பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 டிசம்பர், 2010

இசைக்கவோ நம் கல்யாண ராகம்...

கங்கை அமரன் இசையில் கண்மூடி மௌனமாய் ரசிக்க வைக்கும் பாடல். விஜயன்தான் கொஞ்சம் படுத்துகிறார். மற்றபடி அருமை. சுகமான குரல்கள்.


படம்:  மலர்களே மலருங்கள் (1980)
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இயக்கம்: பேபி
பாடல் எழுதியவர்: M G வல்லபன் என்று நினைக்கிறேன்
நடிப்பு: விஜயன், ராதிகா





http://www.divshare.com/download/13588776-9ed








இசைக்கவோ நம் கல்யாண ராகம்...

கண்மூடி மௌனமாய் நாண மேனியில்

கோலம் போடும் போது...இசைக்கவோ...



ராசலீலை வாசல் திறப்பாய் பூஜை நேரத்தில்..

ராகதாள மேடை அழைப்பாய் பாதி ஜாமத்தில்...



வீதிவலம் போகும் நாளிலே

தேவன் தோளிலே மலர்வேனே...

நாதஸ்வரம் பாட சூழ்ந்து

நலம் காண வாழ்த்தவே தருவேனே...



சிரிப்பில் புது ராகமாளிகை...நீ....



ரசிக்கவோ நம் கல்யாண ராகம்...

கண்மூடி மௌனமாய் நாண மேனியில்

கோலம் போடும் போது...ரசிக்கவோ...



நிசநிசக பகபகரிச நிசநிசக

கமகமதமரி ரிககமரிநி

ரிரிநி ரிகரி கமக மதம மதநிரிச



பாதிமூடி ஜாதி மலர்போல் பார்வை ஏங்குதே....

ராஜவீதி மார்பில் மலர்வேன் பாரிஜாதமாய்...



போதும் இது காதல் போதையே

காணும் பூவையே போராடு....

மீதி வரும் நாளில் நாமும்

திருநாளைக் காணவே நீ ஆடு....



ரசிப்பில் ஒரு ராஜபல்லவன்...நீ....



இசைக்கவோ நம் கல்யாண ராகம்....



கண்மூடி மௌனமாய் நாண மேனியில்

கோலம் போடும் போது...ரசிக்கவோ...

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு பிடித்த பாடல்.

கருத்துரையிடுக