பின்பற்றுபவர்கள்

சனி, 13 நவம்பர், 2010

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

நல்ல அழகான பாடல்

திரைப்படம்: பெண்ணே நீ வாழ்க (1967)
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: P மாதவன்

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

மங்கையரை பார்த்ததுண்டு மனதை கொடுத்ததில்லை...

மலர்களைப் பார்த்ததுண்டு மாலையாய் தொடுத்ததில்லை..

மணக் கோலம் பார்த்ததுண்டு மாப்பிள்ளையாய் ஆனதில்லை...

மணக் கோலம் பார்த்ததுண்டு மாப்பிள்ளையாய் ஆனதில்லை...

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

தெய்வம் ஒரு சாட்சியென்றால் நேரிலே வருவதில்லை.. பிள்ளை மறு சாட்சியென்றால் பேசவே தெரியவில்லை...

யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை...

யாரைச் சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை...

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

உன் வீட்டுத் தோட்டத்திலே ஒரு மரம் கனி மரமாம்...

தனி மரம் தவிக்க கண்டு தளிர் கொடி தழுவியதாம்...

ஒன்றுகொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம்...

பழகிய பழக்கத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு... போதும் போதும் உன் சிரிப்பு..

யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜா பூ...

பொல்லாத புன் சிரிப்பு...

1 கருத்து:

அப்பாதுரை சொன்னது…

கேவிம இசையா? தெரியாதிருந்தேன்.
முன்பெல்லாம் இந்தப் பாட்டை வானொலியில் கேட்கும் பொழுதெல்லாம் உடனே அலை மாற்றிவிடுவேன் - இப்போது கேட்டால் நெஞ்சமெல்லாம் பரவி உறுத்துகிறது.

கருத்துரையிடுக