பின்பற்றுபவர்கள்

புதன், 4 ஜூன், 2014

செய்யும் தொழிலே தெய்வம்

எனது இணையத்திற்கு உதவியாக தொடர்ந்து  பல பாடல்களின் காணொளிகளை வழங்கி வரும் ப்ரொபசர் திரு கந்தசாமி அய்யா அவர்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் இங்கே சொல்லிக் கொள்ள  ஆசைப்படுகிறேன்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்களில் தலையாய பாடலாக இந்தப் பாடலை சொல்லலாம். இவர் எழுதிய எல்லா பாடல்களும் சிறந்த சமூக அக்கறை நிறைந்த பாடல்கள்தான்.
இளமையில் சில பாடல்களுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்டதே சோகம்.
நல்ல கருத்துள்ள பாடல்.

திரைப் படம்: ஆளுக்கொரு வீடு (1960)
இயக்கம்: M கிருஷ்ணன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சத்யன், L விஜயலட்சுமி.

குரல்கள்: K ஜமுனா ராணி, ரேணுகா









செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்

பயிரை வளர்த்தால் பலனாகும்
அது உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும்
இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்

சாமிக்குத் தெரியும்
பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை
அந்த சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை
இதைப் பாடிப்பாடி விளையாடி ஆடிப் பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்

காயும் ஒரு நாள் கனியாகும்
நம் கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்
நம் கனவும் நினைவும் நிலையாகும்
உடல் வாடினாலும் பசி மீறினாலும்
வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி

செய்யும் தொழிலே தெய்வம்
அந்தத் திறமைதான் நமது செல்வம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கருத்துகள் கொண்ட அருமையான பாடல்... நன்றி...

கருத்துரையிடுக