பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 நவம்பர், 2010

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

வேதாவின் இசையமைப்பில் மற்றுமொரு அழகானப் பாடல்
படம்: பார்த்திபன் கனவு (1960)

இசை: வேதா
 நடிப்பு: ஜெமினி, வைஜெயந்திமாலா
இயக்கம்: யோகானந்த்
பாடியவர்கள்: A M ராஜா, P சுசீலா

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா...சுகமா

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

பாவலன் கவியே

பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

வேலால் எறிந்து வெல்லும்

உங்கள் வீரமும் காதல் சொல்லும்

வேலால் எறிந்து வெல்லும்

உங்கள் வீரமும் காதல் சொல்லும்

பால் போல் தெளிந்த முகமும்

பால் போல் தெளிந்த முகமும்

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்

சித்திர வடிவம் போலே தங்க சிலையைக் கண்டதினாலே

நித்திரை தீர்ந்திடும் கனியே

உன் நினைவில் நீண்டது மனமே

உங்கள் அழகிய மேனி சுகமா

உன் காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

பாவலன் கவியே

பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

வளரும் காதலின் எல்லை...

இதை மறுப்பவர் யாரும் இல்லை...

வளரும் காதலின் எல்லை...

இதை மறுப்பவர் யாரும் இல்லை...

வளரும் காதல் மலரும்...

வளரும் காதல் மலரும்...

நம் வாழ்வினில் அமைதி நிலவும்...

உங்கள் அழகிய மேனி சுகமா

உன் காவலன் மேனி சுகமே

பழகும் தமிழே பார்த்திபன் மகனே

அழகிய மேனி சுகமா

பாவலன் கவியே

பல்லவன் மகளே

காவலன் மேனி சுகமே

உன் கைகளினால் வந்த குணமே

உன் கைகளினால் வந்த குணமே

கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு

நல்ல இசையும், குரலும், அர்த்தமுள்ள கவிதையும் இணைந்தால் இனிமையான பாடல் இப்படித்தான் இருக்கும்.

படம்: துளசி மாடம் (1963)

இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி

http://www.divshare.com/download/13326733-38f

கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே...

உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...உல்லாச வாழ்க்கை தொடங்குமுன்னே...
உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

வாசலில் கட்டிய தோரணம் போல்...வரிசையாய் காய்கற் வைக்கட்டுமா..
பாசமுடன் சொன்ன வாய் இனிக்க பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

ஊற்றிய வியர்வையை துடைக்கட்டுமா..நெருங்கி நெருங்கி உணரட்டுமா..
பட்டுப் புடவை முந்தாணையால் பக்கத்தில் இருந்தே வீசட்டுமா..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

வெட்கப் படாம சாப்பிடுங்க..ஏதும் வேனுமின்னா என்னை கேட்டிடுங்க..
பக்கத்தில்தானே காத்திருக்கேன்..நான் பத்திரமாக பாத்துக்குவேன்..
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...
கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா...

அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு அவரு

நல்ல இசை குரல்  கவிதைக்கு மீண்டும் ஒரு பாடல்

படம்:  துளசி மாடம் (1963)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: விபரம் கிடைக்கவில்லை
இயக்கம்: K B ஸ்ரீனிவாசன்
பாடியவர்: S ஜானகி

http://www.divshare.com/download/13326827-79b

அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...

அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்...
எதுக்கு இந்த கோபமாம் என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க ஆடிப் பாடி மகிழலாம்...
கன்னி என்னைப் பாருங்க கல கலப்பா பேசுங்க..
என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க..
கன்னி என்னைப் பாருங்க கல கலப்பா பேசுங்க..
என்ன தவறு கண்டு நீங்க இந்த கோபம் கொண்டீங்க..
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
கோபம் சிரிப்பா மாறுது.. குறும்பு பார்வை பிறக்குது..
பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது...
கோபம் சிரிப்பா மாறுது.. குறும்பு பார்வை பிறக்குது..
பாவம் அத்தான் மனசில் இப்போ ஆசை கிடந்து தவிக்குது...
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே..
சாப்பிடத் தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே..
ஆப்பிள் தோட்டம் எதிரிலே அருந்த பசி வயிற்றிலே..
சாப்பிடத் தான் கூப்பிட்டாலும் ஜம்பம் எதுக்கு புரியலே..
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...
ஓ ஓ ஓ ஓ ...அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தைப் பாரு...
அவரு அழகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வருத்தது யாரு...

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

ரொம்பவும் பிரபலமாகாத ஆனால் நல்ல இசையில் அமைந்த பாடல்

படம்:    சிறையில் பூத்த சின்ன மலர்  (1990)
இசை: இளையராஜா
நடிப்பு: விஜயகாந்த், நிஷாந்தி
இயக்கம்: P அமிர்தன்
பாடியவர்கள்: KJY, சித்ரா

http://www.divshare.com/download/13343699-cd8

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

நெஞ்சை அள்ளும் வாடைக் கொண்ட தஞ்சைக் கோபுரம் நீ..
நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்த பாத்திரம்..

வண்டு வந்து தங்கத் தானே தங்கத் தாமரை..
ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்க்கும் உள்ள நாள் வரை..

அந்தி வெய்யில் காயும் போது..அன்பு வெள்ளம் பாயும் போது..
சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ..

தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச..விட்டு விட்டு நானும் கொஞ்ச..
கட்டில் ஒன்று போட மண நாள் இல்லயோ..

திருமணம் புரிவது என்று..துடிக்குது இளமனம் இன்று..
அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன உனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பானமோ..
உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ..

சின்னப் பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ..
நீ சிந்துகின்ற பார்வை என்ன சொர்க வாசலோ..

என்றும் உள்ள சொந்தம் என்று ஏழு ஜென்ம பந்தம் என்று
நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது..

அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப் போல ஒட்டிக் கொண்டு
இன்றுக் காணும் இன்பம் நிறம் மாறாதது..

வளருது வளருது மோகம் விளையுது விளையுது தாகம்
இனி இந்த விழிகளில் உறக்கம் உண்டோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
சுதியொடு லயங்களும் கூட சதங்கைகள் ஜதி ஸ்வரம் பாட..
இவளென்ன எனக்கென பிறந்தவளோ..

அதிசய நடமிடும் அபி நய சரஸ்வதியோ

நகை அரும்பிய திருமுகம் அழகிய முழு மதியோ..

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று

அழகான ஒரு பாடல்

திரைப் படம்:  தேன் சிந்துதே வானம் (1975)
இயக்கம்: R சங்கரன்
நடிப்பு: கமல், சிவகுமார், ஜெயசித்ரா
இசை: V குமார்
குரல்கள்: TMS ,ஸ்வர்னா

http://www.divshare.com/download/13362889-02b

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ...

கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே...தந்தம் போல் சொந்தம் கொண்டேன் எண்ணம் போல் வண்ணம் கொண்டேன்...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று உனக்காக நேரில் வந்ததோ...

மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ...

என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ...

மன்மதன் என்பவன் மந்திரம் சொல்வது மாலை நேரமோ...

ஆ ஆ ஆ என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ...

மடல் வாழை மேனி கண்டு....

மலர் தோட்ட ராணி என்று...

மடல் வாழை மேனி கண்டு....

மலர் தோட்ட ராணி என்று...

தொடும் போது வெட்கம் வந்து தடை போடுமோ...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று

எனக்காக நேரில் வந்ததோ...

புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ...

முன்னுரை நீயென முடிவுரை நான் என பாடம் சொல்லவோ...

புத்தகம் போல் உனை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ...

முன்னுரை நீயென முடிவுரை நான் என பாடம் சொல்லவோ...

ஒரு பாதி நெஞ்சம் சொல்ல...

மறு பாதி மஞ்சம் சொல்ல...

ஒரு பாதி நெஞ்சம் சொல்ல...

மறு பாதி மஞ்சம் சொல்ல...

உயிர் காதல் கவிதை ஒன்று உருவாகுமோ...

எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை என்று எனக்காக நேரில் வந்ததோ...

வியாழன், 25 நவம்பர், 2010

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

அழகான பாடல். SPB மற்றும் வாணி ஜெயராம் மிக உணர்ந்து பாடி இருக்கிறார்கள்

திரைப் படம்:   வண்டிச் சக்கரம்  (1980)
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: சிவகுமார், சரிதா
இசை: சங்கர் கணேஷ்

http://www.divshare.com/download/13291963-a07

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

இது ஆனந்த ராகத்தின் ஆலாபணை என் அன்பொன்று தானே உன் ஆராதனை...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

இது ஆனந்த ராகத்தின் ஆலாபணை என் அன்பொன்று தானே உன் ஆராதனை...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

சேரும்...

விழியெல்லாம் ஒளி வெள்ளம் எங்கள் வீடெங்கும் தீபங்களே...

மனமெல்லாம் இசை வெள்ளம் இன்பம் மாறாத நாதங்களே...

எங்கும் பூமேகம் தேன் மாரி பெய்கின்றது...

நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

சேரும்...

மண்ணும் விண்ணும் ஒன்றாய் உந்தன் மான்விழிப் பார்வையில் கண்டேன்...

ஆ ஆ ஆ ஆ கண்ணும் நெஞ்சும் ஒன்றாய் இன்ப கங்கையில் ஆடிட வந்தேன்...

விண்ணோறும் கண்ணாத சொர்க்கங்களே...விண்ணோறும் கண்ணாத சொர்க்கங்களே...

எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

இது ஆனந்த ராகத்தின் ஆலாபணை என் அன்பொன்று தானே உன் ஆராதனை...

தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும்...

சேரும்...

செவ்வாய், 23 நவம்பர், 2010

நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு

திரு தாஸ் அவர்களின் விருப்பப் பாடல் மட்டும் இல்லை மிகவும் அழகாக முக்கோனக் காதலை கவிதையாக்கி இசையமைத்து பாடியிருக்கிறர்கள்.

திரைப் படம்: சித்ராங்கி (1964)

இயக்கம்: R S மணி
நடிப்பு: A V M ராஜன், புஷ்பலதா
இசை: S வேதா
குரல்கள்: T M S, P சுசீலா, ஜமுனா ராணி

http://www.divshare.com/download/13291867-14a

நெஞ்சினிலே.....
நெஞ்சினிலே நினைவு முகம்.. நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

ஆருயிர் என்று அழைத்தவளே...
புது ஆசை நெஞ்சில் விதைத்தவளே..
ஆருயிர் என்று அழைத்தவளே...
புது ஆசை நெஞ்சில் விதைத்தவளே..
நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதி இல்லை...
நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

வானத்தின் தாரகை பூவெடுத்தேன் என்றும் வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்...
வானத்தின் தாரகை பூவெடுத்தேன் என்றும் வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்...
அதில் தேன் இல்லையே என்று சொல்லி விட்டாய்..விரல் தீண்டாமலே மண்ணில் தள்ளிவிட்டாய்...தள்ளிவிட்டாய்...
நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

ஆயிர்ம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்..
ஆ ஆ ஆ ஆ...ஆயிர்ம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என் அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன்..
அந்த கோவிலிலே எந்தன் தெய்வமில்லை...நான் கோரிய வரமும் கிடைக்கவில்லை...

நெஞ்சினிலே நினைவு முகம்.. நிலவிலும் தெரிவதுன் அழகு முகம்.. ஆசை முகம்...
நெஞ்சினிலே நினைவு முகம்..

திங்கள், 22 நவம்பர், 2010

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

நல்லதொரு பாடல்

திரைப் படம்: அவன் ஒரு சரித்திரம் 1977
இயக்கம்: K S ப்ரகாஷ் ராவ்
நடிப்பு: சிவாஜி, மஞ்சுளா
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: TMS, P சுசீலா
 
http://www.divshare.com/download/13273809-310

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

பொன் மாலை சூடும் சாரம்...பூச்சூடும் காலம் சேரும்...

பொன் மாலை சூடும் சாரம்...பூச்சூடும் காலம் சேரும்...

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்...

தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்...

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

பொன் முத்து மாலையானேன்...உன் மெத்தை மார்பில் சாய்வேன்...

கைத் தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்...

ஒரு கட்டுப் பூவைப் போலே...உடல் கட்டுக் கொண்ட பாவை...

என் சொந்தம் ஆகிறாள்...நடக்குதே நாடகம்....

என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்...

வான் நிலவு ஒன்றுதான் வான் மீது சத்தியம்...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

பாடியவர்களின் குரலினிமைக்காகவே இந்தப் பாடல்

திரைப் படம்:  ரோஷக்காரி (1974)
இயக்கம்: மதுரை திருமாரன்
நடிப்பு: முத்துராமன், விஜயா, ஜெய்ஷங்கர்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: SPB, P சுசீலா

http://www.divshare.com/download/13078078-540

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...

வைர வெட்டுக் கண்ணங்கள் வெயில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற...

கன்னன் நெஞ்சில் எண்ணங்கள் மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கைகூட...

வைர வெட்டுக் கண்ணங்கள் வெயில் பட்டு மின்னுங்கள் காதல் தேனூற...

கன்னன் நெஞ்சில் எண்ணங்கள் மெல்ல மெல்ல துள்ளுங்கள் காலம் கைகூட...

மலர்களில் பட்டு வந்த தென்றல் உடல்களை தொட்டு நின்றதென்ன ஓ ஓ ஓ...

விழிதனை கட்டி நின்ற சொந்தம் வழிதனை விட்டு நின்றதென்ன ஓ ஓ ஓ ...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...

கண்கள் விளையாடுகின்றன..

கவிதை உருவாகிறது...

ஆ ஆ ஆ ஹா ஹா

ஹே ஹே ஹே ஹே

பச்சை புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டு கொஞ்சுங்கள் பாவம் கொண்டாட...

அச்சம் விட்டு செல்லுங்கள் இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட...

பச்சை புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டு கொஞ்சுங்கள் பாவம் கொண்டாட...

அச்சம் விட்டு செல்லுங்கள் இச்சை கொண்டு பின்னுங்கள் ஆசை நீரோட...

மனம் மனம் மஞ்சள் கொண்ட பெண்ணை குணம் இனம் கொண்டு வந்ததல்லவோ ஓ ஓ...

சுகம் வரும் என்று வந்த மன்னன் துணை வரும் சொர்க்கம் இங்கு அல்லவோ ஓ ஓ...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...

ஆனந்த மயக்கம்..அருகில் வந்த நெருக்கம்...

ஆரம்பம் இதுதான் தொடர்க்கதையே...

கோடை வசந்தம் மழைக் காலம்...

இனி எல்லாம் அவர்களுக்கே...

லா ஹா ஹே ஹேஹே ம் ம் ம்

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

மிக நிதானமான காதல் பாட்டு. இன்றையக் காலக் கட்டத்தில் கேட்பதற்க்கு கொஞ்சம் சிரமம்தான்
திரைப் படம்: அவள் யார் (1959)

இயக்கம்: K J மகாதேவன்
இசை: ராஜேஸ்வர ராவ்
பாடியவர்: T A மோதி என்று நினைக்கிறேன்
நடிப்பு: சிவாஜி, சௌகார் ஜானகி, பண்டரி பாய்
பாடலாசிரியர்: வித்வான் K லக்ஷ்மன்

http://www.divshare.com/download/13274163-79c

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஏன் ஊடலோ வெண்ணிலாவே...வா வா...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஏன் ஊடலோ வெண்ணிலாவே...வா வா...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

வாடாத பூவும் மலராத போதே...

வாடாத பூவும் மலராத போதே...

பாடாது வண்டும் சூடாமலே...

பாடாது வண்டும் சூடாமலே...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஆறாகப் பாயும் அனுராகதீபம்...

ஆறாகப் பாயும் அனுராகதீபம்...

ஆனந்தமே தரும் வாழ்வில்..

ஆனந்தமே தரும் வாழ்வில்..

தேனாக உள்ளம் சுவை காண்பதேது

தேனாக உள்ளம் சுவை காண்பதேது

நீயாக வாராய் நானாமலே...

நீயாக வாராய் நானாமலே...

நான் தேடும் போது நீ ஓடலாமோ...

ஏன் ஊடலோ வெண்ணிலாவே...

வெள்ளி, 19 நவம்பர், 2010

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

அழகான பாடல். தாயாகப் போகும் ஒரு பெண் தன் கணவனையும் தாலாட்டுகிறாள்

திரைப் படம்: தூண்டில் மீன் (1977)
இசை:  V குமார்
இயக்கம்: Ra சங்கரன்
நடிப்பு: லக்ஷ்மி, மோகன்
குரல்கள்: .S P B, P சுசீலா

http://www.divshare.com/download/13236349-890

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

என் அங்கமே உன்னிடம் சங்கமம்...

என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்..

என் அங்கமே உன்னிடம் சங்கமம்...

என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்..

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று...

தேவி வடிவாக கண்டேன் இன்று...

தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று...

தேவி வடிவாக கண்டேன் இன்று...

பூவிதழ் தன்னைப் பறித்து...

பூஜையை மெல்ல நடத்து...

பூவிதழ் தன்னைப் பறித்து...

பூஜையை மெல்ல நடத்து...

தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து...

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

நான் அறியாத ரகசியம் ஒன்று...

நூலிடைப் பார்த்தேன் தெரிந்தது இன்று...

நான் அறியாத ரகசியம் ஒன்று...

நூலிடைப் பார்த்தேன் தெரிந்தது இன்று...

தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயானபோதும்...

ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ளை போல் நான் தாயானபோதும்...

மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும்...

மணிப் பிள்ளை போலே மார்பில் நான் ஆட வேண்டும்...

மயக்கம் கொடுக்கும் மலரணை அதுவல்லவா

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

வண்ணக் கொடித் தந்த முல்லைச் செண்டு...

வந்து விளையாடும் பிள்ளை என்று...

வண்ணக் கொடித் தந்த முல்லைச் செண்டு...

வந்து விளையாடும் பிள்ளை என்று...

மோகன ராகம் படித்து...

மூவரும் கைகள் இணைத்து...

மோகன ராகம் படித்து...

மூவரும் கைகள் இணைத்து...

நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து...

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது...

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

அருமையான பாடல்

திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)

இசை: K V மகாதேவன்
இயக்கம்: யோகானந்த்
நடிப்பு: M G R, பத்மினி
குரல்கள்: T M S, P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்

http://www.divshare.com/download/13232865-5cf

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...

தங்கச் சிலைப் போலே உறவாடும் காளை.. அழகில் விளையாடும் இவ்வேளை...

தங்கச் சிலைப் போலே உறவாடும் காளை.. அழகில் விளையாடும் இவ்வேளை...

என் அழகில் விளையாடும் இவ்வேளை...

வானகம் கீழே வையகம் மேலே...மாறுதல் போலே தோன்றுவதாலே...

வானகம் கீழே வையகம் மேலே...மாறுதல் போலே தோன்றுவதாலே...

நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...

இரு கரைப் போலே தனியாக இருந்தோம்...அக்கறையோடு இங்கே கலந்தோம்...

இரு கரைப் போலே தனியாக இருந்தோம்...அக்கறையோடு இங்கே கலந்தோம்...

வருமென்று எதிர்ப்பார்க்கும் முன்னே.. வரும் மழைப் போலே நீ வந்தாய் கண்ணே...

வருமென்று எதிர்ப்பார்க்கும் முன்னே.. வரும் மழைப் போலே நீ வந்தாய் கண்ணே...

கவலை அல்லவோ கொண்டு வந்தேன்...

நான் காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்...

பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில்...

நீலப் பட்டாடை போல் தோன்றும் வானோடு...

உலகில் நிலவென்ன பேசும்...

குயிலென்ன பாடும்...

மலரென்ன சொல்லும் மனதிலே...

கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா...இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே...

நிலவென்ன பேசும்...

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

A L ராகவன், S ஜானகி ஆகியோரின் குரலில் இது ஒரு இனிமைப் பாடல்

திரைப் படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)

இசை: T K ராமமூர்த்தி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: ஜெமினி, தேவிகா

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ

பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ

வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ

திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ
உம்மை தேடியே வந்தவள் பழங்கதையோ

இங்கிருக்கும் எண்ணம் இன்னும் விளங்கலையோ

இன்று ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ

ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ

திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ 

அந்த திங்களும் உனக்கிட்ட பெயரல்லவோ

நுரைப் பொங்கிடும் அலை உந்தன் குழல் அல்லவோ

நான் தங்கிடும் இடம் உந்தன் மனம் அல்லவோ

எனைத் தனியென பிரிப்பது பிழையல்லவோ

இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ

அது காதினில் தேனென விழவில்லயோ

இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ

அது காதினில் தேனென விழவில்லயோ

அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ

இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ

இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ

வரும் கோபமும் குங்குமக் கோலமிடும்

கால் போவது போல் சென்று திரும்பிவிடும்

மனம் ஆயிரம் போர் வகை நடத்தி விடும்

இது ஆரம்பம் தான் அந்த நோய் அல்லவோ

இமை விழியை மூடும் வரை திறந்திருக்கும்

அதில் இளமை கொலுவேறி மகிழ்ந்திருக்கும்

இதழ் கனிந்தும் கனியாமல் குவிந்திருக்கும்

இதை காதல் என்பார்கள் சரிதானோ

இதை காதல் என்பார்கள் சரிதானோ

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

 சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ

பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ

வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ

திங்களுக்கு என்ன இன்று திருமணமோ

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

இந்தப் பாடல் ஒரு நல்ல கற்பனைக் கவிதை. TMS பாடுவது SSR பாடுவதை போலவே அமைந்துள்ளது.

திரைப்படம்: படித்த மனைவி (1965)
இசை: K V மகாதேவன்
நடிப்பு:, S S R,  விஜயகுமாரி
இயக்கம்: N கிருஷ்னசாமி

http://www.divshare.com/download/13232148-296

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

அறிவே உன் பெயர் தலைவி... இந்த அமைப்பே எந்தன் மனைவி...

பொன்மகள் தந்த முகம் கொண்டாள்...பூ மகள் வாழும் எழில் கொண்டாள்...

மண் மகள் பொறுமையை நீ கொண்டாய்...குல மகளே பயம் நீ ஏன் கொண்டாய்...

ஏவல் செய்வதில் பணி மகள் நீ...ஏற்றது சொல்வதில் மந்திரி நீ...

ஏவல் செய்வதில் பணி மகள் நீ...ஏற்றது சொல்வதில் மந்திரி நீ...

அழகு சிலை நீ மஞ்சத்திலே...பேசிப் பழகும் தமிழ் நீ இன்பத்திலே...

பழகும் தமிழ் நீ இன்பத்திலே...

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

படித்த பெண்களை மணப்பதற்கும்...பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார்...

உன் பண்பையும் அறிவையும் பார்த்தால் அவர்கள் படித்தப் பெண்ணையே தேடிடுவார்...

படித்த பெண்களை மணப்பதற்கும்...பயப்படுவார் அஞ்சி ஓடிடுவார்...

உன் பண்பையும் அறிவையும் பார்த்தால் அவர்கள் படித்தப் பெண்ணையே தேடிடுவார்...

அன்பே உன் பெயர் அன்னை... அழகே உன் பெயர் மங்கை...

அறிவே உன் பெயர் தலைவி... இந்த அமைப்பே எந்தன் மனைவி...

வியாழன், 18 நவம்பர், 2010

அவளொரு மோஹன ராகம்...அவளொரு மோஹன ராகம்...

அதிகம் பிரபலம் ஆகாத பாடல். சோகத்தை மிக அழகாக வடித்திருகிறார்.

திரைப்படம்:  தணியாத தாகம் (1982)
நடிப்பு: டெல்லி கனேஷ்,
இசை: A A ராஜ்
இயக்கம் E M இப்ராஹிம்
குரல்: SPB

http://www.divshare.com/download/13225586-4b6

அவளொரு மோஹன ராகம்
அவளொரு மோஹன ராகம்

எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக் கோவிலின் தீபம்

இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்

அவளொரு மோஹன ராகம்
அவளொரு மோஹன ராகம்

நிலவில்லா வானம் அழகில்லா கோலம்

அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்

நிலவில்லா வானம் அழகில்லா கோலம்

அவளில்லா நெஞ்சம் தனிமையில் வாடும்

எனக்கென்ன பாடல் அதற்க்கென்ன ராகம்

எனக்கென்ன பாடல் அதற்க்கென்ன ராகம்

என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்

அவளொரு மோஹன ராகம்

எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக் கோவிலின் தீபம்

இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்

அவளொரு மோஹன ராகம்
அவளொரு மோஹன ராகம்

என் ஆசையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து

உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து

என் ஆசையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து

உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து

பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை

பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை

என் பாடல் கேட்பார் யார் இங்கே கண்ணே

என் பாடல் கேட்பார் யார் இங்கே கண்ணே

அவளொரு மோஹன ராகம்

எனை விட்டு தனியே பிரிந்திட்ட போதும்
என் மனக் கோவிலின் தீபம்

இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்

அவளொரு மோஹன ராகம்
அவளொரு மோஹன ராகம்

புதன், 17 நவம்பர், 2010

சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி SR

சூலமங்களம் ராஜலக்ஷ்மி பாடிய அழகான பாடல். தொடர்ந்து T M S பாடிய பாடலையும் கேளுங்கள்
சபாஷ் மீனா SR
இசை: T G லிங்கப்பா
பாடல்: கு.ம. பாலசுப்ரமணியம்

http://www.divshare.com/download/13213445-e97

சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி

என் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

என் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

முத்து சரங்களை போல் ஓ ஓ ஓ ஓ ஓ

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடி

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடி

சித்திரம் பேசுதடி

காதல் நிலாவினிலே

காதல் நிலாவினிலே

இன்ப காணம் இசைத்திருந்தோம்

காதல் நிலாவினிலே

இன்ப காணம் இசைத்திருந்தோம்

கண் கட்டு வித்தையை போல் அந்த காட்சி மறைந்ததடி

கண் கட்டு வித்தையை போல் அந்த காட்சி மறைந்ததடி

சித்திரம் பேசுதடி

என் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

அன்பெனும் ஓடையிலே நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்

அன்பெனும் ஓடையிலே நான் ஆடி மகிழ்ந்திருந்தேன்

எண்ணம் குலைந்ததனாலே வெறும் ஏமாற்றம் ஆனதடி

எண்ணம் குலைந்ததனாலே வெறும் ஏமாற்றம் ஆனதடி

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி (TMS)

T M S பாடிய அழகான பாடல். இதன் மற்றுமொரு வடிவமான சூலமங்களம் ராஜலக்ஷ்மி பாடிய பாடல் இன்னும் அருமை

படம்: (1958) சபாஷ் மீனா (TMS)
இசை: T G லிங்கப்பா
பாடல்: கு.ம. பாலசுப்ரமணியம்
இயக்கம்:  P R பந்துலு
நடிப்பு: சிவாஜி, மாலினி

http://www.divshare.com/download/13213476-d4d
சித்திரம் பேசுதடி

உன் சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

முத்து சரங்களை போல் ஓ ஓ ஓ ஓ ஓ

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடி

முத்து சரங்களை போல் மோகன புன்னகை மின்னுதடி

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

தாவும் கொடி மேலே

தாவும் கொடி மேலே

ஒளிர் தங்கக் குடம் போலே

தாவும் கொடி மேலே

ஒளிர் தங்கக் குடம் போலே

பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலை தூண்டுதடி

பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலை தூண்டுதடி

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

என் மனம் நீ அறிவாய்

உந்தன் எண்ணமும் நானறிவேன்

என் மனம் நீ அறிவாய்

உந்தன் எண்ணமும் நானறிவேன்

இன்னமும் ஊமையைப் போல் மௌனம் ஏனடி தேன் மொழியே

இன்னமும் ஊமையைப் போல் மௌனம்
ஏனடி தேன் மொழியே

சித்திரம் பேசுதடி

எந்தன் சிந்தை மயங்குதடி

சித்திரம் பேசுதடி

எங்கெங்கும் அவள் முகம்..அங்கெல்லாம் என் மனம்...

மிகச் சாதாரணமான இசையில் இழையோடும் தமிழ்க் கவிதை. SIMPLY SUPERB

படம்:   நெருப்பிலே பூத்த மலர் (1981)
இயக்கம்: கௌவ்சிக்
நடிப்பு: சிவகுமார், பூர்ணிமா தேவி
இசை: K V மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயசந்திரன்
  
http://www.divshare.com/download/13213249-f97

எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

எங்கெங்கும் அவள் முகம்..

எத்தனை ஆனந்தக் கிளர்ச்சி..

என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி...

எத்தனை ஆனந்தக் கிளர்ச்சி..

என் இதயத்தில் ஆயிரம் உணர்ச்சி...

அத்தனை தேவதைக் கவர்ச்சி...

அத்தனை தேவதைக் கவர்ச்சி...

அவள் அசைவது தாமரை மலர்ச்சி...

நீல நிறம் கொண்ட ஆடை..

அதில் மீறிய புது மலர் வாடை...

ஆலிலை போலொரு ஜாடை...

அது ஆனந்த நாட்டிய மேடை...

எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

எங்கெங்கும் அவள் முகம்..

ஆனிப் பொன் மேனியை படைத்து...

அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து..

ஆனிப் பொன் மேனியை படைத்து...

அதில் ஆயிரம் வைரங்கள் பதித்து..

மாணிக்க புன்னகைக் கொடுத்து...

மாணிக்க புன்னகைக் கொடுத்து...

அவள் மலர்ந்து விட்டாள் என்னை நினைத்து...

அவள் மெல்லிய பாதங்கள் மிதித்தாள்...

என் மேனிக்கு ஆனந்தம் என்பேன்...

மல்லிகை மலர்ந்தது மண்ணில்...

அதன் வாசனை நடந்தது விண்ணில்...

எங்கெங்கும் அவள் முகம்..

அங்கெல்லாம் என் மனம்...

ஏந்திழை அவள் உடல் தங்கம்...

அவள் இயல் இசை நாடகச் சங்கம்...

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

செவ்வாய், 16 நவம்பர், 2010

சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா

சுத்தமான அமுதத் தமிழில் கணீரென்ற குரல்களில் மற்றுமொரு பாடல்திரைப்படம்: வீரக்கனல் (1960)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி
பாடலாசிரியர்: மருதகாசி
இயக்கம்: G K ராமு  

http://www.divshare.com/download/13205497-cf1

சித்திரமே
.. சித்திரமே .. சித்திரமே ..
சித்திரமே
சித்திரமே சிரிக்கக் கூடாதா

சிறிது நேரம் அருகில் நீயும்
இருக்கக் கூடாதா
சித்திரமே
சித்திரமே சிரிக்கக் கூடாதா

சிறிது நேரம் அருகில் நீயும்
இருக்கக் கூடாதா
சித்திரம்
போல் பிறந்து விட்டால் சிரிக்கக்
கூடாது

சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது
சித்திரம்
போல் பிறந்து விட்டால் சிரிக்கக்
கூடாது

சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது
சொல்லுக்கடங்காமல்
மலரும் தோகை உன் கண்களிலே

இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக்
காணுகின்றேன்

சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன்
கண்களிலே

இரு நெல்லின் மணிகளைப் போல் எனது நிழலைக்
காணுகின்றேன்
காணும்
இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க

காணும் இடத்திலெல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க

கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில்
எண்ண விந்தை

கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில்
எண்ண விந்தை
சித்திரம்
போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே

சிலையைப் போல உலகை நாமும்
மறந்திருப்போமே
அச்சம்
ஒரு கனியாய்

ஆசை அழகு மாங்கனியாய்

வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம்
முக்கனி காணுகின்றேன்

அச்சம்
ஒரு கனியாய்

ஆசை அழகு மாங்கனியாய்

வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம்
முக்கனி காணுகின்றேன்

இந்தக்
கனிகளெல்லாம் உங்கள் இன்பக் கனிகளன்றோ

இந்தக் கனிகளெல்லாம் உங்கள் இன்பக் கனிகளன்றோ
அன்புக்
கடலினிலே என்றும் ஆடித் தவழ்ந்திருப்போம்

அன்புக் கடலினிலே என்றும் ஆடித் தவழ்ந்திருப்போம்

சித்திரம்
போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே

சிலையை போல உலகை நாமும்
மறந்திருப்போமே
சித்திரம்
போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

அழகான பாடல் கௌரவமான வர்ணனை

படம்: எல்லோரும் நல்லவரே (1975)

இசை: V குமார்
இயக்கம்: S S பாலன்
நடிப்பு: முத்துராமன், மஞ்சுளா
குரல்: S P B
 
http://www.divshare.com/download/13198282-2e1

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

இது யார் மீது பலி வாங்கும் சோதனை...

உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

அந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா...

இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா...

நீயின்றி வானத்தில் நிலவேதடி...

அது உனைப் பாடும் தாலாட்டு நீலாம்பரி...

இது யார் மீது பலி வாங்கும் சோதனை...

உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி...

அந்த ரதி மாறன் கண்டாலும் தொலைந்தானடி...

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி...

அந்த ரதி மாறன் கண்டாலும் தொலைந்தானடி...

இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது..

அது கோடான கோடியை ஏய்க்கின்றது...

ஒரு அருள் வேண்டி நான் கேட்பேன் தேவனை...

இனி தினந்தோறும் வர வேண்டும் சுக வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

இது யார் மீது பலி வாங்கும் சோதனை...

உன்னைக் காண்போர்க்கு சுகமான வேதனை...

படைத்தானே ப்ரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்...

ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

 S P B மற்றும் P சுசீலா குரல்களில் மிக அமைதியான ஒரு மெல்லிசை பாடல்

படம்: தொட்டதெல்லாம் பொண்ணாகும் (1975)

இசை: விஜயபாஸ்கர்
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: ஜெய்சங்கர், ஜெயசித்ரா 

http://www.divshare.com/download/13198157-d0f

ஆஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஒ

ஓஹோ ஓ ஓ ஓ ஓ

ஆவணி மலரே ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

ஆவணி மலரே ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

கோவில் குங்குமம் குறு நகைச் சங்கமம்

பூவின் இதழ் தொடும் பொன் மேகமே

மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்

தூது கொண்டோடும் புது ராகமே

உனக்கொரு மனம் உண்டு

எனக்கதில் இடம் உண்டு

மறக்கவும் முடியாத பந்தம்

ஓ ஓ ஓ ஒ ஒ ஓ ஓ ஓ ஒ ஒ

ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அழகு வழியும் இளமை வெண்ணிலா

உருவம் எடுத்த பருவம் அல்லவா

ஆவணி மலரே ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

கன்னி இடையினில் மின்னும் மேகலை

என்னை அழைத்தது என்ன சொல்ல

காதல் மன்னனை தேடும் கண்களை

பேசும் சங்கதி என்ன சொல்ல

பனி தொடும் பாதமும்

மலர் தொடும் கூந்தலும்

என்னை தொடும் ஆனந்தமும்

என்ன சொல்ல

ஓ ஓ ஓ ஒ ஒ

ஓ ஓ ஓ ஒ ஒ

உடலும் மனது உனது சொந்தமே

இரவும் பகலும் மலரும் மஞ்சமே

ஆவணி மலரே

ஐப்பசி மழையே

கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...

தொலைபேசி மற்றும் நெட் வசதிகளும் இல்லாத காலத்தை நாமும் கொஞ்சம் நினைத்து பார்த்தால் இந்த பாட்டில் உள்ள வலியை புரிந்துக் கொள்ளலாம்.

படம்: பொற்ச்சிலை (1969)

நடிப்பு: ஜெமினி, விஜயகுமாரி
இயக்கம்:  A V ஃப்ரான்ஸிஸ்
பாடியவர்: P சுசீலா

http://www.divshare.com/download/13195776-ccb

அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...

அக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...

அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...

அக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...

கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து...

கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து...

தொட்டணைத்த காதலர்க்கு கடலலையே...என் தோளிரெண்டும் வாடுதடி கடலலையே...

கையிலே வளையல் இல்லை கண்ணிரெண்டில் தூக்கமில்லை..

கட்டியுள்ள ஆடைகளும் கடலலையே என் சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே...

பொற்ச் சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் கற்ச்சிலைக்கு சாத்துவேனோ கடலலையே...என் கண்ணிறைந்த காதலந்தான் வரவில்லையே..

மீனாகப் பிறந்திருந்தால் வேண்டிய தவமிருப்பேன் நானாக போயிருப்பேன் கடலலையே...

நான் மானாகப் பிறந்துவிட்டேன் கடலலையே...

அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...

அக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...

திங்கள், 15 நவம்பர், 2010

விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

ஒரு மாதிரியான பாடல் இது.. இளையராஜா இசையில் இனிமையாக பாடி இருக்கிறார்கள் ஜெயசந்திரனும் ஜானகி அம்மாவும்.

படம்:  தழுவாத கைகள் (1986)
நடிப்பு: விஜயகாந்த், அம்பிகா
இயக்கம்: சுந்தரராஜன்  

http://www.divshare.com/download/13181777-49d

விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை...

விளங்காததா இனிமேல்...

விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

பூங்கூந்தலும் கார்மேகமோ.. பூங்காற்றிலே ஊர்கோலமோ...

ஓய்வின்றி காண்கின்ற ஆலிங்கணம்..உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்...

என் கண்களில் உன்னை ரசித்தேன்...சிறையெடுத்தேன்...

உன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைத்தேன்...

நான் உன் உடல் உயிர் நீதான்..நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்..

விழியே விளக்கொன்று ஏற்று...விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை...

விளங்காததா இனிமேல்...

நான் கேட்டது தேன் பூவிதழ்...என் கண்மணி எங்கே பதில்...

நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான்...நீ தந்து என் பசி நான் ஆறத்தான்...

தேகம் என்று ஒரு விருந்து..திரு மருந்து...மோகங்களை அது விரும்பு கொடுத்து விடு...

பரிமாறு நீ பதமா நீ பாவங்களை பண் பாடினேன்...

விழியே விளக்கொன்று ஏற்று...

விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

விளக்கேற்றும் மாலை

இது என்ன லீலை...

விளங்காததா இனிமேல்...

விழியே விளக்கொன்று ஏற்று...

விழுந்தேன் உன் மார்பில் நேற்று...

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு ennamma saukiyama eppadi

நலம் விசாரிப்பதிலும் ஒரு நளினம்

படம்: கொடுத்து வைத்தவள் (1963)
இசை: K V மஹாதேவன்
பாடல்: மருத காசி
நடிப்பு: M G R , E V சரோஜா

இயக்கம்: P நீலகண்டன்
குரல்கள்: T M S, P சுசீலா

http://www.divshare.com/download/13070277-3c0

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு

ஏதோ ஒங்க ஞாபக‌த்தாலே பொழச்சி கெடக்குது உசிரு

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு

ஏதோ ஒங்க ஞாபக‌த்தாலே பொழச்சி கெடக்குது உசிரு

சின்னம்மா ஒடம்பிலே இப்போ

சிரிக்குது காஞ்சிப்பட்டு

சிறு தேன்குழல் போலே பூங்குழல் மேலே

தூங்குது மல்லிகை மொட்டு

பெண்மையிலே தேனெடுத்து வந்தது தங்கத் தட்டு

உன் கண்களுக்கே விருந்து வைக்க

பறந்தது காதல் சிட்டு

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு

ஏதோ ஒங்க ஞாபக‌த்தாலே பொழச்சி கெடக்குது உசிரு

நினைக்கிற நினைப்பே இப்படி இருந்தால்

நெருக்கத்திலே வரும் சொர்க்கம்

அதில் இனிக்கிற இனிப்பை உனக்கென

தந்தேன் இனிமேல் எனக்கென்ன வெட்கம்

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு

ஏதோ ஒங்க ஞாபக‌த்தாலே பொழச்சி கெடக்குது உசிரு

நாளொரு மேனி பொழுதொரு வ‌ண்ண‌ம்

ஏறுது மெருகு அங்கே

அதை மாலையில் பார்த்தால் ம‌ன‌சில‌ வெள்ள‌ம்

ஊறுது உருகுது இங்கே

அறுபது நாழிகை முழுவ‌தும் உன்னிடம்

அடைக்க‌ல‌ம் புகுந்த‌து நெஞ்ச‌ம்

நீ ஆள‌ வ‌ந்தாய் நான் வாழ‌ வ‌ந்தேன்

இதில் ஆன‌ந்த‌ம் இனியென்ன‌ ப‌ஞ்ச‌ம்

நீ ஆள‌ வ‌ந்தாய் நான் வாழ‌ வ‌ந்தேன்

இதில் ஆன‌ந்த‌ம் இனியென்ன‌ ப‌ஞ்ச‌ம்

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு

ஏதோ ஒங்க ஞாபக‌த்தாலே பொழச்சி கெடக்குது உசிரு

என்னம்மா செளக்யமா எப்படி இருக்குது மனசு

ஏதோ ஒங்க ஞாபக‌த்தாலே பொழச்சி கெடக்குது உசிரு

உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

குஷாலான பாடல். ஆனால் திரையில் இடம் பெறவில்லை என்று நினைக்கிறேன்.

படம்:  ஞான ஒளி  (1972)
நடிப்பு: சிவாஜி, சாரதா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: P மாதவன்
குரல்கள்: SPB, L R ஈஸ்வரி

http://www.divshare.com/download/13181396-96d
உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

ஹா உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது...

ஹோ உள்ளம் போ என்றது நெருங்கி பார் என்றது..

கைகள் இரண்டும் தோளில் விழுந்து பின்னல் போடுதே...

கன்னம் இரண்டும் பின்னால் அணைந்து ஏதோ பேசுதே...

ஹாஆஆஆ கிள்ளாதே...

ஹாஆஆஆ தள்ளாதே...

தழுவட்டும் மெல்ல...

சங்கதி சொல்ல...

இது மட்டும் போதாதே...

ஹா உள்ளம் போ என்றது,,,

நெருங்கி பார் என்றது..

காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது...

என்னைப் பிடித்து கையில் அணைத்து துன்பம் செய்வதோ...

துன்பம் உனக்கு இன்பம் கொடுக்கும் சொந்தம் அல்லவோ...

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ

இன்னும் என்னவோ...

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ

இன்றே சொல்லவோ...

எது வரை போகும்...

அது வரை போவோம்...

உறவுக்கு தடை ஏது...

ஹா உள்ளம் போ என்றது,,,

நெருங்கி பார் என்றது..

காதலின் வேதனை மாலையில் தீர்ந்தது...

ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹா ஹோ ஹோ

கூந்தல் விரித்து வாழை மரத்தின் கோலம் காணவோ...

ஏந்தும் கரத்தில் ஏதோ கொடுத்து ஏக்கம் தீர்க்கவோ...

ஹா ராணி பருவ தாகமோ...

ஹோ ராஜா அதிக மோகமோ...

தேவைக்கு கொஞ்சம்...

நாளைக்கு இன்னும்....

ஹா உள்ளம் போ என்றது,,,

நெருங்கி பார் என்றது..

சனி, 13 நவம்பர், 2010

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

நல்ல அழகான பாடல்

திரைப்படம்: பெண்ணே நீ வாழ்க (1967)
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: P மாதவன்

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

மங்கையரை பார்த்ததுண்டு மனதை கொடுத்ததில்லை...

மலர்களைப் பார்த்ததுண்டு மாலையாய் தொடுத்ததில்லை..

மணக் கோலம் பார்த்ததுண்டு மாப்பிள்ளையாய் ஆனதில்லை...

மணக் கோலம் பார்த்ததுண்டு மாப்பிள்ளையாய் ஆனதில்லை...

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

தெய்வம் ஒரு சாட்சியென்றால் நேரிலே வருவதில்லை.. பிள்ளை மறு சாட்சியென்றால் பேசவே தெரியவில்லை...

யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை...

யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை...

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

உன் வீட்டுத் தோட்டத்திலே ஒரு மரம் கனி மரமாம்...

தனி மரம் தவிக்க கண்டு தளிர் கொடி தழுவியதாம்...

ஒன்றுகொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்...

ஒன்றுகொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்...

பழகிய பழக்கத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

வெள்ளி, 12 நவம்பர், 2010

எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன....

நல்ல பாடல்

திரைபடம்: பொன்மகள் வந்தாள் (1972)
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி
இசை: சங்கர் கனேஷ்

http://www.divshare.com/download/13069980-b44

ல ஹா ஹா ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

ல ல ல ல ல ல ல ல ல ல

ரு ரு ரு ரு ரு ரு ரு ரு ரு

ல ல ல ல ல ல ல ல

ரு ரு ரு ரு ரு ரு ரு ரு ரு

ல ல ல ல ல ல ல ல ஹா

ல ல ல ல ல ல ல ல ஹா

ல ல ல ல ல ல ல ல ஹா

ல ல ல ல ல ல ல ல ஹா

எந்தன் தேவனின் பாடல் என்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன....

எந்தன் தேவனின் பாடல் என்ன.....அதில் ஏங்கும் ஏக்கம் என்ன....

நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ...

நெஞ்சம் பூப்பந்தாய் துள்ளாதோ மஞ்சம் வாவென்று சொல்லாதோ...

அள்ளவோ உண்ணவோ...அள்ளவோ உண்ணவோ...

எந்தன் தேவியின் ஆடல் என்ன... அதில் காணும் பாவம் என்ன...

எந்தன் தேவியின் ஆடல் என்ன...

தண்ணீரில் துள்ளாத செம்மீன்கள் வஞ்சியுன் கண்ணுக்குள் நீராடக் கண்டேனே...

நீல வானில் நீந்துகின்ற மேகங்களே..எங்கள் காதல் என்றும் வாழ்கவென்று பாடுங்களேன்...

எந்தன் தேவியின் ஆடல் என்ன... அதில் காணும் பாவம் என்ன...

எந்தன் தேவியின் ஆடல் என்ன...

பன்னீரும் மை வண்ண ஜவ்வாதும் தன்னோடு கொண்டாடும் என் மேனி உன் சொந்தம்...

வெள்ளி வண்ண தீபம் உந்தன் கண்ணல்லவோ...அதில் பள்ளி கொண்ட காதல் தெய்வம் நானல்லவோ..

எந்தன் தேவனின் பாடல் என்ன .....

ல ல ல ல ல ல ல ல ல ல

ரு ரு ரு ரு ரு ரு ரு ரு ரு

எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...

இது கொஞ்சம் வில்லங்கமான பாடல்தான் ஆனாலும், SPBயின் குறும்பான குரலுக்கு S. ஜானகி ஈடு கொடுத்து பாடி இருக்கிறார்.

திரைபடம்: சித்திர செவ்வானம் (1979)
நடிப்பு: ஜெய் கணேஷ், ஸ்ரீவித்யா
இயக்கம்: N C சக்கரவர்த்தி
இசை: M S விஸ்வனாதன்

http://www.divshare.com/download/13069962-b50

எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...

ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...

ஆஆஆஆ தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்...

தாளாதம்மா நாள் முழுதும்...

அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...

எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...

ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...ம்..ம்..ம்

கண்டது தானே வெள்ளிப் பூவை கொஞ்சம் பொறுங்களேன்...

கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே...

கண்டது தானே வெள்ளிப் பூவை கொஞ்சம் பொறுங்களேன்...

கடலின் நீரை வெள்ளம் கொண்டு போவதில்லையே...

தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி கொதிக்க வைப்பதேன்...

இன்று நாளை என்றும் உங்கள் உரிமையல்லவா...

எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...

ஹா ஹா ஹா ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...

நெற்றிக் குங்குமம்...

நெற்றிக் குங்குமம்...கெட்டுப் போகுது சற்றே நில்லுங்கள்...

பட்டுக் கூந்தல் தொட்டுத் தழுவி சங்கதி சொல்லுங்கள்...

எட்டுப் பிறவிகள் எட்டும் போதிலும் நீயே மனையாட்டி...

ம்

இளமை அற்புதம் இன்பம் அற்புதம் வாடி ராஜாத்தி...

அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...

எங்கே...ஆ ஆ ஆ ஆ

எங்கே உன்னை கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்...

ஆ ஆ ஆ ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன் பாடும் வண்டாட்டம்...

ஆஆஆஆ தங்கம் போல அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்...

தாளாதம்மா நாள் முழுதும்...

அம்மா போதும் மெல்ல மெல்ல நாணம் வெட்கம்...

மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே

இளையராஜாவின் அருமையான இசையுடன் சுசீலாவின் இனிமையான குரலும் இணைந்தாலும் பாடல் வரிகள் என்னமோ தொடர்பில்லாதது போல தோன்றுகிறது. ஒருவேளை பாடல் காட்சியுடன் பார்த்தால் எதாவது தொடர்பு தெரியலாம்.

திரைபடம்: கண்ணன் ஒரு கைக் குழந்தை (1978)

நடிப்பு: சிவகுமார், ஸ்ரீதேவி, சுமித்ரா
இயக்கம்: N வெங்கடேஷ்

http://www.divshare.com/download/12985236-1b2

மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே
அதை கேட்க வந்தாயோ
மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே

அதை கேட்க வந்தாயோ

மோக சங்கீதம்

வானிலா வந்ததிங்கே

எங்கள் தேனிலா எங்கே

நாணமே போனதெங்கே

என்ன கானமோ இங்கே

ஊமையின் ராகம் இளம் தாளம்

இந்த வேதனை போதும்

அந்தி பகல் இவள் பாடும் ..

மோக சங்கீதம்

ராத்திரி சயனமில்லை

கண்ணை சாத்தினேன் இல்லை

ரகசியம் தூங்கவில்லை

இதில் அதிசயம் இல்லை

மன்மதன் அங்கே

ரதி இங்கே

கணை போனது எங்கே

காமரதி சுக கீதம்

மோக சங்கீதம்.. நிலவே.. நிலவே

அதை கேட்க வந்தாயோ

மோக சங்கீதம்

கண்களால் சொல்லி வைத்தேன்

அதை காணவே இல்லை

பெண்களே யாவும் சொன்னால்

அதில் பெருமையே இல்லை

இத்தனை சொன்னேன் இது போதும்

எனை பாராய் கண்ணா

சுற்று சுவர்களின் மூடி

மோக சங்கீதம்.. நிலவே .. நிலவே

அதை கேட்க வந்தாயோ

மோக சங்கீதம்