பின்பற்றுபவர்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..

M S விஸ்வனாதனின் அழகான ஆலாபனையில் SPB தனது வழக்கமான முத்திரை பதித்த பாடல். நான் மிகவும் ரசித்த பாடல் இது.


திரைப் படம்: கூட்டுப் புழுக்கள் (1987)
நடிப்பு: சந்திரசேகர், இளவரசி, சரிதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/14122564-920



நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா..
இளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..
இளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..
எதையோ நினைத்தாய்..சிரித்தாய்..ஓடினாய்..
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..

மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று..
நெஞ்சிலே கூடு கட்டி வாழவந்தாய் இன்று..
மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று..
நெஞ்சிலே கூடு கட்டி வாழவந்தாய் இன்று..
அந்த மலரும் நினைவு தோன்றும்
அதில் உலகம் மறந்து போகும்..
அந்த உறவு தொடர வேண்டும்..
இன்ப கனவு பலிக்க வேண்டும்..
நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..

ஆ ஆ ஆ
மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்..
அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்..
ஹா
மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்..
அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்..
இரு பருவம் அளித்த சீரோ உன்னை படைத்த கலைஞன் யாரோ..
அடி இரவில் மலரும் பூவே எந்தன் இளமை பருகும் தேனே..

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா..
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா..
இளமாலை நேரம் வந்தாய்.. விழியோரம் ஏதோ சொன்னாய்..
எதையோ நினைத்தாய்..சிரித்தாய்..ஓடினாய்..

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலில் S.P.Bயை ரசித்து கொண்டே இருக்கலாம் என்று சொல்லலாம்.

Unknown சொன்னது…

உண்மைதான் சார்

கருத்துரையிடுக