பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 ஜனவரி, 2017

வானும் மண்ணும் ஒன்றாய்


திரைப்படம்: வரம் (1989)
இயக்கம்: R C சக்தி
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: P ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வநாதன்
நடிப்பு: பிரபு, அமலா


இனிமையான அமைதியான பாடல். மீண்டும்.. "தைமாதம் கல்யாணம் அங்கே காதல் ஊர்கோலம்" என்னும் பாடலை நியாபகப்படுத்தும் பாடல். காட்டில் கல்யாணம் நடந்தால்? விதிவசத்தால் தேடப்படும் குற்றவாளியாகி காட்டில் மறைந்து வாழும் பிரபுவுக்கு அவரது நண்பர்கள் அவரது காதலி அமலாவை அங்கேயே அழைத்து வந்து மணமுடித்து வைக்கிறார்கள். அச்சூழலில் இப்பாடல். இத்தகவலை அறிந்த பின் இப்பாடல் பதிவினை கண்ணுற்றால் சுவை கூடும்.

Play Music - Upload Audio Files -






வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்
வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

காதல் மாலை  சூடும் வேளை
கண்ணில் கார்க்காலம்
காதல் மாலை  சூடும் வேளை
கண்ணில் கார்க்காலம்

கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
வானிலிருந்து பூக்கள் தூவ  
தேவர் வரவில்லையே
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே
வாழ்த்தும் கொடி முல்லையே

வானிலிருந்து பூக்கள் தூவ  
தேவர் வரவில்லையே
வசந்த கால பூவை தூவி
வாழ்த்தும் கொடி முல்லையே
வாழ்த்தும் கொடி முல்லையே

வரம்பு கடந்து நரம்பு துடிக்கும்
இங்கே  சுவரில்லையே
வளர்ந்த கொடிகள் சிறைகள் ஆனால்
ஒன்றும் தவறில்லியே
வளர்ந்த கொடிகள் சிறைகள் ஆனால்
ஒன்றும் தவறில்லியே

வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது

அருவிப் பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது
மேளம் அடிக்கின்றது
காட்டுக் குயில்கள் பாட்டுப் பாடி
லாலி படிக்கின்றது

அருவிப் பொழிந்து தரையில் விழுந்து
மேளம் அடிக்கின்றது
மேளம் அடிக்கின்றது

பாலும் பழமும் பருகவில்லை
பந்தி நடக்கின்றது
நாளும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது
நாளும் நடந்து முடிந்த பின்னும்
நாணம் இருக்கின்றது

வானும்  மண்ணும் ஒன்றாய் கூடும்
காதல் வைபோகம்
மழையும் அடிக்க  வெய்யிலும் அடிக்க
இங்கே  கல்யாணம்

காதல் மாலை  சூடும் வேளை
கண்ணில் கார்க்காலம்
கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்
கண்ணீர் ஊர்கோலம்
கண்ணே  உந்தன் கன்னம் ரெண்டில்

கண்ணீர் ஊர்கோலம்

5 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான பாடல். நன்றி.

ஆல் இஸ் வெல்....... சொன்னது…

பாடல்மிக நன்றாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

நன்றி சார்

Musta சொன்னது…

மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ் வயதுவந்தோர் கதை

prabha சொன்னது…

மிக அருமை நன்றி

கருத்துரையிடுக