பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2017

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்ததுதிரைப்படம்: புவனா ஒரு கேள்விக்கு குறி (1977)
இசை: இளையராஜா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்
பாடியவர்: எஸ் பி பாலா
நடிப்பு: ரஜினி, சிவகுமார், சுமித்த்ரா, ஜெயா, மீரா
இயக்கம்: எஸ் பி முத்துராமன்.

இந்தப் படத்தின் கதை, பாலசுப்ரமணியம் எனும் மகரிஷி குமுதத்தில் எழுதி வெளி வந்தது. இதற்க்கு முன்னும் இவர் எழுதிய கதைகள், பத்ரகாளி, சாய்ந்தாடம்மா  சாய்ந்தாடு என திரைப்படமாக்கப்பட்டு  இருக்கின்றன.
இதில் நடித்த ஜெயா என்னும் நடிகை சென்னையில் SIET கல்லூரியில் படித்தவர், இலங்கை  இயக்குனர் V C குக நாதன் இயக்கத்தில் சுடரும் சூறாவளியும் என்ற படத்தில் நடித்தார். பிற்காலத்தில் அவரையே, வீட்டில் பலரும் எதிர்த்ததால், இருவரும் ஓடிப் போய் திருமணம் செய்த்துக் கொண்டார்கள் என்பது கொசுறு செய்தி.
இந்த படத்திற்கு பிறகே  ரஜினி கொஞசம் டயலாக் பேசும் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டார்  என்பதாக  படுகிறது.
இளையராஜா, ரஜினி, எஸ் பி பி அனைவருக்கும் இது  அவர்களின் ஆரம்ப  கால  வெற்றிப் படமாகும்.


விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே  போதுமடி
மனம் மயங்கும் மெய் மற க்கும்
புது உலகம்  வழி தெரியும்
பொன்விளக்கே
தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே


ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப்போல்
ஓரழகைக் கண்டதில்லையே

காவியத்தின் நாயகி
கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே

கைய்யளவு பழுத்த மாதுளை
பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கைய்யளவு பழுத்த மாதுளை
பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை  தூவவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ஹா ஹா ஹா ம்ம்ம்ம்ம்ம்ம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக