பின்பற்றுபவர்கள்

திங்கள், 29 செப்டம்பர், 2014

மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே malliga mottu manasa thottu

பாடல் காட்சி முழுவதும் slow motion இல் படமாக்கப் பட்டுள்ளது. நல்ல இனிமையான பாடல். பாடிய  குரல்கள் இரண்டும் அழகான தேர்வு.

திரைப் படம் : சக்திவேல் (1994)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : அருண்மொழி, சொர்ணலதா
பாடல்: பொன்னியின் செல்வன்
இயக்கம்: K S ரவிக் குமார்
நடிப்பு: செல்வா, கனகா














மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
ஹோ
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதய்யா மீனே

மூடி வச்சு மூடி வச்சு மறச்சு வச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு கலஞ்சு போனதென்ன

பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன

உன்னாலதான் உன்னாலதான்
உதிர்ந்து போச்சு வெக்கம்

கண்ணாலதான் கையாலதான்
கலந்துகிட்டா சொர்க்கம்

நானிருந்தேன் சும்மா வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
நானே மருதாணி பூசவா
ஹோ
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதடி மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா
ஹோ
நீயே அடையாளம் போடவா

லல்லில லாலா லல்ல
லாலா லல்லில லாலா

பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு

பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்

ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி

கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி

பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
கெஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி பூசவா
ஹோ
தேனே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதய்யா மானே
வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதய்யா மீனே

மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
நானே மருதாணி பூசவா

ஹோ
நீயே அடையாளம் போடவா

மல்லிக மொட்டு மனச தொட்டு
இழுக்குதடி மானே

வளையல் மெட்டு வயச தொட்டு
வளைக்குதய்யா மீனே

சனி, 27 செப்டம்பர், 2014

அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து anju viral kenjuthadi

இனிமையான இசையமைப்பு, அழகான குரல் தேர்வில் மனம் மயக்கும் ஒரு பாடல்.

திரைப் படம்: உரிமை கீதம் (1988)
நடிப்பு: கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, பல்லவி
இயக்கம்: R V உதயகுமார்
இசை : மனோஜ்-கியான்
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
பாடல்: தெரியவில்லை

















அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே

சிட்டு இடை கட்டிக்கொள்ள துடிக்கிறது
வெட்கம் வந்து தடுக்கிறது

அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

செந்தேனே என்னைத் தந்தேனே
இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே

சந்தேகம் இல்லை என்னோடு
இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு

காதலுக்கு காவல் தொல்லை
ஆ ஆ
காத்திருந்தால் லாபம் இல்லை
ஹா

பள்ளியறை வாசல் வரை
நீ நடந்தால் தீரும் தொல்லை

கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
ஆ ஆ
பக்கம் வந்து முத்தமொன்று தா

அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

கள்ளூறும் இதழ் தேனாறு
அதை அள்ளாமல் சுகம் தீராது

தள்ளாடும் உடல் பூந்தேரு
அதை கிள்ளாமல் வந்து நீ சேரு

கூந்தலுக்கும் வாசம் உண்டு
ஆ ஆ
ஆதரிப்பேன் நானும் இன்று

ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு
காப்பாற்று சேதி சொல்லு

சத்தமின்றி வித்தைகளைப் படித்திடவா
ஆ ஆ
முத்த கதை முடித்திட வா


அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே


கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
பக்கம் சென்று முத்தமொன்று தா


வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மெட்ராஸ்....

மெட்ராஸ்....
தோகா லேண்ட்மார்க்கில்  dolphy 7.1 இசைவெள்ளத்தில் அருமை.
கதை...பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆன கதைதான்.
மெட்ராசில் எவ்வளவோ விஷயமிருக்க இயக்குனருக்கு ஒரு சுவரும் பல ரவுடிகளையும் மட்டும் தெரிந்திருக்கிறது. கொலைகள், கொலைகள்..மேலும் கொலைகள். ஒரே ரத்தக் கிளரிதான். இவர்களை சொல்லி குற்றமில்லை. தணிக்கை என்ற ஒன்று இனி தேவையே இல்லை. அவர்கள் சும்மா சம்பளம் வாங்கும் கும்பல் போல. ஆட்டுக்கு தாடி மாதிரி ஆகிவிட்டார்கள்.
படத்தின் நாயகர் ஜானி என்கின்ற பைத்தியக் காரன்தான். பாடல்கள் முழுக்கவும் கானா பாலாவை நம்பியே. ஒரு நிலையில் திகட்டுகிறது. வழக்கம் போல ஒரு சாவை முழுமையாக படமெடுத்திருக்கிறார்கள். இவர்கள் சாவை இயக்கத்தான் லாயக்கு. கொஞ்சம் கூட மாற்றி யோசிக்க மாட்டார்களா?
நாயகி என வழக்கம் போல ஒரு பொம்மை நடித்திருக்கிறது. போனால் போகுது என ஒருமுறை பார்க்கலாம்.

வியாழன், 25 செப்டம்பர், 2014

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ nee ninaitha neremellaam

இனிமை பாடல். வழக்கமான இளமைக்கால எஸ் பி பியின் குரல். படக் காட்சியுடன் இப்போது.

திரைப் படம்: பெண்ணை நம்புங்கள் (1973)
நடிப்பு: A V M ராஜன், ஜெயந்தி
இசை: V குமார்
இயக்கம்: P V ஸ்ரீநிவாசன்????
பாடல்: தெரியவில்லை



Embed Music - Play Audio -










நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்ச கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்ச கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
முடிவுரையில்லாத காவியமோ
முடிவுரையில்லாத காவியமோ
முதலிரவென்றாலே நாடகமோ

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் கிள்ளைத் தொத்திக் கொண்டாட

மாலைமுதல் காலைவரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் கிள்ளைத் தொத்திக் கொண்டாட

மாலைமுதல் காலைவரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

அஞ்சாறு சின்னம் தந்து
ஆறாத கன்னம் ரெண்டு

அன்னேரம் என்னாகுமோ
மென்மேலும் புண்ணாகுமோ

நான் நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமே
நான் எது கேட்டாலும் தரவேண்டுமே

வானம் பூமி யாவும் மாறும்
வாழும் காதல் நாளும் மாறாது

தேவனுக்கே தேவியென்று
தெய்வம் தந்த சொந்தம் போகாது

கண்ணோடு உன் வண்ணமே
கொண்டாடும் உன் எண்ணமே

உன்னோடு என் உள்ளமே
பின்னோடும் என்னாளுமே

நீ நினைத்த நேரமெல்லாம் வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தரவேண்டுமோ

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

வாழ்வது என்றும் உண்மையே vazhvathu endrum unmaiye

பள்ளி பருவத்தில் இந்தப் பாடலை எங்கள் பள்ளியின்  எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்புவார்கள். புத்துணர்வும், உத் வேகமும் கொடுக்கும் அபூர்வமான சினிமா பாடல்களில் இதுவும் ஒன்று.

பாடலுக்கு நன்றி: இசைத் தமிழ்.in

திரைப்படம்: ராஜா மலையசிம்மன் (1959)
பாடலாசிரியர்: அ. மருதகாசி
இயக்கம்: P S ரெங்கா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: : சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்
நடிப்பு: ரஞ்சன், ராஜசுலோசனா








ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா

வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா
வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா

முன்னேறடா முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா

வாழ்வது என்றும் உண்மையே

வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை சரியுதடா
வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை சரியுதடா

எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிரிப் பாய்ந்தே முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா

வாழ்வது என்றும் உண்மையே

தீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
தீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
பாதையே நீயும் கூடாது
பார்த்திடலாமோ முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா


வாழ்வது என்பது உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா

முன்னேறடா முன்னேறடா

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு ven mugilE konsa neram

ஒரு காதல் பெண்ணின் ஆற்றாமையை அழகாக மிக மென்மையாகவும் சாதாரண வார்த்தைகளாலும் சொல்லக் கூடிய பக்குவம் கொண்டவர் கவிஞர் ஆத்மநாதன். மிக சொற்ப பாடல்களே எழுதியிருந்தாலும் அனைத்தும் சிறப்பான பாடல்கள். அந்த ஆற்றாமையை குரலில் பிரமாதமாக வடித்திருக்கிறார் சுசீலா அம்மா அவர்கள்.

திரைப் படம்: விக்ரமாதித்தன் (1962)
இசை: S ராஜேஸ்வரராவ்
பாடியவர்: P சுசீலா
இயக்கம்: T R ரகுநாத்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி
பாடல்: ஆத்மநாதன்












வெண் முகிலே

வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு



சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு

இல்லை என்னையேனும் அங்கழைத்து செல்லு

சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு

இல்லை என்னையேனும் அங்கழைத்து செல்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே



உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு

உயிர் அங்கே உடல் இங்கே உயிர் அங்கே உடல் இங்கே

உள்ளதென்றும் சொல்லு

உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு

உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு

உணர்விழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு

ஓடி வரவும் சொல்லு



வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே



ஆடும் மயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு

ஆடும் மயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு

அழகு நிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு

வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு

நான் வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு

வருவதற்குள் நீ விரைந்து வந்து பதிலும் சொல்லு

வந்து பதிலும் சொல்லு



வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு

என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு

வெண் முகிலே

வியாழன், 18 செப்டம்பர், 2014

கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு konsum sathangai oli kettu

குமாரி கமலா அவர்கள் நடனத்தில் திருமதி லீலா அவர்களின் குரலில் யாராலும் இதுவரை தட்டிக் கொள்ள  முடியாத பாடல். சரியான இசையில், (காணடா ராகம் என நினைக்கிறேன்) மிகக் கச்சிதமாக பாடப் பெற்ற பாடல்.

படம்: கொஞ்சும் சலங்கை(1962)
பாடியவர்: P. லீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: S M சுப்பையா நாயுடு
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: M V ராமன்










கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொங்குதம்மா புதிய பாட்டு
பொங்குதம்மா புதிய பாட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

காவிய பாவலர் கவியோ இசையோ
காவிய பாவலர் கவியோ இசையோ
கலையால் நிலை பெறும் யாழோ 

காவிய பாவலர் கவியோ இசையோ 
கலையால் நிலை பெறும் யாழோ
பாவையர் ஆடிடும் பரதம் இதுவோ 
பாவையர் ஆடிடும் பரதம் இதுவோ
மனமே மணம் பெறவே
சுவை மேவும் நாத இசை
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

சிங்கார கை குலுங்கி வளையோடு விளையாட
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

சேலாடும் விழியோடு ஜகம் யாவும் உறவாட 
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

மங்காத எழில் ஆட மனம் ஆட மொழியாட 
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

சிங்கார கை குலுங்கி வளையோடு விளையாட
சேலாடும் விழியோடு ஜகம் யாவும் உறவாட
மங்காத எழில் ஆட மனம் ஆட மொழியாட

தந்தோம் தந்தோம் என்று
ஜதியோடு மலராட
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
பொங்குதம்மா புதிய பாட்டு
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா maamarathu pooveduththu manjam ondru

ஷோபா சந்திரசேகரனின் தம்பி S N சுரேந்தர்க்கு சிபாரிசின் மூலம் சில பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தாலும் பெரும்பாலுமான பாடல்கள் இனிமையாக அமைந்துவிட்டன. அந்த வரிசையில் இந்தப் பாடல்.

திரைப் படம் : ஊமை விழிகள் (1986)
பாடியவர்கள்: B H சசிரேகா, S N சுரேந்தர்
பாடல்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
நடிப்பு: விஜயகாந்த், சரிதா
இயக்கம்: R அரவிந்த்ராஜ்









மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம்
விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா


ஹோஹோஹோஹோஹஓஹோ
ஹொய்யா
ஹோஹோஹோஹோஹஓஹோ
ஹொய்யா

கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது
ஆ ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன்
கூடலையே நாடினேன்
கூடிவிட மனது துடிக்குது
கூடவந்தா நாணம் தடுக்குது

கடலோடு பிறந்தாலும்
இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும்
இந்த மனமும் ஏங்குது
மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடவா

சித்திர பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்து விரல் அணைக்கத்தானம்மா

முத்து ரதம் எனக்குத் தானம்மா
சித்திர பூவிழி பாரம்மா
சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்து விரல் அணைக்கத்தானம்மா
முத்து ரதம் எனக்குத்தானம்மா

உனக்காக உயிர் வாழ
இந்த பிறவியெடுத்தது
உயிரோடு உயிரான
இந்த உறவு நிலைத்தது

மாமரத்து பூ எடுத்து
மங்கை என்னை தேடிவா
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி ஓடி வா
கண்ணா புது நாடகம்
விரைவில் அரங்கேறட்டும்

மாமரத்து பூ எடுத்து
மஞ்சம் ஒன்று போடலாம்
பூமரத்து நிழல் எடுத்து
போர்வையாக்கி மூடலாம்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ nilave nee intha seithi sollayo

கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த அருமையான பாடல்.
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு பாடும் குரலில் அழகாக கொஞ்சமும் உணர்ச்சி குறையாத வகையில் சிறப்பாக பாடியிருக்கிறார்கள். இந்த வகை பாடல்கள் ஒரு Master piece.


திரைப்படம்  : பட்டினத்தார்
இசை: G ராமநாதன்
நடிப்பு: டி எம் எஸ், ஜெமினி சந்திரிகா
பாடியவர்கள்: டி எம் எஸ், P லீலா
இயக்குனர்: K சோமு















நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

கோடி செல்வம் நிறைந்தாலும் என்ன
அதை குலவி கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
கோடி செல்வம் நிறைந்தாலும் என்ன
அதை குலவி கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ

ஓடி வந்து விளையாட இங்கு
ஒரு பாலன் வேண்டுமென
வேலன் தந்தையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

சிலைகள் போல இரு சேய்களை ஈன்று
சிந்தை குளிரவில்லையோ
உமையவள் சிந்தை குளிரவில்லையோ
அதுபோல் உலகில் எந்தனது உள்ளம் கனிய
ஒரு பிள்ளை வேண்டுமென
மெல்ல அம்மையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

பக்தியை கெடுத்திடும் பாதகரை வெறுத்து
சினந்திருக்கும் போதிதை சொல்லாமல்
சக்தியாள் உமாதேவியுடன் தமது
புத்திரர்களை வாரி முத்தமிடும் போது
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

மகவில்லாத இவள் மலடியென்றுலகம்
வசைகள் பேசி என்னை இகழ்ந்திடுமே
என் வகையில் இந்த பாராமுகம் ஏனோ
மர்மமொன்றும் அறியேன்
அன்னையிடம்

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

சனி, 13 செப்டம்பர், 2014

காக்கா காக்கா மை கொண்டா kakka kakka mai konda

மூன்று தீபாவளிகள் கண்ட ஹரிதாஸ் திரைப் படத்தின் இயக்குனரின் அடுத்த படம் இது. ஆனால் இயக்குனர் ஏனோ அதன் பிறகு தமழ் திரை உலகினால்  கவனிக்கப் படவே இல்லை என்பது தான் சோகம்.

எனக்குப் பிடித்த திருமதி ராஜேஸ்வரி அவர்களின் குரலில் அழகான பாடல்.


திரைப் படம்: மகாதேவி (1957)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்: M S ராஜேஸ்வரி
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: சுநதர் ராவ் நட்கர்னி
நடிப்பு: எம் ஜி யார், சாவித்திரி

















காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

உத்தம ராஜா என் கண்ணு
பத்தரை மாதத்துப் பசும் பொண்ணு
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க
உடனே எல்லாம் தந்திடுங்க

உத்தம ராஜா என் கண்ணு
பத்தரை மாத்துப் பசும் பொண்ணு
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க
உடனே எல்லாம் தந்திடுங்க
ஆ ஆ ஆ

பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

கல்லைக் கையால் தொட மாட்டான்
தொல்லை ஏதும் தர மாட்டான்
சொல்லால் செயலால் உங்களுக்கே
நல்லன என்றும் செய்திடுவான்
ஆ ஆ ஆ

பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துறவில் தூங்காமல்
சுருக்காய் கூடி வந்திடுங்க

சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
சமர்த்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துறவில் தூங்காமல்
சுருக்காய் கூடி வந்திடுங்க
ஆ ஆ ஆ

பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா

வியாழன், 11 செப்டம்பர், 2014

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க kumari pennin ullathile kudiyirukka naan

 இந்தப் பாடலில் முதிர்ந்த இந்த நடிகர் நடிகைகளிடம் இருந்த Enthus மற்றும் ஒரு ஈடுபாடு (Dedication) இன்றைய இளம் நடிகர் நடிகைகளிடம் ஏனோ மிஸ்ஸிங். அது அவர்கள் குறையா அல்லது பாடலின் குறையா அல்லது இயக்குனர் குறையா....நம்முடைய குறையா?
பாடலின் ஆரம்ப இசையே நமது கற்பனைக்கு எட்டாத ஒரு இனிமை.கேட்க கேட்க அலுக்காத பாடல்.

படம்: எங்க வீட்டுப் பிள்ளை (1965)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா

இயக்கம்: சாணக்கியா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
பாடல்: வாலி












குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 
குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

குமரிப் பெண்ணின் கைகளிலே 

காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

குமரிப் பெண்ணின் கைகளிலே 

காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 

குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ


குமரிப் பெண்ணின் கைகளிலே 
காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

திங்கள் தங்கையாம் 

தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் 

தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்


அவள் உன்னைக் கண்டு 

உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு 

உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்


நான் அள்ளிக் கொள்ள 

அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
 
நான் அள்ளிக் கொள்ள
அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்


கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 

குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

பூவை என்பதோர் 

பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்


இடை மின்னல் கேட்க 

நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு 

நான் தருவேன்

கொடுத்தாலும் என்ன 

எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது


அந்த அழகே வராமல் 

ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே 

குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் 

வாடகை என்ன தர வேண்டும்

குமரிப் பெண்ணின் கைகளிலே 

காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு 

குடியிருக்க நீ வர வேண்டும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

குட் நைட்
குட் நைட் 

திங்கள், 8 செப்டம்பர், 2014

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் santhanam poosa manjal nilavum

எஸ்.பி.பியின் இசையில் ஒரே தமிழ் படம் இது என நினைக்கிறேன். அழகான பாடல்கள். ஆனால் ஏனோ தொடர்ந்து  இசையமைக்கும் முயற்சியில் (தமிழில்) அவர் ஈடுபடவில்லை.

திரைப்படம்: துடிக்கும் கரங்கள் (1983)
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
இசை:எஸ்.பி.பி
இயக்கம்: A. C. ஸ்ரீதர்
நடிப்பு: ரஜினி, ராதா











சந்தனம் பூச
மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று
நெஞ்சில் உலாவும் நேரம்
வெண்ணிலவு பாலூட்ட
பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்

சந்தனம் பூச
மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று
நெஞ்சில் உலாவும் நேரம்
வெண்ணிலவு பாலூட்ட
பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்


மாணிக்க மேகங்கள்
வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த
காதல் சீதனம்
மாணிக்க மேகங்கள்
வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த
காதல் சீதனம்ஹ 

இளவேனில் காலங்கள்
ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள்
ரீங்கார நாதங்கள்
இசை வந்து
பாடும் மோகனம்
இசை வந்து
பாடும் மோகனம்

சந்தனம் பூச
மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று
நெஞ்சில் உலாவும் நேரம்

வெண்ணிலவு பாலூட்ட
பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்
நீலாம்பரி கேட்கலாம்

நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

இதமாக மை போட்டு
இமையென்னும் கை போட்டு
இதமாக மை போட்டு
இமையென்னும் கை போட்டு
உன் கண்கள்
என்னைக் கொய்தன
ஆஆஆஆ 
உன் கண்கள்
என்னைக் கொய்தன

சந்தனம் பூச
மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று
நெஞ்சில் உலாவும் நேரம்

வெண்ணிலவு பாலூட்ட
ஹா 
பெண்ணிலவு தாலாட்ட
ஹா 
நீலாம்பரி கேட்கலாம்
ஆ 
நீலாம்பரி கேட்கலாம்

சனி, 6 செப்டம்பர், 2014

சின்ன சின்ன ஊரணியாம் chinna chinna uuraniyaam

இன்று கலைஞர் T.V. யில் இந்த படம். அன்று முதல் தடவை சிறிய வயதில் பார்த்து மனம் இன்னது என்றறியாமல் ...எம். வி. ராஜம்மா... கல்யாண குமார் நிலை கண்டு அழுத உணர்வு இன்னது என்று இன்றுதான்...படம் முழுதும் பார்த்து உணர்ந்து தெளிந்தேன். அப்படி ஒரு உருக்கமான பாடல் இது. சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில்...தன் பிள்ளை என்று சொல்ல தாயாலும் முடியவில்லை.. , தாய் என்று அறிந்து கொள்ள சேயாலும் கூடவில்லை... உள்ளத்தில் இருக்குதையா ...உண்மை சொல்ல மயங்குதையா...! பொல்லாத தடை...! என்ன உண்மை..? ஒரு அக்ராஹரத்துக் கதை அழகுடன் பின்னப் பட்டுள்ளது. ஏழைக் குடியானவன் குழந்தைக்கு தாய் இல்லாது போனதால்..தன குழந்தையோடு சேர்த்து தன் பால் கொடுக்க, விலகியிருந்த வீம்பான ஆச்சாரமான கணவன் வந்து அக்குழந்தை தனது என நினைத்து எடுத்துச் செல்கிறான். தாய்ப்பால் அவசியம் எனதெரிந்து அவளை வேண்டா வெறுப்பை அழைத்து வந்து உண்மையான குழந்தையை மாட்டுக் கொட்டடியில் ..மாட்டுக்காரனை வளர்கிறான். இவருக்கு உண்மை உரைத்தால் ஏழையின் குழந்தைக்குப் பால் கொடுத்தால் அபசாரம் என்று தள்ளி வைத்து விடுவார் என்று பயந்து..... கண்ணெதிரிலேயே சொந்த மகன் மாட்டுக்காரனாய் அடிபட்டு வளர்வதும்...ஏழைக் குழந்தையைப் பாசம் சிறிதும் குறையாமல் உன்னதமானவனாய் அந்தத் தாய் எம். வி. ராஜம்மா... வளர்த்து வருவதும்...என் கண்ணில் அன்றுபோல் இன்றும் கண்ணீர் பெருகியது நடிப்பு அற்புதம்... அன்னையர் தினத்திற்கு ...இப்பாடலே முதன்மை யாய்ப் பொருந்தும்..... சின்ன சின்ன ஊரணியாம்....

நன்றி: Kothai notes on Music and Movie

ஆழ்மனதை தாக்கும் கே வி மகாதேவனின் மற்றுமொரு பாடல்.

திரைப் படம்: தாயில்லா பிள்ளை (1961)
இயக்கம்: L V பிரசாத்
நடிப்பு: கல்யாண்குமார், முத்துக் கிருஷ்ணன், T S பாலையா, நாகேஷ்,  M V ராஜம்மா
இசை: K V  மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்













சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்

மாமரத்து கைளைதனிலே
மாடப் புறா கூண்டுகளாம்
கூண்டுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்
மாமரத்து கைளைதனிலே
மாடப் புறா கூண்டுகளாம்
கூண்டுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்

சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்

சிறகு முளைக்கும் முன்னே
திசையறிந்து நடக்கும் முன்னே
சிறகு முளைக்கும் முன்னே
திசையறிந்து நடக்கும் முன்னே
பறவையின் குஞ்சு ஒன்று
பறந்ததய்யா கூடு விட்டு
பறவையின் குஞ்சு ஒன்று
பறந்ததய்யா கூடு விட்டு
கூடு விட்டு போன பிள்ளை
குடியிருக்கும் இடம் தேடி
கூடு விட்டு போன பிள்ளை
குடியிருக்கும் இடம் தேடி
ஓடி வந்த தாய் பறவை
ஊமையாகி நின்றதய்யா
ஓடி வந்த தாய் பறவை
ஊமையாகி நின்றதய்யா

தன் பிள்ளை என்று சொல்ல
தாயாலும் முடியவில்லை
தாயென்று அறிந்துக் கொள்ள
சேயாலும் கூடவில்லை
தன் பிள்ளை என்று சொல்ல
தாயாலும் முடியவில்லை
தாயென்று அறிந்துக் கொள்ள
சேயாலும் கூடவில்லை

உள்ளத்தில் இருக்குதைய்யா
உண்மை சொல்ல மயங்குதய்யா
பொல்லாத தடையை எண்ணி
புலம்புதய்யா கலங்குதய்யா
பொல்லாத தடையை எண்ணி
புலம்புதய்யா கலங்குதய்யா

சின்ன சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்



வியாழன், 4 செப்டம்பர், 2014

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் Kamalam paatha kamalam

இவ்வுலகம் இசையில் எந்நேரமும் மூழ்கியிருக்கிறது. இரவு நேரங்களில் ஊரின் சந்தடி அடங்கிய பிறகு நாம் நம் வீட்டுக்கு வெளியில் குறிப்பாக மொட்டை மாடிக்குச் சென்று மனதில் எழும் இதர சிந்தனைகளை விடுத்து நம் செவிகளால் கூர்ந்து கவனித்துக் கேட்போமாகில் இவ்வுண்மை நமக்கு விளங்கும். நாம் கண்ணால் காண இயலாத உயிரினங்கள் ஒவ்வொரு இரவிலும் எழுப்பும் சில்லென்ற ரீங்கார ஒலியை நம் காதுகள் உணரத் தவறுவதில்லை. மனதை உலக சிந்தனைகளிலிருந்து திருப்பி ஒருமுகப்படுத்தும் வல்லமை வாய்ந்தது இசை ஒன்றேயாகும். இதன் காரணமாகவே இறைவனைத் தொழுவதற்கு ஏற்ற சாதனமாக இசை விளங்குகின்றது. எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் பிரார்த்தனை செய்ய இசையின் துணையையே நாடுகின்றனர். 

இசையை ரசிக்க்காத உயிரினங்கள் ஏதும் உலகில் இல்லை. எனினும் இசை பல வடிவங்களில் திகழ்கையில் ஒவ்வொரு வடிவமும் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களுக்குப் பிரியமானதாக விளங்கக்கூடும். பாம்புகளுக்குப் பிரியமான இசை புன்னாகவராளி ராகம் என்பது பிரசித்தி. குழந்தைகளுக்குப் பிரியமான ராகம் நீலாம்பரி. அம்ருதவர்ஷிணி எனும் ராகத்தை முறையாகப் பாடினால் நிச்சயம் மழை பெய்யும் என்பதும் மிகப் பிரசித்தி. ஒரு சமயம் இலங்கேஸ்வரனாகிய இராவணன் சிவபெருமானும், பார்வதி தேவியும் எழுந்தருளிய திருக்கயிலாயத்தைப் பெயர்த்தெடுக்க முயல்கையில் பார்வதி தேவி பதற்றமுறவே சிவபெருமான் தனது கட்டை விரலால் அழுத்த இராவணன் மலைக்கடியில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடிப் போனானாம். தன் பிழையை உணர்ந்து தன்னைக் காத்தருளுமறு வேண்டி சிவபக்தனாகிய இராவணன் தன் தலைகளில் ஒன்றையும் தன் கைகளில் ஒன்றையும் பிய்த்து அவற்றுடன் தன் நரம்புகளையே தந்திகளாகக் கொண்ட ஒரு வீணையை உருவாக்கி, அவ்வீணையை மீட்டியவாறு சாமகானம் பாட, அவனது இசையைக் கேட்டு மகிழ்ந்து சிவபெருமான் கருணை கொண்டு அவனை விடுவித்ததாகப் புராணம் சொல்கிறது. இராவணன் வீணையை மீட்டி அப்பொழுது பாடிய ராகம் காம்போதி. வீணை மீட்டிப் பாடுவதில் இராவணனுக்கு நிகர் எவருமில்லை என்பது பிரசித்தம். இராவணனை வீணை மீட்டிப் பாடுவதில் வெற்றி கண்டவர் அகத்திய முனிவர் ஒருவரே ஆவார். 

இசை நம் அனைவரின் துயர் தீர்க்கும் மருந்தாக வல்லது. தீராத நோய்வாய்ப்பட்டவரையும் அந்நோயிலிருந்து பரிபூரணமாய்க் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது என்பதும் பிரசித்தி. இதை மெய்ப்பிக்கும் வகையில் சரித்திரக் கதைகளில் பல சம்பவங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவை மொஹலாயர்கள் காலத்தில் ஆண்ட மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகராக விளங்கிய தான்சேன் இசைபாடி நோயாளிகளைக் குணப்படுத்திய்ள்ளதற்கும் தீப் எனும் ராகத்தில் பாடி அகல் விளக்கை எரிய வைத்ததற்கும் சான்றுகள் உள்ளன. 

இசையை வெறுத்தவர் மொஹலாய மன்னர்களுள் ஒருவரான ஔரங்கசீப் என்பதும் பிரசித்தம். உண்மையில் அவர் இசையை வெறுக்கவில்லை, மனிதர்களையே வெறுத்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர் பலரும் ஒத்துக்கொள்வர். ஒரு முறை சிலர் வாத்தியங்களுடன் இசைமீட்டிப் பாடியவண்ணம் செல்கையில் அவர்களை எதேச்சையாக அவ்வழியே வந்த ஔரங்கசீப் மன்னர் கண்டு, என்ன செய்கிறீர்கள் என அதட்டிக் கேட்கையில் அவர்கள், அவரது கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டி "இசையைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம்" என்று சமயோசிதமாக பதில் சொன்னார்களாம். அதற்கு ஔரங்கசீப், "நன்கு மிகவும் ஆழமாகத் தோண்டிப் புதையுங்கள், வெளியே வந்துவிடப் போகிறது" என்றாராம். இக்கதையை எனக்குக் கூறியவர் எனது தந்தை ஆவார். 

இயல்பாகவே சிறுவயது முதலே நான் இசையில் மிக்க ஈடுபாட்டுடன் இருப்பவன். என் தந்தையிடம் நான் முறையாக இசைபயில விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் கேட்கையில் இக்கதையைக் கூறி என் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். இசையை நான் மறக்கவில்லை, தொடர்ந்து இசையைக் கேட்டும், பாடியும் புல்லாங்குழல், புல்புல் தாரா, மவுத் ஆர்கன் முதலிய வாத்தியங்களில் வாசித்தும் வருகிறேன். அதே சமயம் ஔரங்கசீப் கதையையும் நான் மறவாது அவ்வப்பொழுது நினைவில் கொள்வதுண்டு. இவ்வாறு இசை என் வாழ்வில் இசைந்து விளங்குவதால் இவ்வுலகில் நேரும் சிறுசிறு துன்பங்களைக் கண்டு துவளாமல் என்றும் இன்பமாய் வாழ என்னால் முடிகிறது.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த இசையை நாம் நாள்தோறும் கேட்டு மகிழ்ந்து நமது அன்றாட வாழ்வில் நாம் உறும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மனதை எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வது நலம் பயப்பதாகும். ஏதேனும் சோகமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் சோகரசம் ததும்பும் இசையைக் கேட்டு நம் சோகத்தால் விளையும் துன்பத்தையும் நம்மால் கடக்க இயலும். அனைத்திற்கும் மேலாக மனிதகுலம் இறைவனடியைப் பணிந்துய்ய இசை மிகவும் ஏதுவானதொரு சாதனமாகும். 

நன்றி:
http://www.thamizhisai.com

திரைப்படம்: மோகமுள் (1995)
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயக்கம்: ஞான ராஜசேகரன்
நடிப்பு: அபிஷேக், அர்ச்சனா ஜோலெக்கர்






ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம் 
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான 
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும் 
கமலம்

ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்துக் கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை நடத்தும்
வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளங்காற்று எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க 
அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான 
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும் 
கமலம்

நாவாறப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம் திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில் தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால் 
தலமொரு இசைநயங்களை வழங்கிய

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான 
இறைவன் நீ தானென்று நான் தொழும்
தலைவன் நீ தானென்று போற்றிடும்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும் 
கமலம் பாத கமலம்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மாசி மாதம் முகூர்த்த நேரம் maasi maatham muhurtha neram maalai

வேகமான பாடல். வழக்கம் போல ஜி கே வெங்கடேஷின் கைவண்ணத்தில் அழகான பாடல். இனிமையான குரல்கள்.


திரைப் படம்: பெண்ணின் வாழ்க்கை (1981)
இசை: G K வெங்கடேஷ்
பாடியவர்கள்: P ஜெயசந்திரன், P சுசீலா
பாடல்: வாலி
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: ரதி அக்னிஹோத்ரி, சுதாகர்











மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்

திருமணம் வந்த நாள்
இருமனம் நின்ற நாள்

காணும் காட்சி எல்லாம் கல்யாண வைபோகம்

மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்

திருமணம் வந்த நாள்
இருமனம் நின்ற நாள்

காணும் காட்சி எல்லாம் கல்யாண வைபோகம்


மேளம் கொட்டி முழங்க

தோழி பண் பாட

மெட்டி கொண்டு நடக்க

மேனி திண்டாட

மேளம் கொட்டி முழங்க

தோழி பண் பாட

மெட்டி கொண்டு நடக்க

மேனி திண்டாட

மணமகள் விழி மண் பார்க்க

மணமகன் வரும் பெண் பார்க்க

காணும் காட்சி எல்லாம் கல்யாண வைபோகம்

மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்


மாலை தன்னை எடுத்து

தோளில் நான் சூட

மூன்று மஞ்சள் முடிச்சி

மன்னன் நான் போட

மாலை தன்னை எடுத்து

தோளில் நான் சூட

மூன்று மஞ்சள் முடிச்சி

மன்னன் நான் போட


பெறுவது திருமாங்கல்யம்

வருவது நல்ல சௌபாக்கியம்

காணும் காட்சி எல்லாம் கல்யாண வைபோகம்

மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்

தேகம் கொஞ்சம் சிலிர்க்கும்

தேவன் கை பட்டு

மோகம் கொண்டு அணைக்கும்

காதல் பூஞ்சிட்டு

தேகம் கொஞ்சம் சிலிர்க்கும்

தேவன் கை பட்டு

மோகம் கொண்டு அணைக்கும்

காதல் பூஞ்சிட்டு

ரதியோடு மதன் லீலைகள்

ரகசியம் அவன் வேலைகள்

நாளும் வாலிபத்தில்
சங்கீதம் சந்தோஷம்

மாசி மாதம் முகூர்த்த நேரம்
மேடை மங்கலம்

திருமணம் வந்த நாள்
இருமனம் நின்ற நாள்

காணும் காட்சி எல்லாம் கல்யாண வைபோகம்

லா ல ல லா ல ல லா லா ல லா
லா ல லல லா