பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...மகிழ்ச்சி

மகிழ்ச்சியாக குழந்தைகளாக பாடும் பாடலையும், சோகமாக பின்பு பாடும் பாடலையும் ஒன்றாக ஒரே இழையில் கொடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், இங்கே தனித் தனியாக கொடுத்துவிட்டேன்

மகிழ்ச்சி: லதா, ரமணிhttp://www.divshare.com/download/12465025-2a7ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்...

கையகளம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்...

வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

மணிக் கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம்...

அணி மணியாய் எடுத்து வைப்போம் கை நிறையா தேன் கொடுப்போம்...

நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...

முத்து வடம் பூச்சரம்மாம் மூக்குத்தியாம் தோடுகளாம்...

அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்...
கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...

மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாராம்..

அம்மாவின் கால்களிலே அன்புடனே வணங்கிடுவோம்...

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...

தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக