பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 10 ஜூன், 2014

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு

திரு விசுவநாதன் இசையில் வழக்கமான பாடல்தான். ஆனாலும் எஸ் பி பியும் வசந்தாவும் பாடலை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்  என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படம் வந்த கால கட்டத்தில், விஸ்வனாதன் தவிர  வேறு யாரும் தமிழ் திரை உலகில் அவ்வளவாக ரசிக்கப் படவில்லை, இளையராஜா தலை தூக்கும் வரை. அவர் போட்டதுதான் இசை, பாடியதுதான் பாடல் என்றானது.

திரைப் படம்: ராஜா (1971)
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெயலலிதா
இயக்கம்: C V ராஜேந்திரன்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், B வசந்தா












இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்

பாலுக்குள்ளே வெண்ணை உண்டு நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு
உன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்

லலலலல் லலலல் லலலலல் லலலல்
டண்ட டண்ட டண்ட ண்டண்டா

தாளை போட்டு மூடிகொண்டால் தாகம் தீராது
முந்தானை போட்டு மூடிகொண்டால் மோகம் தீராது
வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது
உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்ச நேரம் ஆகாது
என் அல்லி ராணி என் அருகில் வா நீ
என் அல்லி ராணி என் அருகில் வா நீ
நான் முள்ளில்லாத ரோஜா பூவைக் கிள்ளிப் பார்க்கின்றேன்
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்

மெத்தை போடும் தேவன் என்று என்னை சொல்லம்மா
உன் அத்தைப் பெற்ற பிள்ளை என்று எண்ணிக் கொள்ளம்மா
வித்தை ஒன்றைக் கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா
நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா
வித்தை ஒன்றைக் கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா
நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா
இணைந்து நில்லு நீ அணைந்துகொள்ளு
இணைந்து நில்லு நீ அணைந்துகொள்ளு
நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னைத் தொடுவார்


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் பாடல் + வரிகள்...

கருத்துரையிடுக