தோரணம்
ஏதும்  இல்லாதொரு
மஞ்சம் அமைந்தது
இதமாக
மாவிலை தோரணம்
தும் இல்லாதொரு 
மஞ்சம் அமைந்தது
இதமாக

பூவிலும் மெல்லிய
பூவையிடம்
ஒரு போதை எழுந்தது
பதமாக
பூவிலும் மெல்லிய
பூவையிடம்
ஒரு போதை எழுந்தது
பதமாக
சுகமோ சுகம்
மனமோ மனம்

மார்கழி பூக்களே
இளம் தென்றலே
கார்மேகமே
இடம் தேடினேன்
காண்கிறேன்

புதன், 27 மார்ச், 2013

ஆஹா தங்கமே தங்கம் தங்கமே தங்கம்

நம்ப பிளாக் ரொம்ப சீரியஸா போகுதுன்னு தோனுது. கொஞ்சம் ஜாலியா  இருக்கட்டும்னு இந்தப் பாடல். இளமையான ஜெய்ஷங்கருக்கு அதே வேகத்தில் குரல் கொடுத்திருக்கிறார் டி எம் எஸ்.

ஒரு காலத்தில் வானொலியில் மட்டுமே பாடல் கேட்க முடியும் என்ற கால கட்டத்தில், டி எம் எஸ் பாடிய பாடலை கேட்கவே ஒரு கூட்டம் திரை அரங்கங்களுக்கு போகும்.
இன்று போல பாடல்களை டேப் பண்ணி வேண்டும் போது கேட்கும் வசதி இல்லை.
அவருக்கு சென்ற வாரம் 91வது பிறந்தநாள். வாழ்த்த வயதில்லை. அவரின் திறமைக்கு வணங்குகிறேன்.

திரைப் படம்: அன்பு வழி (1968)
இயக்கம்: M நடேசன் 
இசை: M S விஸ்வனாதன் 
நடிப்பு: ஜெய்ஷங்கர் , விஜயலஷ்மி 

http://asoktamil.opendrive.com/files/Nl85OTYwODYyX0tEeUNnXzZkNWI/Aah%20Thangame%20Thangam%20-%20Anbu%20Vazhi[128].mp3







வாம்மா  வாம்மா
வாம்மா  வாம்மா
ஆஹா தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
தக்காளிப் பழமே
ஆஹா என் தக்காளிப் பழமே
ஆஹா தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
தக்காளிப் பழமே
ஆஹா என் தக்காளிப் பழமே
ஆஹா தயிரு பச்சடி
கேட்டது இந்த வெங்காய முகமே
ஓஹோ என் வெங்காய முகமே
நல்ல தயிரு பச்சடி
கேட்டது இந்த வெங்காய முகமே
ஓஹோ என் வெங்காய முகமே
அரக்கீரே
சிறுக்கீரே
அகத்திக்கீரே
சுக்காங்கீரே
புளிக்கீரே
புதினாங்க்கீரே
பொண்ணங்கண்ணிக்கீரே
முக்காலனா வீசிவிட்டா
முள்ளங்கி வருமே
முக்காலனா வீசிவிட்டா
முள்ளங்கி வருமே
உங்க முதுகெலும்பை நிமிர வைக்கும்
கீரைகள் இனமே
கீரைகள் இனமே
ஆஹா தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
தக்காளிப் பழமே
ஆஹா என் தக்காளிப் பழமே
பூசணியையே அக்கா மக
பாத்து ஓடினா
இதை பொரியல் செய்து போட்டுவிட்டேன்
புடலங்காயானா
பூசணியையே அக்கா மக
பாத்து ஓடினா
இதை பொரியல் செய்து போட்டுவிட்டேன்
புடலங்காயானா
பத்து வருஷம் பி யூ ஸியில்
வழுக்கி விழுந்தா
பத்து வருஷம் பி யூ ஸியில்
வழுக்கி விழுந்தா
நல்ல முத்து வெண்டக்கா
மூளையை கொடுக்க பி ஏ மாறினா
பி ஏ மாறினா
ஆஹா தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
தக்காளிப் பழமே
ஆஹா என் தக்காளிப் பழமே
பொண்ணங்கண்ணி கீரையிருக்கு
பூணைக்கண்ணுக்கு
கொத்துமல்லி, இஞ்ஜியிருக்கு
கொழுத்த ஒடம்புக்கு
பொண்ணங்கண்ணி கீரையிருக்கு
பூணைக்கண்ணுக்கு
கொத்துமல்லி, இஞ்ஜியிருக்கு
கொழுத்த ஒடம்புக்கு
சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு
இளைச்ச மேனிக்கு
சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு
இளைச்ச மேனிக்கு
ஆஹா செவந்திருக்கும் கோவை பழம்
அசட்டு முகத்துக்கு
அய்யே அசட்டு முகத்துக்கு
ஆஹா தங்கமே தங்கம்
தங்கமே தங்கம்
தக்காளிப் பழமே
ஆஹா என் தக்காளிப் பழமே
நல்ல தயிரு பச்சடி
கேட்டது இந்த வெங்காய முகமே
ஓஹோ என் வெங்காய முகமே
கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
வள்ளிக்கிழங்கு, வெங்காயம், முள்ளங்கி, இஞ்ஜியோ

திங்கள், 25 மார்ச், 2013

வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள்

முன்னதாக எழுதப் பட்ட பாடலுக்கு இசை வடிப்பது கொஞ்சம் சிரமம். சில வெட்டுகள், சில குத்துகள் பெற்று பாடல் உண்மை பொழிவை இழந்துவிடும்.
பாரதியாரின் பாடல்களை பொருத்தவரை, நமது எல்லா இசையமைப்பாளர்களும்  மிக கவனமாக கையாண்டிருக்கிறார்கள். அதற்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக் காட்டு. பாடுபவர் தேர்வும் மிகச் சரியாக செய்துள்ளார்.
மனதிற்கு அமைதி தரும் வகையில் இனிமையான பாடல்.
காதொலி பாடலுக்கும் காணொளி பாடலுக்கும் சில வரிகளில் மாற்றம் தெரிகிறது.

திரைப் படம்: கெளரி கல்யாணம்  (1966)
குரல்கள்:சூலமங்கலம் இராஜலஷ்மி 
இசை: M S விஸ்வனாதன் 
பாடல்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்
இயக்கம்: K சங்கர்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா.

http://asoktamil.opendrive.com/files/Nl85OTYwMzcwX2kzR2NiXzdiNjU/vellai%20kamalathile.mp3





 


வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள் 
வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள் 

கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள் 
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள் 
வெள்ளைக் கமலத்திலே 
வெள்ளைக் கமலத்திலே

சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதில் சுவை அறிவார் சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதில் சுவை அறிவார் விற்பல தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நாவெனும் மலர் பதத்தாள் விற்பல தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நாவெனும் மலர் பதத்தா வெள்ளைக் கமலத்திலே
வெள்ளைக் கமலத்திலே

கள்ளை கடலமுதை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவி சொல்லவே
     
கள்ளை கடலமுதை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவி சொல்லவே
பிள்ளை பருவத்திலே -என்னைப்
பேண வந்தாளருல் பூண வந்தாள்
பிள்ளை பருவத்திலே -என்னைப்
பேண வந்தாளருல் பூண வந்தாள்

வெள்ளைக் கமலத்திலே 
வெள்ளைக் கமலத்திலே 

வாணியைச் சரண் புகுந்தேன் 
அருள் வாக்களிப்பாள் என இடம் மிகுந்தேன் 
வாணியைச் சரண் புகுந்தேன் 
அருள் வாக்களிப்பாள் என இடம் மிகுந்தேன் 
வேண்டிய பெரும் தவத்தாள் 
நிலம் பெயரளவும் 
பெயர் பெயராதாள் 
வேண்டிய பெரும் தவத்தாள் 
நிலம் பெயரளவும் 
பெயர் பெயராதாள் 
வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள் 
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள் 
வெள்ளைக் கமலத்திலே 
வெள்ளைக் கமலத்திலே




வெள்ளி, 22 மார்ச், 2013

புது மஞ்சள் மேனி சிட்டு புடவைக்குள் ஊஞ்சலிட்டு


இது S P பாலுவின் அபூர்வ பாடலாக நினைக்கிறேன். M S விஸ்வனாதன் அவர்கள் தமிழ் திரை உலகில் தன்னந்தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்த போது வந்த படம். இதை இசையில் உணரலாம். பாடல் வரிகள் அற்புதம். சற்று கனமான தமிழ் வரிகள். பாடல் முழுவதும் எங்கும் தொய்வு ஏற்படாமல்   இசையமைத்துள்ளார்.
V K ராமசாமி தயாரித்த படம். அவ்வளவாக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன்.


இத்துடன் எனக்கு தெரிந்து ராதா ரவி தமிழில் (இதே  படம் ) பாடி நடித்திருக்கும் ஒரே பாடலையும் கணக்கில் வராமல் இணைத்திருக்கிறேன். யாராவது இவர் பாடிய வேறு பாடலைப் பற்றி தெரிந்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.

திரைப் படம்: ருத்ர தாண்டவம் (1978)

பாடியவர்கள்: S P B , வாணி ஜெயராம்
பாடல் : வாலி
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: V K ராமசாமி, விஜயகுமார், சுமித்ரா

http://asoktamil.opendrive.com/files/Nl85Njk3NjE3X3lLTHhEXzg0MmM/puthu%20mansal-%20Ruthra%20Thandavam.mp3


















ராதா ரவியின் பாடல் :
















புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ

இதழ் தொட்டு தென்றல் பூஜை
இடை தொட்டு காமன் பூஜை
உடலெங்கும் உங்கள் பூஜை
இதுதானே உங்கள் ஆசை
மோகம் அழைக்கின்றதே
நாணம் தடுக்கின்றதே
ம் ம் ஹும் ம் நாணம் தடுக்கின்றதே

புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ

நீர் கொண்ட மேகங்கள் குடை போடவும்
நிலை கொண்ட புஷ்பங்கள் மணம் தூவவும்
தேர் கொண்ட பறவைகள் சுதி மீட்டவும்
திருமேனி வலம் வந்த சுகம் என்னவோ
கார்க்கூந்தல் கடல் கொண்ட அலையாகவும்
கல்யாண பூச்செண்டு அசைந்தாடவும்
தேர் கொண்ட மணிசங்கு ஒலி காட்டவும்
நிழல் கொண்ட ரதிதேவி உரு வந்ததோ
நிழல் கொண்ட ரதிதேவி உரு வந்ததோ
அங்கம் தொடாமல் சங்கம் இல்லாமல்
கண்ணில் சுகங்கள் இல்லை
மன்னன் வராமல் மகராணி என்னும்
பெண்மை நலங்கள் இல்லை

புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ

தேன் சிந்தும் சிறு கூடு நடமாடுது
சிறு முல்லை மகரந்தப் பொடி தூவுது
பால் வண்ணம் மடி மீது விளையாடுது
மழை ராக தமிழ் வீணை இசை பாடுது
உறவென்றும் சுகமென்றும் நினையாதது
ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
இரவென்றும் பகலென்றும் அரியாமலே
இதமான சுகம் காண உனை நாடுது
இதமான சுகம் காண உனை நாடுது
தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலாவை
என்றும் மறந்ததில்லை
அஞ்சும் நடுங்கும் பிஞ்சாக நின்றும்
ஆசை இழந்ததில்லை

புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ




புதன், 20 மார்ச், 2013

சிரிக்க தெரிந்தால் போதும் துயர் நெருங்காது

புரட்சித் தலைவரின் இன்னுமொரு அழகானப் பாடல். சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் மட்டுமே. அவனும் இன்றைய உலகில் சிரிக்க மறந்து போனான். மீண்டும் அவன் சிரிப்பது அவன் மெண்டல் ஆன பிறகுதான் என்ற நிலை இன்று. அதற்கு முன் நாமும் சிரிக்க ஆரம்பிப்போம்.
தெளிவான தமிழிலில் இனிமையான இளமைக் குரல்களில் பாடல் ஜொலிக்கிறது.

திரைப் படம்: மாட புறா (1962)
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
பாடிய குரல்கள்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, டி எம் எஸ்
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: S A சுப்ரமணியம்

http://asoktamil.opendrive.com/files/Nl85MzQ0NTM2X1VMSzlyXzU5YmI/SirikkaTherinthal%20pothum.mp3





சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு
புன்னகை
வனத்துக்கு அழகு
பசுமை
வார்த்தைக்கு அழகு
இனிமை
குளத்துக்கு அழகு
தாமரை
நம் முகத்துக்கு அழகு
புன்னகை
சிரிக்க தெரிந்தால் போதும்
இரவும் பகலும் உண்டு
வாழ்வில்
இளமையும் முதுமையும் உண்டு
இரவும் பகலும் உண்டு
வாழ்வில்
இளமையும் முதுமையும் உண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
உறவும் பகையும் உண்டு
எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்
சிரிக்க தெரிந்தால் போதும்
உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவை தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது
களிப்பு
உறவை வளர்ப்பது
அன்பு
மன நிறைவை தருவது
பண்பு
பொறுமையை அளிப்பது
சிரிப்பு
இதை புரிந்தவர் அடைவது
களிப்பு

சிரிக்க தெரிந்தால் போதும்
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
மனிதன் மாறுவதில்லை
அவன் மாறிடில் மனிதனே இல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
வந்திடும் அவனால் தொல்லை
நீ சிந்தித்து பார் என் சொல்லை
சிரிக்க தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது
நம்மை ஒருபோதும்

ஞாயிறு, 17 மார்ச், 2013

மாடத்திலே கன்னி மாடத்திலே

ரஜினி படங்கள் ஒரு காலத்தில் பாட்டுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. அந்த வரிசையில், ரஜினி திரையில் பாட்டு பாடுபவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே சிறந்த பாடல்கள் வரிசையில் வரும்.


திரைப் படம்: வீரா (1994)
நடிப்பு: ரஜினி, மீனா
இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S P B , ஸ்வர்ணலதா
பாடல்: வாலி




http://asoktamil.opendrive.com/files/Nl80OTM2NDg0X3MwbWRCX2JkOWI/MaadathileKanni.mp3








டிங்கு   டாங்கு   டிங் 
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு 

கூடத்திலே  நடு   கூடத்திலே 
ராஜா  போலே  ஐயர்  ஆத்து  பிள்ளே 

மாமி  சின்ன  மாமி  மடிசார்  அழகி  வாடி  சிவகாமி 
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி  பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு 

கூடத்திலே  நடு  கூடத்திலே 
ராஜா  போலே  ஐயர்  ஆத்து  பிள்ளே 

மாமி  சின்ன  மாமி  மடிசார்  அழகி  வாடி  சிவகாமி 
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி  பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு 
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாமா  என்ன  சிக்கல்  மாமா
 ஒ ஹோ
மாமி  காத்திருக்கலாமா
ஒ  ஹோ

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


டாலடிக்கிற  நல்ல  வைர  ராட்டி 
போலிருக்கிற  நீ  தான்  ரொம்ப  சுட்டி 
ஹா ஹோ ஹோ ஆ ஆ ஆ 

ஆச  வைக்கிறேள் இப்போ  ரொம்ப  நன்னா 
மாலை  இட்டதும்  மாற  கூடாதுன்னா 

பூணூலே சாட்சி  பொம்னாட்டி  ஆட்சி 
ஸ்ரீ  கிருஷ்ணன்  நான்  அல்லடி 

இப்போது  பாப்பேள்  என்  பேச்ச  கேட்பேள் 
பின்னாடி  என்னாவேளோ 

ஆனபோதும்  இங்கு  ஆத்துக்காரி  ரொம்ப 
கண்  ரோல்  பண்ணா கண்ட்ரோல்  ஆகாதடி 

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி  பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு 

கூடத்திலே  நடு  கூடத்திலே 
ராஜா  போலே  ஐயர்  ஆத்து  பிள்ளே 

மாமி  சின்ன  மாமி  மடிசார்  அழகி  வாடி  சிவகாமி வாடினா  

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி  பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு 
ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

அட்ஜஸ்ட்  பண்ணி  கூட  நீ  இருப்பியோ 
அடங்காத  அலமு  போல்  இருப்பியோ 
 ஹா  ஹோ  ஹோ  ஆ ஆ ஆ 

சட்டதிட்டம்  தான்  கையில்  வச்சிருப்பேளா  
Follow  பன்னேனா நீங்க  என்னை நச்சரிப்பேளா  

மதியான  நேரம்  பாய்  போட  சொன்னா 
மாட்டேன்னு  சொல்லுவியோ 
ஹா

மாட்டேன்னு  சொன்னா  சும்மாவா  விடுவேள் 
மட்டினி  ஷோ  கூப்பிடுவேள்  
ஹா  

நாளை  சங்கதி  நாளை  பார்க்கலாம் 
மாமி  இப்போ  வாடி  அணைச்சுக்கலாம்

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி  பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு 

கூடத்திலே  நடு  கூடத்திலே
ராஜா  போலே  ஐயர்  ஆத்து  பிள்ளே 
மாமி  சின்ன  மாமி  மடிசார்  அழகி  வாடி  சிவகாமி 

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்


மாடத்திலே  கன்னி  மாடத்திலே 
ஆணி  பொண்ணு  ஐயர்  ஆத்து  பொண்ணு