இனிமையான அபூர்வ பாடல் ஒன்று
திரைப் படம்: அருமை மகள் அபிராமி (1959)
படத் தயாரிப்பாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நடிப்பு: பிரேம் நஸிர், ராஜ சுலோசனா
பாடலாசிரியர்: மருத காசி
இசை:V தக்ஷிணாமுர்த்தி
இயக்கம்: V கிருஷ்ணன்
http://www.divshare.com/download/11879149-609
தங்க நிறம் செம்பவளம்
தங்க நிறம் இதழ் செம்பவளம்
உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
என்னை ஏங்கிட செய்கிறதே
என்னை ஏங்கிட செய்கிறதே
பொங்கி வரும் நிலவேன்ற முகம்
பொங்கி வரும் நிலவேன்ற முகம்
என் புண்ணிய ஆணழகே
உந்தனிடம் மனம் ஒன்றியதும்
உந்தனிடம் மனம் ஒன்றியதும்
கண் உறங்கிட காணேனே
கண் உறங்கிட காணேனே
காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்
காணாத போது நெஞ்சம் கனா கண்டு வாடும்
கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்
கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
கண்மணியே என் விண்ணமுதே
கண்மணியே என் விண்ணமுதே
இது பெண்மையின் தன்மையன்றோ
இது பெண்மையின் தன்மையன்றோ
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
மாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்
மாறாது தேனை உண்டு மகிழ்வோடு ஆடும்
ஆ.....ஆ.....ஆ.....ஆ...
மன்னவே என் தென்னரசே
மன்னவே என் தென்னரசே
நான் மாதவம் செய்தேனே
நான் மாதவம் செய்தேனே
தங்க நிறம் இதழ் செம்பவளம்
உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
என்னை ஏங்கிட செய்கிறதே
என்னை ஏங்கிட செய்கிறதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக