பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

விழியோ உறங்கவில்லை..ஒரு கனவோ வரவுமில்லை..

மீண்டும் ஒரு இனிமை பாடல் ஜெயசந்திரன், வாணி ஜெயராம் குரல்களில்

மென்மையான குரல்களும் இசையும் மனதை வசப்படுத்தும்.


திரைப் படம்: நீ வாழவேண்டும்
நடிப்பு: முத்துராமன், சுமிதிரா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: பீம் சிங்கு




http://www.divshare.com/download/14147645-652

விழியோ உறங்கவில்லை..


ஒரு கனவோ வரவுமில்லை..

கனவினிலேனும் தலைவனைக்காண..

கண்ணே நீ உறங்கு..

அவன் காட்சியை நீ வழங்கு..

காட்சியை நீ வழங்கு..

ம் ம் ம்..



விழியோ உறங்கவில்லை..

என் மனதில் அமைதியில்லை..

அமைதியை நெஞ்சம் பெறும்வரை..

கொஞ்சம் கண்ணே நீ உறங்கு..

அவள் காட்சியை நீ மறந்து..

காட்சியை நீ மறந்து..

ம் ம் ம்..



தலையினில் சூட மலர்ச்சரம் கேட்டேன்..

முள்முடி சூட்டி வைத்தாய்..

கரங்களில் போட வளைகளை கேட்டேன்..

விலங்கினை பூட்டி வைத்தாய்..

விலங்கினை பூட்டி வைத்தாய் ..



கடலுக்குக்கூட கரை இருக்கும்..

அந்த அலைகளை தடுப்பதற்கு..

மனதுக்கு மட்டும் கரை இல்லையே..

இந்த நினைவினை தடுப்பதற்கு..

நினைவினை தடுப்பதற்கு ..



உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்..

இங்கு பகைவர்கள் யாரும் இல்லை..

ஒளியினை தந்து விழிகளை கேட்பது..

யாருக்கும் நியாயம் இல்லை ..



பூமியை வானம் தொடுவது போல்..

இங்கு பார்வையில் தெரிகிறது..

புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை..

எல்லாம் மயக்கமாய் இருக்கிறது..

மயக்கமாய் இருக்கிறது ..



விழியோ உறங்கவில்லை..

ஒரு கனவோ வரவுமில்லை..

கனவோ வரவுமில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக