பின்பற்றுபவர்கள்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு...parthuk kondathu kannukku kannu

எம் ஜி யாரின் பாடல்கள் என்றாலே ஒரு தனி ஈர்ப்புதான் நமக்கு. அதிலும் அவர் நடித்த காதல் பாடல்களும் தத்துவப் பாடல்களும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இசையும் பாடல் வரிகளும் அதை பாடகர்கள் பாடியிருக்கும் விதமும் சொல்லில் சொல்ல முடியாது. கேட்டே அனுபவிக்க வேண்டும். அந்த வகையில் இது ஒரு பாடல்.

திரைப் படம்: தாய்க்குத் தலை மகன் (1967)
இயக்கம்: M A திருமுகம்
பாடல்: கண்ணதாசன்  
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
பாடோயவர்கள்: டி எம் எஸ், P சுசீலா







பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

பக்கமா நெருங்க விட்டு

வெட்கம் என்ன சொல்லடி சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

பக்கமா நெருங்க விட்டு

வெட்கம் என்ன சொல்லடி சிட்டு


பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு

கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு


கண்ணலே மடக்கி விட்டு

பெண்ணாசை பெறுக விட்டு

உன் ஆசை மறைக்கலாகுமா


கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்

என்னை நான் மறைக்கவில்லை

இன்னும் நான் விளக்க வேண்டுமா


கண்ணலே மடக்கி விட்டு

பெண்ணாசை பெறுக விட்டு

உன் ஆசை மறைக்கலாகுமா


கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்

என்னை நான் மறைக்கவில்லை

இன்னும் நான் விளக்க வேண்டுமா


முந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை சிந்தி வரலாமா


சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா


முந்தி முந்தி வரும் முத்து சிரிப்பினை சிந்தி வரலாமா


சிந்தி சிந்தி வரும் சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா


பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு


கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு


என்னன்ன நினைத்து வந்தேன்

எத்தனை எடுக்க வந்தேன்

எல்லாமே மறந்து போனதேன


கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்

கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்

நான் உங்கள் சொந்தம் அல்லவா


என்ன என்ன இது கன்னி மனசுக்கு இத்தனை எண்ணங்களா


மெல்ல மெல்ல வந்து கன்னி பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா


என்ன என்ன இது கன்னி மனசுக்கு இத்தனை எண்ணங்களா


மெல்ல மெல்ல வந்து கன்னி பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா


பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு


கட்டழகன் கண்ணடிப் பட்டு

வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக