பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

மீண்டும் A A ராஜ் அவர்களின் ஒரு பாடல். வாசுவின் குரல் கொஞ்சம் வறண்ட குரலாக தெரிகிறது இந்த பாடலில். ஆனாலும் ஆண்மைமிக்க குரல். இனிய பாடல்.
இந்த திரைப் படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை.

திரைப்படம்:  தணியாத தாகம் (1982)
நடிப்பு: டெல்லி கனேஷ்,
இசை: A A ராஜ்
இயக்கம் E M இப்ராஹிம்
குரல்: S ஜானகி, மலேஷியா வாசுதேவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODI2OTEyNF9XMXh2cV8yMDJm/Poove%20nee%20yaar%20solli.mp3










ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

கோவில் கலசம் போல் என் தேவி

கூந்தலில் ஆடிடும் உன் மேனி

கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்பொல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
புது மலர் புது மலர்
புது மலர் புது மலர்

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

சக்கை போடு போட்ட படம். பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மொழி  மாற்றம்  பெற்றது.
இரண்டு பெண் குரல்களுமே இதமாக ஒலிக்கும் பாடல். அருமையான சங்கீதம்.
இப்பாடலை எழுதியவர் உடுமலை  நாராயணக் கவி என நினைக்கிறேன்.


படம்: பெண் (1954)
இயக்கம்: M V ராமன்
நடிப்பு: ஜெமினி, அஞ்சலிதேவி, வைஜயந்தி மாலா
பாடியவர்கள்: M S ராஜேஸ்வரி, T S பகவதி
இசை: R சுதர்சனம்




http://www.divshare.com/download/15019287-90c



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா



இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா

இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா

இதயம் தனையறிந்தே மனம் கனிந்தே அருகிலே வா வா



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா

தண்டை ஒலி இசையை கேட்டதில்லையோ வா வா வா

அந்த சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா

கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா

கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா

அந்த சிரிப்பிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா வா



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா



இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா

அந்த இனிய நாதமென் உடலை வாட்டுதே வா வா வா

புது புது அழகாய் போற்றுகிறாயே வா வா வா

புது புது அழகாய் போற்றுகிறாயே வா வா வா

மது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா

மது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா



சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே

நல்ல பாடல். எஸ் பி பி சிறப்பாக பாடியிருப்பார். தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் காட்சிக்கு ஏற்ற பாடல்.

திரைப் படம்: நான் பேச நினைப்பதெல்லாம் (1993)
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன்
இசை: சிற்பி
பாடல்: பழனி பாரதி
நடிப்பு: ஆனந்த் பாபு, மோகினி
இயக்கம்: விக்ரமன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODEwMDYzNl9OaEVnUF83MjY0/Poonguyil-Naan%20Pesa%20Nipathellam.mp3






பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

ஜென்மம் ஜென்மங்கள்
ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும்
ஆகாயம் நீயாகனும்
என்றும் ஓயாது ஓயாது
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே
என் சூரியோதயம்

அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

இன்று என் பாதை
உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில்
என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக
நமக்காக விடிகின்றது

ஓடும் கங்கை நதி
இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம்
யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

புதன், 25 டிசம்பர், 2013

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும்

ஏசு பிரான் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைத்துலக மக்களுக்கும் எங்களுடைய அன்பான மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

நமது ஏசுபிரான் கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற அருமையான வாசகத்தை தந்துள்ளார். அதன் விளக்கத்தை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நல்ல நாளில் தெரியப் படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன? எதைக் கேட்க வேண்டும்?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும்.

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்.

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன? நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும். மேல் நிலைக்கு செல்வதற்கு, என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும். அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும்?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும். அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது. அதை தட்டினால் திறக்காது. சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது. அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும். அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும்.

அந்த சாவியை எப்படிப் பெறுவது?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும் ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும். நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும், நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும். அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம். இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும். அவை யாதெனில் கடவுள் தயவு, ஜீவர்கள் தயவு என்பதாகும். அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும். கடவுள் அருள் ஜீவர்கள் அருள். அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்றுக் கடவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும். அந்த அருள் எங்கு இருக்கும் என்றால், கடவுளின் கோட்டையாகிய பரலோகமாகும் அதாவது பரமாகாசமாகும்.

அந்த கடவுளின் கோட்டைக் கதவு சாத்தப் பட்டு இருக்கும். அந்தக் கதவை திறப்பதற்கு அருள் என்னும் திறவு கோல் வேண்டும். அந்த அருள் எதனால் பெறமுடியும் என்றால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் உயிர் இரக்கம் வேண்டும். அந்த இரக்கத்தின் வாயிலாக நம்முடைய ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும். அந்த அருள் உடம்பு முழுவதும் பரவி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும். அந்த ஒளி உடம்பைக் கொண்டு ஆண்டவர் இருக்கும் கோட்டையின் கதவை திறந்து தட்ட வேண்டும். அப்பொழுதுதான் கதவு திறக்கும். அந்த அருள்தான் சாவியாகிய திறவு கோலாகும்.

ஆதலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும். அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும்.

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்.

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம், அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது. அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளதுஅதுதான் கோட்டையின் கதவு என்பதாகும். அந்தக் கதவை தட்டினால் திறக்காது. ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும்.


இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள்  திறக்கப்படும்  என்பதாகும் .

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMTk3MV9xMmtkTl9jOWFj/Kelungal%20tharapadum.mp3






கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா

 சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
இயற்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே
எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரேஎல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்


தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே

நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உழுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார் 
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டார்

அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே

துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தானே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தானே


ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு தேடுங்கள்  கிடைக்கும்  என்றார்

திங்கள், 23 டிசம்பர், 2013

நாணம் ஏனோ இந்த வேளையிலே

இனிமையான பாடல். வேகமான இசையும் கூட. இசை யாராயிருந்தாலும் இது ஹிந்தியிலிருந்து வந்ததென்பதால் கவர்ச்சியில்லை.
இளம் ஜானகி அம்மாவின் குரல்  தேனாக சிந்துகிறது.

திரைப் அடம்: கண்ணாடி மாளிகை (1962)
இசை: T D.பத்மன் (M வேதா என்பதாகவும் இணையத்தில் உள்ளது)
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், S ஜானகி
பாடல்: மு.இளங்கோவன்
நடிப்பு : ராதா ராணி, அசோகன், M R ராதா
இயக்கம்: N N C சாமி

http://asoktamil.opendrive.com/files/Nl8yODEwMTI0NF8xZEwzNl8xMzM0/NaanamYeno%20intha%20velayile-Kannadi%20Maligai.mp3




நாணம் ஏனோ இந்த வேளையிலே
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே

நாணம் ஏனோ இந்த வேளையிலே
ஆ ஆ ஆ ஆ 
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே
நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே

காதல் வானிலே கதிரென வந்தாய்
காணாத இன்பம் கண்டிட செய்தாய்
காதல் வானிலே கதிரென வந்தாய்
கானாத இன்பம் கண்டிட செய்தாய்

கூடும் நமக்குள்ளே உருவம் வேறு
கூடும் நமக்குள்ளே உருவம் வேறு
காதல் கொண்ட நெஞ்சில் பேதம் ஏது

பேதம் யாவுமே தீர்ந்திட வந்தாய்
இந்த பேதை நெஞ்சம் மலர்ந்திட செய்தாய்
பேதம் யாவுமே தீர்ந்திட வந்தாய்
இந்த பேதை நெஞ்சம்  மலர்ந்திட செய்தாய்

நாணம் ஏனோ இந்த வேளையிலே
ஆ ஆ ஆ ஆ
வண்டு நாடி ஓடும் மலர் சோலையிலே

ஆ ஆ
நானும் நீயும் இந்த மாலையிலே

நானும் நீயும் இந்த மாலையிலே
நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே.

சனி, 21 டிசம்பர், 2013

கொஞ்சுமொழி சொல்லும் கிளியே

இன்று 50/55 வயதை நெருங்கின பலரும் இந்தப் பாடலை தனது சிறிய வயதில் அம்மா பாட கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா தாலாட்டுப் பாடல்களில் இது ஒரு அற்புதமான பாடல். பாடலுக்கேற்ற இசை, இது இசைகேற்ப பாடப்படவில்லை என்பது இந்தப் பாடலில் தெளிவாக தெரிகிறது.

ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக வந்து விழுந்திருக்கிறது. பாரதிதாஸனுடையது அல்லவா?

இன்றைய இளசுகள் இதைக் கேட்டு தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.

திரைப் படம்: பராசக்தி (1952)
இயக்குனர்: R கிருஷ்ணன் S பஞ்சு
இசை: R சுதர்சனம்
நடிகர்கள்: சிவாஜி, பண்டரிபாய்,
பாடல் ஆக்கம்: பாரதிதாசன்
பாடியவர்: T S பகவதி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNzcyNzE0OF8wa3ZTcV8yYjYz/Konjum%20Mozhi%20Sollum.mp3





கொஞ்சுமொழி சொல்லும் கிளியே
செழும் கோமளத்தாமரைப் பூவே 
கொஞ்சுமொழி சொல்லும் கிளியே
செழும் கோமளத்தாமரைப் பூவே
ஒரு வஞ்சமில்லா முழுமதியே
இன்பவானில் உதித்த நல்லமுதே 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 

மாமன்மார் மூவர் தம்பி
நல்ல வாழ்வளிக்க வருவார்
உனக்கு மாமன்மார் மூவர் தம்பி
நல்ல வாழ்வளிக்க வருவார்
உன் மாம்பழக் கன்னத்திலே
முத்த மாரி பொழிந்திட வருவார்
உன் மாம்பழக் கன்னத்திலே
முத்த மாரி பொழிந்திட வருவார் 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை
பச்சை மாமணித்தொட்டிலுடன் 
மாணிக்கப் பாலாடை
பச்சை மாமணித்தொட்டிலுடன்
வெள்ளை யானையும் வாகனமாய் 
மாமன் தருவார் சீதனமாய் 
உன்தன் மாமன் தருவார் சீதனமாய் 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில்
நல்ல வைர எழுத்தாணி கொண்டு 
வெள்ளியினால் செய்த ஏட்டில்
நல்ல வைர எழுத்தாணி கொண்டு 
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத
உன்னைப் பள்ளியில் சேர்த்திட வருவார்
மாமன் அள்ளி அணைத்திட வருவார் 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வியாழன், 19 டிசம்பர், 2013

இலங்கையின் இளங்குயில்

இன்று இலங்கையில் 4 நாட்களாக சுற்று பயணத்தில் இருக்கிறோம். இன்னேரத்தில் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நல்ல அழகான ஊர் கண்டி.


திரைப் படம்: பைலட் பிரேம்நாத் ()
பாடியவர்கள்: டி எம் எஸ், வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு:  சிவாஜி, ஸ்ரீதேவி, மாலினி பொன்சேகா


http://asoktamil.opendrive.com/files/Nl8yNzU2MTIyOF95NmlYR18xNzZj/ilangayinilankuyil.mp3








இலங்கையின் இளங்குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
ஏடென்ன எழுத்தென்ன
எண்ணங்கள் பறிமாற
இலங்கையின் இளங்குயில்
உன்னோடு இசை பாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
நீதான் என் துணவனென்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்

விலகாத சொந்தமிது
பலகால பந்தமிது
விலகாத சொந்தமிது
பலகால பந்தமிது
இணை சேரும்
நூலிழை போல்
இணைந்தேன்
உன் நூலிடை மேல்
இலங்கையின் இளங்குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

அன்பு தெய்வம் கௌதமனின்
அருள் கூறும் ஆலயங்கள்
வளரும் நம் உறவுகளை
வாழ்த்துகின்ற வேளையிது

கடல் வானம் உள்ளவரை
கணம் தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம்
திகட்டாத மோஹன ராகம்

இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ


ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்

இது ஒரு அபூர்வமான பாடல் என நினைக்கிறேன். இனிமையான பாடல். பாடல் காட்சி கிடைக்கவில்லை. வழக்கமாக சங்கர் கணேஷ் இசையில் இது போன்ற பாடல்கள் கிளப் டான்ஸ் பாடலாகத்தான் அமையும். இடையில் உச்சரிக்கப் படும் ஆங்கில வசனங்கள் அப்படித்தான் தோன்றுகிறது.

திரைப்படம்: அன்பு ரோஜா (1975)
இயக்கம்:தேவராஜ் மோகன்
நடிப்பு: முத்துராமன், லதா
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்:எஸ் பி பி, P சுசீலா
பாடல்:தெரியவில்லை


http://asoktamil.opendrive.com/files/Nl8yNzY5MjMwMV9nMTMzbV9mY2M0/paal%20nilavu%20neram-anbu_roja.mp3



பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

ததும்பிடும் மதுக்குடம்
தனையெடுத்தொரு தரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும்
புதுப்புது கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன
படுக்கையறை பாடல்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவேனோ
விலகுவது ஏனோ

HO you can't escape
kiss me
Don't miss me darling

ம் ம் ம் ம் ம்

உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடித்ததென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன

நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வேண்டும்
மணிவிழிகள் நான்கும்

Ho don't say me
you are a naughty boy

பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்

பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமே
தீரும் வரை நாமே

வெள்ளி, 13 டிசம்பர், 2013

ச ரி க ம ப பாட்டு பாடுங்க பாட்டில் உள்ள பாடங்களையே

இப்படியும் ஒரு பெண்ணா  என வியக்க வைத்தவர் பி பானுமதி அம்மா அவர்கள்.
சினிமாவின் எல்லா கரைகளையும் தொட்டவர் என்ற பெருமை தமிழ் தெலுங்கு திரைப் படத்துறையில் இவருக்கு மட்டுமே உண்டு.
தலை கணம் மிக்கவர் என்பார்கள். ஒன்றுமில்லாத நமக்கே இருக்கும் போது அவருக்கு இருப்பதில் என்ன ஆச்சர்யம்?
அவரே இசையமைத்து அவரே குழுவினருடன் பாடியுள்ள பாடல் கேளுங்கள்.
இந்த திரைப் படம் இயக்கம் தயாரிப்பு எல்லாமே அவர்தான்.

திரைப் படம்: இப்படியும் ஒரு பெண் (1975)
இசை: பி.பானுமதி
பாடல்: தெரியவில்லை
குரல்: பி.பானுமதி
நடிப்பு: சிவகுமார், பானுமதி


http://asoktamil.opendrive.com/files/Nl8yNjkxMzQxMl9oWDNual8wOWEw/Sa%20ri%20ga%20ma%20pa-IPPADIYUMORUPENN.mp3



ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

பாடலின் பூவுதிர் பாதை உண்டாக்கி
பாடலின் பூவுதிர் பாதை உண்டாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி

பாடலின் பூவுதிர் பாதை உண்டாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி

ஸ்ருதியில் நழுவாது
ஜதியில் பிசகாது
அழகாய் ஒன்றாய்
அசைந்தே நன்றாய்
ஆடியே வாங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்
ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்

பசுவுடன் கன்றை
சிசுவதின் நெஞ்சை
பசுவுடன் கன்றை
சிசுவதின் நெஞ்சை

பாம்பதின் கண்ணை
சொக்கச் செய்தே தாலாட்டாக்கும்

ச நி த ப ம க ரி ச
ச நி த ப ம க ரி ச

அப்பப்பப் பா

ச நி த ப ம க ரி ச
ச நி த ப ம க ரி ச

நோ நோ நோ நோ

ச நி த ப ம க ரி ச

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
ஆ ஆ ஆ ஆ
பாட்டு பாடுங்க
ஆ ஆ ஆ ஆ
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ல ல ல ல ல ல ல ல

புதன், 11 டிசம்பர், 2013

வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு


இந்திய சுதந்திரம் மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட படம்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தந்தையை இழந்த எம் ஜி யார் குடும்பம் கராச்சியிலிருந்து சென்னை வந்து சேர்கிறது. இங்கு எம் ஜி யார் அவரது மாமனை (வில்லன்) கண்டுபிடித்து கொல்கிறார். அதனால் ஜெயிலுக்கு போகிறார்.
படம் அப்போது வெற்றிநடை போட்டதாக விக்கி சொல்கிறது.

பாடலில் தமிழ் கோலோச்சுகின்றது. உயர்ந்த இலக்கியத் தமிழில் இது போன்ற பாடல்கள் மிக சொச்சமே.
ஆனால் பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தகால தமிழ் சினிமா வழக்கப் படி தமிழர்கள் அல்லாதவர்கள்.

பலருக்கு இந்த பாடல் அவ்வளவாக ரசிக்காது என நினைக்கிறேன்.

இந்தப் பாடலில் பாலுவாக வருபவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர்.
லீலாவாக அழைக்கப் படுபவர் பி.கே.சரஸ்வதி.
எம் ஜி யாருக்கு ஜோடி எம் எஸ் தரௌபதி எனும் நடிகை.




திரைப் படம்: அந்தமான் கைதி (1952)
நடிப்பு: எம்.ஜி.ஆர், பி.கே.சரஸ்வதி
பாடியவர்கள்: மோதி அல்லது கண்டசாலா, பி லீலா
இசை: டி.கோவிந்தராஜுலு நாயுடு
பாடல்: கு.சா.கிருஷ்ணமூர்த்தி
இயக்கம்: வி.கிருஷ்ணன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNzU2MTgzOV9lQ0FWZF9kM2Y1/vannamalar-ANDHAMANKAIDHI.mp3




ஓ ஓ ஓ ஓ ஓ பாலு

ஓ ஓ ஓ ஓ ஓ லீலா

வண்ண மலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

என்ன சொல்லுது
வண்ண மலர் தன்னைக்

கண்டு வண்டு

கன்னி உந்தன் கண்ணைக் கண்டு

தன் இனம் என்றே மருண்டு

தன் நிலை மறந்தே வண்டு

இசை பாடுது

கன்னி உந்தன் கண்ணைக்

கண்டு வண்டு

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

மானென மருண்டோடும்

பெண் மானே

மானென மருண்டோடும்

பெண் மானே

உன்னை நான் விடேனே

மானிதுவும் அல்லவே பூ மானே

மயங்காதே வீணே

மானிதுவும் அல்லவே பூ மானே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன்
 
நெஞ்சினைக் கவர்ந்த இன்ப

வஞ்சியை மெய்க் காதல் தந்த

வண்ணக் கிளியே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே

முழு மதியும் முகிலும்

போல் நாம் விளையாடுவோம்

முழு மதியும் முகிலும் போல்
நாம் விளையாடுவோம்

விழி மணியும் இமையும் போலே

உறவாடுவோம்

விழி மணியும் இமையும் போலே
 
உறவாடுவோம்

ஆருயிரே

ஆரமுதே

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

அன்பில் இணைந் தொன்றாய்

வாழுவோம்

நாமே அன்பில் இணைந் தோன்றாய்

வாழுவோம்

வண்ணமலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

காதல் பேசுது

வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தேவார பாட்டும் தேன் ஊரும் இசையும்

இந்தப் பாடலின் காணொளி கிடைக்கவில்லை. படமே வெளியிடப்  படவில்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால் நல்ல பாடல்.

திரைப் படம்: தாளம் தவறிய ராகம் (வருடம்?)
இசை: M S விஸ்வனாதன் -- சந்தேகம்???
பாடல்: எழுதியவர் தெரியவில்லை
பாடியவர்கள்:S P பாலசுப்ரமண்யம், வாணி ஜெயராம்
இயக்கம்:தெரியவில்லை
நடிப்பு:தெரியவில்லை


http://asoktamil.opendrive.com/files/Nl8yNjkxMjczN19mZm1JZF83MjBj/Thevaara%20PaattumThenoorum.mp3





தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள்தோறும் நாம் கேட்கவேண்டும் இங்கே


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


ஒரு கண்ணில் நாணம் மறு கண்ணில் மோகம்
போராட வந்தால் என்ன சொல்ல


இருள் நேரத்திலே இதழோரத்திலே
புது சங்கீதம் ஓயாமல் கேட்பதென்ன


கோடைக்குத் தென்றல் வாடைக்குத் தணலாய்
உன் கைகள் தீண்டும் மாயமென்ன


என்ன மாயங்களோ என்ன ஜாலங்களோ
இளம் மங்கைக்கும் என் கைக்கும் தேவை எதோ

தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


தேனாறு பொங்கும் பூமேனி எங்கும்
ஆனந்த தீர்த்தம் ஆடவந்தேன்


சுவர்க்கலோகங்களே இங்கு வாருங்களேன்
என்று நாள்தோறும் நான் இங்கு பாடவந்தேன்


இளமாலை நேரம் அழகான தேகம்
எங்கெங்கும் கோலம் போடவந்தேன்


உடல் ஒன்றாகவும் உயிர் ஒன்றாகவும்
இன்று உன்னோடு நான் இங்கு கூட வந்தேன்


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே

இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள்தோறும் நாம் கேட்கவேண்டும் இங்கே