பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...

இந்த பாடலை திரு TMS மற்றும் திருமதி சுசீலாவும் தனித் தனியே பாடி இருக்கிறார்கள். இரண்டையும் இங்கே தறமிரக்கி இருக்கிறேன்.

படம்:கார்த்திகை தீபம் (1965)

இசை: ஸுதர்சன்
நடிப்பு: அசோகன், வசந்தா
இயக்கம்: காசிலிங்கம்
 http://www.divshare.com/download/12866382-367

எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...

தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா...

இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா..

உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே துடிப்பது தெரியலையா..

உண்மை அறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது தவறில்லையா...

எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...

ஊஞ்சலைப் போலே பூங்கரம் நீட்டி அருகில் நெருங்கிடவா...

உன்னை உரிமையினாலே குழந்தையை போலே அள்ளி அணைத்திடவா...

அன்னையைப் போலே உன் உடல்தன்னை வருடிக் கொடுத்திடவா...

நீ அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா...

எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...

2 கருத்துகள்:

கருத்துரையிடுக