பின்பற்றுபவர்கள்

புதன், 4 டிசம்பர், 2013

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

என்னதான் இருந்தாலும் திரு A P நாகராஜனை போலவோ திரு S சங்கரைப் போலவோ அல்லது சாண்டோ M M A சின்னப்பா தேவரைப் போலவோ யாரும் தமிழிலில் பக்தி படங்களை கொடுக்க முடியாது.

B R பந்துலு சமூக அக்கறை உள்ள பல படங்களை செய்திருந்தாலும் இந்த ஒரு பாடலிலேயே அவருக்கு சமய படங்களில் ஒரு ஈர்ப்பு இல்லாதிருப்பது தெரிகிறது.

நல்ல பாடல் ஆனால் காட்சி அமைப்பு கேவலமாக இருக்கிறது.

திரைப் படம்: கங்கா கௌரி (1973)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: B R பந்தலு
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், S ஜானகி.
நடிப்பு: ஜெமினி, ஜெயலலிதா, சிவகுமார்.

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDkxMDMxNV92OEl4el9mZDI0/Antharangam%20Naan.mp3

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே

மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே

வந்த வழி நான் அறிவேன் மங்கை என்னை நீ அறிவாய்

வந்த வழி நான் அறிவேன் மங்கை என்னை நீ அறிவாய்

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

தேடி வந்த சிலையை கண்டு மூடிக் கொண்ட கண்கள்

இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்

தேடி வந்த சிலையை கண்டு மூடிக் கொண்ட கண்கள்

இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்

மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்

மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்

தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்

என் மன்னவா

உண்மை சொல்லவா

பெண்மை அல்லவா

என்னை வெல்லவா

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

தாமரையில் குடியிருக்கும் தங்க மலர் தேவி உன்னை தானிணைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

தாமரையில் குடியிருக்கும் தங்க மலர் தேவி உன்னை தானிணைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

அறிவேனே சாகஸங்கள் இதுவரையில் போதும்

அறிவேனே சாகஸங்கள் இதுவரையில் போதும்
அலை மோதும் காதலுடம் பூ மகளைப் பாரும்

என் மன்னவா

உண்மை சொல்லவா

பெண்மை அல்லவா

என்னை வெல்லவா

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக