பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 பிப்ரவரி, 2014

புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ்

சிந்தாள் சோப்புக்கு பாடலாசிரியர் விளம்பரம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. தமிழிலில் நான் இதுவரை சிந்தாள் என வார்த்தை கேள்விப் பட்டதில்லை காவடி சிந்து என உண்டு. எதுகை மோனைக்காக வந்தாள் காவடிச் சிந்தாள் என எழுதியிருப்பார் போலிருக்கிறது. அதே போல கண்ணான்.
இந்த அர்த்தமற்ற பாடல் வரிகளுக்கு சிரமப்பட்டு இசையும் குரலும் அமைத்திருக்கிறார்கள் பாவம்.
இந்தப் பாடலுக்கு நடித்திருக்கும் பெண் ஸ்ரீரஞ்சனி, நடிகை ஊர்வசியின் தங்கை என அறிகிறேன். எத்தனை பெண்கள் ஊர்வசி வீட்டில்?

திரைப்படம்: ஊரும் உறவும் (1982)
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம்
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: மேஜர் சுந்தர்ராஜன்???
நடிப்பு: சிவாஜி, விஜயா, நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி

http://asoktamil.opendrive.com/files/Nl8zMzEwMzcwNl9sdHYwRl9kYmRh/PullanguzhalMozhi.mp3





புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்
வந்தாள் காவடி சிந்தாள்

கண்ணன் கருமுகில்
குழல் குழல் குழல் என
காதல் முகம் மதி
நிழல் நிழல் நிழல் என
சொன்னான் காவியக் கண்ணான்
சொன்னான் காவியக் கண்ணான்

புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்

பாவை இளமனம்
சுகம் சுகம் சுகம் என
நாளை ஒரு தினம்
வரும் வரும் வரும் என
பார்த்தாள் கண் பூத்தாள்
பார்த்தாள் பார்த்த கண் பூத்தாள்

மோகம் எனும் கனல்
அணை அணை அணையென
தியாகம் எனும் புனல்
மழை மழை மழை என
பொழிந்தான் தன்னை மறந்தான்
பொழிந்தான் தியாகத்தில் நனைந்தான்

வெள்ளை மல்லிகைகள்
சிந்தும் புன்னகையில்
விரகமும் தனிமையும் மறைத்திருந்தாள்

வெள்ளை மல்லிகைகள்
சிந்தும் புன்னகையில்
இருவரும் உலகினை மறந்திருந்தார்

புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்

கண்ணன் கருமுகில்
குழல் குழல் குழல் என
காதல் முகம் மதி
நிழல் நிழல் நிழல் என
சொன்னான் காவியக் கண்ணான்

தென்றல் நடந்தது
சிலு சிலு சிலு என
தேகம் குளிர்ந்தது
குலு குலு குலு என

மேகம் யாத்திரை போகும்
கொடைக்கானலில்
சிறு சிறு பனித் துளி
பன்னீர் தெளித்தது
குறு குறு எனும்படி

பூவும் பஞ்சனை போடும்
அந்த வானிலவு இன்று தேனிலவு
அழகிய ஒலி மழை அமுதங்களே ஹே ஹே

அந்த வானிலவு இன்று தேனிலவு
அழகிய ஒலி மழை அமுதங்களே

புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்
வந்தாள் காவடி சிந்தாள்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

இன்றைக்கு இந்த எனது பதிவு ஒரு சரியான, பார்வைக்குத் தகுதியானதாக இருப்பதற்குக் காரணமான திரு திண்டுக்கல் தனபால் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள். இருக்கும் மிச்ச சொச்ச குறைகளையும் களைய அவர் உதவி செய்வார் என நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

இன்றைய பதிவில் கிரேசி மோகனின் வெற்றிபெற்ற "மேரேஜஸ் மேட் இன் சலூன்" என்ற நாடகம் இயக்குனர் திலகம் K பாலசந்தர் அவர்களால் படமாக்கப் பட்டு அவ்வளவாக வெற்றி நடை போடவில்லையென்றாலும் ஓரளவிற்குக் கலகலப்பாக ஓடிய பொய்க்கால் குதிரை.
மிக மிகச் சாதாரணமான ஒரு பாடல், எஸ் பி பியின் கைபட்டு (வாய்ப்பட்டு?) எவ்வளவு எல்லாம் பிரமாதமாக்கப் பட்டுள்ளது என்பதைக் கவனிக்கும் போது.... எல்லாம் தெரிகிறது.....ரசித்துக் கேட்டால் இனிமையான பாடல். ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் எனச் சொல்ல வைக்கிறது.


திரைப் படம்: பொய்க்கால் குதிரை (1983)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: வாலி, ராமகிருஷ்ணா, விஜி
பாடல்: வாலி
இயக்கம்: K பாலசந்தர்
கதை: கிரேஸி மோகன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMjcwNzQ4M191Uk5BeF8zODI0/Ellaam%20Therigiradhu%20-%20Hot%20Tamil%20Song%20-%20Poikkal%20Kuthirai.mp3

<iframe src="https://www.opendrive.com/listen/Nl8zMjcwNzQ4M191Uk5BeA" height="25" width="297" style="border:0" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>




ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது
உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது

ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
உன்னைதான் தீண்டிட ஏங்குது வாடையே

அழகு எல்லாம் ஹா ஹா ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது
நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது
பக்கம் நெருங்கி வந்தால்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது
பக்கம் நெருங்கி வந்தால்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

நாளெல்லாம் மேனியை
நூலிடை நீந்துமோ
நான் அதை பார்க்கையில்
என் மனம் தாங்குமோ

அழகு எல்லாம் ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அழைக்கிறது
திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அழைக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன்
தேகம் கொதிக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன்
தேகம் கொதிக்கிறது

பார்வைகள் தேடிடும்
பேரெழில் பிம்பமே
நீ எனை சேர்ந்த பின்
வேறெது இன்பமே

அழகு எல்லாம் ஹா ஹா ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் ம் ம் ம் ம் ஹா ஹா ஹா




ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

நேர்மறையான (Negative) அர்த்தம் கொண்ட பாடல் வரிகள் நமது தமிழ் படங்களுக்கு அப்போது புதிது. இந்தப் பாடலும், இது குழந்தை பாடும் தாலாட்டு எனும் பாடலும் அப்படிப்பட்டவைதான். ஆகையால் பட்டென்று பற்றிக் கொண்டது.
இவ்வளவு திறமை உள்ளவர் ஏன் சமீப காலங்களில் எழுதிய பாடல்களும் இசையும் தேறவில்லை என்பது புதிரான விஷயம்.
இந்தப் படத்திற்கு AA ராஜ் என்னும் இசையமைப்பாளர்  உதவியாக இருந்தார். கொஞ்ச நாளில் அவர் மறைந்த பின்பு அப்படியே சில படங்களில் ஒப்பேத்திவிட்டார். பின்னர் இசையமைத்த, பாடல் எழுதிய படங்கள் அவருக்கு வெற்றியை தரவில்லை.

திரைப்படம் :ஒரு தலை ராகம். (1980)
இசை, பாடல், இயக்கம் : விஜய் டி ராஜேந்தர்
பாடியவர் : எஸ் பி பி
நடிப்பு: சங்கர், ருபா


http://asoktamil.opendrive.com/files/Nl8yMzY5MzY2MF8yMmxsMF8wYTI3/VaasamillaaMalaridhu-OruThaalaiRagam.mp3






வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

புஷ்பராகம் சக்ரவாகம் ரத்னஹாரம் திவ்யரூபம்

\

என்னவென்று தெரியவில்லை, கொஞ்ச நாட்களாக காதொலியும் கண்ணொளியும் (Audio and Video players) இணைப்புகளாக வருவதில்லை. அதை சரி பார்க்கவும் நேரமில்லை. இன்று சென்னை பயணம் இருப்பதால் அங்கே போய் சரி பார்க்க முயற்சிக்கிறேன். முடியவில்லை என்றால் Wordpressக்கு  மாறிவிட வேண்டியதுதான்.

தனிக்குடித்தனம் நாடகமாக வந்ததாக ஞாபகம். பின்பு படமாக்கப்பட்டது. மெரினா அவர்களின் நாடகம் என நினைக்கிறேன். இனிமையான இரு குரலிசை. அபூர்வமான பாடல்.  இந்தப் பாடலில் நடித்த நடிகை யாரென்று தெரியவில்லை.


திரைப் படம்: தனிக் குடித்தனம் (1977)
நடிப்பு:சோ, Y G மகேந்திரன், K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: S A கண்ணன்
பாடியவர்கள்: எஸ் பி பி, L R ஈஸ்வரி
பாடல்:தெரியவில்லை

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTYwNDg5OV9LcTJvdV9mOTY2/pushparaagam%20chakkrapaagam-thanikudithanam.mp3

<iframe src="https://www.opendrive.com/listen/Nl8zMTYwNDg5OV9LcTJvdQ" height="25" width="297" style="border:0" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>

புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்
புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம்
நீராடும் கோலங்கள்
இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம்
நீராடும் கோலங்கள்

காமரூபன் பத்மனாபன்
தேவதேவன் ராஜராஜன்
காளிதாசன் இன்ப நேசன்
காமரூபன் பத்மனாபன்
தேவதேவன் ராஜராஜன்
காளிதாசன் இன்ப நேசன்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்

நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கை கூட படவில்லை தாவணியில்
நம் கல்யாணம் முடிந்தது ஆவணியில்
என் கை கூட படவில்லை தாவணியில்
கட்டுப்பாடு சுகம் தட்டுப்பாடோ
நாம் ஒட்டிக் கொள்ள அம்மம்மாடி
இந்தப் பாடோ
புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம்
நீராடும் கோலங்கள்

உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
உன் சிங்கார ஸ்வரங்களை நீ படிக்க
அந்த சங்கீத ரசனையில் நான் துடிக்க
பத்துப் பாடல் இதழ் முத்துப் போலே
நான் சொல்ல சொல்ல
இன்னும் வரும் இன்ப நாளே

காமரூபன் பத்மனாபன்
தேவதேவன் ராஜராஜன்
காளிதாசன் இன்ப நேசன்

இன்னும் என்ன சொல்ல
உன் மேனி கொண்ட வண்ணம்
உல்லாசம் கொண்டாடும்
என் ஊஞ்சல் எண்ணங்கள்

புஷ்பராகம் சக்ரவாகம்
ரத்னஹாரம் திவ்யரூபம்
சந்த்ரலோகம் சப்த கீதம்





இதுதான் முதல் ராத்திரி



ரத்ன குமாரி என்கிற வாணிஸ்ரீ மிக சொற்ப படங்களில் தான் எம் ஜி யாருடன் நடித்திருக்கிறார். (ஊருக்கு உழைப்பவன், கண்ணன் என் காதலன், தலைவன் போன்றவை).
இந்தப் பாடல் மிக நன்றாக பிரபலம் அடைந்தது. மெல்லிய, தங்கு தடையில்லாமல் ஓடும் இசையும், எளிய பாடல் வரிகளும், அழகான குரல்களும் இதற்கு காரணம்.

திரைப்படம்: ஊருக்கு உழைப்பவன் (1976)
இசை: M Sவிஸ்வநாதன்
பாடல்: வாலி
நடிப்பு: எம் ஜி யார், வாணிஸ்ரீ
இயக்கம்: M கிருஷ்ணன் நாயர்
பாடியவர்கள்: K J யேசுதாஸ், வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTY4ODU5OF9uVks3OV84Yjk5/Ithuthaan%20muthal%20raathiri.mp3

<iframe src="https://www.opendrive.com/listen/Nl8zMTY4ODU5OF9uVks3OQ" height="25" width="297" style="border:0" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம்

இது தான் முதல் ராத்திரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே என்னை காக்கும் மந்திரி

அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி
கைகளில் வாரி வழங்கிய பாரி
தந்தானோ நீ தந்த மாதிரி

இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி
இதழோ கொடி முந்திரி
அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவ ராக மாலிகை

கடல்போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி

இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தேன் சுவை மேவும் செந்தமிழ் கீதம்

சமீபத்தில் மறைந்த திருமதி அஞ்சலி தேவி அவர்களுக்கு எமது அஞ்சலியாக இந்தப் பாடல். இனிமையான திருமதி P.லீலாவின் குரல், அர்த்தமுள்ள கவியும் அழகான இசையும், அழகான முன்னாள் நடிகையும் என எல்லாம் அழகாக இணைந்ததொரு விருந்து.


