பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த

மற்றுமொரு கிராமத்துக் கிளிகளின் காதல் பாடல். இலக்கணம் மறந்த தமிழில் இயற்கையாக காதலை வெளிப் படுத்துவது போல. இன்றைக்கு நகரில் தமிழ் மறந்தவர்கள் சினிமாவில் இலக்கிணத் தமிழாக பாட்டு எழுதுகின்றனர்.

இந்தப் பாடல் வரிகளின் மூலப் பாடல் (ஒரு சின்ன பகுதி) இத்துடன் சேர்த்து தரமேற்றியிருக்கிறேன். முதல் ஓரிரு வரிகள் மட்டுமே காப்பி அடிக்கப் பட்டுள்ளது.

மூலப் பாடல்:
திரைப் படம்: பிள்ளைக் கனியமுது (1958)
இசை: K V மகாதேவன்

நடிப்பு: S S R, E V சரோஜா
இயக்கம்: M A திருமுகம்
பாடலாசிரியர்: மருதகாசி??
குரல்கள்: P சுசீலா, சீர்காழி S கோவிந்தராஜன்




http://www.divshare.com/download/13977360-9e4


காப்பி பாடல்:

திரைப் படம்: அச்சமில்லை அச்சமில்லை (1984)
இசை:  V S நரசிம்மன்
நடிப்பு: ராஜேஷ், சரிதா
இயக்கம்: K பாலசந்தர்
பாடலாசிரியர்: வைரமுத்து
குரல்கள்: P சுசீலா, மலேஷியா வாசுதேவன் சீர்காழி S கோவிந்தராஜன்




http://www.divshare.com/download/13977313-b09


மேகத்தத் தூதுவிட்டா தெச மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்த கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்க குறையாம எப்ப வந்து தரப்போற
எப்ப வந்து தரப்போற

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ
ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலம் ஒன்னு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
ஓலம் ஒன்னு நானெழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே

அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொட பிடிக்க வா மயிலே

கொடையும் இல்ல படையும் இல்ல தூரலுக்கு ஆதரவா
தாவணிய நீ பிழிய தலை துவட்ட நான் வரவா

நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ பிழிஞ்சா நீர்வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் பிழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

மலர் தோட்டத்து குயிலு இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்து குயிலு இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க

அருவி போல அழுகிறத அறிந்துகொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்துகொண்டால் ஆகாதோ

வக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கனையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உம்ம பாதம் பட்ட மண்ணெடுத்து நா பல்லு வெளக்கப் போறதெப்போதண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

3 கருத்துகள்:

SANKAR சொன்னது…

MUSIC BY:V.S.NARASIMMAN(A VIOLIN PALAYER OF ILAYARAJA TROOP.ALSO PALAYING VIOLIN IN"HOW TO NAME IT")

Unknown சொன்னது…

நன்றி ஷங்கர், தவறுதலுக்கு வருந்துகிறேன். திருத்தப் பட்டது.

Raashid Ahamed சொன்னது…

மலேசியா சுசீலா அம்மா பாடிய பாடலில் சீர்காழி எங்கே வந்தார் ? சுசீலா அம்மா “ மேகத்த தூதுவிட்டா தெச மாறி போகுமோன்னு” என்ற வரிகளில் அசத்திவிட்டார் !!

கருத்துரையிடுக