பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010

கனவில் நின்ற திரு முகம்...கன்னி இவள் புது முகம்

இந்தக் கிணற்றுத் தவளை கொஞ்ச நாள் கடல் கடக்கவிருப்பதால் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் ஆகஸ்ட் மாதம் சந்திப்போம்.


இனிமை இசையும் பாடலும்

திரைப் படம்:  டீச்சரம்மா  (1968)

இசை: T R பாப்பா

நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ, முத்துராமன்

பாடியவர்: TMS



http://www.divshare.com/download/11905276-f97




கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்

அழகுக்கு ஒருத்தி என்றால் அவள் இவள்தானோ

ஆசையின் ஊற்று என்றால் அவள் இவள்தானோ

எனக்கென தோன்றி வந்த இவள் அவள்தானோ

இரு பொருள் தாங்கி வந்த தமிழ் மலர் தேனோ

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்

கடிதங்களில் இவள் கை வண்ணம் கண்டேன்

கரு விழியில் எடுத்த மை வண்ணம் கண்டேன்

எழுத்துக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை

என்னதான் நாணமிது செய்கின்ற தொல்லை

கனவில் நின்ற திரு முகம்

கன்னி இவள் புது முகம்

கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்

1 கருத்து:

nadesmani சொன்னது…

இது என்ன? நல்ல தரமான அற்புதமான பாடல்களை இங்கு அழகாக அடுக்கி வைத்து, எங்களை எடுத்து சுவைக்க சொல்லாமல் சொல்லி அனைவரையும் அசத்தி வைத்திருக்கிறீர்கள்.

நேரம் இருக்கும்போது இறக்குமதி செய்துக் கொள்ளுகிறேன்.

அதற்கு முன் எனது நன்றி கணைகள் உங்களுக்கு சமர்ப்பணம்.

நன்றி.

கருத்துரையிடுக