பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே...

மற்றுமொரு இனிமை நிறைந்த சமீபத்திய பாடல்


திரைப் படம்: மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
இசை: M S விஸ்வனாதன்

பாடியவர்கள்: SPB, P சுசீலா

பாடல்: கண்ணதாசன்

நடிப்பு:சரத்பாபு


http://www.divshare.com/download/11887301-ebcமரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாதது
காதல் பொல்லாதது

இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இளமை ரதங்கள் ஓட
இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ

ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை

ஒரு நாள் பொழுதும் உன்னை
பிரிந்தால் மறந்தேன் என்னை

இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ

ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாதது
காதல் பொல்லாதது

வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாறம்
ஹ ஹ ஹ ஹ

வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாறம்

இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மணக்கும் நீ காணலாம்

நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக்கோலம்

நனையும் மலர்கள் பாடும்
நளினம் கவிதைக்கோலம்

அழகில் மலரும் நதியில் விழுந்து நாம் ஆடலாம்

ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிதே
திருமகள் வேதம் இங்கே திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் நில்லாதது
காதல் பொல்லாதது

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

அருமையான பாடல். நன்றி.

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

அழகு இனிமை சிறந்த வரிகள், எஸ்பிபி சுசீலா அம்மாவின் அழகிய குரல்கள் - மொத்தத்தில் இது ஒரு தேனமுது.

கருத்துரையிடுக