பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 அக்டோபர், 2015

மரகத வீணை இசைக்கும் ராகம் ..Margatha veenai isaikkum raagam...

மற்றுமொரு அழகானப் பாடல். இனிமையான இசையும் இனிமையான குரல்களும் மனதை வசப்படுத்தும்.


திரைப் படம்: மரகத வீணை (1986)
இயக்கம்: கோகுல கிருஷ்ணன்
இசை: இளையராஜா
பாடும் குரல்கள்: K J யேசுதாஸ், S ஜானகி
நடிப்பு: சுரேஷ், ரேவதி










மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன் மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

வீசும் காற்றே நீ மெல்ல வீசு

மலரின் தேகம் தாங்காது

பேசும் கண்ணே நீ மெல்ல பேசு

ஊரார் கேட்டால் ஆகாது

இதயம் எங்கும் பன்னீரின் ஓடை

இங்கும் அங்கும் பாய்கின்றது

பருவ வயலில் ஒரு அமுத பாசனம்

இரவு விடிய ஒரு வருஷம் ஆகணும்

இருவர் கூடலாம் ஒருவர் ஆகலாம்

மதன வேதம் தினமும் ஓதலாம்

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

கூந்தல் வந்து பாய் போடும் நேரம்

கோடை தென்றல் பூ தூவும்

ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்

உள்ளம் எங்கே கண் மூடும்

கனலும் கள்ளும் ஒன்றான போது

கண்ணே பெண்மை உண்டானது

எனது விழியில் ஒரு கனவு பூத்தது

எனது இதயம் உன்னை எழுதி பார்த்தது

புதிய வானமும் புதிய பூமியும்

இணையும் கோலம் எதிரில் வந்தது

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன் மழைச் சாரல்

எனக்குள் வீசாதோ

மரகத வீணை இசைக்கும் ராகம்

மலரடி மேவும் நாதமானதோ

சனி, 17 அக்டோபர், 2015

நீயா இல்லை நானா..neeya illai naana...

ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா....எளிதான தமிழிலில் அழகான பாடல்...

திரைப்படம்: ஆசைமுகம் (1965)

பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா 

நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி 

இசை: S.M.சுப்பையா நாயுடு 

பாடல்: வாலி  


இயக்கம்: P புல்லையா 








ஆஹா ஆஹா ஹா ஹா
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீயா இல்லை நானா

நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா

ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஊர்வலமாக பார்வையில் வந்தது
நீயா இல்லை நானா
ஒரு மேடையில்லாமல் நாடகம் நடித்தது
நானா இல்லை நீயா
நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா

பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
ஆ ஆ ஆ ஆ ஆ
பசித்தவன் முன்னே பழமாய் வந்தது
நீயா இல்லை நானா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தை பார்த்தது
நானா இல்லை நீயா
இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது
நானா இல்லை நீயா

ஒரு நாள் வந்தது உள்ளத்தை கேட்டது
ஒரு நாள் வந்தது உள்ளத்தைக் கேட்டது
நீயா இல்லை நானா

இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா
இன்று மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது
நானா இல்லை நீயா

பூவிதழ் ஓரம் புன்னகை வைத்தது
நீயா இல்லை நானா

இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது
நானா இல்லை நீயா
நானா இல்லை நீயா
ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது
நானா இல்லை நீயா

நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது
நீயா இல்லை நானா
நீய இல்லை நானா

நானா இல்லை நீயா

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உன் ராதையைப் பார் போதையிலே கண்ணா..un raathaiyai par pothaiyile...



ஆச்சி அவர்களின் ஆத்ம சாந்தியடைய அவருக்கு அஞ்சலியாக....

மனோரமா அவர்களின் பல பாடல்களில் ஒன்று.
அட்சர சுத்தமாகவும், சுருதி சுத்தமாகவும், இடையிடையே பேசும் வசனத்திலும் ஒரு தெளிவு. அவருக்கு மட்டுமே உரித்தானது. பெண் சிவாஜி என சும்மாவா சொன்னார்கள்?

திரைப் படம்: பந்தாட்டம் 
இசை: சங்கர் கணேஷ்
நாதஸ்வரம் இசைத்திருப்பவர்: தேனாம்பேட்டை பழனி
பாடல்: வாலி














உன் ராதையை பார் போதையிலே கண்ணா 

நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா 

உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா 
உனக்கும் எனக்கும் ரகசியங்கள் ஒண்ணா

நீ ஊரறிய மாலையிட்டா என்னா


உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

அந்த ஆயர்பாடி கண்ண 
கோபிகா ஸ்த்ரீகளை அழ வச்சான் 
இந்த ஆடுதுறை கண்ண 
சுந்தர வள்ளி நாச்சியாரை அழ வச்சிட்டானே 
 நான் அழுதாதான் உனக்கு சந்தோஷமுன்னா 
கண்ணா 
உனக்காக நான் அழுவுறேன் அழுவுறேன் 
அழுதுகிட்டே இருக்கிறேன் 
நான் மட்டுமா அழுகிறேன் 
என்னோட சேர்ந்து என் நாதஸ்வரமும் அழுவுதே 
கேக்கிறியா 
கண்ணா கச்சேரியிலே பல ராகங்கள் வாசிச்ச என்னை வாழ்கையிலே முகாரி ராகத்தை மட்டுமே வாசிக்க வச்சிட்டியே 
உன்னை எப்படி என்னாலே மறக்க முடியும் 
கண்ணா 

உன்னை மறப்பதற்கு குடிக்கணுமோ கள்ளு
உன் நினைப்பை விட போதையுண்டோ சொல்லு 


உன்னை மறப்பதற்கு குடிக்கணுமோ கள்ளு
உன் நினைப்பை விட போதையுண்டோ சொல்லு 

நான் நினைகறப்போ நேரில் வந்து நில்லு 

நான் நினைகறப்போ நேரில் வந்து நில்லு
ரொம்ப கொடுமையப்பா மன்மதனின் வில்லு 


உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்ற பெண்ணா

கண்ணா 
பாஞ்சாலி கத்தினப்போ புடவையோட வந்தே 
கஜேந்த்ரன் கத்தினப்போ கருடனோட வந்தே 
இந்த சுந்தர வள்ளி கத்தரப்போ தவிலோட வாயேன் 
 கண்ணா கண்ணா கண்ணா 

என்னை த‌வில‌ போல‌ நீ நென‌ச்சி நேசி
மெல்ல த‌ழுவிக்கிட்டு தாள‌த்தோட‌ வாசி 


என்னை த‌வில‌ போல‌ நீ நென‌ச்சி நேசி
மெல்ல த‌ழுவிக்கிட்டு தாள‌த்தோட‌ வாசி 

உன் இனிமைகெல்லாம் நான் தானே ராசி
உன் இனிமைகெல்லாம் நான் தானே ராசி 
என்னை துளைக்குத‌ய்யா த‌னிமையெனும் ஊசி
  

கண்ணா 
எங்கிட்டே ஒளிஞ்சி விளையாடுறியா 
நீ எங்கே போனாலும் உன்னை நான் விடமாட்டேன் 
கண்ணா 
கண்ணா 
கண்ணா 

 

உன் ராதையை பார் போதையிலே கண்ணா
நான் ராப்பகலா ஏங்குகின்றேன் கண்ணா !

கண்ணா 
கண்ணா 
கண்ணா 
கண்ணா

சனி, 3 அக்டோபர், 2015

அன்பே எந்தன் முன்னாலே...anbe enthan munnaale



அழகான பாடல்...இனிமையான குரல்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸின்  ஆரவல்லி, இந்தப்படத்தில் நடித்தவர்கள்  மைனாவதி, S G ஈஸ்வர், G வரலக்ஷ்மி, M  S த்ரௌபதி, V கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
ஆரவல்லியான  அரசி  G வரலக்ஷ்மி,  ண் வாடையே பிடிக்காதவர். ஆண்களை  அடிமையாக மரியாதை இல்லாமல் நடத்தவே ஒரு ராஜாங்கமே அல்லி ராஜ்ஜியம் என நடத்துகிறார். 
ஆரவல்லியின் மகள் அலங்காரவல்லியாகிய மைனாவதி, அல்லிமுத்து என்கின்ற S G ஈஸ்வரை ஆசைபடுகிறார்.
அவர் ஆரவல்லியை எதிர்த்து வெற்றிக் கொண்டு அலங்கார வல்லியை கைப் பிடிப்பதே கதை.

யார் இந்த S G ஈஸ்வர்? என்னவானார்அதற்கு பிறகு எங்கும் எந்த படத்திலும் பார்த்தது போல தெரியவில்லை. எல்லா படங்களிலும் அழும் கேரக்டரிலேயே வரும் வரலக்ஷ்மி இதில்  சற்று மாறிஅதிகார  தோரணையில் வருகிறார்.





திரைப் படம்: ஆரவல்லி (1957)
இசை: G ராமநாதன்
பாடல்:  தெரியவில்லை. மருதகாசியாக இருக்கலாம்.
பாடியவர்கள்: ஜிக்கி, A.M.ராஜா
இயக்குனர்: எஸ். வி. கிருஷ்ண ராவ்
நடிப்பு: மைனாவதி, S G ஈஸ்வர்









அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன
பார்வையிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன
பார்வையிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

என்னை அன்றே இகழ்ந்தவர்
இன்று எண்ணம் மாறியதேனோ

என்னை அன்றே இகழ்ந்தவர்
இன்று எண்ணம் மாறியதேனோ

கண்ணின் வழியே கன்னிகை
உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே

கண்ணின் வழியே கன்னிகை
உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே

மின்னும் பொன்னை பித்தளையென்று
முன்னே சொன்னதும் ஏனோ

மின்னும் பொன்னை பித்தளையென்று
முன்னே சொன்னதும் ஏனோ

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கி கிடந்ததனாலே

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கி கிடந்ததனாலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

குங்கும இதழும்
குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீரும்

குங்கும இதழும்
குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீரும்

மங்கையை ஆண்கள்
புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மங்கையை ஆண்கள்
புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மாம்பழ கன்னம்
சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்

மாம்பழ கன்னம்
சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

வெள்ளி, 2 அக்டோபர், 2015

வலைப்பதிவர் திருவிழா 2015.

வலைப்பதிவர்  திருவிழா 2015.
வாய்ப்பு கிடைத்தவர்கள் கண்டிப்பாக தவறவிடாதீர்கள். என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. என்ன செய்வது, கடமை அழைக்கிறதே...

ஏற்பாடாளர்களின் ஈடுபாட்டிற்கும், இதனால் அவர்கள் சந்தித்த சிரமத்திற்கும் எனது வணக்கங்கள்.
விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்.