பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 ஜூன், 2015

துள்ளாத மனமும் துள்ளும்...thullaatha manamum thullum...

பாடலின் தன்மையை உணர்ந்து இனிமையாகப் பாடியிருக்கும் திருமதி ஜிக்கி    அவர்களுக்கும்  சாகா வரம் பெற்ற பிறவிக் கவிஞன் பட்டுக்கோட்டையாரின்  பாடலை எந்த வகையிலும் சிதைக்காமல் இசையமைத்த ஜிககியின் கணவர் A M ராஜா அவர்களுக்கும்  இங்கு நன்றி கூறுகிறோம்.


திரைப்படம்: கல்யாணப் பரிசு (1957)

பாடியவர்: ஜிக்கி


இயற்றியவர்: பி. கல்யாண சுந்தரம்


இசை: ஏ.எம். ராஜா


நடிப்பு: ஜெமினி,  சரோஜா தேவி 

இயக்கம்: சி வி ஸ்ரீதர் 













ம் ம் ம ம் ம் ம் ம ம் ம் ம் ம ம்

துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்


துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்


துன்பக் கடலைத் தாண்டும் போது 

தோணியாவது கீதம்

துன்பக் கடலைத் தாண்டும் போது 

தோணியாவது கீதம்

அன்புக் குரலில் அமுதம் கலந்தே 

அருந்தத் தருவதும் கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும் 

இழுத்து வருவதும்  கீதம்

இணைத்து மகிழ்வதும் கீதும் 

துயர் இருளை மறைப்பதும் கீதம்


துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்


சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் 

தோகை விரித்தே வளர்ந்திடும்

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் 

தோகை விரித்தே வளர்ந்திடும்

சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்

தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன் 

வரவு கண்டே மகிழ்ந்திடும்

உறவு கொண்டால் இணைந்திடும் 

அதில் உண்மை இன்பம் விளைந்திடும்


துள்ளாத மனமும் துள்ளும் 

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும் 

இன்பத்தேனையும் வெல்லும்

இசை இன்பத் தேனையும் வெல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக