பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(சோகம்)

பருவ காலம் (சோகம்)





http://www.divshare.com/download/13423711-a42









வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் துயர கீதம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...



பாடும் பறவை ஆயிரம் நடுவே...

நானோ பாடவில்லை...

இங்கு பாசம் பொழியும் உயிர்களுக்கென்னை...

ஏனோ தெரியவில்லை...

இங்கே தவிக்கும் என்னைத் தேற்ற

எவரும் வரவில்லை

நான் என்னை இழந்தும்...

உன்னை அடைந்தேன்...

இருந்தும் பயனில்லை...

இருந்தும் பயனில்லை...



வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் துயர கீதம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...



முல்லைக் கொடியும் என்னைப் பார்த்தால்...

நெஞ்சம் துடிக்காதோ...

அலை மோதும் அருவி என்னைக் கண்டால்...

கண்ணீர் வடிக்காதோ...

அன்னை மடியில் பிள்ளை இருந்தும்...

துயரம் தீரவில்லை...

நான் ஆசைக் கொண்டு தழுவும் கையை உலகம் ஏற்கவில்லை...

உலகம் ஏற்கவில்லை...



வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...

செல்லும் வீதி சிவந்த வானம் ...

பாவை நெஞ்சில் துயர கீதம்...

பாட வந்தது பருவ காலம்...

பருவ காலம்...பருவ காலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக