பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2014

சொல்லி தரவா இடை மூடும் மேலாடை (Solli tharava idai moodum)

வழக்கமான தமிழில் இசையை விட்டு, வித்தியாசமான இசைநடையை கேட்ட மாத்திரம் மனதுக்கு இதம். பிரமாதமாக Dedication உடன் பாடியிருப்பார்கள் இருவரும். அழகான பின்னணி இசை. அலட்டிக் கொள்ளாத ஒரு பாடல்.
ஆனால் பாடல் வரிகள் சொல்லும்  கருத்துகளுடன் பாடல் காட்சிக்கும் ஒத்து வரவில்லையோ என  எனக்குத் தோன்றுகிறது.





திரைப் படம்: உழவன் மகன் (1987)
இசை: மனோஜ் கியான்
நடிப்பு: விஜயகாந்த், ராதிகா
இயக்கம்: ஆபாவாணன் 
பாடல்:யார்?
குரல்கள்: எஸ் பி பி, சசிரேகா















ம் ம் ம் ம்
சொல்லி தரவா
சொல்லி தரவா 
சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை 
தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு 
விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் 
நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் 
சுவை அல்லவா
சொல்லி தரவா 
சொல்லி தரவா

சில்லென்று காற்றே 
நீ வழி போகும் நேரம்
நில்லென்று நான் கூற 
ஏன் இந்த நாணம்

சொல்லி தெரியாத 
கலை இன்று கண்டேன்
சொல்ல தெரியாதா 
சிலையாகி நின்றேன்

கண்மணி உந்தன் கருவிழி பேசும் கதைகள் புரிகிறது
வெண்பனி தூவும் விடியல் வரையில் அதுவும் தொடர்கிறது

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை 
துணை அல்லவா
துணை சேர என் நாணம் 
தடை அல்லவா
தடை சொல்லும் பெண்ணுக்கு 
வழி சொல்லவா
வழி சொல்லும் உன் பாடல் 
புதிதல்லவா

சொல்லி தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம்

சொல்லி தரவா

இரவென்றும் பகலென்றும் 
அறியாத உறவு
யார் இங்கு தந்தாலும் 
சுகம் தானே வரவு

இன்னும் ஏன் இங்கு தடை மீற தயக்கம்
இல்லை வேறெங்கும் இடை மீறும் மயக்கம்

அச்சம் நாணம் 
அறிந்தது புரிந்தது
காதல் விளையாட்டு
மிச்சம் மீதி 
இருந்ததும் மறைந்தது
காமம் சொல் கேட்டு


சொல்லி தரவா
சொல்லி தரவா
இடை மூடும் மேலாடை 
தடை அல்லவா
தடை போடும் பெண்மைக்கு 
விடை சொல்லவா
விடை சொல்லும் ஒரு பாடம் 
நான் சொல்லவா
நான் சொல்லும் புது பாடம் 
சுவை அல்லவா

ட ட ட டா
சொல்லி தரவா 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக