பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 மே, 2013

சின்னக் குழந்தை விழிகளிலே தெய்வம் வந்து சிரிக்குதம்மா

மறைந்த திரு T M S அவர்கள் பாடிய மற்றுமொரு இனிமையானப் பாடல்.

இன்னொரு பிறவி நான் எடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழவிடு
இறைவா
என்றும் குழந்தையாய் வாழவிடு

இது அவர் ஆசை மட்டுமல்ல. நம்முடையதும் கூட.

மனதை தென்றலாய் வருடிக் கொண்டு போகும் இந்தப் பாடலை திரு T M S பாடியிருக்கும் விதமும், இசையும், பாடல் வரிகளும் மறக்க முடியாதது. 

http://asoktamil.opendrive.com/files/Nl8xMzEwNjA0OF9lOUZtOV9kOGYy/ChinnaKuzhanthaiVizhigalile.mp3



திரைப் படம்: தேவி (1968)
நடிப்பு: முத்துராமன், தேவிகா
இசை: V. தக்ஷிணாமூர்த்தி
பாடல்: கண்ணதாசனாக இருக்கலாம்.
இயக்குனர்: ஏ.கே.வேலன்

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகிலில்லை
குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகிலில்லை

வளர்ந்த மனிதன் ஆசைகளால்
வாழும் வழிகளில் நேர்மையில்லை

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில்  தேனூற
கனியிதழ் சிரிப்பில் அழகாட
கண்ணப் பொய்கையில்  தேனூற

கவிதையை போல் வரும் குழந்தையின்
பிஞ்சுக் காலடி நிழலே சொர்க்கம் அம்மா

கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை

இன்னொரு பிறவி நான் எடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழவிடு
இறைவா
என்றும் குழந்தையாய் வாழவிடு

சின்னக் குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு அருமையான தாலாட்டும் குரல்... நன்றி...

மாதவி ராமன் சொன்னது…

ஏதோ ஒரு ஏக்கம் கொடுக்கும் பாடல்

கருத்துரையிடுக