பின்பற்றுபவர்கள்

புதன், 22 மே, 2013

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண இரு

M S விஸ்வனதன், வாலி மற்றும் மலேசியா வாசுதேவன் இணைந்து வழங்கியிருக்கும் இன்னுமொரு அட்டகாசமானப் பாடல் இது. இசையும் பாடல் வரிகளும் அற்புதம், என்றாலும்  பாடகரின்  பங்கு  இதில்  ஏராளம் எனலாம். பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்  மலேசியா வாசுதேவன்.

திரைப் படம்: சரணாலயம் (1983)
இசை: M S விஸ்வனதன்
பாடல்: வாலி (மலேசியா வாசுதேவன் எழுதினார் என்பது ஒரு சாராரின் கருத்து. ஆனால் பாடல் வரிகளை கூர்ந்து கவனிக்கும் போது வாலி அவர்களே மனதில் படுகிறார்)
நடிப்பு: மோகன், நளினி, சத்யராஜ்
இயக்கம்: R சுந்தர்ராஜன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU0MDcyM19NTTdsSl9jZDA3/ezhugiraloru.SARANALAYAM.mp3

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால்  இந்த பூங்கோதை

இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போ
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்ல உதடழகும்

தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
கட்டழகு பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ
கால காலம் இங்கு எனக்காக

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
புன்னகைக்கும் ரத்தினமோ
தேவ தேவி இவள் எனக்காக

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால்  இந்த பூங்கோதை

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடல் முதல் வரியை படிக்கும் போதே, பாடலை நம்மை அறியாமலே பாடும் பாடல்களில் ஒன்று... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Covai Ravee சொன்னது…

ம.வாசு பேஸ் வாய்ஸ் குரல் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பகிர்விற்கு நன்றி.

Raashid Ahamed சொன்னது…

மலேசியா வாசுதேவன் என்றொரு மகத்தான பாடகர் பாடிய அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை கேட்கும் போது “பூவே இளைய பூவே” “அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா” என்ற பாடல்களும் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

சி.எல்.சிசில் சொன்னது…

ஓர் அழகிய பெண்ணை வர்ணிக்க கவிஞர் கையாண்ட வரிகள் அற்புதம் என்றால் பாடகரின் குரல் அதிமதுரம்! இருவரும் திரையுலகில் மறைந்தது ஒரு பெரும் வெற்றிடம்!

கருத்துரையிடுக