பின்பற்றுபவர்கள்

சனி, 28 ஜூன், 2014

கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா

பாடலின் ஆரம்ப இசையோடு பாடலை இணைத்திருக்கும் (Synchronization) விதமே சொல்லும் பாடல் எப்படி இருக்குமென்று. இதை K V மகாதேவன் அவர்களின் பாடல்களில் நிறைய பார்க்கலாம். ரசிக்கக் கூடிய பாடல். அருமையான பாடகி ஈஸ்வரி அம்மா அவர்களின் சிறந்த பாடல்களில் ஒன்று.

திரைப் படம்:  குல விளக்கு (1969)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
பாடியவர்கள்: A L ராகவன், L R ஈஸ்வரி
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி. (ஆனால் இந்தப் பாடலில் நடித்திருப்பவர்கள் வேறு யாரோ)
பாடல்: கண்ணதாசன் என நினைக்கிறேன்











கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா
கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா

இதழோரத்திலே தேன் சாரத்திலே
சுவை எடுக்கின்ற நேரமல்லவா
புது மோகத்திலே வந்த வேகத்திலே
விழி சிவக்கின்ற நேரமல்லவா

சாறு தரும் கிண்ணம் கொண்டு வா
அதில் நூறு தரம் கதை சொல்லவா
சாறு தரும் கிண்ணம் கொண்டு வா
அதில் நூறு தரம் கதை சொல்லவா
இடைப் பின்னவா
நான் சொல்லவா
இடைப் பின்னவா
நான் சொல்லவா

கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா வா
பால் குடிக்கின்ற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி வா ஓடி வா
பழம் உண்ணுகின்ற நேரம் அல்லவா

திரைப் போட்டு வைக்கும்
முகம் பார்க்கச் சொல்லும்
இந்தத் திருநாள் தேனிலவு

நம்மை பார்த்திருந்தும்
ஒரு துணைவனின்றி
அங்கு வாடுது வான் நிலவு

திரைப் போட்டு வைக்கும்
முகம் பார்க்கச் சொல்லும்
இந்தத் திருநாள் தேனிலவு

நம்மை பார்த்திருந்தும்
ஒரு துணைவனின்றி
அங்கு வாடுது வான் நிலவு

வாழ்க்கை இன்பம் உடலுறவு

நாம் வாழ்ந்திடதான் இந்த வரவு

ஆ ஆ ஆ
வாழ்க்கை இன்பம் உடலுறவு

நாம் வாழ்ந்திடதான் இந்த வரவு

இது முதலிரவு
இன்னும் பல இரவு
இது முதலிரவு
இன்னும் பல இரவு

ல ல ல ல
ல ல ல ல ல
ல ல ல ல ல ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக