பின்பற்றுபவர்கள்

வியாழன், 2 மே, 2013

நெடு நாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில்

பாடல் காட்சியை இணைத்துள்ளேன்.

பலரும் இந்தப் பாடலை மறந்து போயிருக்கலாம் அல்லது நான் மட்டும்தான் மறந்தேனா?

எனது இளமை கால பருவக் கனவுகளை சுமந்து வரும் பாடல். நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று.

மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் அவரது பல பாடல்களின் இசையின் தாக்கம் இதில் இருந்தாலும் இசையும், துள்ளும் இளமை பாடல் வரிகளும், அதே இளமை மாறாத குரல்களின் இனிமையும் என்னை கட்டி போடுகின்றது.

உண்மையை சொல்லப் போனால், தொடர்ந்து சிவாஜி+ K R விஜயா, எம் ஜி யார் +சரோஜா தேவி என்று முதிர்ந்த ஜோடிகளையே பார்த்து அசந்து போயிருந்த கண்களுக்கு மோகன்+நளினி போன்ற இளம் ஜோடிகளை காணும் போது ஒரு புத்துணர்ச்சி வருகிறது என்றால் அது எனது தவறில்லை.

எப்பாடுபட்டாவது இதை நிரூபிக்க இப்பாடலின் படக் காட்சிக்கு முயற்சித்தேன். முடியவில்லை. உங்களிடம் இருந்தால், எனக்கு லிங்க் அனுப்பினால் இதில் இணைத்துக் கொள்வேன்.

திரைப் படம்: சரணாலயம் (1983)
இசை: M S விஸ்வனதன்
பாடல்: வாலி
நடிப்பு: மோகன், நளினி, சத்யராஜ்
இயக்கம்: R சுந்தர்ராஜன்
குரல்கள்: S P B, P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU0MDI4MV80bW5zdl9kMjRl/Nedu%20Naal%20Aasai.mp3







நெடு நாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

நெடு நாள் ஆசை ஒன்று - இந்த
நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல

க ம ப நி நீத த ம த தா க

க த ச க நி நி தா ப

பத பத

பத பத

நி நி ஸ

ரி ரி க

ம ம ப

க ம பா

கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்
கன்னி பூங்கொடி கைகள் நீட்டி
கிளையை தேடும் காட்சி கண்டேன்

மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்
மஞ்சள் சூரியன் மேற்கில் சாய்ந்து
மலையை கூடும் கோலம் கண்டேன்

அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று
அது போல் நானும் வந்து
இந்த மெல்லிடை அணைப்பது என்று

அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

நெடு நாள் ஆசை ஒன்று
இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

ஹா ஹா ஹாஹாஹா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஹா

ம ம க க

ம ம க க

ப ப ம ம

ப ப ம ம

க க ப ப

க க ப ப

ஸா

இந்த வாலிபன் காதல் நெஞ்சை
இளைய ராணி ஏற்க வேண்டும்

எண்ண மாளிகை வாசல்தோறும்
இளமை தீபம் ஏற்ற வேண்டும்

மடி மேலே உன்னை தாங்க
இந்த மன்னவன் நினைவுகள் ஏங்க

அதை நேரிடையாக சொல்ல
நான் நாணம் இல்லாதவள் அல்ல

நெடு நாள் ஆசை ஒன்று - இந்த
நெஞ்சினில் உதித்ததுண்டு
அதை நேரிடையாக சொல்ல
கண்ணை தூது விட்டேனடி மெல்ல

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடிக்கடி கேட்கும் இனிமையான பாடல்... நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

ஆஹா..ஆஹா.. பாலுஜி பாடல்கள் ரசிக்க ஆரம்பித்த காலத்தில் (மோகன் பீக்கில் இருக்கும்போது) இந்த பாடலை எவ்வளவு முறை என்று எனக்கே தெரியாது. இந்த வலைப்பூவில் எப்படி சிக்காமல் போயிற்று என்று முழிக்கிறேன். தேடிப்பார்த்தால் பாடல் இல்லை என்றே காண்பித்தது. ஓகே துபாயில் இருந்து அசோக் சார் அவருடைய கிணற்று தவளை வலைப்பூவில் இன்று பதிந்தார். எனக்கு சிரமம் கொடுக்காமல் வழங்கிய அவரின் உழைப்பிற்க்கு தலைவணங்கி பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுத்துள்ளேன் சார்.

Raashid Ahamed சொன்னது…

பாலுசார் சூசீலா அம்மா குரலில் எந்த ஒரு பாடலையும் குறை சொல்ல முடியாது. அப்படி அனைத்து பாடல்களும் அமைந்து விட்டது. டிஎம்எஸ் சுசீலா அம்மா மாதிரி இதுவும் அருமையான பாடல்கள் தந்த ஒரு அற்புத ஜோடி.

கருத்துரையிடுக