வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

அழகான பூக்கள் மலர்ந்தாடுமே... நீ வந்து நின்றால் வாய் மூடுமே

அவ்வளவாக பிரபலமாகாத அழகான அமைதியான பாடல். இரவு நேர அமைதிக்கு இன்பமான பாடல்.

திரைப் படம்: அன்பே ஓடி வா  (1984)
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வைரமுத்து
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: ரஞ்ஜித் குமார்




http://www.divshare.com/download/13962935-6f2


தனன நானனா தனனனன நா
தனனனா நான நனானா ஹோ ஹோ ஹோ க்
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
காலங்களே சொல்லுங்களேன்
காதல் ஒரு வேதம்
மேகங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும்
ஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
ஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம் மோக்ஷம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள் யாரது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
லலலலாலால லலலலா ல்லா
லலலலா லலலலா லலா ஹோ ஹோ ஹோ
மேகங்களில் பூஜை கட்டி ஆடி விடு தோழி
ஆகாயத்தில் பூ பூக்கட்டும் ஆணை இடு தேவி
மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யாரது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணீல் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
ஹா ஹா ஹா

1 கருத்து:

கருத்துரையிடுக