பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 6 மே, 2014

கனாக் காணும் கண்கள் மெல்ல

வழக்கம் போல K பாலசந்தரும் M S விஸ்வனாதனும் இணைந்தால் உண்டாகும் .அற்புதம்தான் .இந்தப் பாடல். எஸ் பி பி இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து வரும் இந்தி பாடல் ஏனோ இந்த பாடலை லேசாக ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.


திரைப்படம்: அக்னி சாட்சி (1982)
இயக்கம்: K பாலசந்தர்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: சிவகுமார், சரிதா
பாடல்: வாலி
குரல்: எஸ் பி பி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU0ODg2Nl9Ic0xZcF9kYjc3/Kana%20kanum%20Kangal-Agni%20Saatchi.mp3















கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோரும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே


நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக்கூட
நெற்றியில் நீருபோல் திரு நீருபோல் இட்டுக்கொள்கிறேன்

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே


5 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

எஸ்.பி.பி.யின் குரலில்தான் எத்தனை பாவங்கள்... இனிமையான மறக்க முடியாத பாடல்! பின்னணியில் நடனமாடும் அந்த வெள்ளைக்காரப் பெண் ஜாலம் செய்கிறார்.

Unknown சொன்னது…

வாங்க பால கணேஷ் சார் ரொம்ப நாளாச்சு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதிற்கு இதம் தரும் பாடல்...

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

இந்த பாடலின் போது சரிதா வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு ஆகா அற்புதம் !! ஒரு சைக்கோ பெண்ணை அப்படியே கண்முன் கொண்டு வருவார்.

SANKAR சொன்னது…

குமரி உருவம் குழந்தை உள்ளம இரண்டும் ஒன்றான மாயம் நீயோ? அருமையான வரிகள்.

கருத்துரையிடுக