பின்பற்றுபவர்கள்

புதன், 31 அக்டோபர், 2012

ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே



மனதை மயக்கும் ரம்மியமான இசையுடன் S P B சாரின் குரலில் வெளிவந்த இந்த பாடல் இப்பொழுதைய தலைமுறையினர் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

பாடலின் இசையோடும் அதிலிருந்து சிறிதும் விலகாத
ஸ்ருதியோடு பாட இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ?

ஒரு சூப்பர்ஹிட் மெலோடி பாடலை கேட்டு மகிழுங்கள்.

மது மலர் (1981)
பாடியவர்:  SPB
இசை:  கங்கை அமரன் 
இயக்குநர்பாரதி வாசு
நடிகர்கள்:  பிரதாப் போத்தன்சுஹாசினி

















ம் ம் ம் ம் ம் ம்  ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா
அஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

இதயம் ஒன்றை தேடுதே
இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம்
ஆசைகள் நெஞ்சிலே
ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே
ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

அழகு வானில் தாரகை
அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள்
கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள்
கருத்திலே நின்றவள்
எண்ணங்களே சொல்லாமலே என்னோடு
விளையாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

திங்கள், 29 அக்டோபர், 2012

சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே


S A ராஜ்குமாரின் முதல் படம். S P B, வாணி ஜெயராம் பாடிய இந்தப் பாடலில் S P B அவர்களின் குரல் அட்டகாசம். இனிமை தேன் வழிந்தோடுகிறது. இந்த அறிமுக இசையமைப்பாளரை
S P B நிமிர்ந்து நிற்க வைத்திருக்கிறார் தனது குரலால்.

திரைப்படம் : சின்ன பூவே மெல்ல பேசு
பாடியவர்கள் : S P B, வாணி ஜெயராம்
இசை/ பாடல் வரிகள் : S A ராஜ்குமார்
நடிப்பு: ராம்கி, சபிதா ஆனந்த், பல்லவி, பிரபு
இயக்கம்: ராபர்ட் ராஜசேகர்



சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஹா ஆ ஆ ஆ
ஆனந்த ராகங்களில் நான் ஆலாபனை செய்கிறேன்
வா ஆ ஆ ஆ
நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஆ ஆ ஆ ஆ ஆ
பொன்மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன்
ஹா ஆ ஆ ஆ ஆ
கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி தான் ஓடினேன்
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ அவள் கிட்ட வந்து கட்டி


இனிமையான P சுசீலா அம்மாவின் குரலில் தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல்.

படம்: காவல்காரன் (1967)
குரல்: P சுசீலா
கவிதை:ஆலங்குடி சோமு
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
இயக்கம்: P நீலகண்டன்




கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ

வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ
அதை வெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ
அதை வெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்ச சிரிப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்ச சிரிப்பாளோ
அதில் பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ - அதில்
ஆசையும் பாசமும் காவியமோ
அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ - அதில்
ஆசையும் பாசமும் காவியமோ

அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ
என் கண்களில் நீ தரும் தரிசனமோ

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ

பொங்கு கடல் மடிதனில் நிலவாட - அதில்
தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
பொங்கு கடல் மடிதனில் நிலவாட - அதில்
தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
அங்கம் என்ற மலரில் உயிராட
அங்கம் என்ற மலரில் உயிராட
அன்பு எங்கிருந்தபோதிலும் புகழ் பாட

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ம் ம் ம் ம் ம் ம் ம்

புதன், 24 அக்டோபர், 2012

வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே


எங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த  அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

இன்று ஒரு நல்ல இனிமையான பாடலுடன் கிணற்றுத் தவளை தொடர்ந்து செயல்படும் என நம்புகிறேன்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் குரல்களில் ஒரு இனிய காதல் கீதம்.


திரைப்படம்: ஜோதி மலர் (1986)
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இயக்கம்: ராமநாராயணன்
நடிப்பு: சுரேஷ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDQxMjU0OV9NbkRmOF8zZjIz/Vanna%20Malar%20Poongkodiye.mp3







வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே

வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா

வண்ணமலர் பூங்கொடியே

மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
மாதுளம் பூ இதழோ மங்கை உன் செவ்விதழோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
நான் அதை சுவைப்பதற்கு நாணம் தடை போடுவதோ
வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா

வண்ணமலர் பூங்கொடியே

கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
கண்ணிலே பனிப்பார்வை கண்ணா உன் தனிப்பார்வை
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ
என் ஆசை அடங்கவில்லை ஏனிந்த மயக்கமோ

வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
வண்ணமலர் பூங்கொடியே

கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
கை உறவில் மெய் மறக்க காந்தம் என்னை இழுக்குதடி
காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா
காதல் இன்பம் பெருகி வர கருவிழி சொருகுதம்மா

வண்ணமலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந்தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே

வண்ணமலர் பூங்கொடியை வண்டு வந்து தேடுதம்மா
எண்ணி எண்ணி நான் மகிழ இன்ப சுகம் பொங்குதம்மா
ல ல  ல ல லா ல லலா ஆ ஆ ஆ