பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...சோகம் athoram manaleduthu sad

மகிழ்ச்சியாக குழந்தைகளாக பாடும் பாடலும், சோகமாக பின்பு பாடும் பாடலும் இங்கே உள்ளன.


இரண்டிலும் கவிஞர் நல்ல வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.

படம்; வாழ்க்கை வாழ்வதற்கே (1964)


இசை; M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி

வசனம்; முரசொலி மாறன்

நடிப்பு; ஜெமினி, சரோஜா தேவி

பாடல் வரிகள்; கண்ணதாசன்

குரல்கள்: P B S, P சுசீலா




http://www.divshare.com/download/12464956-70e





ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்...



ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்...



குடியிருந்த மணல் வீடு மழையினிலே கரைந்ததம்மா...

கொண்டு வந்த ஆசையெல்லாம் வந்த வழி சென்றதம்மா...

அவள் இருந்த மனதினிலே இருள் இருந்து வாட்டுதம்மா...

சங்கத்திலே தமிழ் வாங்கி தங்கத்திலே எழுதி வைத்தேன்...

சந்தையிலே படகு விட்டு காதலிலே மிதந்து வந்தேன்...

பாதியிலே பிரித்து விட்டு படகு மட்டும் சென்றதம்மா...



பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...

எத்தனையோ கனவுகளாம் எவ்வளவோ ஆசைகளாம்...

அத்தனையும் மறைந்ததம்மா ஆசை நிலா எரிந்ததம்மா...



கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...

ஊர் முழுதும் திரு நாளாம் உலகமெங்கும் மண நாளாம்...

உலகத்திலே நாண்கு கண்கள் உறங்காமல் விழிக்குதம்மா...



ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்...

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

அற்புதமான பாடல்.

கருத்துரையிடுக