பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 ஜூன், 2014

புன்னகை தவழும் மதி முகமோ



ரம்மியமான பாடல். அமைதியான அழகான பாடல். நல்ல படப் பிடிப்பு. இனிமையான  குரல்கள். தெளிவான கவிதை.



திரைப் படம்: மரகதம் (1959) (கருங்குயில் குன்றத்துக் கொலை)
இசை: S M சுப்பையா நாயுடு.
நடிப்பு: சிவாஜி, பத்மினி
பாடல்: பாபநாசம் சிவன்
இயக்குனர்: S M ஸ்ரீராமுலு நாயுடு
குரல்க்பள்: டி எம் எஸ், ராதா  ஜெயலக்ஷ்மி.















புன்னகை தவழும் மதி முகமோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணிலா உமிழும் நிறைமதியோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணிலா உமிழும் நிறைமதியோ
மதி மயக்கும் ! புன்னகை தவழும் மதி முகமோ

என்னுளம் கவர் வேதன் கைவரிசையோ
என்னுளம் கவர் வேதன் கைவரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
புன்னகை தவழும் மதி முகமோ

எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையே வேண்டுதடி
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையை வேண்டுதடி
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி
என் பாங்கி ! கணத்தில் மறையுதடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ ?
இதைக் கண்டடென் மனமே மயங்குதடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
இதைக் கண்டென் மனமே மயங்குதடி

எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையை வேண்டுதடா
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையே வேண்டுதடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடா

இந்த ஓவியம் நீங்கள் வரைந்ததுதானே ?
ஆம் ஏன் ? இதில் ஏதாவது பிழை?
இல்லை இல்லை ..என்னை ஒருமுறைதானே பார்த்தீர்கள்?
அதை வைத்துகொண்டு என்னைப் போலவே எப்படி வரைய முடிந்தது ?
கடவுளை கண்ணால் கண்டவர்கள் கூட மறந்து விடுவார்கள்
ஆனால் இந்த அழகு திருவுருவத்தை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட்டால்
ஆயுள் உள்ளவரை மறக்க முடியுமா?

பார்க்க பார்க்க திகட்டாத உன் அழகை பருக பசி தீருமே
பார்க்க பார்க்க திகட்டாத உன் அழகை பருக பசி தீருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன் உயர் கீதம் அமுதம் நேருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன் உயர் கீதம் அமுதம் நேருமே
பாவை உன்னை ! பார்க்க பார்க்க திகட்டாத உன் அழகை பருக பசி தீருமே !



சனி, 28 ஜூன், 2014

கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா

பாடலின் ஆரம்ப இசையோடு பாடலை இணைத்திருக்கும் (Synchronization) விதமே சொல்லும் பாடல் எப்படி இருக்குமென்று. இதை K V மகாதேவன் அவர்களின் பாடல்களில் நிறைய பார்க்கலாம். ரசிக்கக் கூடிய பாடல். அருமையான பாடகி ஈஸ்வரி அம்மா அவர்களின் சிறந்த பாடல்களில் ஒன்று.

திரைப் படம்:  குல விளக்கு (1969)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
பாடியவர்கள்: A L ராகவன், L R ஈஸ்வரி
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி. (ஆனால் இந்தப் பாடலில் நடித்திருப்பவர்கள் வேறு யாரோ)
பாடல்: கண்ணதாசன் என நினைக்கிறேன்











கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா

இதழோரத்திலே தேன் சாரத்திலே
சுவை எடுக்கின்ற நேரமல்லவா
புது மோகத்திலே வந்த வேகத்திலே
விழி சிவக்கின்ற நேரமல்லவா

சாறு தரும் கிண்ணம் கொண்டு வா
அதில் நூறு தரம் கதை சொல்லவா
சாறு தரும் கிண்ணம் கொண்டு வா
அதில் நூறு தரம் கதை சொல்லவா
இடைப் பின்னவா
நான் சொல்லவா
இடைப் பின்னவா
நான் சொல்லவா

கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா

திரைப் போட்டு வைக்கும்
முகம் பார்க்கச் சொல்லும்
இந்தத் திருநாள் தேனிலவு

நம்மை பார்த்திருந்தும்
ஒரு துணைவனின்றி
அங்கு வாடுது வான் நிலவு

திரைப் போட்டு வைக்கும்
முகம் பார்க்கச் சொல்லும்
இந்தத் திருநாள் தேனிலவு

நம்மை பார்த்திருந்தும்
ஒரு துணைவனின்றி
அங்கு வாடுது வான் நிலவு

வாழ்க்கை இன்பம் உடலுறவு

நாம் வாழ்ந்திடதான் இந்த வரவு

ஆ ஆ ஆ
வாழ்க்கை இன்பம் உடலுறவு

நாம் வாழ்ந்திடதான் இந்த வரவு

இது முதலிரவு
இன்னும் பல இரவு
இது முதலிரவு
இன்னும் பல இரவு

ல ல ல ல
ல ல ல ல ல
ல ல ல ல ல ல

வியாழன், 26 ஜூன், 2014

இளமையின் நினைவுகள் ஆயிரம்

பாடல் இனிமை.
இசை சந்திர போஸ்தானா? இசையின் போக்கை பார்த்தால் சங்கர் கணேஷ் போல தெரிகிறது. எது எப்படியோ நல்ல பாடல். பாடல் காணொளி இப்போதுதான் கிடைத்தது.

திரைப்படம்: செல்வாக்கு (1986)
இசை: சந்திரபோஸ் (சங்கர் கணேஷ்???)
பாடியவர்கள்: ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
இயக்கம்: M A காஜா
நடிப்பு: சந்திரசேகர், சுலக்ஷ்னா.











இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலையம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்

இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்

ரதியே
காமன் தோள் சேரும் கிளியே
அழகே
ஆடும் பொன் வீணை நீ

இதழோ
காதல் தேனாற்றங்கரையோ
இளமை
மேகம் நீர் ஊற்றும் நாள்

ஆடும் தோளோடு தோள் சேர
பால் ஊற்றும் நிலவே

இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்

கனவே
ஆசை பூங்காற்றின் சுகமே
மனமே
சூடும் பூ மாலை நீ

மடி மேல்
ஆடும் பூந்தோட்டம் முகமோ
இதயம்
பாடும் பூபாளம் நீ

மேனி தானாக தீயாகி
போராடும் தலைவா

இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலையம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்

ல ல ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல ல ல

செவ்வாய், 24 ஜூன், 2014

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

உணர்ச்சிமயமான பாடல். மனதை நெருடும் பாடல். ஆழ்ந்த அர்த்தமுள்ள கவிதை வரிகள். எனக்குப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. P சுசீலா அம்மாவின் குரல் அப்படியே காட்சிக்கு ஒன்றிப் போனது.

திரைப்படம்: ஆடிப் பெருக்கு (1962)
இசை: A M ராஜா
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
பாடல்: கண்ணதாசன்













காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா

அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா

பொங்கும் விழி நீரை அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா


பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்

அந்த புகழ் போதையாலே
எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார்

ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா

பொங்கும் விழி நீரை
அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா


அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார்

வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால்
மனமாறி உறவாடுவார்

கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்

தன்னை எளிதாக விலை பேசுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா

பொங்கும் விழி நீரை
அணை போடவா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா

உள்ளம் அலை மோதும் நிலை கூறவா

ஞாயிறு, 22 ஜூன், 2014

ஆமணக்கு தோட்டத்திலே பூ மணக்க போற புள்ள

ஷ்யாம் இசையில் இன்னுமொரு அழகான பாடல். அப்படியே கிராமத்து உச்சரிப்பை பாடகர்கள்  கொண்டு வந்திருக்கிறார்கள்.


திரைப் படம்: பஞ்ச கல்யாணி (1979)
இசை: ஷ்யாம்
நடிப்பு: சிவச்சந்திரன், வசந்தி
இயக்கம்: N சம்பந்தம்
பாடியவர்கள்: மறைந்த மலேஷியா வாசுதேவன், வாணி ஜெயராம்
பாடல்:தெரியவில்லை










ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
தானே நாநானானா தந்தானே தானே
தானே நாநானானா தந்தானே தானே
தானே நாநானானா தந்தானே தானே
தானே நாநானானா தந்தானே தானே

ஆமணக்கு தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள

ஆமணக்கு தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள
ஒத்தையிலே போறயடி
ஓங்கூட நான் வரவா
ஓங்கூட நான் வரவா

ஒத்தையிலே போனாலும்
ஓனெனப்புதான மச்சான்
ஒத்தையிலே போனாலும்
ஓனெனப்புதான மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துக்கிட்ட ஆச மச்சான்
சேர்ந்துக்கிட்ட ஆச மச்சான்

வாழமரம்போல வளந்திட்ட புள்ள
வழுக்குதடீ ஒன்னோட ஒடம்பு
தழுவிக்கடீ நீ என்னோட ஒடம்ப

பொன்னையா வாய்யா
பூச்சூடி போய்யா
பூத்திருக்கேன் நானும் உனக்காகத்தாய்யா
காத்திருக்க வேணும் கலங்காதே ராசா

அடிக்கிது காத்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
அணைச்சிக்க சேர்த்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
துடிக்குது ஆசை
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தடுக்குது வெட்கம்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தானானே தானனானா தானானநானே
தானானே தானனானா தானானநானே

ஆமணக்கு தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துக்கிட்ட ஆச மச்சான்
சேர்ந்துக்கிட்ட ஆச மச்சான்

நேத்து வரை நானும் நிலையாத்தானிருந்தேன்
பார்த்தவுடன் ஆசை ஆத்து வெள்ளமாச்சு
ஆத்திரத்துக்கேது சாத்திரமும்தானே

கோத்திரத்துக்கேத்த குணமுள்ள துரையே
பாத்திக் கட்டிதானே நாத்து நடுவாக
களம் போட்டுத் தானே கதிர் அறுப்பாக

அடிக்கிது காத்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
அணைச்சிக்க சேர்த்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
துடிக்குது ஆசை
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தடுக்குது வெட்கம்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
தானானே தானனானா தானானநானே
தானானே தானனானா தானானநானே

ஆமணக்கு தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள
ஆமணக்கு தோட்டத்திலே
பூ மணக்க போற புள்ள
ஒத்தையிலே போறயடி
ஓங்கூட நான் வரவா
ஓங்கூட நான் வரவா


ஒத்தையிலே போனாலும்
ஓனெனப்புதான மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துக்கிட்ட ஆச மச்சான்
சேர்ந்துக்கிட்ட ஆச மச்சான்

வெள்ளி, 20 ஜூன், 2014

ஒரு புஷ்பம் மலர்ந்தது

இப்படியும் ஒரு படம் வந்ததா? படத்தின் பற்றிய விபரங்களும் இணையத்தில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இனிமையான பாடல்.

திரைப் படம்: பருவம் ஒரு பாடம் (1975)
இசை:மகாதேவன்
பாடல்: தெரியவில்லை
இயக்கம் தெரியவில்லை
பாடியவர்கள்: எஸ் பி பி, சுசீலா
நடிப்பு: தெரியவில்லை







ஒரு புஷ்பம் மலர்ந்தது
அதன் இஷ்டம் புரிந்தது
நான் கை கொண்டு பறித்தால்
மை கொண்ட கண்கள் ஏன்தான் சிவந்தது

ஒரு புஷ்பம் மலர்ந்தது
இதழ் தேனை பொழிந்தது
நீ கை கொண்டு பறிக்க
மெய் கொஞ்சம் சிலிர்க்க
நானம் பிறந்தது
ஒரு புஷ்பம் மலர்ந்தது

அந்தி மாலையில் அழைக்கும்
கதையளக்கும் உன் சிரிப்பு

அன்பு லீலையில் இருக்கும்
கலை விளக்கும் உன் அணைப்பு

காதல் சாகரம் கரை புரள

கன்னித் தாமரை மடல் விரிய

நான் நீராட நினைத்து போராடியிருக்க

காலம் கனிந்தது

ஒரு புஷ்பம் மலர்ந்தது
இதழ் தேனை பொழிந்தது

மோக மந்திரம் பயிலும்
என் பருவம் உன் வசத்தில்

ஆ ஆ ஆ ஆ ஆ
மூன்று வேளையும் உருகும்
என் உள்ளம் உன்னிடத்தில்

வண்ண மாதுளம் வாய் திறக்க

வண்டு போல நான் வந்திருக்க

நீ கொண்டாடும் பொழுது
உண்டாகும் சுகத்தில்

போதை பிறந்ததோ

ஒரு புஷ்பம் மலர்ந்தது
அதன் இஷ்டம் புரிந்தது

ல ல ல ல

ல ல ல ல
கட்டுப் பூவுடல் கனிய
கை அணைய நான் தவித்தேன்

கெட்டி மேளங்கள் முழங்க
என்னை வழங்க நாள் இருக்க

இன்ப வேதனை இருவருக்கும்

தோளில் மாலைகள் வரும் வரைக்கும்

நான் அன்னாளை நினைத்து
அச்சாரம் கொடுத்தால்

ஆசை அடங்குமோ

ஒரு புஷ்பம் மலர்ந்தது





புதன், 18 ஜூன், 2014

கால்கள் நின்றது நின்றதுதான்

L R ஈஸ்வரி அவர்களின் அமுதமான குரலில் வந்த பாடல்களில் இதுவும் ஒன்று. வாலியின் கவிதையும் மன்னர்களின் இசையும் இணைந்து விருந்து படைத்துள்ளது.


திரைப் படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
 இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
 பாடியவர்கள்: A L ராகவன், L R ஈஸ்வரி
 பாடல்: வாலி
நடிப்பு: ஜெமினி, விஜயகுமாரி, சாவித்திரி, முத்துராமன்













கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்ததுதான் 
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
எண்ணம் பறந்தது பறந்ததுதான்
என்னை மறந்தது மறந்ததுதான் 
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
நால்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
நால்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே 
காற்றடித்தால் அங்கு ஓசை வரும்
கைபிடித்தால் அங்கு ஆசை வரும்
காதல் வந்தால் அங்கு கனி மலரும்
கண் மலர்ந்தால் அங்கு கதை முடியும் 
கால்கள் நின்றது நின்றதுதான் 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கைகளை பிடித்தவன் காதலனோ
கவிதைகள் படிப்பவன் பாவலனோ
கண்களில் நின்றவன் மன்மதனோ 
கன்னியை வென்றவன் மன்னவனோ

ஊர்வலமாய் வரும் பூந்தேரோ
உள்ளத்தில் பாயும் தேனாறோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ


கால்கள் நின்றது நின்றதுதான்
ஹாஹா 
கண்கள் சென்றது சென்றதுதான்
ஹோ ஹோ
உருவம் வந்தது வந்ததுதான்
ஆ ஆ 
உள்ளம் தந்தது தந்ததுதான் 
கால்கள் நின்றது நின்றதுதான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஓ ஓ ஓ ஓ ஓ