பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...

அருமையான இசையும் திருமதி ஜானகியின் குரலும் இணைந்து வருகிறது


படம்: நம்ம குழந்தைகள் (1970)
நடிப்பு: மேஜர் சுந்தரராஜன், பண்டரிபாய்
இசை: விஸ்வனாதன்
இயக்கம்: ஸ்ரீகாந்த்http://www.divshare.com/download/12579185-1be


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்...
மன்னவன் முகம் காண நாண்ம் கொண்டாள்...
ஓ ஓ ஓ ஓ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

கண்ணனுக்கு நந்தவனம் ராதையின் மேனி...
கண்ணிரெண்டும் தேனெடுக்கும் காவிய தேனி...
கண்ணனின் பார்வை கல்யாணப் பார்வை...
கன்னியின் ஆசை அவள் கண் செய்த பூஜை...
என்ன சுகம்... கண்டு கொண்டாய்..
கன்னியவள் கண்டுவிட்டாள்...

ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்...
மன்னவன் முகம் காண நாணம் கொண்டாள்...

செம்பவளம் பூத்ததுப் போல் செவ்விதழ் மீது...
சித்திரங்கள் இட்டதுதான் கண்ணனின் தூது...
மலர் கொண்ட கூந்தல் சங்கீதம் பாட...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலர் கொண்ட கூந்தல் சங்கீதம் பாட...
மான் விழியாட பொன் மணம் மாலை சூட...
சம்மதித்தாள்.. சம்மதிப்பாள்...
பெண்மை அவள் கண்டுவிட்டாள்...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...
மாதவன் பெயர் பாடி ராதை வந்தாள்...
மன்னவன் முகம் காண நாண்ம் கொண்டாள்...
ஓ ஓ ஓ ஓ
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான்...
ஆ ஆ ஆ ஆ ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக