பின்பற்றுபவர்கள்

திங்கள், 25 மே, 2015

காதல் தேகங்கள் பொன்னூஞ்சல் ஆகாதோ..kathal thegangal ponnoonjal...

P சுசீலா அம்மாவின் வித்தியாசமான பாடலாக தெரிகிறது எனக்கு. கொஞ்சம் ectasy ஆக பாடியிருப்பார். இளையராஜாவின் மற்றும் ஒரு வைரக் கல். சுகம்....

கேள்விப் பட்டது: http://www.yarl.com/: இந்தப் பாடலை முதலில் பாடியது சீர்காழி சிவசிதம்பரம் அவர்களாம். பின்னர் யாரின் தலையீட்டினாலோ எஸ்.பி.பி. அவர்களைக்கொண்டு பாடுவித்து மாற்றிவிட்டார்களாம். 



திரைப் படம்: அன்புள்ள மலரே (1984)
குரல்கள்: S P B , P சுசீலா 
இசை: இளையராஜா
நடிப்பு: சரத்பாபு, ஸ்ரீவித்யா (இந்தப் பாடலில் இவர்கள் இல்லை)
இயக்கம்: B R ரவிஷங்கர்
பாடல்: வைரமுத்து












ஹும் ஹும் ஹும் ஹும்

ஹ ஹ ஹ ஹா 

ஹும் ஹும் ஹும் ஹும்

காதல் தேகங்கள்
ஹும் ஹும் ஹும் ஹும்

காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ 
பூக்கள் பொன்மஞ்சம் போடாதோ 
காற்றே சங்கீதம் பாடாதோ 

ம் ம் ம் ம் ம் ம்
மாலை வானம் சாலை போடும்
ஊரே போகும்

ஆ ஆ ஆ ஆ 
காதல் மீன்கள் துள்ளும் நேரம்
கண்ணீர் சூடாகும் 

வாலிப வாரம் கொண்டாடவா
மாங்குயில் ராகம் நாம்  பாடவா

பூங்காற்றே பேசாதே

தீ அள்ளி பூசாதே
ரா ரா ரா 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

காதல் தேகங்கள் 
பொன்னூஞ்சல் ஆகாதோ
வானம் வாழ்த்துக்கள் கூறாதோ 
பூக்கள் பொன்மஞ்சம் போடாதோ 
காற்றே சங்கீதம் பாடாதோ 

சேலை மூடும் சோலை என்று 
என்னை பாராட்ட 

ஆ ஆ ஆ ஆ 
பாவை பார்க்கும் பன்னீர் பார்வை 
நெஞ்சை நீராட்ட

ராத்திரி மேகம் பொழிந்தால் என்ன
மார்கழி பூங்கா நனைந்தாலென்ன

தீராதோ என் தேவை
என் கூந்தல் உன் போர்வை
ஆ ஆஹா

ஆஆஆஆ 
காதல் தேகங்கள்
பொன்னூஞ்சல் ஆகாதோ

வானம் வாழ்த்துக்கள் கூறாதோ 

பூக்கள் பொன்மஞ்சம் போடாதோ 

காற்றே சங்கீதம் பாடாதோ 

ம்ம்ம்ம்ம்

ம் ம் ம் ம் ம் ம் ம் 

ஆ ஆ ஆ ஆ

ம்ம்ம்ம்ம்ம்ம் 

ஹே ஹே ஹே ஹே ஹே

ம்ம்ம்ம்ம்ம்ம்

சனி, 16 மே, 2015

சிரிக்க சொன்னார் சிரித்தேன் ....sirikka sonnar sirithen

விருப்பமில்லாத ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம். அதிலும் பாடச் சொல்லும் ஒரு கொடுமை. சோகத்தை தெள்ளத் தமிழிலில் அள்ளி வீசியிருக்கிறார் கவிஞர். அதையும் தடம் புரளாமல் அழகாக பாடி வழங்கியிருக்கிறார் சுசீலா அம்மா. இன்றைய இளைஞர்களுக்கு கொஞ்சம் புதுமையாகக் கூட இருக்கும்.
பாடல் முழுமையாக இல்லாமை மற்றுமொரு கொடுமை.


திரைப் படம்: கவலை இல்லாத மனிதன் (1960)
நடிப்பு: சந்திரபாபு, T R மகாலிங்கம், ராஜசுலோச்சனா
இயக்கம்: K ஷங்கர்
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி.
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: P சுசீலா












சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா
இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா
இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா
இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா
சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா
சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா
சிந்தையிலே தெளிவுடையோர் யாருமில்லையா

சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

சனி, 9 மே, 2015

பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே..parijathi poove antha...

இளையாராஜாவின் இசையில் பழைய பாடலில் மெட்டு அமைத்தால், பெரும்பாலும் எல்லா பாடல்களும் ஒரே மாதிரித்தான் உள்ளது. நாயகன் பட பாடலுடன் இந்தப் பாடலை ஒத்து பார்த்தால் புரியும். ஆனாலும் எத்தனை தடவை கேட்டாலும் திகட்டுவதில்லை.


படம்: என் ராசாவின் மனசிலே
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர், சித்ரா
இசை: இளையராஜா
நடிப்பு: ராஜ்கிரண், மீனா.
இயக்கம்: கஸ்தூரி ராஜா










பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு ஓ

பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு ஓ

பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே

பூ ரதம் மேலே ஊர்வலம் போவோம்
நாம் ஊர்வலம் போவோம்
வானவில் ஊஞ்சல் ஆடிவோமே
நாம் ஆடிவோமே

வீணையை மீட்டுகின்ற
வாணி யும் நீ

நாரதர் பாடுகின்ற
கானமும் நீ

வீணையை மீட்டுகின்ற
வாணியும் நீ

நாரதர் பாடுகின்ற
கானமும் நீ

நீல மேகமே

ஒரு வானம்பாடியே

நீல மேகமே

ஒரு வானம்பாடியே

சோலைகுயில்கள் ஜோடி சேர்ந்ததே


பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு ஓ

பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே

ஆயிரம் காலம் வாழ்ந்திட வேனும்
நாம் வாழ்ந்திட வேனும்
தாயாய் நீயும் தாங்கிட வேனும்
நீ தாங்கிட வேனும்

தாவியே ஓடிவரும்
காவரியே

ஓவியமே அழகு
மேனகையே

தாவியே ஓடிவரும்
காவரியே

ஓவியமே அழகு
மேனகையே

கோயில் தெய்வமே

ஒரு தீப ஜோதியே

கோயில் தெய்வமே

ஒரு தீப ஜோதியே

மேளதாளம் கேட்க வேனுமே



பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு ஓ

பாரிஜாத பூவே
அந்த தேவலோக தேனே
பாரிஜாத பூவே

சனி, 2 மே, 2015

தூரத்தில் நான் கண்ட உன் முகம்...thooraththil naan kanda...

G. ராமநாதன், T R பாப்பா, K V மகாதேவன், விஸ்வனாதன் ராமமூர்த்தி ஆகியோர்களின் இசையில் கேட்ட பல பாடல்களுக்கு பிறகு, இளையராஜாவின் பாடல்களில் பல இப்படி  ஆழமாக ஒரு பாதிப்பை மனசில் ஏற்படுத்தும். வைதேகி காத்திருந்தாள், காதல் ஓவியம், வள்ளி இப்படி இன்னும் பல படப் பாடல்கள் இதில் அடங்கும். ஆனாலும், இந்தப் பாடல் ஒரு தனி வகைதான். இனிமையான இசை, பாடல் வரிகளையும் மீறி ஜானகி அம்மாவின் குரல் என்னமோ பண்ணுகிறது மனதை.


திரைப்படம்: நிழல்கள் (1980)
நடிப்பு: நிழல்கள் ரவி, ரோகிணி
இயக்கம்: பாரதிராஜா
இசை : இளையராஜா
பாடியது: S ஜானகி
பாடல்: வைரமுத்து







ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

வேங்குழல் நாதமும் கீதமும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐய்யன் உன் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் ப்ரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்

காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா
மீரா மீரா மீரா மீரா
வேலை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்
லல லல லல லல
கவலை யாவும் மாற வேண்டும்
லல லல லல லல
கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும்
துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் ப்ரபு உனையே

ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
ம்ம் ம்ம்