பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

அமைதியான பின்னனி இசையுடன் ஒரு இனிமையான பாடல்.

திரைப்படம்: ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
இயக்கம்: யோகானந்த்
நடிப்பு: சிவாஜி, விஜயா
இசை: விஸ்வனாதன்
தயாரிப்பு: குற்றாலிங்கம்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்

http://www.divshare.com/download/13654455-2f5

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..
தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்க்கு..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..
அபிஷேக அலங்கார பாவை ஆசை அலைமோதும் புது மோக பார்வை..

தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
தமிழ் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..
மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும்..

இளங்காற்று தாலாட்டும் நேரம் புது இன்பம் கண்டு மஞ்சம் இளைப்பாரும்..
முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

தங்க நகை எனக்கெதற்க்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்க்கு..

முத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க..

வியாழன், 30 டிசம்பர், 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி தொப்பிதொப்பி, உங்களுக்கும் எனதருமை நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

P சுசீலாவின் இனிமையான குரலில் ஒரு வாழ்க்கை தத்துவ பாடல். என்னை மிகவும் பாதித்த பல பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம்: மணிமண்டபம்
இசை:இயக்கம்:நடிப்பு: எந்த விபரமும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவுசெய்து விபரம் கூறுங்கள்.
இந்த திரைப் படம் வெளிவரவே இல்லை எனக் கேள்விப்பட்டேன்.

Download Music - Upload Audio - uravu varum oru naal-mani ma...

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
வரவு வரும் வழியில் செலவு வரும்...
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

பகலும் வரும் உடனே இரவும் வரும்..
பகலும் வரும் உடனே இரவும் வரும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்..
ஆசையிலே சில நாள் அவதியிலே சில நாள்..
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்...
காதலிலே சில நாள் கவலையிலே சில நாள்...
வாழ்வது ஓர் சில நாள் வாடுவதே பல நாள்..
வாழ்வது ஓர் சில நாள் மனம் வாடுவதே பல நாள்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனைதான் தருமோ..
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்...
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
இமைகளை மூடிடுவோம் துயர்களை ஓடிடுவோம்...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இமைகளை மூடிடுவோம் அதில் துயர்களை ஓடிடுவோம்...
மறுபடியும் விழிப்போம் மனிதரை போல் பிறப்போம்...
மறுபடியும் விழிப்போம் புது மனிதரை போல் பிறப்போம்...

உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..
பழக வரும் துணையும் விலகிவிடும்..
உறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..

புதன், 29 டிசம்பர், 2010

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...TMS

லக்ஷ்மி அவர்களின் முதல் படம், அழகான பாடல்கள். இதே பாடலை PS குரலில் கீழே தரமேற்றி இருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்: ஜீவனாம்சம் (1968)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: மல்லியம் ராஜகோபால்

பாடியவர்: TMS
நடிப்பு: சிவகுமார், ஜெய்ஷங்கர், லக்ஷ்மி

http://www.divshare.com/download/13639950-7a2

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம்..

தண்ணீரைக் குடித்தாலும் தனியாத தாகமன்றோ...

என் உயிரில் உன் உயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

மனமென்னும் தனியறையின் மனக் கதவு திறந்திருக்கும்...

என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி...

இன்ப துன்பம் இருவருக்கும் இறுதி வரை சரி பாதி...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...PS

லக்ஷ்மி அவர்களின் முதல் படம், அழகான பாடல்கள். இதே பாடலை TMS குரலில் அடுத்து தரமேற்றி இருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்:   ஜீவனாம்சம் (1968)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: சிவகுமார், ஜெய்ஷங்கர், லக்ஷ்மி

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம்...

என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம்..

தண்ணீரைக் குடித்தாலும் தனியாத தாகமன்றோ...

என் உயிரில் உன் உயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

தனியறையின் கதவுகளை தாள் போட்டு அடைத்தாலும்...

மனமென்னும் தனியறையின் மணிக் கதவு திறந்திருக்கும்...

என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி...

இன்ப துன்பம் இருவருக்கும் இறுதி வரை சரி பாதி...

எனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...

நினைக்காமல் மறப்பதற்க்கு நினைத்தாலும் முடிவதில்லை...

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

இடையிடையே வரும் வசனங்களைத் தவிர்த்தால் பாடல் இனிமையானதுதான். நல்ல இசையும் இனிமையான குரல்களும் இப்பாடலை அலங்கரிக்கின்றன

திரைப்படம்:  மாலை சூட வா (1975)
இசை: விஜய பாஸ்கர்
இயக்கம்: C V ராஜேந்திரன்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம்
பாடல் வரிகள்: வாலி
கதை: வெண்ணிற ஆடை மூர்த்தி
நடிப்பு: கமல் ஹாசன்

http://www.divshare.com/download/13071892-828

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...

அவசரம் அப்பப்பா அவசரம்..

ஒருதரம் ப்ளீஸ் ஒரேதரம்...

அவசரம் அப்பப்பா அவசரம்..

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

தலை முதல் கால் வரை தழுவிக் கொள்வேன்...

இலைமறைக் கனிகளைத் திருடிச் செல்வேன்...

இருப்பதை உடைக் கொண்டு மறைத்து வைப்பேன்...எடுக்கையில் எனைக் கொஞ்சம் மறந்து நிற்பேன்...

நாள் பார்க்கவோ...

அந்த ஆள் பார்க்கவோ...

நாள் பார்க்கவோ...

அந்த ஆள் பார்க்கவோ...

ஆசை ஒரு மணி முத்தம் ----- ஆசை...

ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

ஒருதரம் அம்மம்மா ஒருதரம்...

அவசரம் அப்பப்பா அவசரம்..

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

இளமையின் பலம் கொண்டு கட்டிப் பிடிப்பேன்...இதயத்தில் ஊடுருவி இடம் பிடிப்பேன்...

நால்வகை குணத்தையும் காவல் வைப்பேன்...நாளைக்கு மாலையிட்டு கைப் பிடிப்பேன்...

நாள் பார்க்கவோ...

அந்த ஆள் பார்க்கவோ...

நாள் பார்க்கவோ...

அந்த ஆள் பார்க்கவோ...

ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...

ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை...

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

கொஞ்சம் சமீபத்தில் வந்த இனிமையான பாடல்

திரைப்படம்:   பட்டாக்கத்தி பைரவன்    (1979)
இசை: இளையராஜா
இயக்கம்: V B ராஜேந்திர ப்ரசாத்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்கள்: SPB, S ஜானகி
நடிப்பு: சிவாஜி, ஸ்ரீதேவி
 
http://www.divshare.com/download/13588935-86d

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே...நிலாவே...

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில் நிலாவே...நிலாவே...

ஆ ஆ ஆ ...நான் காண்பதே உன் கோலமே..

அங்கும்.ம்ம்...இங்கும்.ம்ம்...எங்கும்.ம்ம்...

ஆ ஆ...ஆ என் நெஞ்சிலே உன் எண்ணமே..

அன்றும்.ம்ம்...இன்றும்.ம்ம்...என்றும்.ம்ம்...

உள்ளத்தில் தேவன் உள்ளே என் ஜீவன்..நீ.. நீ.. நீ...

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில்

நிலாவே...

நிலாவே...

ஆ ஆ ஆ... கண்ணானவன்...பூவாகினேன்..

கண்ணே...உன்னை...எண்ணீ...

ஆ ஆ ஆ..பூவாசமும் தேன் மஞ்சமும்

எங்கோ..எங்கோ..ராஜா...

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன்

நான்...நீ...நாம்....

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்

என் வாழ்க்கை வானில்

நிலாவே...

நிலாவே...

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

வியாழன், 23 டிசம்பர், 2010

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்

 ஒரு ஜோடி காதலில் மூழ்கியும், மற்றொரு ஜோடி போதையில் மூழ்கியும் ஒரு பெண் கணவன் கைவிட்ட சோகத்திலேயும் பாடியதாக அமைந்த பாடல் இனிமையாக இருக்கிறது

படம்:  பவானி  (1967)
பாடியவர்கள்: TMS, P சுசீலா, P B ஸ்ரீனிவாஸ். L R  E
இயக்கம்: T R ராமண்ணா
நடிப்பு: ஜெய்ஷங்கர், அசோகன், விஜயலக்ஷ்மி, விஜயகுமாரி
இசை: M S விஸ்வனாதன்

http://www.divshare.com/download/13588741-76f

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்....

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்....

இரவே வருக... உறவே வருக....

தூய மஞ்சத்தில் பாவை நெஞ்சத்தில் நானிருக்கப் பார்த்திருக்கும் காதல் வெண்ணிலா...நான்கு கண்ணங்கள் பேசிக் கொள்ளட்டும்... நாளை மிச்சம் மீதியின்றி வாங்கிக் கொள்ளட்டும்...

காலையில் வெட்கம் மாலையில் பக்கம் நாளை இன்னும் வேண்டும் என்று தேடிடும் உள்ளம்...குங்கும பொட்டு நெஞ்சினில் பட்டு கோடி இன்பம் ஓடி வந்த பாவனை சொல்லும்.....

இரவே வருக... உறவே வருக....

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...உந்தன் நெஞ்சினில் கொடுத்துவிடும்....

ஓ ஓ ஓ ஓ ஹா ஹா ஹா ஹா

கண்ணாடி கிண்ணங்களில் மது ரசம் எடுத்து பெண்ணென்று பேர் சொல்லி என் கையில் கொடுத்து கண்ணாலே பருக சொன்னாள்...அதில் வண்டாக அமரச் சொன்னாள்...

ஒரு மாலை மலர் தொடுத்து அதில் நீயும் குடியிருக்க...அழைத்தால் வருவேன் ...அணைத்தால் நான் தருவேன்...

கல்யாணப் பெண்ணென்னும் பேர் ஒன்று கொடுத்து...கண்ணாடிக் கிண்ணங்களில் மது ரசம் எடுத்து கண்ணாலே பருகிவிடு...அதில் வண்டாக அமர்ந்து விடு...

அது நாளை நடக்கட்டுமே....இந்த நேரம் இனிக்கட்டுமே...இதுதான் ஒரு நாள்...நினைத்தால் சுகம் தரும் நாள்....

இந்த நிலவை நாம் பார்த்தால் அது நமக்கென வந்தது போலிருக்கும்...ஒரு நினைவை எடுத்து வரும்...வரும் நெஞ்சினில் கொடுத்துவிடும்....

இரவே வருக... உறவே வருக....

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை உறங்காத கண்கள் இங்கே....

ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை உறங்காத கண்கள் இங்கே....

நாளெல்லாம் தனிமை இங்கே நான் தேடும் வாழ்க்கை எங்கே ...நான் தேடும் வாழ்க்கை எங்கே ...

மலர்களிலே வாசம் இல்லை... மஞ்சளிலே அழகும் இல்லை...தலைவனிடம் காதல் இல்லை...இறைவனிடம் கருணை இல்லை...

இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலிருக்கும்...என் நினைவை எடுத்து வரும்...அந்த நெஞ்சினில் கொடுத்துவிடும்....

இரவே மறைக... பொழுதே விடிக...

இசைக்கவோ நம் கல்யாண ராகம்...

கங்கை அமரன் இசையில் கண்மூடி மௌனமாய் ரசிக்க வைக்கும் பாடல். விஜயன்தான் கொஞ்சம் படுத்துகிறார். மற்றபடி அருமை. சுகமான குரல்கள்.

படம்:  மலர்களே மலருங்கள் (1980)
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இயக்கம்: பேபி
பாடல் எழுதியவர்: M G வல்லபன் என்று நினைக்கிறேன்
நடிப்பு: விஜயன், ராதிகா

http://www.divshare.com/download/13588776-9ed

இசைக்கவோ நம் கல்யாண ராகம்...

கண்மூடி மௌனமாய் நாண மேனியில்

கோலம் போடும் போது...இசைக்கவோ...

ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்..

ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்...

வீதிவலம் போகும் நாளிலே

தேவன் தோளிலே மலர்வேனே...

நாதஸ்வரம் பாட சூழ்ந்து

நலம் காண வாழ்த்தவே தருவேனே...

சிரிப்பில் புது ராகமாளிகை...நீ....

ரசிக்கவோ நம் கல்யாண ராகம்...

கண்மூடி மௌனமாய் நாண மேனியில்

கோலம் போடும் போது...ரசிக்கவோ...

நிசநிசக பகபகரிச நிசநிசக

கமகமதமரி ரிககமரிநி

ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச

பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே....

ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்...

போதும் இது காதல் போதையே

காணும் பூவையே போராடு....

மீதி வரும் நாளில் நாமும்

திருநாளைக் காணவே நீ ஆடு....

ரசிப்பில் ஒரு ராஜபல்லவன்...நீ....

இசைக்கவோ நம் கல்யாண ராகம்....

கண்மூடி மௌனமாய் நாண மேனியில்

கோலம் போடும் போது...ரசிக்கவோ...

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே

இன்று இந்தப் பாடல் உண்மையாகவே ஒரு அரிய பாடலாகிவிட்டது. என்ன அழகான கவிதை, குரல் மற்றும் இசையமைப்பு?

 திரைப்படம்: கார்த்திகை தீபம் (1965)

 பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: ஆர். சுதர்சனம்

இயக்கம்: ஏ காசிலிங்கம்

நடிப்பு: அசோகன், பி வசந்தா

http://www.divshare.com/download/13551236-87c

இங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே

இங்கு உண்ணடா செல்வமே

இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

தங்க வீணையே தமிழின் ஓசையே

தவழும் பொதிகையின் தென்றலே

தாயின் மனநிலை தெரிந்த பின்னும்

தாமதம் செய்யாதே கண்ணே

இங்கு இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

செங்கரும்பின் வாய் திறந்து

சிதறும் மழலை தேன் சுரந்து

அங்கத் தாமரை வாடுமுன்னே

அமுதம் உண்ணடா என்தன் கண்ணே

இங்கு இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

வெண்ணிலாவை பாடச் சொல்வேன்

வீசும் தென்றலை ஆடச் செய்வேன்

கண்ணே முன்னவர் வீரம் வளர்த்த

கதைகள் யாவையும் உனக்குச் சொல்வேன்

இங்கு இங்கு உண்ணடா செல்வமே

சங்கிலே உன் பங்கு ஊறுது

இங்கு உண்ணடா செல்வமே

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா...

இசையமைப்பாளர்  S வேதாவின் நல்ல பாடல். அருமையான இருகுரலிசை.

படம்: வல்லவன் ஒருவன் (1966)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: R சுந்தரம்
நடிப்பு: ஜெயஷங்கர், விஜயலக்ஷ்மி
பாடல்: கண்ணதாசன்
 
http://www.divshare.com/download/13535089-2f7

தொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா... கட்டிக்கொண்டு பாடவா... கண்ணம் பார்த்து பாடவா...தொட்டுத் தொட்டு பாடவா...

தட்டித் தட்டி ஆடவா...தாவித் தாவி ஆடவா...கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா...தட்டித் தட்டி ஆடவா...

அடியெடுத்த கால்களின் அதிசயத்தை பாடவா... நடனமாடும் பெண் மயில் ரகசியத்தை பாடவா...

அடியெடுத்த கால்களின் அதிசயத்தை பாடவா... நடனமாடும் பெண் மயில் ரகசியத்தை பாடவா...

இரவு நேரக் காற்றிலே இணைந்து வந்து ஆடவா...இரவு நேரக் காற்றிலே இணைந்து வந்து ஆடவா...உறவு தந்த தேரிலே உள்ளிருந்து ஆடவா...

தட்டித் தட்டி ஆடவா...தாவித் தாவி ஆடவா...கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா...தட்டித் தட்டி ஆடவா...

பாடல் மட்டும் போதுமா பருவ ராகம் வேண்டுமா...ஆட வந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா...

பாடல் மட்டும் போதுமா பருவ ராகம் வேண்டுமா...ஆட வந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா...

ஆடை காட்டும் போதிலே ஆளைக்கட்டும் பெண்மையே...

ஆடை காட்டும் போதிலே ஆளைக்கட்டும் பெண்மையே...

ஜாடைக் கண்டு பாடவா...சரசம் கண்டு பாடவா...

தொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா... கட்டிக்கொண்டு பாடவா... கண்ணம் பார்த்து பாடவா...

தட்டித் தட்டி ஆடவா...தாவித் தாவி ஆடவா...கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா...தட்டித் தட்டி ஆடவா...

உள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,

மிக மென்மையான பாடல். கேட்கக் கேட்க திகட்டாது

படம்: தாலி பாக்யம் (1966)
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: TMS, P சுசீலா
இயக்கம்: K B நாகபூஷனம்
நடிப்பு: MGR, சரோஜா தேவி

http://www.divshare.com/download/13535003-8c6

உள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,

கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,

கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஓரு கோவில்

நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே

நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு திரு நாயகனாய் நீ வந்தாயே

பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே

பூவிதழோரம் தேன் எடுத்து இளம் புன்னகையில் நீ தந்தாயே

ஆனந்த கடலின் அலையென்பேன்

உன்னை ஆனிப் பொன்னுடல் சிலை என்பேன்

உள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,

கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஓரு கோவில்

பருவம் தரும் நல்ல விருந்தாவேன் என்னை பகல் இரவாய் நான் படைத்து வைப்பேன்

பருவம் தரும் நல்ல விருந்தாவேன் என்னை பகல் இரவாய் நான் படைத்து வைப்பேன்

முன்னழகோடு பின்னழகை என் மனச்சிமிழில் நான் அடைத்து வைப்பேன்

முன்னழகோடு பின்னழகை என் மனச்சிமிழில் நான் அடைத்து வைப்பேன்

தோள்களில் கொடிபோல் படர்ந்திருப்பேன்

உன்னை சுமந்து கொண்டே நான் நடந்திருப்பேன்

உள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,

கண்கள் அதன் வாசல் பெண்ணின் நாணம் அங்கு காவல்

புதன், 15 டிசம்பர், 2010

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

மீண்டும்  தூங்காத கண்னென்று ஒன்று படத்திலிருந்து இன்னுமொரு அழகான பாடல். திருமதி ஜானகி, SPB இருவரும் நன்கு உணர்ந்து பாடி இருக்கிறார்கள். பாடலுக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்  

படம்: தூங்காத கண்னென்று ஒன்று (1983)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: R. சுந்தர்ராஜன்

நடிப்பு; மோகன், அம்பிகா

பாடல்: முத்துலிங்கம்

http://www.divshare.com/download/13518362-95d

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்தது...

மலர் மீதிலே பனி சிந்துதே...

மனம் என்னும் தேனாற்றில் அலை மோதுதே...
இங்கு...இதய வாசல்
ஹோ
திறந்த போது
ஹோ
உறவு வந்தது....
மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே...

எனையும் கொடுத்தேன் மனதை இணைத்தேன் சிறகை விரித்தேன் பொன் வானிலே...

மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே...

எனையும் கொடுத்தேன் மனதை இணைத்தேன் சிறகை விரித்தேன் பொன் வானிலே...

வானத்து வில்லாலே பாலம்...

மேகம் சொர்கத்தை நாம் காண போடும்...

வானத்து வில்லாலே பாலம்...

மேகம் சொர்கத்தை நாம் காண போடும்...

நிலவென்னும் பெண் தோழி விண்மீனை பூவாக்கி...

வழி மீது தெளிப்பாளோ அங்கே அங்கே....

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்து...

விழிகள் பொழியும் கவிதை மழையில் மனதில் மலரும் சங்கீதமே...

இளமை கரையில் இவளின் மடியில் கதைகள் தினமும் உருவாகுமே...

விழிகள் பொழியும் கவிதை மழையில் மனதில் மலரும் சங்கீதமே...

இளமை கரையில் இவளின் மடியில் கதைகள் தினமும் உருவாகுமே...

எழிலான உன் கூந்தல் ஓரம்...

நெஞ்சம் இளைப்பாறும் திரு நாளும் தோன்றும்...

எழிலான உன் கூந்தல் ஓரம்...

நெஞ்சம் இளைப்பாறும் திரு நாளும் தோன்றும்...

முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே...

எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்...

இதய வாசல் திறந்த போது உறவு வந்தது....

உறங்கும்போது கனவு நூறு பருவம் தந்து...

மலர் மீதிலே பனி சிந்துதே...

மனம் என்னும் தேனாற்றில் அலை மோதுதே...
இங்கு...இதய வாசல் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்....

செவ்வாய், 14 டிசம்பர், 2010

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

நல்ல இசையும் P. சுசீலா மற்றும் ஜெயசந்திரனின் இனிமையான குரல்களும்

படம்:  தங்க ரங்கன்  (1978)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீவித்யா
இயக்கம்: S R தக்ஷினாமூர்த்தி
தயாரிப்பு: ஜேப்பியார்

Embed Music Files - Play Audio -

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

முந்தானை சிந்தாட வந்தாடும் நேரத்தில்

உன் தோளில் கண்மூட வேண்டும்

ஆஹா...உன் தோளில் கண்மூட வேண்டும்

கண்மூடும் நேரத்தில் பொன்பூவின் தேகத்தில்

தள்ளாடும் வண்டாக வேண்டும்

ஆஹா...தள்ளாடும் வண்டாக வேண்டும்

செவ்வானம் தேன் சிந்தும் உல்லாச பாடங்கள்

இதழோரம் கற்றாக வேண்டும்

ஆஹா...இதழோரம் கற்றாக வேண்டும்

தொட்டாலும் பட்டாலும் கொண்டாடும் காலத்தில்

வெட்கங்கள் பூமாலை போடும்

ஆஹா...வெட்கங்கள் பூமாலை போடும்

நனா நா  நனா நா நனா நா ஹா
நனா நா  நனா நா நனா நா
ஹ  ஹ  ஹ  ஹ  ஹ  ஹா

மாலைக்கு பின்னாலே காலங்கள் பூத்துவர

மானோடு நான் பாட வேண்டும்

ஆஹா...மானோடு நான் பாட வேண்டும்

வானத்தில் பூவாகி மேகத்தில் தேன்பாய

மௌனத்தில் நாம் வாழ வேண்டும்

ஆஹா...மௌனத்தில் நாம் வாழ வேண்டும்

ராகங்கள் பாவங்கள் தாளங்கள் எல்லாமே

மோகத்தில் ஊடாட வேண்டும்

ஆஹா...மோகத்தில் ஊடாட வேண்டும்

தாகங்கள் தீராமல் பருவங்கள் மாறாமல்

தேகங்கள் சுகம் காண வேண்டும்

ஆஹா...தேகங்கள் சுகம் காண வேண்டும்

நனா நா நனா நா நனா நா ஹா

நனா நா நனா நா நனா நா

உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது

கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது

அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது

உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்

கர்னாடக இசையுடன்  SPBயின் இனிமையான் குரலில் நல்லதொரு பாடல்

படம்:   பெண் ஒன்று கண்டேன்   (1974)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், பிரமிளா
இயக்கம்: கோபு
 
http://www.divshare.com/download/13505615-95e

உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...

உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம்...

உன் இள நடை மலையமாருதமாகும்...

உன் மலர் முகம் சால மதியெனக் கூறும்...

நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை....

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி...இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி..

உறவுக்கு உதவிடும் சரசாங்கி...இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி..

குரல் வழிப் பிறந்தது அம்சத்வனீ...

உன் குரல் வழிப் பிறந்தது அம்சத்வனீ...

உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி...

நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை...
நான் வாவெனெ அழைக்கையில் விரைந்தோடி வந்து தழுவிடும் தேவ மனோஹரி...

யாரபிமானமும் தேவையில்லை இந்த அகிலத்தில் உன் போல் பாவையில்லை...

நீ ஒரு ராக மாளிகை...உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...

நீ ஒரு ராக மாளிகை...
நீ எனக்கே தாரம் என்றிறுக்க உனை என் வசம் தாவென நான் கேட்க...

நீ எனக்கே தாரம் என்றிறுக்க உனை என் வசம் தாவென நான் கேட்க...

என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்ஜனியே...

நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்ஜனியே...

இந்த நாயகன் தேடிடும் நாயகியே.....

திங்கள், 13 டிசம்பர், 2010

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது

இனிமையான காதல் டூயட் P. சுசீலா அவர்களின் கொஞ்சும் குரல் TMS அவர்களின் கம்பீரமான குரல், நல்ல இசை, கவிதையுடன் அமைதியான மன நிறைவை அள்ளி வழங்குகிறது.

படம் : காஞ்சித் தலைவன் (1963)
இசை:  K V மகாதேவன்
இயக்கம்: A காசிலிங்கம்
நடிப்பு: MGR, விஜய குமாரி, பானுமதி
தயாரிப்பு: முரசொலி மாறன்
கதை வசனம்; மு கருணா நிதி

http://www.divshare.com/download/13488024-a1f

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்...அதை நாடி வந்தால் புது உலகு வரும்...

நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும்...அதை நாடி வந்தால் புது உலகு வரும்...

நான் என்ற தனிமை அடங்கிவிடும்... அங்கு நாமென்ற இனிமை தொடங்கிவிடும்..

நான் என்ற தனிமை அடங்கிவிடும்... அங்கு நாமென்ற இனிமை தொடங்கிவிடும்..

வானத்தில் வருவது ஒரு நிலவு...

இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

மாந்த்தளிர் மெல்லிடை ஆடிவரும்...அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்...

மாந்த்தளிர் மெல்லிடை ஆடிவரும்...அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்...

தீங்கனி இதழில் கதை வளரும்...

தீங்கனி இதழில் கதை வளரும்...

கண்கள் தேடிய சுகத்தில் அமைதிப் பெறும்..

கண்கள் தேடிய சுகத்தில் அமைதிப் பெறும்..

வானத்தில் வருவது ஒரு நிலவு...

இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

கோடையும் குளிராய் மாறி வரும்...அதில் கோடி இன்பம் ஊறி வரும்...

கோடையும் குளிராய் மாறி வரும்...அதில் கோடி இன்பம் ஊறி வரும்...

மண மேடையில் திரு நாள் மலர்ந்து வரும்...அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்...

மேடையில் திரு நாள் மலர்ந்து வரும்...அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்...

வானத்தில் வருவது ஒரு நிலவு...

இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

வானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது ஒரு நினைவு...

பால் நிலவு காய்ந்ததே...பார் முழுதும் ஓய்ந்ததே...

திரு.M ஷங்கரின் விருப்ப பாடல் இது. ஜெயசந்திரன் குரலில் இனிமையாக ஒலிக்கிறது. பெரிதும் பேசப் படாத படம் மற்றும் பாடல்.

படம் : யாரோ அழைக்கிறார்கள் (1985)
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: ராஜன் ஷர்மா
நடிப்பு: குரு, அனுராதா

http://www.divshare.com/download/13487998-d15

பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,
நான் நினைத்து பார்க்கிறேன்..
நான் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்...
நிலவே,,நிலவே,,நிலவே,,

கண் முதலில் பார்த்தது..
மண் மயங்கி வீழ்ந்தது..
உன் விழிகள் பார்க்கையில் தினம் கவிதை கோர்த்தது..
நான்..நான்..நான்..உனழகினிலே வீழ்ந்தேன்
மயிலே..மயிலே..மயிலே..

பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,
நீ முதலில் பூசினாய்..
பின் தயங்கி பேசினாய்..
நான் மகிழ்ந்து பாடினேன்..
எனை மறந்து ஆடினேன்..
பூபாளம் இசைத்தது நம் காதல்..
குயிலே..குயிலே..குயிலே..
பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,

பெண் மனது மென்மையாம்..
பூவினது தன்மையாம்..
என்று சொன்ன யாவரும் இன்று வந்து பார்க்கட்டும்..
தேன்..தேன்..தேன்.. என் நினைத்தேன் நான் தான்..
அவளே.. அவளே..அவளே..
பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,

வெள்ளி, 10 டிசம்பர், 2010

யாருக்கு யார் சொந்தம் என்பது...என்னை... நேருக்கு நேர் கேட்டால்

அழகான தமிழிலில் மற்றுமொரு பாடல்.

படம்:  சபாஷ் மாப்பிள்ளை   (1961)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: ஸ்ரீனிவாசன் ராகவன்
நடிப்பு: MGR , MR ராதா, மாலினி
குரல்கள்: சீர்காழி, P சுசீலா
பாடல்: மருத காசி

http://www.divshare.com/download/13462001-0b6

யாருக்கு யார் சொந்தம் என்பது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று...

வானத்துக் கார் முகிழும் சொல்லுதே...

வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று...

வானத்துக் கார் முகிழும் சொல்லுதே...

மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனம் என்று...

மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனம் என்று...

வண்ண மலர் எல்லாமே துள்ளுதே...

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

வண்ண மலர் என்றும் வண்டுக்குத்தான் சொந்தம்...

வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ

தந்தப் பல் எழில் கண்டு தன் இனம் தான் என்று...

பொங்கும் கடலின் முத்து பண் பாடுதே...

தந்தப் பல் எழில் கண்டு தன் இனம் தான் என்று...

பொங்கும் கடலின் முத்து பண் பாடுதே...

குங்கும இதழ் கண்டு...

கோவைக் கனி எல்லாம்

குங்கும இதழ் கண்டு...

கோவைக் கனி எல்லாம்

தங்களின் இனம் என்று ஆடுதே ஏ ஏ...

இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

கொத்தும் கிளிக்கேதான் கோவைக் கனி சொந்தம்...

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது...

குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

என்னை... நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது...

யாருக்கு யார் சொந்தம் என்பது...

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

நல்ல தமிழிலில் இன்னுமொரு மனதுக்கு இனிய நல்ல பாடல்.

படம்:   உலகம் சிரிக்கிறது   (1959)
இயக்கம்: K ராமமூர்த்தி
இசை: ???
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா
நடிப்பு: M R ராதா, ப்ரேம் நஸிர், சௌக்கார் ஜானகி
தயாரிப்பு: கோவிந்தன்

http://www.divshare.com/download/13459429-6d7

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

நீல ஒளி வீசும் நிலாவிது...

ஓ ஓ ஓ ஓ

நெஞ்சம் ஒன்றானோம் இன்னாளிலே...

ஓ ஓ ஓ ஓ...

நீல ஒளி வீசும் நிலாவிது...

ஓ ஓ ஓ ஓ...

நெஞ்சம் ஒன்றானோம் இன்னாளிலே...

ஓ ஓ ஓ ஓ...

என்றும் அழியாத புது இன்பம் உருவாகும் வாழ்விலே...

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி...

ஓ ஓ ஓ ஓ...

நம்மை தடை செய்வார் இல்லை இனி...

ஓ ஓ ஓ ஓ ...

நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி...

ஓ ஓ ஓ ஓ...

நம்மை தடை செய்வார் இல்லை இனி...

ஓ ஓ ஓ ஓ ...

நாளும் இணையாக மனம் போலே புது வாழ்வு தேடுவோம்...

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

வண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே..

காதல் கதை பேச இது நல்ல நேரமே...

நாமே கதை பேச இது நல்ல நேரமே...

என்னம்மா..என்னம்மா சிங்கார கண்ணம்மா...

மனதுக்கு இனிய நல்ல பாடல். சுசீலாவின் ஹ்ம்மிங்க் மற்றும் இசையமைப்பும் பிரமாதம்

படம்: விவசாயி (1967)
இயக்கம்: M A திருமுகம்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: T M S , P.சுசீலா
நடிப்பு: MGR ,K R விஜயா
பாடல்: மருத காசி
தயாரிப்பு: சின்னப்ப தேவர்

http://www.divshare.com/download/13458966-083

என்னம்மா..என்னம்மா சிங்கார கண்ணம்மா...

பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

ஆ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ல ல ல ல லல

என்னம்மா சிங்கார கண்ணம்மா...

ம் ம் ம் ம்

பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை...

உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை...

ஹா ஹா ஹா ஹா ஹா ல ல ல லல்ல்ல்லா

கண்ணுக்குள் கண்ணை வை நெஞ்சுக்குள் நெஞ்சை வை...

உன்னுள்ளே என்னை வை என்னுள்ளே உன்னை வை...

கையும் கையும் மெய்யும் மெய்யும் பிண்ணிக் கொள்ளவா...

ம் ம் ம் ம்

கனியுண்டு பசி தீர்ந்து களைப்பாறவா...

என்னம்மா சிங்கார கண்ணம்மா...

ஹோ ஹோ ஹோ

பக்கம் வந்த பின்னே..

ம் ம் ம் ம்

வெட்கம் வரலாமா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா...

சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா...

ஹா ஹா ஹா ஹா ஹா ல ல ல லல்ல்ல்லா

கிள்ளாமல் கிள்ளுதா உள்ளத்தை அள்ளுதா...

சொல்லாமல் சொல்லுதா சொர்க்கத்தைக் காட்டுதா...

ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது கணக்கில் தானம்மா..

ம் ம் ம் ம்

உண்மைக் காதல் தரும் வாழ்வில் ரெண்டும் ஒன்னம்மா...

என்னம்மா சிங்கார கண்ணம்மா...

ம் ம் ம் ம்

பக்கம் வந்த பின்னே..

ஹா ஹா

வெட்கம் வரலாமா...

அ அ அ அ

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

பார்க்க போனால் நீயும் நானும் ஒன்னம்மா...

திங்கள், 6 டிசம்பர், 2010

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(சோகம்)

பருவ காலம் (சோகம்)

http://www.divshare.com/download/13423711-a42

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் துயர கீதம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

பாடும் பறவை ஆயிரம் நடுவே...

நானோ பாடவில்லை...

இங்கு பாசம் பொழியும் உயிர்களுக்கென்னை...

ஏனோ தெரியவில்லை...

இங்கே தவிக்கும் என்னைத் தேற்ற

எவரும் வரவில்லை

நான் என்னை இழந்தும்...

உன்னை அடைந்தேன்...

இருந்தும் பயனில்லை...

இருந்தும் பயனில்லை...

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் துயர கீதம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

முல்லைக் கொடியும் என்னைப் பார்த்தால்...

நெஞ்சம் துடிக்காதோ...

அலை மோதும் அருவி என்னைக் கண்டால்...

கண்ணீர் வடிக்காதோ...

அன்னை மடியில் பிள்ளை இருந்தும்...

துயரம் தீரவில்லை...

நான் ஆசைக் கொண்டு தழுவும் கையை உலகம் ஏற்கவில்லை...

உலகம் ஏற்கவில்லை...

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் துயர கீதம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(மகிழ்ச்சி)

பக்கத்து மா நில கேரள பாடகியாயிருந்தாலும் நல்ல குரலினிமையினால் பாடல் வசீகரிக்கிறது. இசையமைப்பாளரும் கேரளத்தவர்தான்

மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் இரண்டு விதங்களில் அழ்காக இசையும் பாடலும் அமைந்துள்ளது. இரண்டையும் அடுத்தடுத்து கேட்டு இன்புறுங்கள்.
படம்: பருவ காலம்  (1974)
இயக்கம்: ஜோஸ் ஃபெர்னாண்டோ
நடிப்பு: கமல், பிரமிளா
இசை: தேவராஜன்
பாடியவர்: மாதுரி

http://www.divshare.com/download/13423607-101

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

பாடும் பறவை ஆயிரம் நடுவே...

நானும் ஒரு பறவை...

பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம்...

தந்தேன் எனதுறவை...

எங்கோ இருக்கும் மனிதர் யாரும்...

இங்கே வரவேண்டும்...

இனி எல்லா நலமும்...

எல்லா வளமும் எவரும் பெறவேண்டும்...

எவரும் பெறவேண்டும்...

ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து...

சிந்தும் புன்னகையோ...

அலை மோதும் அருவி என்னைப் போலே

இளமைக் கன்னிகையோ...

அன்னை மடியில் பிள்ளை இருந்தால்...

அன்பு பெருகாதோ...

கொடி ஆசைக் கொண்டால் தழுவும் பூவின் உள்ளம் உருகாதோ..

உள்ளம் உருகாதோ..

ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் இளமை ராகம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

பருவ காலம்...

யாரது...மன்மதன்...ஏனிது....மந்திரம்...

மற்றுமொரு நல்ல பாடல் இது

திரைப் படம்:  மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
இயக்கம்: S ஜகதீசன்
நடிப்பு: சரத்பாபு, ரஜினி ஷர்மா
இசை: M S விஸ்வனாதன்
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: SPB, வாணி ஜெயராம

Listen Music - Play Audio -

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

பிந்திப் பிறந்தது... சந்தித்தறிந்தது...

அந்திக்கு வந்தது... முந்திக் கொடுத்தது....

பிந்திப் பிறந்தது... சந்தித்தறிந்தது...

அந்திக்கு வந்தது... முந்திக் கொடுத்தது....

மீனென கண்களை கொடுத்தது...

மின்னலை போல் ஒன்று பிடித்தது...

ஏனென கேட்கவும் மறந்தது...

காரணம் ஆனந்தம் தெரிந்தது...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது...

என்னை கவர்ந்தது... இன்பத்தை தந்தது...

இரவினில் அதிசயம் நிகழ்ந்தது...

கனவினில் உறவுடன் கலந்தது...

உலகினை ஒரு கணம் மறந்தது...

ஒளிமயமானது தெரிந்தது...

அர்த்த ராத்திரியில் சரசமோ...

ஆசை கொள்வதென்ன விரசமோ...

அன்பு மன்னவனின் உருவமோ..

அழகு தேவதையின் பருவமோ...

யாரது...

மன்மதன்...

ஏனிது....

மந்திரம்...

ரவி வர்மன் எழுதாத கலையோ...ரதி தேவி வடிவான சிலையோ...

மிக இனிமையான பாடல். என்னவொரு காதல் கவிதை!!!

திரைப் படம்: வசந்தி (1988)
இயக்கம்: சித்ராலயா கோபு,
நடிப்பு: மாதுரி, மோகன்
இசை: சந்திரபோஸ்
தயாரிப்பு: AVM
பாடியவர்: K J Y, சித்ரா

 http://www.divshare.com/download/13423027-12e

ல ல ல ல ல ல ல ல....

ரவி வர்மன் எழுதாத கலையோ...

ஹா ஹா ஹா

ரதி தேவி வடிவான சிலையோ...

ஹா ஹா ஹா

கவி ராஜன் எழுதாத கவியோ....

கரை போட்டு நடக்காத நதியோ...

ஓ ஓ ஓ ஓ...

ம்ம்ம்ம்ம்ம்ம்......

ரவி வர்மன் எழுதாத கலையோ...

ஹா ஹா ஹா

ரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...

விழியோரச் சிறுப் பார்வை போதும்...

நான் விளையாடும் மைதானம் ஆகும்...

இதழோரச் சிரிப்பொன்று போதும்...

நான் இளைப்பாரும் மலர் பந்தல் ஆகும்...

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே...

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே...

ஹ ஹ ஹ ஹ

ரவி வர்மன் எழுதாத கலையோ...

ஹா ஹா ஹா

ரதி தேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ ...

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...

பூமாலையே உன்னை மணப்பேன்...

புது சேலை கசங்காமல் அணைப்பேன்....

மகராணி போல் உன்னை மதிப்பேன்...

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்...

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்...

அது போதுமே ஜீவன் அமைதிக் கொள்ளும்...

ரவி வர்மன் எழுதாத கலையோ...

ஹா ஹா ஹா

ரதி தேவி வடிவான சிலையோ...

ஹா ஹா ஹா

கவி ராஜன் எழுதாத கவியோ....

கரை போட்டு நடக்காத நதியோ...

ஓ ஓ ஓ ஓ...

ம்ம்ம்ம்ம்ம்ம்......

ரவி வர்மன் எழுதாத கலையோ...

ஹா ஹா ஹா

ரதி தேவி வடிவான சிலையோ..

Hello Mr Jamindaar how do you do..ok teacher ok how do you do..

அப்போதே ஒரு டீச்சர் காதல்வசப்பட்டிருக்கிறார், இனிமையான இளமையான பாடல்

திரைப் படம்: Hello Mr Jamindaar (1965)
இயக்கம்: K J மகாதேவன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி

http://www.divshare.com/download/13421177-0b7

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

ஒன்று நெஞ்சில் இருக்கும்.. இதழ் சொல்லத் துடிக்கும்.. அதை சொல்லவும் மொழி இல்லயே...

தினம் இரவிலெல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லயே...

இன்னும் பால் மனம் மாறா பிள்ளைப் போலே...

தினம் பறந்து திரிகிறோம் கிள்ளைப் போலே...

நாம் அறுபது வயதை கடந்தாலும் இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ...

இது இன்ப கதையா...

அது சொல்லக் கூடுமா...

இல்லை அன்பு பாடமா...

இது பள்ளிக் கூடமா...

ம் ம் ம் ம்

ஹஹ ஹ ஹ ஹ ஹ

Hello Mr Jamindaar how do you do..

ok teacher ok how do you do..

இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் நாம் இருவரும் இருந்தால் சுகம் அல்லவா..

இந்த உலகத்தில் யாரும் இல்லையென்றால் நம் உறவின் பெருமை யார் அறிவார்...

இது இன்ப கதையா...

அது சொல்லக் கூடுமா...

இல்லை அன்பு பாடமா...

இது பள்ளிக் கூடமா...

ம் ம் ம் ம்

ஹஹ ஹ ஹ ஹ ஹ

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் புது மணப்பெண் வந்த நேரம்

இன்றைக்கும் காலத்தால் அழியாத பாடலாய் ஒலிக்கிறது
திரைப் படம்: எங்க பாப்பா (1966)
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு:ரவிச்சந்திரன், பாரதி
இசை: M S விஸ்வநாதன்
பாடியவர்கள்: TMS, Pசுசீலா

 http://www.divshare.com/download/13420655-d73

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

புது மணப்பெண் வந்த நேரம் பொன்னான நேரம்

ஓ ஓ ஓ ஓ ஓ

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

மங்கள சங்கிலி ஓசையிட

மஞ்சள் திருமுகம் ஆசையிட

மங்கள சங்கிலி ஓசையிட

மஞ்சள் திருமுகம் ஆசையிட

வளை பொங்கிடும் கரங்களும் தாளமிட

வந்தேன் உன்னிடம் ஆணையிட

காதலில் ஆடவன் அடிமையன்றோ

காதலி சொல்வது வேதமன்றோ

காதலில் ஆடவன் அடிமையன்றோ

காதலி சொல்வது வேதமன்றோ

ஆயிரம் காலத்து கதையன்றோ

அதை நான் எவ்விதம் மாற்றுவதோ

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

வள்ளுவன் கூறிய தமிழ் போலே

பிள்ளையின் குரல் இங்கு வரவேண்டும் - அது

துள்ளி வரும் ஆனந்தம் பெற வேண்டும்

தூயவன் வேலவன் தர வேண்டும்

மாளிகை முழுவதும் விளக்கேற்றி

மாவிலைத் தோரணம் மலர் தூவி

மகனே நீ வாழ்கவென்று

உறவாடும் நாள் வருக

புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்

புதன், 1 டிசம்பர், 2010

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை

மறைந்த திரு சந்தரபோஸ் வழங்கிய பல பாடல்களில் ஒரு சிறந்த பாடல் இது

திரைப் படம்: ராஜாத்தி ரோஜா கிளி (1985)
இயக்கம்: S தேவராஜன்
நடிப்பு: ராஜேஷ், நளினி, சுலோசனா
இசை: சந்தரபோஸ்
குரல்கள்: K J Y, S ஜானகி

http://asoktamil.opendrive.com/files/Nl8zNzYxNjQ0Ml9XbWhqYV83NmI5/odaiyinna%20nalloda%20olinjirukka.mp3

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா...
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே வாச மல்லி வச்சி விடவா...
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா...
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா...

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந

கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது...
கன்னி மனசையும் காதல் வயசையும் சேத்து வச்சி யாரு தைச்சது...
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது..
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும் நீதானே சேத்து வச்சது..
தன ந தானே தன ந
தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந

ஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் கொழுந்தனுக்கு சாந்து பொட்டு வைக்க வேனும் தன ந தானே தன ந
தன ந தானே தன ந