புதன், 12 பிப்ரவரி, 2014

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்

 பாடல் காட்சி கிடைக்கவில்லை. இனிமையான பாடல். ஆனால் பாடல் வரிகள் தெளிவாக இல்லை. ஒரு சில கவிதை வரிகளைத் தவிர மற்றைய வரிகளும் எதுகை மோனையுடன் இருப்பதாகத் தெரியவில்லை.கேட்டு ரசிக்கலாம். இது ஒரு அபூர்வமான பாடலாக நினைக்கிறேன்.

திரைப் படம்: ஓ மஞ்சு (1976)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: மறைந்த நடிகர் மாஸ்டர் சேகர், கவிதா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTI3MDYzNV8yVGM2UV8yOGFk/idhu%20arangetram%20agadha%20nattiyam.mp3



ல ல ல ல ல
ஹா ஹா ஹா ஹா
ல ல ல ல ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

பனி மேடை மீது பாதங்கள்
தப்பிப் போடும் இன்ப தாளங்கள்
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

இளமையில் சந்திக்கும்

இரு மனம் சிந்திக்கும்

நினைவுகள் தித்திக்கும்

கவிதையில் வர்ணிக்கும்

கலைக் கூட நமக்காக உருவானதோ
இந்தக் கலைக் கூட நமக்காக உருவானதோ

பல கோடி எண்ணம் புரியாத வண்ணம்
பல கோடி எண்ணம் புரியாத வண்ணம்
கலை கொஞ்சும் கண்ணோடு கதை பேசுதோ
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

இதயமும் வெட்கிக்கும்

இளமையில் ஒத்தி வை

பனி மலர் கண்ணுக்குள்

பல வகை வைரங்கள்

விலை போட முடியாத சிலை அல்லவோ
இது விலை போட முடியாத சிலை அல்லவோ

கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
சதிராடி வரும் போது சுகமல்லவோ
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
ஆ ஆ
இது அழகான மலராடும் நாடகம்
ஆ ஆ

அவரவர் சொர்க்கங்கள்

அவரவர் பக்கங்கள்

சில சில சிற்பங்கள்

சிரி சிரி வெட்கத்தில்

இள மான்கள் அரசாளும் சாம்ராஜியம்
இது இள மான்கள் அரசாளும் சாம்ராஜியம்

மணி மாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
மணி மாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
அவையாவும் மனம் சேரும் திரு நாளிது

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக