பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...


வாணி ஜெயராமின் கணீர் குரலும் ஸ்ரீகாந்தின் மேன்மை குரலும் அவரது அழகான இசையமைப்பில் நல்ல தமிழிலில் அருமையாக அமைந்துள்ளது இந்த பாடல்.   


படம்: நினைப்பது நிறைவேறும்

குரல்கள்: M.L ஸ்ரீகாந்த்,   வாணி  ஜெயராம்

இசை: M.L.ஸ்ரீகாந்த்

பாடல்: மணி  



http://www.divshare.com/download/14177033-8cb
நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...


நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு...

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு...

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..

ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

தனிமை உனக்கேது...தாங்கும் இதயம் எனக்கேது..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..

உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..



நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..



தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..

இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..

காதல் கவிபாடு...காலமெல்லாம் உறவாடு..

மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..

மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..



நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..

இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..

நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

நான் வரைந்த ஓவியமே..நல்ல தமிழ் காவியமே

திரு.தமிழன்பனின் விருப்பப் பாடல். தாய்க்கு பின் தாரம் என்பதை உணர்ச்சிபூர்வமாக எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார்கள். நல்லதொரு பாடல்.


திரைப் படம்: எல்லாம் அவளே (1977)
குரல்: ஜெயசந்திரன்
இசை: விஸ்வனாதன்
பாடல் வரிகள்: வாலி
இயக்கம்: அமிர்தம்
நடிப்பு: மு க முத்து, சந்திரகலா



http://www.divshare.com/download/14183366-c07

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..
நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

உன்னைப்போல ஒரு மனைவி..
உலகத்திலே பார்த்ததில்லை..
என்னைப்போல ஒருவன் அல்லால்..
எவருக்குமே வாய்த்ததில்லை..
என்னைப்போல ஒருவன் அல்லால்..
எவருக்குமே வாய்த்ததில்லை..

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

வாசம் தந்திட என்று..
தினம் தேயும் சந்தனம் கண்டு..
வாசம் தந்திட என்று..
தினம் தேயும் சந்தனம் கண்டு..
உள்ளம் உருகும் பனிப்போலே..
விழி வெள்ளம் பெருகும் நதிபோலே..
உள்ளம் உருகும் பனிப்போலே..
விழி வெள்ளம் பெருகும் நதிபோலே..
எல்லாம் அவளே..
என் மேனியின் நிழலே..

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

பூவை பூங்குழல் நீவி..
நான் சேவை புரிவேன் தேவி..
பூவை பூங்குழல் நீவி..
நான் சேவை புரிவேன் தேவி..
தலைவன் கையால் மலர் சூடி..
தெய்வ சிலை போல் வாழ்க மகராணி..
தலைவன் கையால் மலர் சூடி..
தெய்வ சிலை போல் வாழ்க மகராணி..
எல்லாம் அவளே..
என் மேனியின் நிழலே..

நான் வரைந்த ஓவியமே..
நல்ல தமிழ் காவியமே..
நான் சிரிக்க நீ அழுதாய்..
நீ சிரிக்க நான் அழுவேன்..

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

வழக்கம் போல MSV மற்றும் SPB இணைந்து கலக்கிய  இன்னொரு இளமையான பாடல். மிக நாசுக்காக பெண்ணை அழகாக வர்ணித்திருக்கிறார் கவிஞர்


படம்: பயணம் (1976)
நடிப்பு: விஜயகுமார், சுஜாதா, ஜெயசித்திரா
இயக்கம்: வியட்னாம் வீடு சுந்தரம்
















தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என் நாள் திரு நாளோ
மின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாலோ
வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என் நாள் திரு நாளோ
மின்னல் மேனி மேகக் குழலால் தன்னை அறிவாலோ
பால்வண்ணப் பூமுல்லை பார்த்தால் போதாதோ
பாலைவனத்தில் காவிரியாறு பைரவி பாடாதோ

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

கம்பன் வந்தால் காவியம் பாடக் கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தித் தாவும் சித்திர முத்து சிப்பியில் விளையாடி
தழுவப் போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ

பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது
பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று வாவென்றது
எத்தனை சொல்லி இத்தனை அழகை நான் பாடுவேன்
இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித் தருகின்றேன்

தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள் தானன்றோ

சனி, 26 பிப்ரவரி, 2011

அதிகாலை நேரமே புதிதான ராகமே


மென்மையான பின்னணி இசையுடன் அழகான ஒரு பாடல்

திரைப் படம்: மீண்டும்  ஒரு  காதல்  கதை

குரல்கள்: SPB, S.ஜானகி

இசை: இளையராஜா

நடிப்பு:  பிரதாப் போததன், ராதிகா

இயக்கம்: பிரதாப் போததன்



http://www.divshare.com/download/14169296-585



அதிகாலை நேரமே..புதிதான ராகமே..


எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..



அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..



காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..

காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..

காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..

புது சங்கமம்...சுகம் எங்கிலும்..

என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..



அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..



உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்..

நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..

நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..

தோளோடு தான்...தோள் சேரவே..

தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..



அதிகாலை நேரமே..புதிதான ராகமே..

எங்கெங்கிலும்...ஆலாபனை..

கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..அடி மானே இதழ் இதோ

நண்பர்கள் பலர் தெரிந்துக் கொள்ள விரும்புவது இந்த பாடல்களை நான் எங்கிருந்து தரம் இறக்குகிறேன் என்பது. பெரும்பாலான பாடல்களை நான் எனது சிறு வயதிலிருந்து பாதுகாத்து வருகிறேன். அதிலும் பல பாடல்களை இழந்துவிட்டேன் (அப்போது அதன் அருமை தெரியவில்லை) தற்போது சுக்ரவதனீ என்னும் இழையின் நண்பர்கள், கூல் டொட் எனும் இழைகளின் உதவியுடனும் உலகின் பல பகுதிகளில் இருக்கும் எனது நண்பர்கள் மூலமும் பாடல்களை கேட்டு பெறுகிறேன். என்னிடம் இருக்கும் அத்தனை பாடல்களையும் இவ்வாறு இறக்கி முடிக்க பல காலம் ஆகலாம். ஆகையால், இனிமையான, மனதிற்க்கு சுகமெனத் தோன்றும் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறேன். நண்பர்களுக்கு ஏதும் மாற்றம் தேவை என்றால் தெரிவிக்கலாம். ஆரம்பத்தில் நான் பாடலை கேட்கும் படி மட்டும் தான் பதிவினை ஆரம்பித்தேன். ஆனால் பல நண்பர்கள் பாடலை தரம் இறக்கும் வசதியுடன் கேட்டதால். அந்த வசதியையும் அளித்தேன். என்னை பொறுத்தவரை இந்த இனிமையான பாடல்கள் எங்காவது ஓரிடத்தில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. அபூர்வமான பாடல்களை தேடி பிடிக்கும் போதுதான் அதன் கஷ்டம் தெரிய வருகிறது.

தொடர்ந்து உயர்வான கருத்துக்களைவழங்கி வரும் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இனி ஒரு பாடல்...

மறைந்த திரு மலேஷியா வாசுதேவன் நினைவாக அவர் இயக்கி இசையமைத்த படத்திலிருந்து இனிமையான பாடல் ஒன்று இதோ. இது நடிகை ஷோபாவின் கடைசி படமும் கூட.

படம்: சாமந்தி பூ (1980)
பாடிய குரல்கள்: SPB, S P சைலஜா,
நடிப்பு: சிவகுமார், ஷோபா



http://www.divshare.com/download/14167916-87f



மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..
மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..
மாலை வேளை ரதி மாறன் பூஜை..
மணியோசை இதழ் தரும் நாதம்தானா..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..
ல ல லல லால லா
ல ல லல லால லா
ரா ரா ரா ரா

தேனோடை.. இதில் ஏன் ஆடை.. வெறும் நூலாடை..இனி நான் ஆடை..
நூலாடை.. இது மேலாடை.. வரும் பூமேடை அதில் நீ ஆடை..
தேனோடை.. இதில் ஏன் ஆடை.. வெறும் நூலாடை..இனி நான் ஆடை..
நூலாடை.. இது மேலாடை.. வரும் பூமேடை அதில் நீ ஆடை..
தழுவிட வரவோ..

ல ல ல ல ல

தளிரதில் விடுமோ..
இருவர் இன்று ஒருவர் நாமென்று ஆவோமே..

மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..

தாங்காது..என நான் தள்ள..எனை நீ அள்ள..சுகம் தானென்ன..

போதாது..என நான் சொல்ல..அடி நீ துள்ள வரும் நாளென்ன..

தாங்காது..என நான் தள்ள..எனை நீ அள்ள..சுகம் தானென்ன..

போதாது..என நான் சொல்ல..அடி நீ துள்ள வரும் நாளென்ன..

விரல்களின் நகங்கள்..ரகசிய இடங்கள்..
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது..
மாலை வேளை ரதி மாறன் பூஜை..
அடி மானே இதழ் இதோ தேவை நானா நானா..

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா


சரியான பின்னணி குரல் தேர்வும், மிகச் சாதாரண பாடல் வரிகளும் அதற்கேற்ற இசையும் கலந்து பாடல் சிறப்பாக உள்ளது



திரைப் படம்: தெய்வப் பிறவி (1960)
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு
இசை: சுதர்சனம்
நடிப்பு: சிவாஜி, பத்மணி




http://www.divshare.com/download/14159557-fc2



தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா...

சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா...

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

சீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா...

சீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா...

தேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா..

தேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா..

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..

பூத்த முல்லை மலர்த்தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா...

பூத்த முல்லை மலர்த்தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா...

வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா...

வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா...

தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..





ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...


இனிமையான அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அருமையான மற்றொரு  பாடல்

திரைப் படம்: நெஞ்சில் ஒரு முள் (1981)
நடிப்பு: பிரதாப் போத்தன்  , பூர்ணிமா ஜெயராம்
இயக்கம்: மதி ஒளி சண்முகம்
இசை : G K வெங்கடேஷ்
குரல்கள்: தீபன் சக்கரவர்த்தி மற்றும்  B S சசிரேகா என்று நினைக்கிறேன்



Embed Music - Download Audio -















ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......ல ல ல ல ல

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

நாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...



ஆ ஆ ஆ ஆ ஆ ......ஆ ஆ ஆ ஆ ...ம் ம் ம் ம் ம் ம் ம்....



காம தேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்...



ஆ ஆ ஆ ஆ ஆ ......



காம தேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்...

ஆ ஆ ஆ ஆ ஆ ......


நாளும் தோகை கண்ணால் இன்ப வானில் ஊர்வலம்...

பூந்தென்றல் வாகனம்...ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

நாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...



மேனி வீணை ஒன்று...அதை மீட்டிப் பார்க்கவோ..

மேனி வீணை ஒன்று...அதை மீட்டிப் பார்க்கவோ..


இன்னும் கொஞ்சம் என்று..உன்னை நானும் கேட்கவோ...

என் தாகம் தீர்க்கவோ...

ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

நாதம்... சுக நாதம்...இதழோரம் கேட்கலாம்....ராகம் ம்ம்ம்ம்ம்...

ராகம்... புது ராகம்... இனி நாளும் பாடலாம்...

வியாழன், 24 பிப்ரவரி, 2011

விழியோ உறங்கவில்லை..ஒரு கனவோ வரவுமில்லை..

மீண்டும் ஒரு இனிமை பாடல் ஜெயசந்திரன், வாணி ஜெயராம் குரல்களில்

மென்மையான குரல்களும் இசையும் மனதை வசப்படுத்தும்.


திரைப் படம்: நீ வாழவேண்டும்
நடிப்பு: முத்துராமன், சுமிதிரா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: பீம் சிங்கு




http://www.divshare.com/download/14147645-652

விழியோ உறங்கவில்லை..


ஒரு கனவோ வரவுமில்லை..

கனவினிலேனும் தலைவனைக்காண..

கண்ணே நீ உறங்கு..

அவன் காட்சியை நீ வழங்கு..

காட்சியை நீ வழங்கு..

ம் ம் ம்..



விழியோ உறங்கவில்லை..

என் மனதில் அமைதியில்லை..

அமைதியை நெஞ்சம் பெறும்வரை..

கொஞ்சம் கண்ணே நீ உறங்கு..

அவள் காட்சியை நீ மறந்து..

காட்சியை நீ மறந்து..

ம் ம் ம்..



தலையினில் சூட மலர்ச்சரம் கேட்டேன்..

முள்முடி சூட்டி வைத்தாய்..

கரங்களில் போட வளைகளை கேட்டேன்..

விலங்கினை பூட்டி வைத்தாய்..

விலங்கினை பூட்டி வைத்தாய் ..



கடலுக்குக்கூட கரை இருக்கும்..

அந்த அலைகளை தடுப்பதற்கு..

மனதுக்கு மட்டும் கரை இல்லையே..

இந்த நினைவினை தடுப்பதற்கு..

நினைவினை தடுப்பதற்கு ..



உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்..

இங்கு பகைவர்கள் யாரும் இல்லை..

ஒளியினை தந்து விழிகளை கேட்பது..

யாருக்கும் நியாயம் இல்லை ..



பூமியை வானம் தொடுவது போல்..

இங்கு பார்வையில் தெரிகிறது..

புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை..

எல்லாம் மயக்கமாய் இருக்கிறது..

மயக்கமாய் இருக்கிறது ..



விழியோ உறங்கவில்லை..

ஒரு கனவோ வரவுமில்லை..

கனவோ வரவுமில்லை..

புதன், 23 பிப்ரவரி, 2011

ஆயிரம் காலத்து உறவு..புது உறவு..என்றும் ஆனந்தமே ஆசை

வித்தியாசமான குரல் தேடுதலில் ஒரு நல்ல பாடல்.


திரைப் படம்: நம்பிக்கை நட்சத்திரம் (1975)
நடிப்பு: மு க முத்து, ஸ்ரீவித்யா, மு க ஸ்டாலின்
இயக்கம்: திருமலை மகாலிங்கம்
இசை: லக்ஷ்மி நாராயணன்
பாடியவர்கள்: மு க முத்து, ஜானகி



http://www.divshare.com/download/14143790-7f3


ஆயிரம் காலத்து உறவு..புது உறவு..
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே

ஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திரு நாள்
இன்பத் தேனூறுதே நாளும் சுவைக் கூடும்
இரு உள்ளங்கள் பண் பாடுதே..

ஆயிரம் காலத்து உறவு....
வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்..
வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்..

ஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளை கூறும்..

இதழோரம்..

கதை பேசும்..
இள நெஞ்சம் உறவாடும்..
ஆயிரம் காலத்து உறவு..

கொடியை முல்லைத் தழுவும்..
மணக் கோலம் உறவில் தொடங்கும்..

உள்ளம் பிரிவதில்லை..
இந்த உணர்வும் அழிவதில்லை..
உள்ளம் பிரிவதில்லை..
இந்த உணர்வும் அழிவதில்லை..

இரவோடு..

உறவாட..

இரவோடு..

உறவாட..
தடையேதும் கிடையாது..

ஆயிரம் காலத்து உறவு..புது உறவு..
என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும்
இனி நாம் காணும் பேரின்பமே
கா ஹா ஹா ஹா ஹாஹாஹா




செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

முத்து நகை பெட்டகமோ முன் கதவு ரத்தினமோ

காதலியை கலாட்டா செய்து பாடும் ஒரு இனிமையான பாடல். வேகமான இசையமைப்பு, TMSஇன் ஜெய்ஷங்கருக்கு இணையான குரல், தற்போது உபயோகத்தில் இல்லாத பல தமிழ் சொற்கள் என் பாடல் கொடிகட்டி பறக்கிறது.


திரைப் படம்: தெய்வீக உறவு (1968)

நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ, தேவிகா

இசை: K V மகாதேவன்

இயக்கம்: சத்யம்



http://www.divshare.com/download/14135076-577



முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ

புன்னகையும் தோரணமோ
போடுவது நாடகமோ
கண்ணிரெண்டும் தேர் வடமோ
காரில் என்ன ஊர்வலமோ
புன்னகையும் தோரணமோ
போடுவது நாடகமோ
கண்ணிரெண்டும் தேர் வடமோ
காரில் என்ன ஊர்வலமோ

செண்டாடும் குழல் வண்டாட வரும் கண்ணாடிச் சிலையோ
அதை கண்டோரின் மனம் ரெண்டாகும் படி துண்டாடும் கலையோ
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ

கோலமயில் நீயிருக்க
கூடி கட்டி தந்திடவா
காலமெல்லாம் உன்னருகில்
காவலுக்கு நின்றிடவா
கோலமயில் நீயிருக்க
கூடி கட்டி தந்திடவா
காலமெல்லாம் உன்னருகில்
காவலுக்கு நின்றிடவா

பூவான முகம் காயாகி அது கனிந்ததெப்படியோ
நின்று போராடும் விழி தானாக நிலம் அளந்ததெப்படியோ
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ
முத்து நகை பெட்டகமோ



திங்கள், 21 பிப்ரவரி, 2011

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..

M S விஸ்வனாதனின் அழகான ஆலாபனையில் SPB தனது வழக்கமான முத்திரை பதித்த பாடல். நான் மிகவும் ரசித்த பாடல் இது.


திரைப் படம்: கூட்டுப் புழுக்கள் (1987)
நடிப்பு: சந்திரசேகர், இளவரசி, சரிதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/14122564-920



நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா..
இளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..
இளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..
எதையோ நினைத்தாய்..சிரித்தாய்..ஓடினாய்..
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..

மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று..
நெஞ்சிலே கூடு கட்டி வாழவந்தாய் இன்று..
மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று..
நெஞ்சிலே கூடு கட்டி வாழவந்தாய் இன்று..
அந்த மலரும் நினைவு தோன்றும்
அதில் உலகம் மறந்து போகும்..
அந்த உறவு தொடர வேண்டும்..
இன்ப கனவு பலிக்க வேண்டும்..
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..

ஆ ஆ ஆ
மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்..
அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்..
ஹா
மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்..
அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்..
இரு பருவம் அளித்த சீரோ உன்னை படைத்த கலைஞன் யாரோ..
அடி இரவில் மலரும் பூவே எந்தன் இளமை பருகும் தேனே..

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா..
இளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..
எதையோ நினைத்தாய்..சிரித்தாய்..ஓடினாய்..

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ

இன்றொரு நல்ல பாடல். நண்பர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும் என் நம்புகிறேன்.


திரைப் படம்: ரத்தப் பாசம் (1980)

நடிப்பு: சிவாஜி, ஸ்ரீபிரியா

இசை: M S விஸ்வனாதன்

பாடல்: கண்ணதாஸன்

இயக்கம்: K விஜயன்




http://www.divshare.com/download/14052864-54e


ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

மஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ

மஞ்சள் வானிலே வந்த பௌர்ணமி
உயர் காமன் மந்திரம் நீ

சங்க தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

சங்க தேரிலே வந்த செந்தமிழ்
தரும் மோக நாடகம் நீ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா
ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா

வண்ண சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ

வண்ண சேலையில் தஞ்சை கோபுரம்
மெல்ல ஆடி அசைகின்றதோ

அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள்
கண்ணில் ஜோதி தருகின்றதோ

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

மங்கை மோகனம் தந்த ஞாபகம்
ஒரு ராகம் பாடுதம்மா
இந்த தாகமும் அந்த பாடலும்
ஒன்று போல தோன்றுதம்மா

பூ மணக்கும் பூங்குழலி
பூஜை தேவதையோ
தேன் மணக்கும் மேனி எல்லாம்
தேவ காவியமோ

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..

TMS எப்போழுதுமே சிவாஜிக்காக அழுத்தம் திருத்தமாக பாடல்களை பாடுவார். இந்த பாடலை கண்னை மூடிக் கொண்டு கேட்டால் சிவாஜி பாடியது போலவே இருக்கும். K பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம் இது மட்டும்தான் என்று நினைக்கிறேன். அது போல K V மகாதேவன் இசையில் K பாலசந்தர் படம் இது மட்டும்தான் என்றும் எனக்கு ஞாபகம். மிக மென்மையான இசையில் அருமையான பாடல்.


திரைப்படம்: எதிரொலி (1970)
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
இசை: K V மகாதேவன்



Play Music - Audio Hosting -






குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..
குங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..

நெய் தடவி நீவிவிட்டு நிழல் போல் குழல் முடித்தாள்..
மையெழுதி திருத்திவிட்டு மலர் போல் விழி மலர்ந்தாள்..
நெய் தடவி நீவிவிட்டு நிழல் போல் குழல் முடித்தாள்..
மையெழுதி திருத்திவிட்டு மலர் போல் விழி மலர்ந்தாள்..
கையசைய காலசைய கொடி போல் நடை பயின்றாள்..
கையசைய காலசைய கொடி போல் நடை பயின்றாள்..
கண்ணிரெண்டில் மேடைக் கட்டி நடம் புரிந்தாள் நகை புரிந்தாள்..

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..
குங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..

பொய்யிடையில் ஆடைக் கட்டி பொன்னழகு மூடி வைத்து..
தையல் வந்து மையலுக்கு தையலிட்டு பார்ப்பதென்ன..
பொய்யிடையில் ஆடைக் கட்டி பொன்னழகு மூடி வைத்து..
தையல் வந்து மையலுக்கு தையலிட்டு பார்ப்பதென்ன..
கையணைக்க மெய்யணைக்க கரும்பாய் சுகம் இனிக்க..
கையணைக்க மெய்யணைக்க கரும்பாய் சுகம் இனிக்க..
கண் மயங்கி பெண் மயங்கி கிடந்ததென்ன நடந்ததென்ன..

குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன..
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன...என்ன..
குங்குமச் சிமிழில் ..ஓ ஓ ஓ..

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம்

மீண்டும் கொஞ்சம் பழைய அமுதான பாடலுக்கு போகலாம். இது தேன் மழைக்காக பல சிறந்த பாடல்களில் ஒன்று. இனிமையான இசையமைப்பு.


திரைப்படம்: தேன் மழை (1966)
இயக்கம்: முக்தா ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி,  K R விஜயா
இசை: T K ராமமூர்த்தி



http://www.divshare.com/download/14025597-349



விழியால் காதல் கடிதம்
ம் ம் வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
ஹோ ஹோ

ம்ம்

சின்ன பூங்குயில் பாடலைக் கேட்க

விழியால் காதல் கடிதம்

வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்ன பூங்குயில் பாடலைக் கேட்க

பனிப் போல் பார்வை மின்ன
கனிப் போல் வார்த்தை சொன்ன
சிலை மேல் காதல் கொண்டேன்
சிரிப்பில் கவிதைக் கண்டேன்

இதுதான் மாலை மயக்கம்
இருக்கும் வாழும் வரைக்கும்
இதுதான் மாலை மயக்கம்
இருக்கும் வாழும் வரைக்கும்
எதுதான் உறவின் எல்லை
என்றால் வார்த்தை இல்லை

கண் மேல்
நடந்தேன்

கை மேல்
கிடந்தேன்

மலர் போல்
மலர்ந்தேன்

மடி மேல்
விழுந்தேன்

குளிர் நீராடலாம்

விழியால் காதல் கடிதம்
வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்ன பூங்குயில் பாடலைக் கேட்க

மெதுவாய் மேனி அணைக்க
புதிதாய் பாடம் படிக்க
இதழால் தாகம் தனிய
இருக்கும் மோகம் தனிய

முதலில் நானம் தடுக்கும்
முகத்தை மூடி மறைக்கும்
மனதில் ஆவல் பிறக்கும்
முடிவில் வாரிக் கொடுக்கும்

வெட்கம்
மறையும்

சொர்க்கம்
புரியும்

காதல்
தெரியும்

பயணம்
தொடரும்

பறந்தே
போகலாம்










வியாழன், 10 பிப்ரவரி, 2011

உலகம் முழுதும் பழைய ராத்திரி உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

இளமையின் கீதம் ஒன்று


திரைப் படம்: நூறாவது நாள் (1984)
இயக்கம்: மணிவண்ணன்
இசை: இளையராஜா
நடிப்பு: மோஹன், நளினி
குரல்கள்: K J Y, வாணி ஜெயராம்
பாடல் வரிகள்: வாலி



Embed Music Files - Audio Hosting -




உலகம் முழுதும் பழைய ராத்திரி

உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

தழுவும் தோள்களில்
நழுவும் பூங்கொடி

ல ல ல ல ல லலலலா

உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

எப்போதும் இல்லாமல் இருதயம் மேளம் கொட்ட
நான்
தொட தொட மனசுக்குள்
தீம்
தரி கிட

பொன்மேனி எங்கெங்கும் வெட்கம் வந்து சேலை கட்ட
நான்
மலர்ந்திட ரகசிய
தீ
வளர்ந்திட

முத்தம் கொடுத்து முத்து குளிக்க
வித்தையும் கத்து குடுக்க நான் உன்னை பார்க்க
நீ என்னை பார்க்க

கட்டி பிடிக்கும் காதல் சுகத்தில்
கட்டில்களும் பூ பூக்க

உலகம் முழுதும் பழைய ராத்திரி
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி

கட்டிக் கொண்ட தாமரைகள்
காலையிலே கண் விழிக்க
தேன்
வடிந்தது
அடடடா
ஏன்
விடிந்தது

சங்கீத முத்தங்களை
மெல்ல மெல்ல நான் நினைக்க
நீ
சிவந்ததும்
வானம் கூட
ஏன்
சிவந்தது

சொர்கம் கண்ணிலே
தட்டுபட்டது
தொட்டவுடன் கட்டு பட்டது

பூங்காற்றாய் வீசு
ஓர் வார்த்தை பேசு

பெண்ணின் மனசு பேச நினைத்தால்
மாதம் ஒன்று போதாது

உலகம்
ல ல ல
முழுதும்
ல ல ல
பழைய ராத்திரி
ல ல ல
உனக்கும் எனக்கும் புதிய ராத்திரி


தழுவும் தோள்களில்
நழுவும் பூங்கோடி
ல ல ல ல லலலா

உலகம்
ல ல ல
முழுதும்
ல ல ல
பழைய ராத்திரி
ல ல ல
உனக்கும்
ல ல ல
எனக்கும்
ல ல ல
புதிய
ல ல ல
ராத்திரி



செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்

திருமதி P சுசீலாவின் மற்றுமொரு இனிமையான பாடல்


திரைப் படம்: கண்ணா நலமா (1972)
இசை:M S விஸ்வனாதன்
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெமினி, ஜெயந்தி




http://www.divshare.com/download/13999352-905


ஆரி ஆரி ஆரி ஆரி ஆரிரோ...
ஆரி ஆரி ஆரி ஆரி ஆரிரோ..
நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

நாள் பார்த்து ஊர் சேர்த்து
பேர் சூட்டும் தாயானேன்
அவன் இன்றி இவன் எங்கே
என் நன்றி தலைவனுகே

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

மானின் நிழல் மேனியும்
மஞ்சள் வெயில் சாயலும்
கோவில் போல தோற்றமும்
கொண்டான் எங்கள் கண்ணனே
கொண்டான் எங்கள் கண்ணனே
ஆடாயோ....
ஆடாயோ கண்ணா நீ என் நெஞ்சில் பொன்னூஞ்சல்
தேடாயோ மன்னா நீ என் நெஞ்சில் பூமஞ்சம்

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்

ஆயர் குலக் கண்ணனால்
அன்னை பெறும் சோதனை
எங்கள் இன்பக் கள்ளனால்
நானும் கண்ட சாதனை
நானும் கண்ட சாதனை
கொண்டாடு..
கொண்டாடு அன்னை நான் நின்றாடும் செல்வம் நீ
வண்டாடும் பூந்தென்றல் என்றாகும் என் இல்லம்

நான் கேட்டேன் அவன் தந்தான்
தாலாட்டும் தாயானேன்


திங்கள், 7 பிப்ரவரி, 2011

வானம் பன்னீரை தூவும்..காலம் கார்க்காலமே..

வழக்கம் போல இனிமையான இசையில் SPB ,கௌசல்யா இருவரின் மென்மையான குரல்களில்...


திரைப் படம்: கள் வடியும் பூக்கள். (1983)
இசை: ஷ்யாம்
பாடல் ஆக்கம்: வைரமுத்து
இயக்கம்; V கார்த்திகேயன்
நடிப்பு: ஸ்ரீ நாத், நளினி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjAxNzA4N19oTXFmel82OWM2/Vaanam%20Panneerai%20Thoovum.mp3






வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள் ஊறுமே

வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள் ஊறுமே

ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம்
ஹா..
ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம்
அடி ராத்திரி வெயிலே
ஒரு பாய் போடு மயிலே
அடி ராத்திரி வெயிலே
ஒரு பாய் போடு மயிலே
பூமஞ்சம் போட்டபின்
நாள் என்ன பார்ப்பது
பூங்காற்றும் நனைகின்ற வேளை
நீராடும் பூங்கொடி

வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
ல ல ல ல ல..
ல ல ல ல ல..
ப ப ப ப ப ப ப....

பால் போன்ற பாவை
உடல் பூவைப் போல மென்மை..
பால் போன்ற பாவை
உடல் பூவைப் போல மென்மை..
இந்தப் பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
இந்தப் பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
தேன் முல்லை வாசனை..
இனி என்ன யோசனை..
பூமாலை இடுகின்ற நாளில்
நான் உந்தன் தோள்களில்

வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே
நாளும் கள் ஊறுமே

ல ல ல ல ல..
ல ல ல ல ல..
ல ல ல ல ல..

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

திருமதி P. சுசீலா இந்த மாதிரி பாடல்கள் அதிகமாக பாடியதில்லை. இது கிளப் டான்ஸ் எனப்படும் வகையை சேர்ந்தது, ஷங்கர் கணேஷ் பொதுவாக ஒரு செண்டிமெண்ட்டுக்காக சுசீலா அம்மாவை அவர்களின் படத்துக்கு முதல் பாடலை பாடச் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி சில நேரங்களில் அந்த முதல் பாடல் இந்த வகையான பாடலாக அமைந்துவிடும். ஆனால் MSV இசையில் சுசீலா அம்மா இந்த மாதிரி பாடியதுதான் முதலாவதாக இருக்கும் என நினைக்கிறேன்.


திரைப்படம்: காசேதான் கடவுளடா (1972)
இயக்கம்: சித்திராலயா கோபு
தயாரிப்பு: AVM
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி



http://www.divshare.com/download/13981567-cac


ஆ.. லலால்ல லா லா லா
ஆ.. லலால்ல லா லா லா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டு மேனி பந்து போல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா

எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம்
அங்கங்கு தொட வேண்டும் கை பதமாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக

கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து
அந்த ஆரம்ப பாடத்தை நடத்து
அந்த ஆரம்ப பாடத்தை நடத்து

இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா


தட்டாமல் திறக்கும்
கேளாமல் கொடுக்கும்
என்னாளும் உனதல்லவோ
என் இள நெஞ்சம்
துயிலாமல் இருக்கும்
துணை தேடி தவிக்கும்
பெண் பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்

சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரி பாதி எனலாம்
அதில் என் பங்கு சரி பாதி எனலாம்

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த

மற்றுமொரு கிராமத்துக் கிளிகளின் காதல் பாடல். இலக்கணம் மறந்த தமிழில் இயற்கையாக காதலை வெளிப் படுத்துவது போல. இன்றைக்கு நகரில் தமிழ் மறந்தவர்கள் சினிமாவில் இலக்கிணத் தமிழாக பாட்டு எழுதுகின்றனர்.

இந்தப் பாடல் வரிகளின் மூலப் பாடல் (ஒரு சின்ன பகுதி) இத்துடன் சேர்த்து தரமேற்றியிருக்கிறேன். முதல் ஓரிரு வரிகள் மட்டுமே காப்பி அடிக்கப் பட்டுள்ளது.

மூலப் பாடல்:
திரைப் படம்: பிள்ளைக் கனியமுது (1958)
இசை: K V மகாதேவன்

நடிப்பு: S S R, E V சரோஜா
இயக்கம்: M A திருமுகம்
பாடலாசிரியர்: மருதகாசி??
குரல்கள்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்




http://www.divshare.com/download/13977360-9e4


காப்பி பாடல்:

திரைப் படம்: அச்சமில்லை அச்சமில்லை (1984)
இசை:  V S நரசிம்மன்
நடிப்பு: ராஜேஷ், சரிதா
இயக்கம்: K பாலசந்தர்
பாடலாசிரியர்: வைரமுத்து
குரல்கள்: P சுசீலா, மலேஷியா வாசுதேவன் சீர்காழி S கோவிந்தராஜன்




http://www.divshare.com/download/13977313-b09


மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ
ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலம் ஒன்னு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
ஓலம் ஒன்னு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே

அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே

கொடையும் இல்ல படையும் இல்ல தூரலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தலை துவட்ட நான் வரவா

நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

மலர் தோட்டத்து குயிலு இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்து குயிலு இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

அருவி போல அழுகிறத அறிந்துகொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்துகொண்டால் ஆகாதோ

வக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நா பல்லு வெளக்கப் போறதெப்போதண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

சனி, 5 பிப்ரவரி, 2011

அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..

இது கிராமத்து அப்பாவிகளின் காதல். இன்றைய வழக்கமான மானே தேனே என்றில்லாமல் காதலுக்கு இறைவனை துணைக்கழைக்கிறார்கள். நல்ல காதல் பாடலுக்கான இசையுடன் கவிதை வரிகள்.


திரைப் படம்: காவல் தெய்வம் (1969)
இசை: .தேவராஜன்
பாடியவர்கள்: சுசீலா, தாராபுரம் சுந்தரராஜன்
இயக்கம்: விஜயன்
நடிப்பு; சிவாஜி, சிவகுமார், லக்ஷ்மி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNTg0NjA0NF9XdzVvcF83NmQ5/ayyanaaru%20niraenja%20vaazhvu.mp3








அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கனும்

உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பள்ளியறை தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கனும்..
ஓ ஓ ஓ ஓ
பள்ளியறை தனிமையிலே பாலும் பழமும் கொடுக்கனும்..

பட்டுக் கண்ணம் ரெண்டும் நல்ல வெட்கத்துலே சிவக்கனும்..
பட்டுக் கண்ணம் ரெண்டும் நல்ல வெட்கத்துலே சிவக்கனும்..

அறைக்கு வெளியே தோழி பெண்கள் கல கலன்னு சிரிக்கனும்...
அடுத்த நாளு விடிஞ்சதும்தான் அடைச்ச கதவை திறக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கனும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கஞ்சி கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கனும்...
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கஞ்சி கலயம் சுமந்து நானும் தண்டை குலுங்க நடக்கனும்...

நடந்து வரும் அழகைப் பார்த்து பசியும் கூட பறக்கனும்...
நடந்து வரும் அழகைப் பார்த்து பசியும் கூட பறக்கனும்...

அய்யனாரு கோவிலுக்கு ஆண்டுதோறும் படைக்கனும்...
அம்ம மனசு குளிரனும் ஆண்டவன் கண் தொறக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அய்யனாரு நெறைஞ்ச வாழ்வு கொடுக்கனும்..
ஆயுசுக்கும் நெனச்சதெல்லாம் நடக்கனும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கனும்..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

அழகான பூக்கள் மலர்ந்தாடுமே... நீ வந்து நின்றால் வாய் மூடுமே

அவ்வளவாக பிரபலமாகாத அழகான அமைதியான பாடல். இரவு நேர அமைதிக்கு இன்பமான பாடல்.

திரைப் படம்: அன்பே ஓடி வா  (1984)
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வைரமுத்து
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: ரஞ்ஜித் குமார்




http://www.divshare.com/download/13962935-6f2


தனன நானனா தனனனன நா
தனனனா நான நனானா ஹோ ஹோ ஹோ க்
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
காலங்களே சொல்லுங்களேன்
காதல் ஒரு வேதம்
மேகங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும்
ஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
ஓடை கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம் மோக்ஷம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள் யாரது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
லலலலாலால லலலலா ல்லா
லலலலா லலலலா லலா ஹோ ஹோ ஹோ
மேகங்களில் பூஜை கட்டி ஆடி விடு தோழி
ஆகாயத்தில் பூ பூக்கட்டும் ஆணை இடு தேவி
மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யாரது நீயா
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன் மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணீல் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
ஹா ஹா ஹா

வியாழன், 3 பிப்ரவரி, 2011

சின்ன சின்ன மேகம்...என்னை தொட்டு போகும்...நினைவுகள் பூவாகும்..

அருமையான பாடல் இன்று. எனது வாலிப பருவத்துக்கால பாடல். திரைப் படம் பெரிதாக பேசப் படவில்லை என்றாலும் பாடல் இளம் உள்ளங்களை கவர்ந்தது அப்போது.


திரைப்படம்: காற்றுக்கென்ன வேலி (1982)
பாடிய குரல்கள் : SPB, அனிதா
இசை : சிவாஜி ராஜா
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு : மோகன், ராதா









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சின்ன சின்ன மேகம்...
ஆ...ஆ...
என்னை தொட்டு போகும்...
ஆ....ஆ....
நினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

சின்ன சின்ன மேகம்...
ஆ...ஆ...
என்னை தொட்டு போகும்...
ஆ....ஆ....
நினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

பிரிவான காதல் நெஞ்சின் சுகமான சோகங்கள்
மழைக் கால பூவின் மீது இருக்கின்ற ஈரங்கள்
கன்னியிளம் பூக்கள் கையெழுத்து கேட்கும்
உள்ளுறங்கும் சோகம் கண் திறந்து பார்க்கும்
ஞாபகங்கள் கண்ணில் இன்று முத்து குளிக்கும்


நினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
சின்ன சின்ன மேகம்...
ஆ...ஆ...
என்னை தொட்டு போகும்...
ஆ....ஆ....
நினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

அனல் மீது பூக்கும் அந்த கொடிக்கின்று வேரில்லை
இதயத்தின் சுவரில் உந்தன் பெயரின்றி வேறில்லை
மேடைகளின் ஓரம் ஜாடை செய்யும் பூவை
பார்வைகளில் நூறு பந்தி வைக்கும் பாவை
கோதை மகள் பேரை சொன்னால் ராகம் இனிக்கும்

நினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
சின்ன சின்ன மேகம்...
ஆ...ஆ...
என்னை தொட்டு போகும்...
ஆ....ஆ....
நினைவுகள் பூவாகும்..கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்லவா

இன்று ஒரு வித்தியாசமான இசையில், அழகான வரிகளுடன் ஒரு பாடல். SPBயும் ஒருவித கிறக்கத்துடன் பிரமாதமாக B S சசிரேகாவுடன் இணைந்து பாடியிருக்கிறார்,

அன்பர்களுக்கும் இந்த பாடல் பிடித்து போகும் என்று நம்புகிறேன்.

திரைப் படம்: உழவன் மகன் (1987)
இசை: மனோஜ் கியான்
மடிப்பு: விஜயகாந்த், ராதிகா



http://www.divshare.com/download/13934742-24a


ம் ம் ம் ம்
ஒல்லி தரவா
சொல்லி தரவா சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா
சொல்லி தரவா சொல்லி தரவா

சில்லென்று காற்றே நீ வழி போகும் நேரம்
நில்லென்று நான் கூற ஏன் இந்த நாணம்

சொல்லி தெரியாத கலை இன்று கண்டேன்
சொல்ல தெரியாதா சிலையாகி நின்றேன்

கண்மணி உந்தன் கருவிழி பேசும் கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில் அதுவும் தொடர்கிறது

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை துணை அல்லவா
துணை சேர என் நாணம் தடை அல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடல் புதிதல்லவா

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா

இரவென்றும் பகலென்றும் அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் சுகம் தானே வரவு

இன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்
இல்லை வேரெங்கும் இடை மீறும் மயக்கம்

அச்சம் நாணம் அறிந்தது புரிந்தது
காதல் விளையாட்டு
மிச்சம் மீதி இருந்ததும் மறைந்தது
காமம் சொல் கேட்டு


சொல்லி தரவா

சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் சுவை அல்லவா

ட ட ட டா
சொல்லி தரவா..