பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 ஜூன், 2014

ஒரு புஷ்பம் மலர்ந்தது

இப்படியும் ஒரு படம் வந்ததா? படத்தின் பற்றிய விபரங்களும் இணையத்தில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இனிமையான பாடல்.

திரைப் படம்: பருவம் ஒரு பாடம் (1975)
இசை:மகாதேவன்
பாடல்: தெரியவில்லை
இயக்கம் தெரியவில்லை
பாடியவர்கள்: எஸ் பி பி, சுசீலா
நடிப்பு: தெரியவில்லை







ஒரு புஷ்பம் மலர்ந்தது
அதன் இஷ்டம் புரிந்தது
நான் கை கொண்டு பறித்தால்
மை கொண்ட கண்கள் ஏன்தான் சிவந்தது

ஒரு புஷ்பம் மலர்ந்தது
இதழ் தேனை பொழிந்தது
நீ கை கொண்டு பறிக்க
மெய் கொஞ்சம் சிலிர்க்க
நானம் பிறந்தது
ஒரு புஷ்பம் மலர்ந்தது

அந்தி மாலையில் அழைக்கும்
கதையளக்கும் உன் சிரிப்பு

அன்பு லீலையில் இருக்கும்
கலை விளக்கும் உன் அணைப்பு

காதல் சாகரம் கரை புரள

கன்னித் தாமரை மடல் விரிய

நான் நீராட நினைத்து போராடியிருக்க

காலம் கனிந்தது

ஒரு புஷ்பம் மலர்ந்தது
இதழ் தேனை பொழிந்தது

மோக மந்திரம் பயிலும்
என் பருவம் உன் வசத்தில்

ஆ ஆ ஆ ஆ ஆ
மூன்று வேளையும் உருகும்
என் உள்ளம் உன்னிடத்தில்

வண்ண மாதுளம் வாய் திறக்க

வண்டு போல நான் வந்திருக்க

நீ கொண்டாடும் பொழுது
உண்டாகும் சுகத்தில்

போதை பிறந்ததோ

ஒரு புஷ்பம் மலர்ந்தது
அதன் இஷ்டம் புரிந்தது

ல ல ல ல

ல ல ல ல
கட்டுப் பூவுடல் கனிய
கை அணைய நான் தவித்தேன்

கெட்டி மேளங்கள் முழங்க
என்னை வழங்க நாள் இருக்க

இன்ப வேதனை இருவருக்கும்

தோளில் மாலைகள் வரும் வரைக்கும்

நான் அன்னாளை நினைத்து
அச்சாரம் கொடுத்தால்

ஆசை அடங்குமோ

ஒரு புஷ்பம் மலர்ந்தது





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக