பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

முத்து நகை பெட்டகமோ முன் கதவு ரத்தினமோ

காதலியை கலாட்டா செய்து பாடும் ஒரு இனிமையான பாடல். வேகமான இசையமைப்பு, TMSஇன் ஜெய்ஷங்கருக்கு இணையான குரல், தற்போது உபயோகத்தில் இல்லாத பல தமிழ் சொற்கள் என் பாடல் கொடிகட்டி பறக்கிறது.


திரைப் படம்: தெய்வீக உறவு (1968)

நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ, தேவிகா

இசை: K V மகாதேவன்

இயக்கம்: சத்யம்http://www.divshare.com/download/14135076-577முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ

புன்னகையும் தோரணமோ
போடுவது நாடகமோ
கண்ணிரெண்டும் தேர் வடமோ
காரில் என்ன ஊர்வலமோ
புன்னகையும் தோரணமோ
போடுவது நாடகமோ
கண்ணிரெண்டும் தேர் வடமோ
காரில் என்ன ஊர்வலமோ

செண்டாடும் குழல் வண்டாட வரும் கண்ணாடிச் சிலையோ
அதை கண்டோரின் மனம் ரெண்டாகும் படி துண்டாடும் கலையோ
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ

கோலமயில் நீயிருக்க
கூடி கட்டி தந்திடவா
காலமெல்லாம் உன்னருகில்
காவலுக்கு நின்றிடவா
கோலமயில் நீயிருக்க
கூடி கட்டி தந்திடவா
காலமெல்லாம் உன்னருகில்
காவலுக்கு நின்றிடவா

பூவான முகம் காயாகி அது கனிந்ததெப்படியோ
நின்று போராடும் விழி தானாக நிலம் அளந்ததெப்படியோ
முத்து நகை பெட்டகமோ
முன் கதவு ரத்தினமோ
கட்டழகு தாமரையோ
காரோட்ட வந்ததுவோ
முத்து நகை பெட்டகமோ
முத்து நகை பெட்டகமோ2 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

இந்தப்பாட்டெல்லாம் எப்படித் தேடிப் பிடிச்சீங்கனு கூட கேக்கலைங்க.. எப்படி நினைவு வச்சிருக்கீங்கனு தான்..

Covai Ravee சொன்னது…

முத்து முத்து புன்னகையே

இந்த பாடல் உங்கள் தளத்தில் இருக்கிறாதா பாடல் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? அன்புடன், கோவை ரவி.

கருத்துரையிடுக