திரைப் படம்: டாக்டர் சாவித்திரி (1955)
இசை:G ராமனாதன்
குரல்: P லீலா
பாடல்: மருதகாசி
நடிப்பு: மறைந்த திருமதி அஞ்சலி தேவி, எஸ் பாலசந்தர்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDY2OTIwNV8wWGc4SF9lOWQ4/Thensuvai%20mevum%20senthamizh%20geedham.mp3





ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

தேன் குழலோசை
போல காதிலே
வித விதமாகிய
நாத வெள்ளமே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தேன் குழலோசை
போல காதிலே
வித விதமாகிய
நாத வெள்ளமே

பாய்ந்திடும் போதில்
நெஞ்சில் இன்பமே

பாய்ந்திடும் போதில்
நெஞ்சில் இன்பமே
உறவாடுமே
சுக போகமே
உல்லாசம் தன்னாலே உண்டாகுமே

தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

கான சஞ்சாரம்
காதல் பேர் தரும்
ஆனந்த கீதம்
அமுத சாகரம்

கான சஞ்சாரம்
காதல் பேர் தரும்
ஆனந்த கீதம்
அமுத சாகரம்

மானிட உயிர்கள்
மயங்கவே பெரும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மானிட உயிர்கள்
மயங்கவே பெரும்

மலர் போலவே
மனம் வீசுமே
மங்காத ஸ்ருங்கார
சங்கீதமே

தேன் சுவை மேவும்
செந்தமிழ் கீதம்
பொழிவது குரலாலே
சிந்தையை கிளரும்
மதுரச நாதம்
எழுவது விரலாலே

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி

பாடல் காட்சி கிடைக்கவில்லை. படத்தில் இடம் பெறவில்லையா தெரியவில்லை. வழக்கம் போல கிடைக்கும் போது இணைத்துவிடுவேன். எஸ் பி பியின் வழக்கமான இனிய ஆரம்ப கால குரல். அவருடன் இனிமையாக இணைந்துள்ளது சுசீலா அம்மாவின் குரல்.


திரைப் படம்: யாருக்கு யார் காவல் (1979)
பாடியவர்கள்: S சுசீலா,  S P பாலசுப்ரமணியம்
இயக்கம்: கே ஜே ஜோய்
பாடல்: தெரியவில்லை.
இசை: ரமேஷ் நாயுடு (V குமார் என நினைத்திருந்தேன்)
நடிப்பு: ஸ்ரீகாந்த், ஸ்ரீப்ரியா

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTIzMzg3M19EWEZ5N183MTk0/Sippiyin%20ullae%20muthaadum.mp3



ம் ம் ம் ம்
ல ல ல ல

சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி
மடியல்லவோ பொன்னூஞ்சல்
உன் மகனாய் நான் வரவோ
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி

உன்னோடு தான் நான் சொல்ல
நாணம் பிறந்ததைய்யா
சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் உன்னிடமே
மறைப்பாளோ தேவி

மன்மதன் கதை எழுத
மடல் என நானிருக்க
உண்டாகும் காவியங்கள்
ஹா
ஒன்றல்ல ஆயிரங்கள்

ரகசிய நாடகத்தில்
ரதி மதன் நடிக்கையிலே
திரை விட நேரமில்லை
ஹா
தொடர்ந்தது காதற் கலை

அம்மாடி நீ அணைக்கையிலே
உன் கைகளிலே

சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடமே
மறைத்தாளே தேவி

லலலலா
லலலலா
ஹா ஹா
லலலலா

சுகங்களின் ஸ்வரங்களிலே
சுருதி லயம் சேர்ந்திருக்க
சங்கம தாகங்களோ
ஹா
சந்தித்த மோகங்களோ

