பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நாளாம் நாளாம் திருநாளாம்

இனிமையான பாடல். நகைச்சுவை படங்களை எடுப்பதில் இயக்குனர் C V ஸ்ரீதர் என்றும் முன்னிலைதான். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பாலையா, ரவிச்சந்திரன் பணக்கார வீட்டு பிள்ளை என தெரிந்ததும் மிகவும் மரியாதை தெரிவிப்பதாக நினைத்து அசோகன் என்ற அவரை அசோகரு உங்க மகரா என்பார். (அசோகன் உங்க மகனா?) (வசனம் சித்ராலயா கோபு)
இதே போன்று நகைச்சுவை வசனங்களை சமீப காலங்களில் கிரேசி மோகன் கதை வசனத்தில் கண்டதுண்டு.
இளமை ததும்பும் பாடல் காட்சி கண்டு மகிழ்வோம்.

திரைப்படம்: காதலிக்க நேரமில்லை (1964)
பாடியவர்கள்: P B ஸ்ரீநிவாஸ், P சுசீலா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ரவிச்சந்திரன், ராஜ்யஸ்ரீ
பாடல்: வாலி (கண்ணதாசன்??)

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDcxOTA4OV9xdUJFMF9kMTFk/Naalaam%20naalaam.mp3






நாளாம் நாளாம் திருநாளாம் 

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் 

ஆ ஆ ஆ ஆ ஆ  

மணமகன் இந்த ஊஞ்சலில்

மணமகள் மன்னன் மார்பினில்

அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்

அது காதல் தேவனின் காவியம்

அதில் ஒருவர் ராகமாம் 

ஒருவர் தாளமாம்

இருவர் ஊடலே பாடலாம்
ஹோ ஹோ 

ஹோ ஹோ ஓஹு ஓஹோ 

ஹா ஹா ஆ ஆ ஆ 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நாளாம் நாளாம் திருநாளாம் 

ஆ ஆ ஆ ஆ ஆ 

இளமையின் இந்த ரகசியம் 

இயற்கையில் வந்த அதிசயம்

இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்

அதில் நாமும் இன்றொரு காவியம் இந்த

இளமை போகலாம் முதுமை சேரலாம்

இருவர் காதலும் மாறுமோ

ஹோ ஹோ 

ஹோ ஹோ ஓஹு ஓஹோ 

ஹா ஹா ஆ ஆ ஆ 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நாளாம் நாளாம் திருநாளாம் 

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய காதலர் மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் 

ஆ ஆ ஆ ஆ ஆ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக