பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 மே, 2013

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்


சாருகேசி ராகத்தில் P சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடல் மீண்டும் K V மகாதேவனின் இசையில் அவரது பாடல்கள் மனதை என்னவோ பண்ணுகிறது என்னும் எனது கருத்திற்கு  வலு சேர்கிறது. நளினமான பதிமினியின் நடன அசைவுகள் அற்புதம்.

திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)
நடிப்பு: M.G. ராமச்சந்திரன், பத்மினி
இயக்கம்: D. யோகானந்த்
இசை: K.V. மகாதேவன் 
பாடல்: கண்ணதாசன் 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMzM4NDkzMF8yUXBmNl84Nzlh/Nenjirukkum%20Varaikkum.mp3





நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
ஹா ஹா ஹா
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

செவ்வாய், 28 மே, 2013

சின்னக் குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா

மறைந்த திரு T M S அவர்கள் பாடிய மற்றுமொரு இனிமையானப் பாடல்.

இன்னொரு பிறவி நான் எடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழவிடு
இறைவா
என்றும் குழந்தையாய் வாழவிடு

இது அவர் ஆசை மட்டுமல்ல. நம்முடையதும் கூட.

மனதை தென்றலாய் வருடிக் கொண்டு போகும் இந்தப் பாடலை திரு T M S பாடியிருக்கும் விதமும், இசையும், பாடல் வரிகளும் மறக்க முடியாதது. 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMzEwNjA0OF9lOUZtOV9kOGYy/ChinnaKuzhanthaiVizhigalile.mp3



திரைப் படம்: தேவி (1968)
நடிப்பு: முத்துராமன், தேவிகா
இசை: V. தக்ஷிணாமூர்த்தி
பாடல்: கண்ணதாசனாக இருக்கலாம்.
இயக்குனர்: ஏ.கே.வேலன்

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகிலில்லை
குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகிலில்லை

வளர்ந்த மனிதன் ஆசைகளால்
வாழும் வழிகளில் நேர்மையில்லை

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில்  தேனூற
கனியிதழ் சிரிப்பில் அழகாட
கண்ணப் பொய்கையில்  தேனூற

கவிதையை போல் வரும் குழந்தையின்
பிஞ்சுக் காலடி நிழலே சொர்க்கம் அம்மா

கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை

இன்னொரு பிறவி நான் எடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழவிடு
இறைவா
என்றும் குழந்தையாய் வாழவிடு

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஞாயிறு, 26 மே, 2013

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை

தமிழ் திரையுலகின் ஈடிணையற்ற பாடகர்களில் ஒருவரான திரு T M சௌந்திரராஜன் அவர்களுக்கு எமது அஞ்சலி.
அவருடைய பல சிறந்த பாடல்களுக்கு இந்தப் பாடல் மூலம் ஒரு பூமாலை.
அவர் வகையில், அவரைப் போல் ஒரு பாடகர் தமிழுக்கு அமைவது அரிது. இலக்கண சுத்தமான, தெளிவான உச்சரிப்பு,  பாடலைப் புரிந்து பாடும் தன்மை என எல்லா வகையிலும் நம் மனதை கவர்ந்த டி எம் எஸ் என அழைக்கப்பட்ட அவருடைய ஆன்மா சாந்தியடைய வணங்குவோம்.



திரைப் படம்: வளர்பிறை (1962)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: D யோகானந்த்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMzA1MDMzNF9TVWpEUl8xOWNj/Poojiyathukkulle.mp3




பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

சனி, 25 மே, 2013

நாளை பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று

வாழ்வில் தன்னம்பிக்கை தரும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணீர் குரலோன், தெய்வீக பாடகர் சீர்காழி S கோவிந்தராஜன்  அவர்கள் குரலில் கேட்க்கும் போது என்றைக்குமே நாளை பொழுது நல்ல படியாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.
எல்லோரும் வாழ்க வளமுடன்.

திரைப் படம்: பொற்சிலை (1969)
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
இசை: R. கோவர்தனம் அல்லது
S M சுப்பையா நாயுடு  ( குழப்பம்தான்)
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இயக்கம்: A V பிரான்சிஸ் 
நடிப்பு: ஜெமினி, ராஜ்யஸ்ரீ 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMjQ2NTYxMV9pbDVZYl8zMWRh/naalai%20pozhuthu%20unthan.mp3



நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

பசியென்று வந்தவர்க்கு
புசியென்று தந்தவரை
பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா
பசியென்று வந்தவர்க்கு
புசியென்று தந்தவரை
பரமனும் பணிவானடா
கனிந்து பக்கத்தில் வருவானடா

ஆணென்று பெண்ணென்றும்
ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா
தலைவன் நீதியும் ஒன்றேயடா

நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும்
பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா
அதனை எய்தவன் மடிவானடா

சத்திய சோதனையை
சகித்து கொண்டே இருந்தால்
வெற்றியை காண்பாயடா
அதுவே வேதத்தின் முடிவாமடா

நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

இறைவன் நம்பிக்கை தருவானடா
இறைவன் நம்பிக்கை தருவானடா

வெள்ளி, 24 மே, 2013

இரவு பாடகன் ஒருவன் வந்தான்

ஹிந்தியில் ஹம்ஷகல். ராஜேஷ் கண்ணா நடித்தது. தாலாட்டு பாடலுக்கு புலமைப்பித்தன் புதிது. பொதுவாக தமிழ் திரை தாலாட்டுப் பாடல்கள் சொந்தக் கதையும் சோகக் கதையும் உள்ளடக்கி இருக்கும்.
ஆனால் இதில் புதுமையாக, தூங்கப் போகும் குழந்தையை வர்ணித்தே தாலாட்டாக பாடியிருக்கிறார். பாராட்டக்குறியது. சிறிய பாடலானாலும் சிறந்த பாடல்.

திரைப் படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: M G ராமசந்திரன், வாணிஸ்ரீ
இயக்கம்: எம்.கிருஷ்ணன்
பாடல்: புலமைப்பித்தன்
பாடியவர்: K J யேஸுதாஸ்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMjg1MDYzN19FaUF2aV80MGE3/IravuPaadaganOruvan.mp3







இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

புத்தனின் முகமோ
என் தத்துவ சுடரோ
புத்தனின் முகமோ
என் தத்துவ சுடரோ

சித்திர விழியோ
அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ
அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ

இரவு பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்

ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ

புதன், 22 மே, 2013

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு

M S விஸ்வனதன், வாலி மற்றும் மலேசியா வாசுதேவன் இணைந்து வழங்கியிருக்கும் இன்னுமொரு அட்டகாசமானப் பாடல் இது. இசையும் பாடல் வரிகளும் அற்புதம், என்றாலும்  பாடகரின்  பங்கு  இதில்  ஏராளம் எனலாம். பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்  மலேசியா வாசுதேவன்.

திரைப் படம்: சரணாலயம் (1983)
இசை: M S விஸ்வனதன்
பாடல்: வாலி (மலேசியா வாசுதேவன் எழுதினார் என்பது ஒரு சாராரின் கருத்து. ஆனால் பாடல் வரிகளை கூர்ந்து கவனிக்கும் போது வாலி அவர்களே மனதில் படுகிறார்)
நடிப்பு: மோகன், நளினி, சத்யராஜ்
இயக்கம்: R சுந்தர்ராஜன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU0MDcyM19NTTdsSl9jZDA3/ezhugiraloru.SARANALAYAM.mp3





எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால்  இந்த பூங்கோதை

இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போ
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்ல உதடழகும்

தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
கட்டழகு பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ
கால காலம் இங்கு எனக்காக

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
புன்னகைக்கும் ரத்தினமோ
தேவ தேவி இவள் எனக்காக

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால்  இந்த பூங்கோதை

திங்கள், 20 மே, 2013

சிரித்தாள் தங்க பதுமை

கொஞ்சம் நீண்ட இடைவெளி. எனது தந்தையின் உடல் நலக் குறைவால் திடீர் சென்னை பயணமும், மருத்துவமனை அலைச்சலும்.

மீண்டும் பாடலுக்கு வருவோம்.
இந்தப் பாடலை பாடியவர்களின் திறமை, இசையமைத்தவரின் திறமை, இந்தப் பாடலை இவ்வளவு  சிறப்பாக கொண்டுவந்த மற்ற திறமைசாலிகளின் திறமையை விட எனக்கு பாடலின் அற்புதமான வரிகள் ஒரு படி மேலோங்கி நிற்பதாகவே தோன்றுகிறது .


திரைப் படம்: கண்ணன் என் காதலன் (1968)
குரல்கள்: T M S, P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: P நீலகண்டன்
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
பாடல்: ஆலங்குடி சோமு

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTMxMzg3Ml9CUmdUZF9jNjVh/Sirithal%20Thanga-Kannan%20En%20Kathalan.mp3





சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

மார்கழி பனி போல் உடை அணிந்து
செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து
மார்கழி பனி போல் உடை அணிந்து
செம்மாதுளம் கனி போல் இதழ் கனிந்து
கார்க்குழலாலே இடை அளந்து
நீ காத்திருந்தாயோ எனை நினைந்து

அழகெனும் வடிவில் நிலை இழந்தேன்
இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
அழகெனும் வடிவில் நிலை இழந்தேன்
இந்த ஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன்
இங்கு பருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்

சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

கயல் விழி இரண்டில் வயல் அமைத்து
அதில் காதல் என்றொரு விதை விதைத்து
காலம் அறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா

பஞ்சணை களத்தில் பூ விரித்து
அதில் பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா
சுகம் கோடி கோடியாய் குவிப்போமா

சிரித்தாள் தங்க பதுமை

திங்கள், 13 மே, 2013

தத்தித் தத்தித் தவழும் கிளியோ

P சுசீலா அம்மா மற்றும் சீர்காழி S கோவிந்தராஜன்  இந்த இருவர்களின் குரல்களை தமிழ் திரை  உலகம் மிகச் சரியாக உபயோகப் படுத்திக்கொண்டதற்க்கு இந்தப் பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டு. நின்று கேட்க வைக்கும் பாடல் வகையிது.

மனைவியே மனிதனின் மாணிக்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜிநாகைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்: கே. மதனகோபால்
கே. எம். டி. வி. என். பிக்சர்ஸ்கதை: ராஜகோபால்
நடிப்பு: பாலாஜி, நாகைய்யா, பண்டரிபாய், (மைனாவதி ???) ஈ. வி. சரோஜா


இசையமைப்பு:எச். ஹனுமந்தராவ்
பாடல்: மருதகாசி

நன்றி: http://ta.wikipedia.org/wiki/


http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU0OTA0MV9JSVdxQ185NWIz/Thaththi%20Thaththi%20Thavazhum%20Kiliyo.mp3







தத்தித் தத்தித் தவழும் கிளியோ
சக்கரைப் பந்தலில் தேன் மழையோ
தத்தித் தத்தித் தவழும் கிளியோ
சக்கரைப் பந்தலில் தேன் மழையோ
முத்துக் கட்டிய பொற்சரமோ
நீ மோகன வண்ணச் சித்திரமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தங்கம் பொங்கும் திங்கள் வதனம் தாமரையோ செந்தேன் மலரோ
தங்கம் பொங்கும் திங்கள் வதனம் தாமரையோ செந்தேன் மலரோ
சிங்கம் போலும் உங்கள் இளமை செந்தமிழ் வண்ணச் சித்திரமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிற்பம் கவிஞர் கற்பனை ஒன்றாய் சேர்ந்துருவான பெண் வடிவோ
சிற்பம் கவிஞர் கற்பனை ஒன்றாய் சேர்ந்துருவான பெண் வடிவோ
அற்புத இளமையில் பற்பல புதுமை அறியும் கலைஞர் என் துணையோ
தத்தித் தத்தித் தவழும் கிளியோ சக்கரைப் பந்தலில் தேன் மழையோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

குமித்த புருவம் கோவைச் செவ்வாய் கொல்லும் இரு விழி மென்மலரே
இனிப்பு மொழியும் அழகும் சுவையும் என்றும் இனி மேல் நம் உரிமை
தங்கம் பொங்கும் திங்கள் வதனம் தாமரையோ செந்தேன் மலரோ
காதல் காதல் காதலிலே
நாம் காண்போம் இன்பம் வாழ்வினிலே
காதல் காதல் காதலிலே
நாம் காண்போம் இன்பம் வாழ்வினிலே
மோதும் அலையில் வாழ்க்கை கடலில்
ஓடும் படகில் ஆடிடுவோம்
மோதும் அலையில் வாழ்க்கை கடலில்
ஓடும் படகில் ஆடிடுவோம்
ஆதரவென்னும் அன்பினில் ஒன்றாய்
அனுபவ கீதம் பாடிடுவோம்
நாம் அனுபவ கீதம் பாடிடுவோம்
தத்தித் தத்தித் தவழும் கிளியோ சக்கரைப் பந்தலில் தேன் மழையோ
முத்துக் கட்டிய பொற்சரமோ நீ மோகன வண்ணச் சித்திரமோ


சனி, 11 மே, 2013

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

இனிமையானப் பாடல். அருமையான கவிதை, அழகான இசை, ரொம்ப சிரமப்பட்டு   பாடியிருப்பார்கள் பாடகர்கள். ஒரு குறையும் சொல்ல முடியாத பாடலில்.........
2.46 நிமிடங்களிலொரு நிழல் உருவம் கடப்பதும் படமாகி இருப்பது தெரிந்தே விட்டு விட்டார்களா? அல்லது கவனிக்கவே இல்லையா?

திரைப் படம்: பறக்கும் பாவை (1966)
இசை:  M S விஸ்வனாதன்
குரல்கள்: T M S, P சுசீலா ,
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T R ராமண்ணா

http://asoktamil.opendrive.com/files/Nl81OTUyMTUyX0NvRExLXzU2ZGE/Kalyaana%20Naal%20Paarka%20Sollalama.mp3





கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா
மந்திரத்தில் கண் மயங்கி பள்ளி கொள்ளுவோமா

சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா

நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா
நாளை இன்னும் அதிகம் என்று பிரிந்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

சந்திரனை தேடி சென்று குடியிருப்போமா
தமிழுக்கு செய்தி சொல்லி அழைத்து கொள்வோமா

அந்தி பட்டு வானத்திலே வலம் வருவோமா
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா

வியாழன், 9 மே, 2013

பூவே இது பூஜை காலமே

எங்கோ எப்போதோ படித்தது. திரைதுறையை விட்டு விலகி பாடகி ஜென்சி பாட்டு வாத்தியாராக ஏதோ ஒரு கேரளா பள்ளிக் கூடத்தில் இப்போது வேலை பார்ப்பதாக. உண்மையா? அவர்தானா நான் வேறே யாரையாவது பற்றி பேசுகிறேனா?
இவரது பல தமிழ் பாடல்களில் அப்பட்டமாக மலையாள  வாசனை  கொஞ்சம்  தூக்கலாகவே இருக்கும். அப்போதைக்கு பல காரணங்களுக்காக இளையராஜாவுக்கு இவர் தேவைப் பட்டார். கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால் நிலைத்து இருந்திருக்கலாம்.
படத்தில் பாடல் காட்சியும் ஏதோ நாடகம் பார்ப்பது போல உள்ளது. முழுப் படமும் எப்படி இருக்குமோ? எனக்கு படம் பார்த்த ஞாபகம் இல்லை.
பாடலை பொருத்தவரை இளையராஜா  தன் பங்கை நன்றாக செய்திருக்கிறார்.


திரைப் படம்: கிராமத்து அத்தியாயம் (1980)
குரல் : ஜேன்ஸி
இசை: இளையராஜா
நடிப்பு: நந்தகுமார், கிருஷ்ண குமாரி
இயக்கம்: ருத்ரய்யா
பாடல் எல்லாமே: கங்கை அமரன் (திரை உலகை இவர்கள் ஆண்ட காலம்)

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY4MTkyOF9XU0ZLUF9iODcw/Poove%20Idhu%20Poojai%20Ka-Gramathu%20Athiyayam.mp3






பூவே இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த
வேகம் தீர்த்த
நாளும் வேண்டுமே
நாளும் உன்னை
நினைத்து நினைத்து
தவித்து தவித்து
ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழை என
வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ
பூவே இது பூஜை காலமே

சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
குயிலே ஏ ஏ ஏ
சலங்கை தாளமே
எந்தன் காதில் கேட்குமோ
வாழை மாவிலை மஞ்சள்
வாசல் தோன்றுமோ
பனி வாடை காற்று வீசும்போது
பாவை மேனி வாடுதே
பூவே இது பூஜை காலமே

கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
நெஞ்சே ஏ ஏ ஏ

கண்ணை மூடியும்
மனம் தூங்கவில்லையே
கண்ணண் ஞாபகம்
உன்னில் நீங்கவில்லையே
திரு மாலை சேர்ந்த தேவி
ஏக்கம் தீர வேண்டி ஏங்குதே
பூவே இது பூஜை காலமே
 இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த
வேகம் தீர்த்த நாளும் வேண்டுமே
நாளும் உன்னை
நினைத்து நினைத்து
தவித்து தவித்து
ஏங்கும் உள்ளம் பாடாதோ
வாழை என
வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ
பூவே

திங்கள், 6 மே, 2013

பொன்னி நதி வெள்ளம் இன்று

சத்யராஜும் மலேஷியா வாசுதேவனும் வில்லன்களாக அட்டகாசமான  நடிப்பு எனக்கு ஞாபகம் இருக்கிறது. மற்றைய விஷயங்கள் சொல்லிக் கொள்ளுமாறு இருக்காது. பாலுவின் குரலில் இதுவும் ஒரு அற்புதமான பாடல் .

திரைப் படம்: முதல் வசந்தம் (1986)
நடிப்பு: பாண்டியன், ரம்யாகிருஷ்ணன் 
இயக்கம்: மணிவண்ணன் 
குரல்: S P B
பாடல்: கங்கை அமரன்?? சரியாக தெரியவில்லை 
இசை: இளையராஜா 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTIzMTk0OV9STlNFM185MWY0/Ponni%20Nathi.mp3





பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
ஆ ஆ ஆ


பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே


பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

பனியில் நனைந்த பூ மேனி
பருகத் துடிக்கும் நான் தேனி
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தந்த முகம் இன்ப முகமே
தெய்வம் சேர்த்த நம் கைகள்
சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல்
சொர்க்கம் தேடுது
இது இளமை இனிமை புதுமை

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனம் 
தன்னில்  சுகம்  சொல்ல  வந்தது
மலர் தந்த மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது
அங்கம் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது
இங்கு இனிமை கனவுகள் உதயம்

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நாணம் என்னிடம்
நீ தந்தது என்னுயிர் இன்பமே

பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே

சனி, 4 மே, 2013

சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ

அன்பர் ராஷீத் கேட்டிருந்தார்.

P B ஸ்ரீனிவாஸ் வழக்கமாக கவிதை எழுதுவார். நான் நேரிலே பார்த்திருக்கிறேன். 25/30 வருடங்களுக்கு முன் சென்னை (Drive in Woodlands Hotel) வுட்லாண்ட் டிரைவ் இன் ஹோட்டலில் (கொஞ்சம் உயர்தர மக்கள் வரும் இடமாதலால் கூட்டம் குறைவாக இருக்கும்) மாலை நேரங்களில் அவரை சந்திப்பதுண்டு. தொடர்ந்து வருவார். நான் ஒரு முறை சந்தித்து பேசியதோடு சரி. அடிக்கடி பார்த்தாலும் சிரித்துக் கொள்வோமே தவிர அவரை தொந்திரவு செய்ததில்லை. அன்று அங்கு பணிபுரிந்தவர்களை கேட்டால் தெரியும். அப்போதெல்லாம் கையில் நோட்டுடன் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார். அதனால்தான் இணையத்தில் அந்தப் பாடலை அவர் எழுதினார் என்றவுடன் எனக்கும் அவர் எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது.

அவரது குரலில் பாடல்களே சிறப்பாக அமைந்திருக்கும் போது அவர் பாடல் எழுதியதை பற்றி நாம் அவ்வளவு கவலைப் பட தேவையில்லை என நினைக்கிறேன்.

இனிமையான, கருத்து நிறைந்த, வாழ்க்கையின் எதார்த்தத்தை, உணமைகளைச் சொல்லும் இந்தப் பாடல்.

திரைப் படம்: வாழ்க்கை படகு (1965)
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, தேவிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU3MjM0Nl9lT2xwRl80NzRj/Chinna%20Chinna%20Kannanukku[128].mp3








சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா

சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பால் மணக்கும் பருவத்திலே
உன்னை போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
சிட்டுப் போல் படுத்திருந்தேன்

அன்னாளை நினைக்கையிலே
என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர
உள்ளமே தாவுதடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

ஒருவரின் துடிப்பினிலே
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா

ஈரேழு மொழிகளிலே
என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி
தேவன் தந்த தெய்வ மொழி

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா

நன்றி கெட்ட மாந்தரடா
நான் அறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா
நான் அறிந்த பாடமடா

பிள்ளையாய் இருந்து விட்டால்
இல்லை ஒரு துன்பமடா

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ

வியாழன், 2 மே, 2013

நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில்

பாடல் காட்சியை இணைத்துள்ளேன்.

பலரும் இந்தப் பாடலை மறந்து போயிருக்கலாம் அல்லது நான் மட்டும்தான் மறந்தேனா?

எனது இளமை கால பருவக் கனவுகளை சுமந்து வரும் பாடல். நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று.

மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் அவரது பல பாடல்களின் இசையின் தாக்கம் இதில் இருந்தாலும் இசையும், துள்ளும் இளமை பாடல் வரிகளும், அதே இளமை மாறாத குரல்களின் இனிமையும் என்னை கட்டி போடுகின்றது.

உண்மையை சொல்லப் போனால், தொடர்ந்து சிவாஜி+ K R விஜயா, எம் ஜி யார் +சரோஜா தேவி என்று முதிர்ந்த ஜோடிகளையே பார்த்து அசந்து போயிருந்த கண்களுக்கு மோகன்+நளினி போன்ற இளம் ஜோடிகளை காணும் போது ஒரு புத்துணர்ச்சி வருகிறது என்றால் அது எனது தவறில்லை.

எப்பாடுபட்டாவது இதை நிரூபிக்க இப்பாடலின் படக் காட்சிக்கு முயற்சித்தேன். முடியவில்லை. உங்களிடம் இருந்தால், எனக்கு லிங்க் அனுப்பினால் இதில் இணைத்துக் கொள்வேன்.

திரைப் படம்: சரணாலயம் (1983)
இசை: M S விஸ்வனதன்
பாடல்: வாலி
நடிப்பு: மோகன், நளினி, சத்யராஜ்
இயக்கம்: R சுந்தர்ராஜன்
குரல்கள்: S P B, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU0MDI4MV80bW5zdl9kMjRl/Nedu%20Naal%20Aasai.mp3







நெடு நாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

நெடு நாள் ஆசை ஒன்று - இந்த
நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல

க ம ப நி நீத த ம த தா க

க த ச க நி நி தா ப

பத பத

பத பத

நி நி ஸ

ரி ரி க

ம ம ப

க ம பா

கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்
கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்

மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்
மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்

அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று
அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று

அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

நெடு நாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

ஹா ஹா ஹாஹாஹா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஹா

ம ம க க

ம ம க க

ப ப ம ம

ப ப ம ம

க க ப ப

க க ப ப

ஸா

இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்

எண்ண மாளிகை வாசல்தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்

மடி மேலே உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க

அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

நெடு நாள் ஆசை ஒன்று - இந்த
நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல