தொலைபேசி மற்றும் நெட் வசதிகளும் இல்லாத காலத்தை நாமும் கொஞ்சம் நினைத்து பார்த்தால் இந்த பாட்டில் உள்ள வலியை புரிந்துக் கொள்ளலாம்.
படம்: பொற்ச்சிலை (1969)
நடிப்பு: ஜெமினி, விஜயகுமாரி
இயக்கம்: A V ஃப்ரான்ஸிஸ்
பாடியவர்: P சுசீலா
http://www.divshare.com/download/13195776-ccb
அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...
அக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...
அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...
அக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...
கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து...
கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து...
தொட்டணைத்த காதலர்க்கு கடலலையே...என் தோளிரெண்டும் வாடுதடி கடலலையே...
கையிலே வளையல் இல்லை கண்ணிரெண்டில் தூக்கமில்லை..
கட்டியுள்ள ஆடைகளும் கடலலையே என் சிற்றிடையில் தங்கவில்லை கடலலையே...
பொற்ச் சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் கற்ச்சிலைக்கு சாத்துவேனோ கடலலையே...என் கண்ணிறைந்த காதலந்தான் வரவில்லையே..
மீனாகப் பிறந்திருந்தால் வேண்டிய தவமிருப்பேன் நானாக போயிருப்பேன் கடலலையே...
நான் மானாகப் பிறந்துவிட்டேன் கடலலையே...
அக்கரையில் அவன் இருக்க இக்கரையில் நான் இருக்க...
அக்கரை இல்லாததென்ன கடலலையே...அன்று சென்றுவிட்ட என் தலைவன் வரவில்லையே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக