பின்பற்றுபவர்கள்

சனி, 3 அக்டோபர், 2015

அன்பே எந்தன் முன்னாலே...anbe enthan munnaale



அழகான பாடல்...இனிமையான குரல்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸின்  ஆரவல்லி, இந்தப்படத்தில் நடித்தவர்கள்  மைனாவதி, S G ஈஸ்வர், G வரலக்ஷ்மி, M  S த்ரௌபதி, V கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
ஆரவல்லியான  அரசி  G வரலக்ஷ்மி,  ண் வாடையே பிடிக்காதவர். ஆண்களை  அடிமையாக மரியாதை இல்லாமல் நடத்தவே ஒரு ராஜாங்கமே அல்லி ராஜ்ஜியம் என நடத்துகிறார். 
ஆரவல்லியின் மகள் அலங்காரவல்லியாகிய மைனாவதி, அல்லிமுத்து என்கின்ற S G ஈஸ்வரை ஆசைபடுகிறார்.
அவர் ஆரவல்லியை எதிர்த்து வெற்றிக் கொண்டு அலங்கார வல்லியை கைப் பிடிப்பதே கதை.

யார் இந்த S G ஈஸ்வர்? என்னவானார்அதற்கு பிறகு எங்கும் எந்த படத்திலும் பார்த்தது போல தெரியவில்லை. எல்லா படங்களிலும் அழும் கேரக்டரிலேயே வரும் வரலக்ஷ்மி இதில்  சற்று மாறிஅதிகார  தோரணையில் வருகிறார்.





திரைப் படம்: ஆரவல்லி (1957)
இசை: G ராமநாதன்
பாடல்:  தெரியவில்லை. மருதகாசியாக இருக்கலாம்.
பாடியவர்கள்: ஜிக்கி, A.M.ராஜா
இயக்குனர்: எஸ். வி. கிருஷ்ண ராவ்
நடிப்பு: மைனாவதி, S G ஈஸ்வர்









அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன
பார்வையிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகன
பார்வையிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

என்னை அன்றே இகழ்ந்தவர்
இன்று எண்ணம் மாறியதேனோ

என்னை அன்றே இகழ்ந்தவர்
இன்று எண்ணம் மாறியதேனோ

கண்ணின் வழியே கன்னிகை
உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே

கண்ணின் வழியே கன்னிகை
உந்தன் உள்ளம் தெரிந்ததனாலே

மின்னும் பொன்னை பித்தளையென்று
முன்னே சொன்னதும் ஏனோ

மின்னும் பொன்னை பித்தளையென்று
முன்னே சொன்னதும் ஏனோ

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கி கிடந்ததனாலே

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கி கிடந்ததனாலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

பங்கஜ வதனம்
மலர்ந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

குங்கும இதழும்
குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீரும்

குங்கும இதழும்
குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீரும்

மங்கையை ஆண்கள்
புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மங்கையை ஆண்கள்
புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மாம்பழ கன்னம்
சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்

மாம்பழ கன்னம்
சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே

2 கருத்துகள்:

Geetha சொன்னது…

அருமை வலைப்பதிவர் விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்..

Raashid Ahamed சொன்னது…

இனிய அற்புத பாடல் ! இந்த திரைப்படத்தையே தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 1990 ஆம் ஆண்டு ஞானம் தியேட்டர், தஞ்சாவூர். இப்போது தியேட்டர் ஹோட்டலாக உள்ளது.

கருத்துரையிடுக