பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 மே, 2013

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்


சாருகேசி ராகத்தில் P சுசீலா அம்மா பாடிய இந்தப் பாடல் மீண்டும் K V மகாதேவனின் இசையில் அவரது பாடல்கள் மனதை என்னவோ பண்ணுகிறது என்னும் எனது கருத்திற்கு  வலு சேர்கிறது. நளினமான பதிமினியின் நடன அசைவுகள் அற்புதம்.

திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)
நடிப்பு: M.G. ராமச்சந்திரன், பத்மினி
இயக்கம்: D. யோகானந்த்
இசை: K.V. மகாதேவன் 
பாடல்: கண்ணதாசன் 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMzM4NDkzMF8yUXBmNl84Nzlh/Nenjirukkum%20Varaikkum.mp3





நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
ஹா ஹா ஹா
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என்
முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்...

இனிமையான பாடல்... நன்றி...

கே. பி. ஜனா... சொன்னது…

//இந்தப் பாடல் மீண்டும் K V மகாதேவனின் இசையில் அவரது பாடல்கள் மனதை என்னவோ பண்ணுகிறது என்னும் எனது கருத்திற்கு வலு சேர்கிறது//
கே. வி. மகாதேவனின் பாடல்கள் அலாதியான இனிமையும் புதுமையும் கொண்டிருக்கின்றன என்று நானும் பலதடவை உணர்கிறேன். இந்தப் பாடல் அப்போதே பிரபலமான ஒன்று! மனதை அப்படியே அள்ளிக்கொண்டு போகும்! நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் பாடல்!

கருத்துரையிடுக