பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010

கனவில் நின்ற திரு முகம்...கன்னி இவள் புது முகம்

இந்தக் கிணற்றுத் தவளை கொஞ்ச நாள் கடல் கடக்கவிருப்பதால் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் ஆகஸ்ட் மாதம் சந்திப்போம்.

இனிமை இசையும் பாடலும்

திரைப் படம்:  டீச்சரம்மா  (1968)

இசை: T R பாப்பா

நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ, முத்துராமன்

பாடியவர்: TMS

http://www.divshare.com/download/11905276-f97

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்

அழகுக்கு ஒருத்தி என்றால் அவள் இவள்தானோ

ஆசையின் ஊற்று என்றால் அவள் இவள்தானோ

எனக்கென தோன்றி வந்த இவள் அவள்தானோ

இரு பொருள் தாங்கி வந்த தமிழ் மலர் தேனோ

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்

கடிதங்களில் இவள் கை வண்ணம் கண்டேன்

கரு விழியில் எடுத்த மை வண்ணம் கண்டேன்

எழுத்துக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை

என்னதான் நாணமிது செய்கின்ற தொல்லை

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்

திங்கள், 5 ஜூலை, 2010

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

மற்றுமொரு சமீபத்திய அழகான பாடல்.

திரைப் படம்:   காஷ்மீர் காதலி (1983)

இசை: G K வெங்கடேஷ்

நடிப்பு: சிவாஜி கணேசன், அனிதா

பாடியவர்கள்: SPB, S ஜானகி

http://www.divshare.com/download/11895230-697

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...

கண் கொண்ட நீல வண்ணம்...வான் தந்த சீதனம்..

கண் கொண்ட நீல வண்ணம்...வான் தந்த சீதனம்..

காணாமல் காண்பதெல்லாம் பெண் மானின் சாகசம்...

காணாமல் காண்பதெல்லாம் பெண் மானின் சாகசம்...

என்னென்னதான் நாணமோ பாவமோ...

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து கண்ணோடு நின்ற அழகோ...

ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது..ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது...

ஆணொடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது...

ஆணொடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது...

பந்தாடும் நான் பாடவோ கூடவோ....

அழகிய சென்னிற வானம்... அதிலே உன் முகம் கண்டேன்...

புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து கண்ணோடு நின்ற அழகோ...

ல ல ல ல ல லா லா லலல லலலா

ஞாயிறு, 4 ஜூலை, 2010

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

உன் விரல்கள் என் அழகை மீட்டும்..உன் விழிகள் என் உயிரை வாட்டும்...

உன் குரலும் என் பெயரை கூட்டும்.. அதில் கோடி கோடி இன்பம் காட்டும்...என்ன ஒரு கவிதைமயமான வரிகள்!!!!

திரைப் படம்:  கலைக் கோவில்  (1964)

இசை: M S விஸ்வனாதன்-T K ராமமுர்த்தி

நடிப்பு: முத்துராமன், சந்திரகாந்தா

இயக்கம்: ஸ்ரீதர்

பாடியவர்கள்: P B S, சுசீலா

http://www.divshare.com/download/11890249-7f4

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

நம் காதல் உள்ளம் கலைக் கோவில்...இரு கண்கள் கோவிலுக்கு வாசல்.. நமதாசை கோவில் மணி ஓசை...

அதில் அன்பு வண்ணமலர் பூஜை..

அதில் அன்பு வண்ணமலர் பூஜை..

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை... மலர் கண்ணன் தேடிக்கொண்ட ராதை...

மனம் உருகி சூடிக்கொண்ட கோதை...ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை...

உன் விரல்கள் என் அழகை மீட்டும்..உன் விழிகள் என் உயிரை வாட்டும்...

உன் விரல்கள் என் அழகை மீட்டும்..உன் விழிகள் என் உயிரை வாட்டும்...

உன் குரலும் என் பெயரை கூட்டும்.. அதில் கோடி கோடி இன்பம் காட்டும்...

அதில் கோடி கோடி இன்பம் காட்டும்...

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

உன் அச்சம் நாணம் என்ற நாலும் என் அருகில் வந்தவுடன் அஞ்சும்...

இதழ் பருகும் போது நெஞ்சம் ஆறும்..அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்...

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்...

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்..நீ என்னை ஆளும் தெய்வம்...

இனி என்ன சொல்லவேண்டும்.. நம் இளமை வாழவேண்டும்...

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே...

மற்றுமொரு இனிமை நிறைந்த சமீபத்திய பாடல்

திரைப் படம்: மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
இசை: M S விஸ்வனாதன்

பாடியவர்கள்: SPB, P சுசீலா

பாடல்: கண்ணதாசன்

நடிப்பு:சரத்பாபு

http://www.divshare.com/download/11887301-ebc

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாதது
காதல் பொல்லாதது

இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ

ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை

ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை

இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ

ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாதது
காதல் பொல்லாதது

வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாறம்
ஹ ஹ ஹ ஹ

வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாறம்

இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மணக்கும் நீ காணலாம்

நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக்கோலம்

நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக்கோலம்

அழகில் மலரும் நதியில் விழுந்து நாம் ஆடலாம்

ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாதது
காதல் பொல்லாதது

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்

இரண்டு குயில்களின் இசை விருந்தோ!!!!

திரைப் படம்:   தேன் நிலவு  (1961)

இசை: A M ராஜா

பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா

இயக்கம்: ஸ்ரீதர்

நடிப்பு: ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா

 http://www.divshare.com/download/11887026-7ec

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

அல்லித் தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ...அதில் புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ...

அல்லித் தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ...அதில் புள்ளி மயில் பள்ளிக் கொண்டதோ...

புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை அள்ளிக் கொண்டு போகலாகுமோ.. நீயும் கள்வனாக மாறலாகுமா..

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா...சிறு மின்னலிடை பூவை தாங்குமா...

பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா...சிறு மின்னலிடை பூவை தாங்குமா...

மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்... அதில் அந்தி பகல் பள்ளிக் கொள்ளுவேன்...

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

சின்னச் சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் அங்கும் இங்கும் யார் வரவை தேடுது... துணை இங்கிருக்க யாரை எண்ணிப் பாடுது...

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...

கல கலக்குது காத்து சல சலக்குது பாட்டு... இந்த பாட்டு

திரைப் படம்: வளர் பிறை (1962)

இசை: K V மகாதேவன்

இயக்கம்: D யோகானந்த்

பாடியவர்: TMS,  P சுசீலா

http://www.divshare.com/download/11886638-5d9

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...பல பலக்குது சோலை எல்லாம் பருவ பெண்ணை பார்த்து...

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...பல பலக்குது சோலை எல்லாம் பருவ பெண்ணை பார்த்து...

ஆகா ஆகா ஓகோ ஓகோ ம் ம் ம்...

பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

ஆஆஆஆ ஓஒஓஒஓ ம் ம் ம் ம்

ஓரடியாய் ஈரடியாய் ஒவ்வொன்றும் பொன்னடியாய்...ஓரடியாய் ஈரடியாய் ஒவ்வொன்றும் பொன்னடியாய்...நீ எடுத்த அடிகளெல்லாம் என் நெஞ்சிலே விழுந்ததம்மா...நீ எடுத்த அடிகளெல்லாம் என் நெஞ்சிலே விழுந்ததம்மா...

நெஞ்சிலே அடி விழுந்தால் நினைவில் வலி இருக்கும்...நெஞ்சிலே அடி விழுந்தால் நினைவில் வலி இருக்கும்...பஞ்சு போல் மேணியிலே படர்ந்து விட்டால் தீர்ந்து விடும்....பஞ்சு போல் மேணியிலே படர்ந்து விட்டால் தீர்ந்து விடும்....

பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

ஆகா ஆகா ஓகோ ஓகோ ம் ம் ம்...

தேன் விழுந்த இதழ்களிலே மான் விழுந்த கண்களிலே நான் விழுந்த நாள் முதலா ராப் பகலாய் தூக்கமில்லை....

தூங்காத கண்களையும் தூங்க வைக்கும் உறவு வரும்...

தூங்காத கண்களையும் தூங்க வைக்கும் உறவு வரும்...

சொல்லாத கதைகள் எல்லாம் சொல்ல வைக்கும் இரவு வரும்...

சொல்லாத கதைகள் எல்லாம் சொல்ல வைக்கும் இரவு வரும்...

கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து...பல பலக்குது சோலை எல்லாம் பருவ பெண்ணை பார்த்து...

பருவப் பெண்ணை பார்த்து பாய் விரிக்குது நாத்து கரு கருத்த கண்ணிரெண்டும் காத்திருக்குது பூத்து...

ஆகா ஆகா

ஓகோ ஓகோ

ம் ம் ம்...

சனி, 3 ஜூலை, 2010

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...தொட்டதும் மெல்லிடை துள்ளுது...

இசையும் கவிதையும் குரல்களும்....

திரைப் படம்: யாரும் தங்கலாம் அல்லது ஞாயிறும் திங்களும் (1965)

இசை: M S விஸ்வனாதன்.

இயக்கம்: சித்ராலயாவின் ஸ்ரீதர்

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்கள்: TMS,  சுசீலா

Embed Music - Listen Audio Files -

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...
தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...
தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

வெண்ணிலாவின் சாறு கொண்டு...
வெள்ளிக்கிண்ணம் நூறுகொண்டு...

வெண்ணிலாவின் சாறு கொண்டு...
வெள்ளிக்கிண்ணம் நூறுகொண்டு...

பெண்ணுலாவ வந்ததென்று
பேச வந்த வார்த்தை என்ன...

ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம் போகும் ஆறு கண்டு...

ஒன்று கேட்டு ஒன்று தந்து
ஓடம் போகும் ஆறு கண்டு...

தென்றல் போகும் பாதை எங்கும்
சேர்ந்து போக ஆசை உண்டு...

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...
தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

பூ மலர்ந்த காலம் தொட்டு...
பொங்கி வந்த தேனை அள்ளி..

பூ மலர்ந்த காலம் தொட்டு...
பொங்கி வந்த தேனை அள்ளி..

நீ அருந்த வேண்டும் என்று..
நெஞ்சம் கொண்டு வந்ததின்று...

இன்று போக நாளை உண்டு...
என்றும் இந்த காதல் உண்டு...

இன்று போக நாளை உண்டு...
என்றும் இந்த காதல் உண்டு...

நின்று போகும் வெள்ளம் அல்ல
நினைவு மாறும் உள்ளம் அல்ல...

பட்டிலும் மெல்லிய பெண்ணிது...
தொட்டதும் மெல்லிடை துள்ளுது...

தட்டிய தங்கத்தில் செய்தது..
தாமரை பூவினில் நெய்தது...

அ ஆகா ஆ ஆ ஆ லல் லலா லாலா

தங்க நிறம் இதழ் செம்பவளம்

   இனிமையான அபூர்வ பாடல் ஒன்று

திரைப் படம்:   அருமை மகள் அபிராமி  (1959)

படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

நடிப்பு: பிரேம் நஸிர், ராஜ சுலோசனா

பாடலாசிரியர்: மருத காசி

இசை:V தக்ஷிணாமுர்த்தி

இயக்கம்: V கிருஷ்ணன்
 
http://www.divshare.com/download/11879149-609

தங்க நிறம் செம்பவளம்

தங்க நிறம் இதழ் செம்பவளம்

உடல் தவழும் பூங்கொடியே

எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்

எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்

என்னை ஏங்கிட செய்கிறதே

என்னை ஏங்கிட செய்கிறதே

பொங்கி வரும் நிலவேன்ற முகம்

பொங்கி வரும் நிலவேன்ற முகம்

என் புண்ணிய ஆணழகே

உந்தனிடம் மனம் ஒன்றியதும்

உந்தனிடம் மனம் ஒன்றியதும்

கண் உறங்கிட காணேனே

கண் உறங்கிட காணேனே

காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்

காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்

கண்டாலே ஏனோ வெட்கம்

எனை வந்து கூடும்

கண்டாலே ஏனோ வெட்கம்

எனை வந்து கூடும்

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

கண்மணியே என் விண்ணமுதே

கண்மணியே என் விண்ணமுதே

இது பெண்மையின் தன்மையன்றோ

இது பெண்மையின் தன்மையன்றோ

வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

மாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்

மாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

மன்னவே என் தென்னரசே

மன்னவே என் தென்னரசே

நான் மாதவம் செய்தேனே

நான் மாதவம் செய்தேனே

தங்க நிறம் இதழ் செம்பவளம்

உடல் தவழும் பூங்கொடியே

எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்

என்னை ஏங்கிட செய்கிறதே

என்னை ஏங்கிட செய்கிறதே

வெள்ளி, 2 ஜூலை, 2010

சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்

இனிமையான இசையமைப்பில் அருமையான கவிதையுடன் பாடல்

திரைப் படம்;    அதே கண்கள்   (1967)

இசை: வேதா

பாடியவர்கள்: TMS , சுசீலா

நடிப்பு: ரவிச்சந்திரன், காஞ்சனா

http://www.divshare.com/download/11854275-56d

சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்.. வண்ணக்கொடி இடை மெல்ல ஒடித்தவள் என்னன்னவோ சொல்லத் துடிக்கிறாள்..சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்,,,,,

சின்னக் கண்ணன் என்ன நினைக்கிறான் கன்னம் குழியவே சிரிக்கிறான் சித்திர மேனியை தொட்டு தடவிட ஏனோ இப்படி துடிக்கிறான்...சின்னக் கண்ணன் என்ன நினைக்கிறான் ....

கைவளையளுக்கெல்லாம் நான் முத்தம் தரவேண்டும்....குழல் மலர்களுகெல்லாம் தேன் முத்தம் தரவேண்டும்... உடல் அணைக்கும் உடைகளுக்கும் முத்தம் தரவேண்டும்.... உடல் அணைக்கும் உடைகளுக்கும் முத்தம் தரவேண்டும்.... உனை படைத்த இறைவனுக்கும் முத்தம் தரவேண்டும்...உனை படைத்த இறைவனுக்கும் முத்தம் தரவேண்டும்...சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்.. வண்ணக்கொடி இடை மெல்ல ஒடித்தவள் என்னன்னவோ சொல்லத் துடிக்கிறாள்..சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்,,,,,

அந்த முத்தங்களுக்கெல்லாம் என்ன விலை தரவேண்டும்...இதழ் சுவைகளையெல்லாம் இந்த சிலை பெறவேண்டும்...பனி மலர் போலே குளிர்ந்திட வேண்டும்.....பனி மலர் போலே குளிர்ந்திட வேண்டும்.....கை விரல் தொட்டு காதல் மொட்டு மலர்ந்திட வேண்டும்..கை விரல் தொட்டு காதல் மொட்டு மலர்ந்திட வேண்டும்.....சின்னக் கண்ணன் என்ன நினைக்கிறான் கன்னம் குழியவே சிரிக்கிறான் சித்திர மேனியை தொட்டு தடவிட ஏனோ இப்படி துடிக்கிறான்...

சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள் கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்.. வண்ணக்கொடி இடை மெல்ல ஒடித்தவள் என்னன்னவோ சொல்லத் துடிக்கிறாள்..

வியாழன், 1 ஜூலை, 2010

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

SPBயின் ஆரம்ப கால இனிமையான பாடல்களில் ஒன்று.

திரைப் படம்:  குழந்தை உள்ளம்  (1969)

நடிப்பு; ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ

இசை: S P கோதண்டபாணி

இயக்கம்: சாவித்திரி

பாடியவர்கள்: SPB ,P சுசீலா

http://www.divshare.com/download/11862152-869

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

முதல் நாள் மயக்கம் வரக்கண்டு... மோனத்தில் ஆழ்ந்ததே சுவைக் கொண்டு....

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தலை மகன் செய்தது சோதனையோ... தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ...

கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ... கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ....

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

லா லா லா லா லா லா லா லா ல ல ல ல

முத்தமிட்ட இதழே பாலாக... முன்னிடை இளைந்து நூலாக...

கட்டி வைத்த கூந்தல் அலையாக..கட்டி வைத்த கூந்தல் அலையாக....கன்னங்கள் இரண்டும் விலையாக...

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

தேன் தரும் நிலவே நீ சாட்சி...தென்றல் காற்றே நீ சாட்சி....வானும் நிலவும்
உள்ளவரை வளரட்டும் காதல் அரசாட்சி...
வளரட்டும் காதல் அரசாட்சி...

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

சமீபத்திய பாடல்களில் ஒரு நல்ல பாடல்

திரைப் படம்:  ஒரு குடும்பத்தின் கதை   (1975)

நடிப்பு; முத்துராமன், சுமித்ரா

இசை: சங்கர்-கணேஷ்
இயக்கம்: துரை

பாடியவர்கள்: K J யேசுதாஸ், B S சசிரேகா

http://www.divshare.com/download/11862087-672

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ

ஈரேழு ஜன்மத்தின் பந்தம் இது - ஒரு

இழை கூட பிரியாத சொந்தம் இது

தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது -எந்தன்

திருவீதி வழி தேடி தேர் வந்தது

தொடும் உறவானது தொடர் கதையானது

இந்த நாதம் கலையாத இசையானது

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ ஹோ

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு

கனி தூங்கும் தேன் திராச்சை கொடி என்பது

நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்

நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது

விழி சிரிக்கின்றது.. கவி படிக்கின்றது

திருமேனி தாளாமல் நடிக்கின்றது

மலைச் சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்

அது நானல்லவா.. துணை நீயல்லவா

அன்பு கீதம் நாம் பாடும் நாளல்லவா

ல ல ல ல ல ல ல ல