நீ ஒரு பல்லவியோ
இவள் மனம் உன் சரணம்
என்னென்ன தாளங்களோ
ஹா
எல்லாமே பாவங்களோ

சங்கீதமே விளங்குதம்மா
உன் வடிவினிலே

சிப்பியின் உள்ளே
முத்தாடும் சேதி

சொல்லாமல் உன்னிடமே
மறைப்பாளோ தேவி

மடியல்லவோ பொன்னூஞ்ஜல்
உன் மகனாய் நான் வரவோ

ம் ம் ம் ம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 

துயிலாத பெண் ஒன்று கண்டேன் எங்கே இங்கே என்னாளும்

சரணாலயம் படத்தின் "நெடு நாள் ஆசை ஒன்று" என்ற பாடல் காட்சியை இங்கு இணைத்துள்ளேன்.
http://asokarajanandaraj.blogspot.com/2013/05/blog-post.html

நன்றி. இன்றைய பாடலுக்கு வருவோம்....


சிறிய வயதில் இந்தப் படம் பார்த்த ஞாபகம். அப்போதே வெறுத்துப் போய்தான் திரை அரங்கத்தை விட்டு வெளியில் வந்ததாகவும் ஞாபகம். அவ்வளவு சோகம்.
ஆனால் பாடல்கள் அனைத்துமே அருமை. அதிலும் இந்தப் பாடல் உண்மையிலேயே  மீண்ட சொர்கம்தான். அழகான தமிழிலில்.

திரைப் படம்: மீண்ட சொர்க்கம் (1960)
இயக்கம்:C V ஸ்ரீதர்
இசை: T ஜலபதிராவ்
குரல்கள்: A M ராஜா, P சுசீலா
நடிப்பு: ஜெமினி, பத்மினி
பாடல்:கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTI3NTQyNl82SUVEQ19lMmQx/thuyilatha%20pen.mp3





துயிலாத பெண் ஒன்று கண்டேன்

எங்கே

இங்கே என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

எங்கே
இங்கே என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

அழகான பழம் போலும் கண்ணம்
அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்

பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக்  கண் தந்த அடையாளம் போதும்
இந்தக்  கண் தந்த அடையாளம் போதும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

நானா

ஆமாம் என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

யாரோ

நீதான் என்னாளும்
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

மணமேடைதனில் மாலை சூடும்
உங்கள் மன மேடைதனில் ஆட வேண்டும்

நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
அதில் நடமாடி பயனேதும் இல்லை
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

ஒஹோ

என்னாலும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

புதன், 12 பிப்ரவரி, 2014

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்

 பாடல் காட்சி கிடைக்கவில்லை. இனிமையான பாடல். ஆனால் பாடல் வரிகள் தெளிவாக இல்லை. ஒரு சில கவிதை வரிகளைத் தவிர மற்றைய வரிகளும் எதுகை மோனையுடன் இருப்பதாகத் தெரியவில்லை.கேட்டு ரசிக்கலாம். இது ஒரு அபூர்வமான பாடலாக நினைக்கிறேன்.

திரைப் படம்: ஓ மஞ்சு (1976)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: மறைந்த நடிகர் மாஸ்டர் சேகர், கவிதா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTI3MDYzNV8yVGM2UV8yOGFk/idhu%20arangetram%20agadha%20nattiyam.mp3



ல ல ல ல ல
ஹா ஹா ஹா ஹா
ல ல ல ல ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

பனி மேடை மீது பாதங்கள்
தப்பிப் போடும் இன்ப தாளங்கள்
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

இளமையில் சந்திக்கும்

இரு மனம் சிந்திக்கும்

நினைவுகள் தித்திக்கும்

கவிதையில் வர்ணிக்கும்

கலைக் கூட நமக்காக உருவானதோ
இந்தக் கலைக் கூட நமக்காக உருவானதோ

பல கோடி எண்ணம் புரியாத வண்ணம்
பல கோடி எண்ணம் புரியாத வண்ணம்
கலை கொஞ்சும் கண்ணோடு கதை பேசுதோ
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

இதயமும் வெட்கிக்கும்

இளமையில் ஒத்தி வை

பனி மலர் கண்ணுக்குள்

பல வகை வைரங்கள்

விலை போட முடியாத சிலை அல்லவோ
இது விலை போட முடியாத சிலை அல்லவோ

கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல
சதிராடி வரும் போது சுகமல்லவோ
இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
ஆ ஆ
இது அழகான மலராடும் நாடகம்
ஆ ஆ

அவரவர் சொர்க்கங்கள்

அவரவர் பக்கங்கள்

சில சில சிற்பங்கள்

சிரி சிரி வெட்கத்தில்

இள மான்கள் அரசாளும் சாம்ராஜியம்
இது இள மான்கள் அரசாளும் சாம்ராஜியம்

மணி மாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
மணி மாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு
அவையாவும் மனம் சேரும் திரு நாளிது

இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம்
இது அழகான மலராடும் நாடகம்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

நான் முன்னையே சொன்னது போல அதென்னவோ பாரதியாரின் பாடல்கள் தமிழ் திரைப் படங்களில் எந்தவொரு தவறான கருத்துக்கும் இடம் கொடுக்காமல் நமது இசையமைப்பாளர்கள் அழகாகவே வழங்கியிருக்கிறார்கள்.
இங்கும் அவரது பாடல் எப்படி கையாளப்பட்டுள்ளது பாருங்கள். மிகச் சிறிய பாடல்தான். எப்படியோ சுகமாக நீட்டி வழங்கியிருக்கிறார் விஸ்வநாதன்.

திரைப் படம்: கண்ணே கனியமுதே (1986)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: மகா கவி பாரதியார்
இயக்கம்: கண்ணன் (பிற்காலத்தில் யார் கண்ணன்)
பாடியவர்கள்: K J யேசுதாஸ், B H சசிரேகா
நடிப்பு: அமலா, ரஹ்மான்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTExNDc5OV93SXBBNV8xMmM4/NinnaiyeRathiyendru.mp3






நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று  சரணமெய்தினேன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று  சரணமெய்தினேன்

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று  சரணமெய்தினேன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று  சரணமெய்தினேன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று  சரணமெய்தினேன்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்

பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே

மாறன் அம்புகள்  என் மீது வாரி வாரி வீச நீ
மாறன் அம்புகள்  என் மீது வாரி வாரி வீச நீ

கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
கண்ணம்மா
தன்னையே சகியென்று  சரணமெய்தினேன்


சனி, 8 பிப்ரவரி, 2014

கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே

இந்தப் பாடலில் குழந்தையாக நடித்திருப்பது சாரதா ப்ரீதா. திருமதி ஜானகி அம்மா குழந்தை குரலில் அருமையாக பாடியிருந்தாலும், இனிமையான மென்மையான அவரது குரல் பிற்காலங்களில் கொஞ்சம் வரண்டதாக காணப்பட்டதற்கு அவர் இது போல குரலை மாற்றி குழந்தையாகவும் கிழவியாகவும் இப்படி பலதரப் பட்ட வகையில் பாடியதே காரணம் என நான் நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து.

அன்பர்களுக்கு இதில் சம்மதம் இல்லையென்றால்முன்பு தூக்கமும் கண்களை தழுவட்டுமே, காலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் போன்ற பாடல்களை  கேட்டுப் பார்த்தால் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

பாடல் வரிகள் நன்றாகவே உள்ளது.

திரைப் படம்: ருசி கண்ட பூனை  (1980)
நடிப்பு: சரிதா, சுதாகர்
இசை: இளையராஜா
இந்தப் பாடலை யார் எழுதியது என தெரியவில்லை. இந்தப் படத்தின் மற்ற பாடல்களை திரு பஞ்சு அருணாசலம் எழுதியதாகத் தெரிகிறது.
இயக்கம்: P முத்துராமன் என்பதாக இணையத்தில் உள்ளது.

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTA3ODIyOF9oWGhWQl85OWRl/kannaa%20nee%20inge%20vaa.mp3





கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
நீ இருக்குமிடம் எனக்கே தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா
கண்ணா
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே

உன்னோட நான் விளையாடனும்
வருவாயா கண்ணா
உன் புல்லாங்குழல் நான் கேட்கனும்
ஊதுவாயா கண்ணா

கோபியர்களுடனே விளையாடினாயாமே
பசுக்களெல்லாம்  கூட
உன் புல்லாங்குழலை கேட்டுச்சாமே
நான் கேக்க கூடாதா
சொல்லு நீயே சொல்லு

கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே

பெரிய பாம்பைக் கொன்னியாமே
உனக்கு பயமே இல்லியா
ராட்சசதரையும் கொன்னியாமே
அப்பாடா உனக்கு அவ்வளவு தைரியம்
பெரிய மலையை ஒரு விரலால் தூக்கினியாமே
உனக்கு அவ்வளவு பலமிருக்கா
சொல்லு
வெண்ணைத் திருடி தின்னியாமே
திருடக் கூடாது
கேட்டு வாங்கிதான் சாப்புடனும்
வெண்ணைத் திருடி தின்னியாமே
ம்ம்ம்
எனக்கும் கொஞ்சம் தாயேன்
தா
மண்ணை அள்ளித் தின்னியாமே
சீச்சி மண்ணை யாராவது திம்பாங்களா
மண்ணை அள்ளித் தின்னியாமே
அய்யோ அது எனக்கு வேண்டாம்
வாய்க்குள்ளேயே நீ உலகத்தையே காட்டினியாமே
ஆமா இவ்வளவு சின்ன வாய்க்குள்ளே
அவ்வளவு பெரிய உலகத்தை எப்படிதான் காட்டினே
பொம்மை உலகம் காட்டினியா
உலகத்தையே வாய்க்குள்ளேயே நீ காட்டினியாமே
எனக்கும் காட்ட மாட்டாயா
எனக்கும் காட்ட மாட்டாயா

கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
நீ இருக்குமிடம் எனக்கே தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா
கண்ணா
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே




வியாழன், 6 பிப்ரவரி, 2014

கண்ணான கண்ணனுக்கு அவசரமா

மீண்டும் கணீர் குரலோன் சீர்காழி S கோவிந்தராஜனுடன் இணைந்து P சுசீலா பாடி இருக்கும் பாடல். இதிலும் சுசீலா அம்மாவின் குரல் தனித் தன்மையுடன் ஒலிக்கிறது.

திரைப் படம்: ஆலய மணி (1962)
இயக்கம்: K ஷங்கர்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி, S S ராஜேந்திரன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTAwOTc3Nl9kU1JGUF8xYmQ3/kannana%20kannanukku%20avasarama.mp3





வானம்பாடி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹோ ஹோ ஹோ ஹோ

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கண்ணழகை நான் காணக் கூடாதா
கல்யாணத் தேரோடக் கூடாதா
பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
உள்ளத்தில் வீடுகட்டி
உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா

கன்னந்தனில் முத்தமிட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பொன்னான கண்மணிக்குப் புரியாதா
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா

மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா

அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணம் கண்டு நான் பாடவா
இந்தமலர் வண்ணம் கண்டு நான் பாடவா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா

கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா

ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நாளாம் நாளாம் திருநாளாம்

இனிமையான பாடல். நகைச்சுவை படங்களை எடுப்பதில் இயக்குனர் C V ஸ்ரீதர் என்றும் முன்னிலைதான். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பாலையா, ரவிச்சந்திரன் பணக்கார வீட்டு பிள்ளை என தெரிந்ததும் மிகவும் மரியாதை தெரிவிப்பதாக நினைத்து அசோகன் என்ற அவரை அசோகரு உங்க மகரா என்பார். (அசோகன் உங்க மகனா?) (வசனம் சித்ராலயா கோபு)
இதே போன்று நகைச்சுவை வசனங்களை சமீப காலங்களில் கிரேசி மோகன் கதை வசனத்தில் கண்டதுண்டு.
இளமை ததும்பும் பாடல் காட்சி கண்டு மகிழ்வோம்.

திரைப்படம்: காதலிக்க நேரமில்லை (1964)
பாடியவர்கள்: P B ஸ்ரீநிவாஸ், P சுசீலா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ரவிச்சந்திரன், ராஜ்யஸ்ரீ
பாடல்: வாலி (கண்ணதாசன்??)

