பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...

அருமையான இசையும் திருமதி ஜானகியின் குரலும் இணைந்து வருகிறது


படம்: நம்ம குழந்தைகள் (1970)
நடிப்பு: மேஜர் சுந்தரராஜன், பண்டரிபாய்
இசை: விஸ்வனாதன்
இயக்கம்: ஸ்ரீகாந்த்



http://www.divshare.com/download/12579185-1be


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்...
மன்னவன் முகம் காண நாண்ம் கொண்டாள்...
ஓ ஓ ஓ ஓ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

கண்ணனுக்கு நந்தவனம் ராதையின் மேனி...
கண்ணிரெண்டும் தேனெடுக்கும் காவிய தேனி...
கண்ணனின் பார்வை கல்யாணப் பார்வை...
கன்னியின் ஆசை அவள் கண் செய்த பூஜை...
என்ன சுகம்... கண்டு கொண்டாய்..
கன்னியவள் கண்டுவிட்டாள்...

ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்...
மன்னவன் முகம் காண நாணம் கொண்டாள்...

செம்பவளம் பூத்ததுப் போல் செவ்விதழ் மீது...
சித்திரங்கள் இட்டதுதான் கண்ணனின் தூது...
மலர் கொண்ட கூந்தல் சங்கீதம் பாட...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலர் கொண்ட கூந்தல் சங்கீதம் பாட...
மான் விழியாட பொன் மணம் மாலை சூட...
சம்மதித்தாள்.. சம்மதிப்பாள்...
பெண்மை அவள் கண்டுவிட்டாள்...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்...
மன்னவன் முகம் காண நாண்ம் கொண்டாள்...
ஓ ஓ ஓ ஓ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
ஆ ஆ ஆ ஆ ஆ

விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே

நல்ல குரல்களுடன் இனிமையான தமிழ் பாடல்


படம்: மருத நாட்டு வீரன் (1961)

இசை: K V மகாதேவன்
நடிப்பு: சிவாஜி, ஜமுனா
இயக்கம்: T R ரகு நாத்
குரல்கள்: T M S, P சுசீலா


http://www.divshare.com/download/12578830-feb




விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ



விழியலை மேலே செம்மீன் போலே



குழி விழும் கன்னங்கள் மலர் போலே ஆஆஆஆஅ

குழி விழும் கன்னங்கள் மலர் போலே



அதில் குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே ஆஆஆஆ

குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே ஆஆஆஆ



இளமையின் துணையாலே



இனிமையின் உறவாலே



விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே

மண் போல நான்

விண் போல நீ

மழை போலவே நம் காதலே



மண் போல நான்

விண் போல நீ

மழை போலவே நம் காதலே



பகல் வேண்டுமா

இருள் வேண்டுமா



அருள் வேண்டுமா

பொருள் வேண்டுமா



பகல் வேண்டுமா

இருள் வேண்டுமா



அருள் வேண்டுமா

பொருள் வேண்டுமா



ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...



ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...



விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே

உன் புருவம் போல வளைந்த

மலையில் அருவி பொங்கி வழியுது



உங்கள் இதயக் கடலை நாடி

அலைகள் இங்கும் அங்கும் தவழுது



நாணம் கொண்ட உன்னைப் போல நடையில் பின்னல் தோணுது



காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது

நாணம் கொண்ட உன்னைப் போல நடையில் பின்னல் தோணுது



காணும் உங்கள் கண்கள் கூறும் கதையைக் கேட்டு நாணுது



பெற்றவர் யாரோ ஓ ஓ ஓ ஓ...



கைப் பிடித்து தந்தாரோ.. கைப் பிடித்து தந்தாரோ



பெற்றவர் யாரோ ஓ ஓ ஓ ஓ



கைப் பிடித்து தந்தாரோ.. கைப் பிடித்து தந்தாரோ

ஆஆஆஅ

விழியலை மேலே செம்மீன் போலே விளையாடும் செல்வமே வா ஆஆ

விழியலை மேலே செம்மீன் போலே

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அழகான அமைதியான பாடல்


படம்: கண்மணி ராஜா (1974)

இசை: M S விஸ்வனாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
நடிப்பு: சிவகுமார், லக்ஷ்மி, M N ராஜம்
குரல்கள்: S P B, P சுசீலா





http://www.divshare.com/download/12577784-24b




ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ



ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன



ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்

ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்

ஏனோஅது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்

ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்

ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்



மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே

எதனாலே



தேகங்கள் கூடுவதால் இன்பம் வருமே அது போலே

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன



நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது

நாடிகளில் புது வெள்ளம் ஓடுதல் போலே தெரிகின்றது



நல்லதுதான் தெரியட்டுமே

உலகம் மெதுவாய்ப் புரிகின்றது

நல்லதுதான் தெரியட்டுமே உலகம் மெதுவாய்ப் புரிகின்றது



ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா



பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே

பகலினிலே வருவதில்லை இரவினில் ஏதோ வருகின்றதே



இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே

இரவு எனும் நேரமெல்லாம் இருவருக்கென்றே வருகின்றதே

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன

வியாழன், 16 செப்டம்பர், 2010

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே

விஸ்வனாதனின் ஹம்மிங்க் உடன் திருமதி சுசிலாவின் இனிமை குரல் இணைந்து பாடல் முழுமையான இனிமையை அடைந்துள்ளது.


படம்: நான் ஆணையிட்டால் (1966)

நடிப்பு: MGR, சரோஜா தேவி
இசை: M Sவிஸ்வனாதன்
இயக்கம்:சாணக்கியா



http://www.divshare.com/download/12573422-40b




கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே



ஹா ஹா ஹா ஹா ஹா



என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ



நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே



ம் ம் ம் ம் ம் ம்



உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே



ஹா ஹா ஹா ஹா ஹா



கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே



ஹா ஹா ஹா ஹா ஹா



என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ



நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ



உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ





நினைத்தேன் உடன் பார்த்தேன்

மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்

நினைத்தேன் உடன் பார்த்தேன்

மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்

களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன்

என்னை மறந்தேன்..

என்னை மறந்தேன்..

என்னை மறந்தேன்



பாலும் புது தேனும் பனி போல் என் மேலே

படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய்

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்



கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே



ஹா ஹா ஹா ஹா ஹா



என்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ



நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ



உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே



ஹோ ஹோ ஹோ ஹோ



ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

சிரித்தாய்..முகம் சேர்த்தாய்...

வலை விரித்தாய்.. சிறைப் பிடித்தாய்...

சிரித்தாய்..முகம் சேர்த்தாய்...

வலை விரித்தாய்.. சிறைப் பிடித்தாய்...

அணைத்தாய்... அதில் நிலைத்தாய்...

சுவை அளித்தாய்...உடல் சிலிர்த்தேன்...

என்னை மறந்தேன்..

என்னை மறந்தேன்...



சேரும் வரை நானும் சிலைப் போல் நின்றேனே...

சிலை பேச இசைப் பாட தமிழ் போலவே சேர்ந்தாய்...

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்

புதன், 15 செப்டம்பர், 2010

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

S P B யின் ஆரம்பகால அருமையான பாடல்

படம்: சபதம் (1971)
இசை: G K வெங்கடேஷ்
நடிப்பு: ரவிசந்திரன், K R விஜயா




http://www.divshare.com/download/12563288-c83



தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ



உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ



தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று

தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள் சிந்தியரத்தினம் யாரோ அவள் யாரோ

ம் ம் ம் ஆ ஆ ஆ..

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ



காமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

காமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டாளோ

எனை மிதக்க விட்டாளோ

அதை நடக்க விட்டாளோ

எனை மிதக்க விட்டாளோ

இளம் சிட்டுமுகம் கொண்ட

பொட்டு குலம் அவள் யாரோ

அவள் யாரோ..!

ம் ம் ம் ஆ ஆ ஆ..!!



தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஆ ஆ ஆ ஆ..!

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

மாலையில் யாரோ மனதோடு பேச....

சுவர்ண லதாவுக்கு அஞ்சலி

ஷத்ரியன் (1990)
நடிப்பு: விஜயகாந்த், ரேவதி.
இசை: இளையராஜா



http://www.divshare.com/download/12554862-74e

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ ஓ ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ ஓ ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ ஓ ஓ ஓ ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ ஓ ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா...ஓ ஓ ஓ

அழகான பாடலிது


படம்: சீர்வரிசை (1978)

இசை:  M S விஸ்வனாதன்
இயக்கம்: K சொர்னம்
பாடியவர்கள்: S P B, P சுசீலா
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி



http://www.divshare.com/download/12531030-ca4









பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா...ஓ ஓ ஓ

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லவா...

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்...

கண்களால் சொல்லம்மா..



ஆத்துலே வெள்ளம் ஓடுர நாள்லெ பாத்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்...

ஆத்துலே வெள்ளம் ஓடுர நாள்லெ பாத்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்...

காட்டுலே பூவும் கூட்டிலே தேனும் பொங்குற போது சேர்த்துக்கிறேன்...

ஆசையிருக்கு பேசி முடிக்க...ஆசையிருக்கு பேசி முடிக்க...

சொல்லத்தான் தெரியாது...

பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லுங்க அ அ அ

பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்...

சொல்லத்தான் தெரியாது...



ஹா ஹா ஹா ஹேய் ஹேய் ஹேய்



ஹா ஹா ஹா ஹேய் ஹேய் ஹேய்



மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும்..

வண்ணத் தாமரை துள்ளத் துள்ள கைகள் பின்னட்டும்...



உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ..

உடம்பிலே கூட மாறுது ஏதோ...

ஹேய் ஹேய் ஹேய்

உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ..

உடம்பிலே கூட மாறுது ஏதோ...



ஹோ ஹோ ஹோ..



நேத்துக்கு மனது கேட்டது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்கிறேன்...

சொன்னது எல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பாத்துக்கிறேன்...

ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ



ர ர ர ஹே ஹே ஹே



தொட்டுத் தொட்டு பேச பேச சுகமா இருக்குங்க...



தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க...



சின்னஞ்சிறுசு அனுபவம் இல்லை..

ஏதோ கொஞ்சம் பாத்துக்குங்க ஹே ஹே ஹே...



மாங்கனிக் கன்னம் பூங்கொடி மேனி தீங்கு வராமல் பாத்துக்கிறேன்...

ஊருக்கும் தெரியாது...யாருக்கும் புரியாது...

இது ஒரு அருமையான பாடல்


படம்:  மாட புறா (1962)

நடிப்பு: MGR,  சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்: S A சுப்ப ராமன்
குரல்கள்: TMS, சூலமங்களம் ராஜலெக்ஷ்மி





Music Hosting - Audio Hosting - OorukkumTheriyadhu-maada puraa




ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ல ல ல ல ல

ஊருக்கும் தெரியாது...
ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...
உன்னை எண்ணி

ம் ம் ம்

கனவுக் கண்டு...

ம் ம் ம் ம்

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...
உன்னை எண்ணி

ம் ம் ம்

கனவுக் கண்டு...

ம் ம் ம் ம்

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

உன்னுடனே நானிருக்கும்..
என்னுடனே நீயிருக்கும்...
உன்னுடனே நானிருக்கும்..
என்னுடனே நீயிருக்கும்...

உண்மையை உலகம் அறியாது...
உண்மையை உலகம் அறியாது...
உனையன்றி வாழ்க்கையும் ஏது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

உன்னை எண்ணி

ஹோ ஹோ
கனவுக் கண்டு...

ம் ம் ம் ம்

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

காண்பதெல்லாம் உன் உருவம்...
கேட்பதெல்லாம் உனது குரல்...
காண்பதெல்லாம் உன் உருவம்...
கேட்பதெல்லாம் உனது குரல்...

கண்களை உறக்கம் தழுவாது...
கண்களை உறக்கம் தழுவாது...
அன்புள்ளம் தவிச்சிடும் போது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

உன்னை எண்ணி

ஹா ஹா
கனவுக் கண்டு...

ஹா ஹா

உள்ளம் ஏங்குவது...

ஊருக்கும் தெரியாது...
யாருக்கும் புரியாது...

ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ம் ம் ம் ம் ம் ம்

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...அது கட்டில் மேலே கதை சொல்லும்...

திருமணம் ஆகப் போகும் ஒரு இளம் பெண் பாடுவது போல் திருமதி சுசீலா குரல் கொடுத்திருக்கிறார். சில இடங்களில் ரொம்ப சிரமப்பட்டது போல தெரிகிறது. ஆனாலும் பாடல் இனிமையாக வளர்ந்துள்ளது.


படம்: மலை நாட்டு மங்கை (1974)

இயக்கம்: சுப்ரமணியம்
நடிப்பு: ஜெமினி, விஜய ஸ்ரீ
இசை, பாடலாசிரியர்: தெரியவில்லை










என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

ல ல ல ல ல ல ல



மஞ்சத்தில் என்னை வைத்து கண்ணன் சொல்லும் பட்டங்கள்...

கன்னத்தில் கோலம் போடும் சின்ன சின்ன முத்தங்கள்...

அம்மம்மா போதும் என்று நானும் சொல்வேன் சட்டங்கள்...

ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

ல ல ல ல ல ல ல



கல்யாணம் என்றால் இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்...

கள்ளூறும் பூவின் மேலே கண்கள் துள்ளும் வண்டாட்டம்...

இன்றைக்கு எந்தன் மேனி மின்னும் முல்லை செண்டாட்டம்...



ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

சனி, 11 செப்டம்பர், 2010

பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

ஒரு ஏழையின் காதலோ இது


படம்:  நீயா நானா (1962)

நடிப்பு: N T ராம ராவ், சாவித்திரி
இசை: ஆதி நாராயண ராவ்
இயக்கம்: சேஷகிரி ராவ்
பாடியவர்கள்: P B S , P சுசீலா



http://www.divshare.com/download/12525056-401


பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்



பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்



திறந்த மனதை புரிந்து கொண்டேன்

அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்

அறிந்த பிறகும் தாமதமா

நாம் பறந்து திரிவோம் சம்மதமா



திறந்த மனதை புரிந்து கொண்டேன்

அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்

அறிந்த பிறகும் தாமதமா

நாம் பறந்து திரிவோம் சம்மதமா



கையில் எடுத்த வாளை இறைவன் கண்ணில் படைத்தானே

போர் களங்கள் கண்ட காளை உனது கண்ணில் விழுந்தேனே



கண்ணில் வைத்து இமைகள் மூடி காவல் காத்திருப்பேன்

எதிர் காலமெல்லாம் கைதி போலே கருத்தில் வைத்திருப்பேன்



ஹா ஹா ஹா ஹா



ஹோ ஹோ ஹோ ஹோ



பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல

என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்



இன்று நாளை என்று உலகம் மாறி வந்தாலும்



உடல் இளமை மாறி முதுமை கொண்டு முடிவு வந்தாலும்



வாழும் காலம் வாழும் வரைக்கும் மனது ஒன்றுபடும்



தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்

உலகை வென்று விடும்



ஹா ஹா ஹா ஹா



ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ



பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல



என்னை உனக்கே தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லிவிட்டேன்

சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...

இனிமையான தாலாட்டு பாடல்


படம்: மகாதேவி (1957)

இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: , சாவித்திரி
குரல்கள்: ராஜேஸ்வரி, R பாலசரஸ்வதி
இயக்கம்: M S சுந்தர் ராவ் நட்கர்னி
கதை: கண்ணதாசன்












சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...

மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே

தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா....

ஓ ஓ ஓ ஓ ஓ

சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...



கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்

எண்ணங்கள் கீதம் பாடுமே...

பேசாமல் பேசும் உருவங்கள் கண்டால்

பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா...

பேசாமல் பேசும் உருவங்கள் கண்டால்

பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா...

ஓ ஓ ஓ ஓ ஓ

சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



செல்வமே என் ஜீவனே...

செல்வமே என் ஜீவனே...

ஆடும் கொடிய நாகங்களும்

அசைந்து வரும் நேரம்...

உன் அழகு முகம் கண்டுக் கொண்டால் அன்புக் கொண்டு மாறும்..

அன்புக் கொண்டு மாறும்..

அன்புக் கொண்டு மாறும்..



செல்வமே என் ஜீவனே...

எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே...

தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே...ஏ ஏ ஏ ஏ ஏ...

தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்

வில்லேந்தும் வீரன் போலவே...

மகனே நீ வந்தாய்...

மழலைச் சொல் தந்தாய்

வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா...

மகனே நீ வந்தாய்...

மழலைச் சொல் தந்தாய்

வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா...

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ



சிங்கார புன்னகை கண்ணாறக் கண்டாலே

சிங்கீத வீணையும் ஏதுக்கம்மா...

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

அன்பர்களே,

ஆச்சிரியமாக வந்த இடத்தில் எனக்கு பாடல்களைத் தறமேற்றும் வசதி கிடைத்தது உபயோகப்படுத்திக் கொண்டேன். வசதி கிடைக்கும் வரை அனுபவிப்போம்...

இதுவும் ஒரு நல்ல பாடல்.

படம்: திருப்பங்கள் (1981)

இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: ஜோஸப் ஆனந்தன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்கனேஷ், படாபட் ஜெயலெக்ஷ்மி
பாடியவர்கள்: S P B, வாணி ஜெயராம்





ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...

நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...



காலையிலே தாமரை நீரோடை...

மாலையிலே மந்திரம் போல் மேடை...

காலையிலே தாமரை நீரோடை...

மாலையிலே மந்திரம் போல் மேடை...

கண்களிலே காதல் இளம் ஜாடை...

கலந்து விட்டால் மல்லிகை பூ வாடை...



மோகமென்னும் கவி எழுதும் தேகம்...

மூன்று தமிழ் பாடி வரும் ராகம்...

தேடி உனைக் கண்டுக் கொண்ட யோகம்...

தேவதையில் நீயும் ஒரு பாகம்..



ஆயிரம் காலம் சொல்வேன் ஆலயம் எங்கும் சொல்வேன்...

நீ வந்த நாளே வாழ்வில் நன் நாளாம்...



நன் நாளாம்...



நன் நாளாம்...



ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...



நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...



வள்ளுவரின் இல்லறத்தைக் கேட்டு...

உள்ளமெல்லாம் மின்னியதோர் பாட்டு..

வெள்ளமென ஆசைக் கொண்டேன் நேற்று...

பிள்ளையிடம் பொங்குது தாலாட்டு...

ஆரிரரொ ஆரிரரோ ஆராரிராரோ..

ஆரிரரொ ஆராரிராரோ..

ஆரிரரொ ஆரிரரோ ஆராரிராரோ..

ஆரிரரொ ஆராரிராரோ..



நம்மை விட வாழ்பவர்கள் இல்லை...

நாம் இருக்கும் சொர்க்கம் இதே எல்லை...

தென்றலுடன் சேர்ந்ததம்மா முல்லை...

தினம் தினமும் தேனிலவு கொள்ளை...



நாளைய வாழ்வும் நீயே கோவிலின் தெய்வம் நீயே...

தேடிய செல்வம் நீயே என் தேவி...

என் தேவி...என் தேவி...



ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்...



நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்...

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

இனிமையான இளமையான பாடல்


படம்: வல்லவன் ஒருவன் (1966)


இசை: வேதா

தயாரிப்பு: சுந்தரம்

நடிப்பு: ஜெயஷங்கர், விஜயலக்ஷ்மி

பாடியவர்கள்: TMS, P சுசீலா




http://www.divshare.com/download/12465193-248



முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

அக்கம் பக்கம் யாருமில்லை கட்டிக் கொள்ளலாமா...

தோளுக்கு மேலே மாலையை போட்டு சும்மா சும்மா தொடலாமா....



முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா...

அக்கம் பக்கம் பார்க்கும் போது கட்டிக் கொள்ளலாமா...

முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல் சும்மா சும்மா தொடலாமா....



ஆதாரம் வேண்டும் உன் தாரம் என்று சொல்ல ஒர் அச்சாரம் வேண்டும் சம்சாரம் பண்ணிக் கொள்ள...



ஆளான பெண்ணே என் ஆசை ஒன்று போதும் ஓர் நாளான பின்னே உன் கண்ணம் அதைக் கூறும்...



வண்ண கூந்தல்...



தாலட்டும்...



எந்தன் மேனி...



தேரோட்டும்...



இந்த ஆரம்பம் சரிதானா...



முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

அக்கம் பக்கம் யாருமில்லை கட்டிக் கொள்ளலாமா...

தோளுக்கு மேலே மாலையை போட்டு சும்மா சும்மா தொடலாமா....

பூபோட்ட சேலை என் மேலே வந்து மோதும்...

உன் பொன் மேனி கண்டு என் போதை கொஞ்சம் ஏறும்...



ஏறாத போதை இன்றேறிவிட்டதாலே...

முன் பாராத பார்வை நீ பார்ப்பதென்ன வேலை...

வண்ண கூந்தல்...



தாலட்டும்...



எந்தன் மேனி...



தேரோட்டும்...



இந்த ஆரம்பம் சரிதானா...



முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

அக்கம் பக்கம் யாருமில்லை கட்டிக் கொள்ளலாமா...

தோளுக்கு மேலே மாலையை போட்டு சும்மா சும்மா தொடலாமா....



முத்தமிடும் மாமா



ஹாங்க்



சத்தம் செய்யலாமா...



ஹாங்க்



அக்கம் பக்கம் பார்க்கும் போது கட்டிக் கொள்ளலாமா...

முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல் சும்மா சும்மா தொடலாமா....

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...மகிழ்ச்சி

மகிழ்ச்சியாக குழந்தைகளாக பாடும் பாடலையும், சோகமாக பின்பு பாடும் பாடலையும் ஒன்றாக ஒரே இழையில் கொடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், இங்கே தனித் தனியாக கொடுத்துவிட்டேன்

மகிழ்ச்சி: லதா, ரமணி



http://www.divshare.com/download/12465025-2a7







ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...


தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...


வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்...

கையகளம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்...

வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

மணிக் கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம்...

அணி மணியாய் எடுத்து வைப்போம் கை நிறையா தேன் கொடுப்போம்...

நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...

முத்து வடம் பூச்சரம்மாம் மூக்குத்தியாம் தோடுகளாம்...

அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்...
கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...

மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாராம்..

அம்மாவின் கால்களிலே அன்புடனே வணங்கிடுவோம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...சோகம் athoram manaleduthu sad

மகிழ்ச்சியாக குழந்தைகளாக பாடும் பாடலும், சோகமாக பின்பு பாடும் பாடலும் இங்கே உள்ளன.


இரண்டிலும் கவிஞர் நல்ல வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.

படம்; வாழ்க்கை வாழ்வதற்கே (1964)


இசை; M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

வசனம்; முரசொலி மாறன்

நடிப்பு; ஜெமினி, சரோஜா தேவி

பாடல் வரிகள்; கண்ணதாசன்

குரல்கள்: P B S, P சுசீலா




http://www.divshare.com/download/12464956-70e





ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்...



ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்...



குடியிருந்த மணல் வீடு மழையினிலே கரைந்ததம்மா...

கொண்டு வந்த ஆசையெல்லாம் வந்த வழி சென்றதம்மா...

அவள் இருந்த மனதினிலே இருள் இருந்து வாட்டுதம்மா...

சங்கத்திலே தமிழ் வாங்கி தங்கத்திலே எழுதி வைத்தேன்...

சந்தையிலே படகு விட்டு காதலிலே மிதந்து வந்தேன்...

பாதியிலே பிரித்து விட்டு படகு மட்டும் சென்றதம்மா...



பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...

எத்தனையோ கனவுகளாம் எவ்வளவோ ஆசைகளாம்...

அத்தனையும் மறைந்ததம்மா ஆசை நிலா எரிந்ததம்மா...



கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...

ஊர் முழுதும் திரு நாளாம் உலகமெங்கும் மண நாளாம்...

உலகத்திலே நாண்கு கண்கள் உறங்காமல் விழிக்குதம்மா...



ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்...

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...எட்டிப் பறித்தது கை இரண்டு...

இனிமையான பாடல் ஒன்று


படம்: வாழ்ந்து காட்டுகிறேன் (1975)


இசை: M S விஸ்வனாதன்

குரல்கள்: SPB , P சுசீலா

இயக்கம்: பஞ்சு அருணசலம்

நடிப்பு: முத்துராமன், சுஜாதா



http://www.divshare.com/download/12448095-0c1



கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...



கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...



இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு...

இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு...



வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன் கள் உண்டு...

வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன் கள் உண்டு...



அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று...



கெஞ்சி கெஞ்சி கேட்டது இதயம் ஒன்று...



மிஞ்சி மிஞ்சி போனதில் பொருளும் உண்டு...



கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில் குணமும் உண்டு...

கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...

அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு..

அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு..



அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு...

அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு...



மெல்ல மெல்ல இணைகின்ற உறவும் உண்டு...



சொல்ல சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு...



இல்லை இல்லை என உள்ளம் மறுப்பதுண்டு...



எல்லைக் கடந்தால் அது இனிப்பதுண்டு...

கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...

எட்டிப் பறித்தது கை இரண்டு...

கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...

மலைகள் உண்டு...

அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு...



கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு...



மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு...



பின்னி பின்னி இழுக்கின்ற இதழ்கள் உண்டு...



எண்ண எண்ண ஆசைகள் பிறப்பதுண்டு...



இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு...



கொட்டிக் கிடந்தது கனி இரண்டு...



எட்டிப் பறித்தது கை இரண்டு...



கட்டிப் பிடித்தது கனிவு கொண்டு...

தட்டிப் பறித்ததில் சுகமும் உண்டு...

வியாழன், 2 செப்டம்பர், 2010

நிலவே நீ சாட்சி...

மிக அருமையான பாடல். இரண்டு வகையில் பாடிய பாடல்கள் இரண்டுமே அழகாக அமைந்துள்ளன.
இரண்டு பாடல்களும் இந்த இழையில் உள்ளன. தரமிறக்குவதில் அன்பர்களுக்கு எதாவது பிரச்சினை இருந்தால் தெரிவிக்கவும்.

படம்: நிலவே நீ சாட்சி (1970)


இசை: M S விஸ்வனாதன்

பாடியவர்கள்: S P B, வசந்தா, சுசீலா

இயக்கம்: P மாதவன்

நடிப்பு: ஜெயஷங்கர், K R விஜயா



http://www.divshare.com/download/12439633-67f



நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

நிலவே ...



நிலவே ...



நீ சாட்சி...



சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

பாதைகள் இரண்டு சந்திப்பதும்...அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்...

பாதைகள் இரண்டு சந்திப்பதும்...அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்...

காதலில் கூட நடப்பதுண்டு...அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு...

காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

இருவரை இணைத்து திரைப் போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு...

இறைவன் நடத்தும் விளையாட்டு...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...






சுசீலா-தனிகுரல்



http://www.divshare.com/download/12439664-519


நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

நிலவே நீ சாட்சி...

உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

அலையும் உறங்க முயல்வதென்னா...

மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன...

அலையும் உறங்க முயல்வதென்னா...

மன ஆசைகள் உறங்க மறுப்பதென்ன...

வலையில் விழுந்த மீன் களென...

சில வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன...

சில வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

ஹூம் ம் ம் ம்

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு...சில உள்ளங்களில் ஏனோ பெருமூச்சி...

இருவரை இணைத்து திரைப் போட்டு இது இறைவன் நடத்தும் விளையாட்டு...

இறைவன் நடத்தும் விளையாட்டு...

நிலவே நீ சாட்சி...

கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை...

கண்கள் இரண்டும் குருடானால் இந்தக் காதல் கதைகள் பிறப்பதில்லை...

உறவும் பிரிவும் நடப்பதில்லை...

இந்த உலகில் இனிப்பும் கசப்புமில்லை...

நிலவே நீ சாட்சி...

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி...

புதன், 1 செப்டம்பர், 2010

சுகமான அந்தி வேளை...இளந்தென்றல் வீசும் மாலை...

இது ஒரு அரிய பாடலாக எண்ணுகிறேன்.

படம்; எங்கள் குடும்பம் பெருசு (1958)

இசை: G ராமனாதன்

இயக்கம்:B R பந்துலு

பாடியவர்கள்: TMS, P சுசீலா

நடிப்பு: B R பந்துலு, M V ராஜம்மா




http://www.divshare.com/download/12429523-2ff


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ



சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...

சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...



இயலாத குயிலின் மேலே ஆவலும் கொண்டு...

நம்பாது ஆட்டம் காட்டி...

ஓடாது வாங்க...

நம்பாது ஆட்டம் காட்டி...

ஓடாது வாங்க...



நீயே எந்தன் சிங்கார வாணி...

நீயே எந்தன் சிங்கார வாணி...

தாலியும் நீங்கள் கட்டிய பின் தான் நான் உங்கள் ராணி...

தாலியும் நீங்கள் கட்டிய பின் தான் நான் உங்கள் ராணி...



சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...



என் காதல் ராஜா நீயே நான் உன்னைக் கோரி...

என் காதல் ராஜா நீயே நான் உன்னைக் கோரி...

அன்பாக வந்தேன் குலவி மகிழ்ந்தாலே ஜாலி...

அன்பாக வந்தேன் குலவி மகிழ்ந்தாலே ஜாலி...



இனி என்ன ஆசை மானே செந்தேனே...

இனி என்ன ஆசை மானே செந்தேனே...



இனி என் பாக்யம் தங்களையல்லால் ஒன்றும் இல்லை...

இனி என் பாக்யம் தங்களையல்லால் ஒன்றும் இல்லை...



சுகமான அந்தி வேளை...

இளந்தென்றல் வீசும் மாலை...

அன்பாக கானம் பாடி...

வானம்பாடி கூடும் வேளை...

ஒன்றாகி பாடுவோம் வா...



ஓ ஓ ஓ ஓ



ஒன்றாகி ஆடுவோம் வா...

நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

S.S ராஜேந்திரனுக்காக அழகாக குரல் கொடுத்திருக்கிறார் TMS


படம்; மணி மகுடம் (1966)


இசை: சுதர்சனம்

இயக்கம்: S S ராஜேந்திரன்

திரைக்கதை, வசனம்: கருணா நிதி

பாடியவர்கள்: TMS

நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி, ஜெயலலிதா




http://www.divshare.com/download/12429503-376




நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...

நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...



கவியொன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்.. ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்...

கவியொன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்.. ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்...

நீரோடை வந்து பாயாத நிலமா...நீரோடை வந்து பாயாத நிலமா...

நிழல் மேகம் ஒருபோதும் தழுவாத நிலவா...

நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...



இடையென்ற கொடியில் கனிகொய்ய வேண்டும்...இதழோரம் இன்னேரம் பனிப் பெய்ய வேண்டும்...

இடையென்ற கொடியில் கனிகொய்ய வேண்டும்...இதழோரம் இன்னேரம் பனிப் பெய்ய வேண்டும்...

இரவென்ற பள்ளி வா என்று சொல்லி...இரவென்ற பள்ளி வா என்று சொல்லி..

உறவென்ற கல்வி நான் சொல்லவா...



நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...