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDcxOTA4OV9xdUJFMF9kMTFk/Naalaam%20naalaam.mp3






நாளாம் நாளாம் திருநாளாம் 

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் 

ஆ ஆ ஆ ஆ ஆ  

மணமகன் இந்த ஊஞ்சலில்

மணமகள் மன்னன் மார்பினில்

அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்

அது காதல் தேவனின் காவியம்

அதில் ஒருவர் ராகமாம் 

ஒருவர் தாளமாம்

இருவர் ஊடலே பாடலாம்
ஹோ ஹோ 

ஹோ ஹோ ஓஹு ஓஹோ 

ஹா ஹா ஆ ஆ ஆ 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நாளாம் நாளாம் திருநாளாம் 

ஆ ஆ ஆ ஆ ஆ 

இளமையின் இந்த ரகசியம் 

இயற்கையில் வந்த அதிசயம்

இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்

அதில் நாமும் இன்றொரு காவியம் இந்த

இளமை போகலாம் முதுமை சேரலாம்

இருவர் காதலும் மாறுமோ

ஹோ ஹோ 

ஹோ ஹோ ஓஹு ஓஹோ 

ஹா ஹா ஆ ஆ ஆ 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நாளாம் நாளாம் திருநாளாம் 

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய காதலர் மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் 

ஆ ஆ ஆ ஆ ஆ 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பக்கத்து வீட்டு பருவ மச்சான்

இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் திருமதி P சுசீலா அம்மாதான் பாடியிருப்பார். டூயட் பாடல் என தனியாக இல்லை. எல்லா பாடல்களும் வாலி எழுதியவை.
பாடல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் பிடிவாதமாக இருப்பாராம். சுசீலா அம்மாவையும் மிக வித்தியாசமாகவும் தனித் தன்மையோடும் பாட வைத்துவிடுவதில் இயக்குனர் வல்லவர்.
உதாரணமாக குறத்தி மகன் என்ற படத்தில் சுசீலா அம்மா ஒரு பாடலை டி எம் எஸ் உடன் பாடியிருப்பார். (குறத்தி வாடி என் குப்பி) அது போல வேறு ஒரு பாடலை இன்று வரை நான் கேட்டதில்லை.

திரைப் படம்: கற்பகம் (1963)
பாடியவர்:P  சுசீலா 
பாடல்: வாலி 
இசை: M S விஸ்வநாதன், T K  ராமமூர்த்தி (K V மகாதேவன் இல்லையோ?)
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், சாவித்திரி, விஜயா 
இயக்கம்: K S கோபால கிருஷ்ணன் 







ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் 
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்

பார்வையிலே படம் புடிச்சி
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்

மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மனசுக்குள்ளே தேரோட்ட
மை விழியில் வடம் புடிச்சான்
மருக்கொழுந்து வாசத்திலே
மாந்தோப்பில் வழி மறிச்சான்
மாந்தோப்பில் வழி மறிச்சி
மயக்கத்தையே வரவழைச்சான்

பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்

தை மாசம் தாலி கட்ட
மார்கழியில் கை புடிச்சான்
தை மாசம் தாலி கட்ட
மார்கழியில் கை புடிச்சான்
யமுனையிலே வெள்ளம் இல்லை
விடியும் வரை கதை படிச்சான்
விடியும் வரை கதை படிச்சி
முடியாமல் முடிச்சி வச்சான் 

பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஹோ ஹோ ஹோ ஹோ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஊரெல்லாம் உறங்கி விடும்
உள்ளம் மட்டும் உறங்காது
ஊரெல்லாம் உறங்கி விடும்
உள்ளம் மட்டும் உறங்காது

ஓசையெல்லாம் அடங்கி விடும்
ஆசை மட்டும் அடங்காது
ஆசை மட்டும் அடங்காமல்
அவனை மட்டும் நினைத்திருப்பேன்
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் புடிச்சான்
பார்வையிலே படம் புடிச்சி
பாவை நெஞ்சில் இடம் புடிச்சான்
ஹா ஹா ஹா ஹா ஹாஹாஹா 
ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